இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

உலகமும் கிறித்தவனும்


உலகமும் கிறிஸ்தவனும்*

1⃣   உலகத் தோற்றத்திற்கு முன்பே தேவனால் கிறிஸ்துவுக்குள் தெரிந்து கொள்ளப்பட்டவன்
கிறிஸ்தவன். (எபே 1:4;  ரோமர் 8:28-30)

2⃣   உலகத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்டவன் கிறிஸ்தவன். (யோவான் 17:6,14,16 ; 15 :19)

3⃣   உலகத்தின் வழிபாடுகளுக்கும், பாவ அக்கிரமங்களுக்கும் மரித்தவன் கிறிஸ்தவன்(கலா 4 :3-9)

4⃣    உலக வழக்கத்திற்கும், மதரீதியான பண்டிகைகளுக்கும் விலகியிருப்பவன் கிறிஸ்தவன். (கலா 4:3,8-10 ; கொலோசெயர் 2:14-23)

5⃣   உலகத்தின் ஜென்ம சுபாவம் நீங்கி, திவ்விய சுபாவத்தில் அனுதினமும் வளருபவன் கிறிஸ்தவன். (2 பேதுரு 1 :3,4 ; 2 கொரி 4:16)

6⃣   உலகத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் இருப்பவன் கிறிஸ்தவன்.(ரோமர் 12 :2)

7⃣   உலகத்துக்குரியதையல்ல மேலானதை, அழிவில்லாததை நாடித் தேடுபவன் கிறிஸ்தவன் (கொலோ3:1-3;மத் 6:33)

8⃣   உலகத்தின் ஐசுவரியத்துக்கும், அதன் சம்பத்துக்கும், உலக பொருட்களுக்கும் அடிமைப்படாதவன் கிறிஸ்தவன். (லூக்கா 16:13)

9⃣   உலகத்தின் மயக்கத்தையும், அதன் லௌகீக இச்சைகளையும் வெறுத்து (மது மயக்கமில்லாத) தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இவ்வுலகத்தில் ஜீவனம் பண்ணுகிறவன் கிறிஸ்தவன்(தீத்து 2:10)

🔟   உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதவன் கிறிஸ்தவன். (1யோ2:15-17)

1⃣1⃣   உலக சிநேகத்திற்கு விலகியிருப்பவன் கிறிஸ்தவன். (யாக் 4:4; 2தீமோ 4:10)

1⃣2⃣   உலகத்தால் கறைபடாதபடி தன்னை காத்துக் கொள்பவன் கிறிஸ்தவன்(யாக் 1:27)

1⃣3⃣   உலகம் தனக்கு சிலுவையிலறையுண்டதாகவும், உலகத்திற்கு தானும் சிலுவையிலறையுண்டதாகவும் இருப்பவன் கிறிஸ்தவன்(கலா 6:4)

1⃣4⃣   உலகத்தின் உபவத்திரத்தை மேற்கொள்பவன் கிறிஸ்தவன். (யோவான் 16:33)

1⃣5⃣   உலகத்தின் பகையை சுவிசேஷத்தினிமித்தம் சந்திப்பவன் கிறிஸ்தவன். (யோவான் 15:18,19)

1⃣6⃣   உலக கவலையில் வீழாதவன் கிறிஸ்தவன். (2கொரி 7:10; மத் 6:25-34)

1⃣7⃣   உலக ஞானத்திற்கும், உலக புகழ்ச்சிக்கும், உலகத்தின் ஐசுவரியத்துக்கும், பெருமைக்கும் மதி மயங்காதவன் கிறிஸ்தவன். (1கொரி 1:18-31; 3:18-21; பிலி 3:7-11)

1⃣8⃣   உலகத்தின் அழிவிற்கோ, சரீர மரணத்திற்கோ துளியும் அஞ்சாதவன் கிறிஸ்தவன். (பிலி 1:21; மத் 10:28-30 ; எபி 2:15 ; 2பேதுரு 3:5-7,10-15)

1⃣9⃣   உலகத்திற்கு உப்பாகவும், ஒளியாகவும் இருப்பவன் கிறிஸ்தவன்.(மத்தேயு 5:13-16)

2⃣0⃣   உலகத்தை கலக்குபவன் கிறிஸ்தவன். (அப் 17:6)

2⃣1⃣   உலகத்தை நியாயம் தீர்ப்பவன் கிறிஸ்தவன். (1கொரி 6:2)

2⃣2⃣   உலகத்தை ஜெயிப்பவன் கிறிஸ்தவன். (1யோவான்5 5:4,5)

2⃣3⃣   உலகத்திற்கு சுவிசேஷத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்பவன் கிறிஸ்தவன் (மத் 28:18-20 ; மாற்கு 16:15,16)

Post a Comment

0 Comments