இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

சாத்தானின் பெரிய ஆயுதம்


சாத்தானின் பெரிய ஆயுதம்

சாத்தானின் பெரிய ஆயுதம் நாம்தான் எப்படியெனில் தேவன் நம்மை கொண்டு அவர் செய்ய வைத்திருக்கும் திட்டத்தை நிறைவேற்றாத படிக்கு நம்மை அவன் பக்கம் இழுத்துக் கொள்ளும் போது கர்த்தர் நம்மைக் கொண்டு செய்ய நினைக்கும் காரியம் தடைபட்டு போகிறது ஆகையால் கர்த்தருக்காய் வைராக்கியமாய் எழும்பும் பிள்ளைகளை குறிப்பாக இன்றைய கால சூழலில் தன்வசப்படுத்த
நிறைய காரியங்களை மேற்கொள்கிறான்.

  1. தந்திரத்தினால்

சாத்தான் தந்திரத்தினால்  தள்ளுகிறான் ஆதாம் ஏவாள் இடம்  தன் தந்திரத்தினால் ஆசையைத் தூண்டி  பாவத்தில் விழ வைத்தான் எப்படி எனில் கர்த்தர் இந்த பழத்தினை  சாப்பிடக்கூடாது என்று சொல்லிவிட்டார் ஆதலால் இவர்கள் இதை புசிக்க மாட்டார்கள் என்று  தெரிந்ததினால் தந்திரமான நயவசனிப்புள்ள வார்த்தைகளைக் கூறி அதை இச்சிக்க வைத்து பழத்தை சாப்பிட வைத்தான் நீங்கள் இந்த பலத்தை புசித்தாள் தேவர்களைப் போல மாறிவிடுவீர்கள் என்று கூறி புசிக்க வைத்தான் (ஆதியாகமம் 3:1,2…6). பிசாசு தந்திரமாய் தான் உள்நுழைய பார்ப்பான் வேதம் சொல்லுகிறது பிசாசின் தந்திரங்கள் நாம் அறியாதவை அல்லவே.

2. கைபேசி(cellphone), இணையதளம்(Internet), சமூக வலைதளங்கள்( social medias)

இன்றைய சமுதாயத்தில் பாவங்களுக்கு பஞ்சமே இல்லை பாவம் நம்மை சுற்றி இருந்தது போய் நம் கரங்களுக்குள்ளாகவே வந்துவிட்டது இன்றைய நவீன உலகில் நல்ல உபயோகத்திற்கு பயன்படவேண்டிய கைபேசி இன்று தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டு பல கொடூரமான சம்பவங்கள் வித்தாய் அமைந்து விடுகிறது. நன்மைக்காய் படைக்கப்பட்ட படைப்புகளை சாத்தான் அது தன் ஆதிக்கத்தை செலுத்தும் படியாக களைகளை விதைத்து விட்டான். சமூக வலைதளங்கள் என்று இதை இப்படி சொல்வதை விட சாத்தானின் வலைகள் என்று சொன்னால் மிகச் சிறப்பாக இருக்கும் இது சாத்தானின் வலை என்று தெரியாது கிறிஸ்தவர்களும் உண்டு சமூக வலைதளங்கள் பயன்படுத்துவது தவறு என்று சொல்லவில்லை அதனால் நமக்கும் இருக்கும் உறவு தடைபட்டு விடக்கூடாது. இந்த சமூக வலைதளங்களின் ஆல் அநேகர் ஆபாசத்திற்கு அடிமைகளாய் மாறி இருக்கிறார்கள் இச்சைகளுக்கு அடிமைகளாக சாத்தான் மாற்றி வைத்திருக்கிறான். இதனால் அநேக விபச்சாரம் கற்பழிப்பு வயது வரம்பு இல்லாமல் இன்று நடந்து கொண்டிருக்கிறது இதற்கு சிறு பிள்ளைகளும் விதிவிலக்கல்ல. சிறுபிள்ளைகளுக்கு ளும் இசை என்கிற விதையை சாத்தான் என்று உதைத்து விட்டான் காரணம் இணையதளம் மற்றும் செல்போன் இன்று எல்லாருடைய கண்களுக்கும் வந்துவிட்டது அதனால் தான் பாவம் கரங்களுக்குள் வந்துவிட்டது என்று சொன்னேன். ஆகையால் இது நல்ல உபயோகத்திற்கு  பயன்படுத்தி இதில் வீணாய் நேரத்தை செலவிடாமல் தேவனோடு நேரத்தை செலவிடுவோம் கிறிஸ்துவுக்கு அடிமையாய் இருக்க வேண்டுமே தவிர செல்போனுக்கும் இணையதளத்திற்கும் சமூக வலைதளங்கள் அடிமைகளாக இருக்க கூடாது.

