இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

போதகர்.N.ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு... LIFE HISTORY OF PASTOR.N. JEEVANANDHAM

போதகர். N. ஜீவானந்தம்... Life History Of N.Jeevanandham

(பிறப்பு : 1932)
~~~~~~~~~~~~~~~~~

போதகர். N. ஜீவானந்தம் அவர்கள் கிறிஸ்துவை அறியாத ஒரு இந்து குடும்பத்தில் சாலம் பாளையம் எனும் கிராமத்தில் பிறந்தார். (தென் ஆர்க்காடு மாவட்டம்)

எட்டு வருட பள்ளிப் படிப்புக்குப் பின்னர் தந்தையார் போலவே ஆசிரியராக விரும்பி, விழுப்புரம் அருகில் உள்ள கத்தோலிக்க பள்ளி ஒன்றில் ஆசிரியர் பயிற்சியை மேற்கொண்டார்.

வெற்றிகரமான ஆசிரியர் பயிற்சிக்கு பின்னர், 1951 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் பணி நியமன ஆணை கிடைக்கவே, சென்னைக்கு இடம்பெயர்ந்து ஆசிரியர் பணியினை செய்து வந்தார்.

அந்த நாட்களில் தி.மு.க வின் மீதுள்ள அதீத பற்றால் கழகத்தின் தீவிர தொண்டனாய் பணியாற்றி வந்தார்.

1957 ஆம் ஆண்டு லேமென் சுவிஷேச ஐக்கியத்தின் மூலமாக கிறிஸ்துவை அறிந்துகொண்டு, மனமாற்றம் அடைந்து புதுவாழ்வை தொடங்கினார்.

இரட்சிக்கப்பட்ட சில நாட்களிலேயே சுவிஷேசகாராக நற்செய்தியை முழங்க ஆரம்பித்துவிட்டார்.

1960 ஆம் ஆண்டு பரிசுத்த ஆவியின் அமர்வு பெற்று பகுதி நேரமாக ஊழியம் செய்து வந்தார். 1968 இல் தனது ஆசிரியர் பணியினை ராஜினாமா செய்துவிட்டு முழுநேரமும் கர்த்தருக்கு ஊழியம் செய்ய புறப்பட்டார்.

இந்த நாட்களில் தான் ஐயா அவர்களுக்கு ACA சபைகளுடனான நெருக்கும் அதிகமானது.

1975 ஆம் ஆண்டு C.P.D அருமைநாயகம் அவர்களின் முயற்சியில், முதன்முறையாக கடல் கடந்து யாழ்பாணம் பகுதிகளில் நற்செய்தியின் ஸ்தானாபதியாக ஊழியம் செய்தார்.

ஜீவானந்தம் ஐயா நடத்தி வந்த முழு இரவு ஜெபங்கள் சென்னை பட்டணத்தில் அநேகரை கிறிஸ்துவின் ஊழியத்தை செய்ய எழுப்பிவிட்டது. சகோ. டி.ஜி.எஸ் தினகரன் அவர்கள் இந்த முழு இரவு ஜெபங்களில் தவறாமல் கலந்து கொள்வார்.

1983 முதல் 1990 வரை World Missionary Evangelism, Madras என்ற ஸ்தாபனத்தை நிர்வகித்தார்.

1990 ஆம் ஆண்டு தேவனுடைய தரிசனத்தை பெற்று 'மகிழ்ச்சி' திருசபையை தொடங்கினார் (Delight Christian Assembly)

மகிழ்ச்சி பத்திரிக்கையின் ஆசிரியராயும், ஸ்தபகராயும் விளங்கினார்.

கர்த்தரால் வல்லமையாய் பயன்படுத்தப்பட்ட ஜீவானந்தம் ஐயா அவர்களின் மூலமாக தான் பாஸ்டர் D.மோகன்(NLAG) கிறிஸ்துவின் ஊழியத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்தார்.

'திருக்கரத்தால் தாங்கி என்னை...' என்ற பாடலை இயற்றிய சகோ. J.V பீட்டர் அவர்களுக்கு ஐயா தான் புதுவாழ்வு கொடுத்தார் எனலாம். தான் செல்லும் இடமெல்லாம் சகோ. J.V பீட்டரை அழைத்து சென்று மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவரை தன கூடவே தங்கவைத்து உணவளித்தார்.

இதுபோல ஐயா அவர்கள் உருவாக்கிய தேவமனிதர்கள் அநேகர். பாஸ்டர். ஜீவானந்தம் போன்றோருக்காக கர்த்தரை துதிப்போம்.

Post a Comment

1 Comments

  1. Dear Brother.
    Thank you so much, God shall bless you abundantly.
    I am happy to see this post. I was looking to know more about Pas.Jeevanantham ayya. I have heard biography of Jeeva ayya have place in Malaysia school text book. Shall I get any reference regards it?

    Regards,
    Yuvaraj.

    ReplyDelete