3. பண ஆசை

பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது என்று வேதம் தெளிவாய் சொல்லியிருக்கிறது( 1 திமொத்தேயு 6:10). பண ஆசை ஒரு சில தீமைக்கு மாத்திரம் வீரா இருக்கிறது என்று வேதம் சொல்லவில்லை எல்லாத் தீமைக்கும் பேர் என்று சொல்லப்பட்டிருக்கிறது நாம் இந்த உலகில் வாழ்க பணம் அவசியம் தான் அதனை வீழ்ந்து விடக் கூடாது பிசாசு இதை பிரதானமாக பயன்படுத்துகிறான் தீ வைக்கப்பட்ட காரியத்திலும் ஆசையை ஏற்படுத்தி நிக்க வைத்து பண ஆசையை கொண்டு வந்து விடுகிறான் இதனால் நாம் தேவனை மறந்து பணத்தை எப்படி சேர்ப்பது சம்பாதிப்பது என்ற எண்ணத்துடன் வைத்துவிடுகிறான் ஆசிரியையும் வெள்ளியையும் சேர்த்து வைத்து நாம் என்ன செய்யப்போகிறோம் அதை பரலோகத்திற்கு கொண்டு செல்ல முடியுமா?
நம் ஆண்டவராகிய இயேசு தெளிவாய் சொல்லிவிட்டார் பூமியிலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்(மத்தேயு 6:19,20).
பூமியில் நமக்கு எதுவும் நிரந்தரமானது இல்லை பரலோக ராஜ்ஜியத்தில் பொக்கிஷங்களை சேர்த்து வைப்போம் போதுமென்ற மனதுடன் கூடிய தெய்வபக்தி மிகுந்த ஆதாயம்.
இந்த உலகத்தில் நாம் ஒன்றும் கொண்டு வந்தது இல்லை ஒன்றும் கொண்டு போவதும் இல்லை(1தீமோத் 6:6,7). ஆகையால் பண ஆசைக்கு இடம் கொடுத்து எல்லா பாவங்களுக்கும் இடம் கொடுத்து நரகத்திற்கு பங்காளி ஆவதைவிட பண ஆசையை உதறி பரலோக ராஜ்ஜியம் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்போம் பரலோக ராஜ்ஜியத்தில் பங்க அடைவோம்.

இன்னும் பல காரியங்களில் பிசாசானவன் தந்திரமாய் உள் நுழைய முடியும். ஆகையால் ,
தெளிந்த புத்தி உள்ளவர்களாய் இருப்போம் விழித்திருப்போம் மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன (காலாத்தியர் 5:19) பாவம் நம் கற்பனையினால் சமயம் பெற்று சகல வித பாவங்களையும் நடப்பிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது( ரோமர் 7:8).
ஆகையால் இவர்களுக்கு இடம் கொடுக்காமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்மில் தரித்துக்கொண்டு கர்த்தர் நம்மில் செய்ய நினைத்த சித்தத்திற்கு விட்டுக்கொடுப்போம்.

உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன்கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன் என்று சொன்ன ஜெய கிறிஸ்து நம்மோடு கூட இருப்பாராக... ஆமென்


____ சாத்தானை ஜெயிப்பது எப்படி___?
  __ பதிவு விரைவில்__

Post a Comment

0 Comments