இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

சாத்தானை ஜெயிப்பது எப்படி


சாத்தானை ஜெயிப்பது எப்படி

சாத்தானை எப்படி ஜெயிப்பது என்ன செய்தால் சாத்தான் மீது ஜெயம் எடுக்கலாம் .நமக்கு மிகச் சிறந்த உதாரணம் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அவர்
பூமியில் மனிதனாக அவதரித்த போது எப்படியெல்லாம் ஜெயம் பெற முடியும் என்று நமக்குத் தெள்ளத் தெளிவாய் சொல்லியும் செய்தும் காட்டினார்.

1. உபவாசத்தின் ஆளும் ஜெபத்தினாலும்

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு சமயம் மலையின்மேல் ஏறி ஜெபித்துக் கொண்டிருந்தார் அப்போது சீஷர்களிடத்தில் ஒருவர் தன் பிள்ளையைக் கொண்டு வந்து என் மகனின் பிசாசு பிடித்து அவனை கொலை செய்யும்படி நெருப்பிலும் அக்கினியிலும் தள்ளிவிடுகிறது என்றான். சீஷர்கள் தங்களுக்கு தெரிந்த படி ஜபம் செய்து என்னென்னவோ செய்தும் பிசாசு போகவில்லை. இயேசு வந்து அந்த ஆவியை கடிந்துகொண்டார் அது உடனே அவனை விட்டு ஓடியது அவன் சுகமானான். அப்பொழுது அவருடைய சீஷர்கள் ஆண்டவரே அதை ஏன் எங்களால் துரத்தகூடாமற்போயிற்று என்றார்கள். அதற்கவர் இவ்வகை பிசாசு உபவாசத்தினாலும் ஜெபத்தினாலும் மட்டுமே யன்றி மற்ற எவ்விதத்திலும் போகாது என்றார்(மாற்கு 9:29). இயேசு அடிக்கடி உபவாசிப்பவராகவும் அனுதினமும் ஜெபிக்கிவராக இருந்தார் .ஆனால் சீஷர்கள் அப்படியல்ல அதனால் தான் அவர்களால் துரத்த இயலாமல் போயிற்று. இயேசுவானவர் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு அப்போஸ்தல நடபடிகள் அவர்கள் உபவாசத்திலூம் ஜெபத்திலும் உறுதியாக தரித்திருந்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதன் பின்பு அப்போஸ்தலர்கள் வீதியில் நடந்து போகும் போது தங்கள் உருமால்களை பிசாசு பிடித்தவர்கள் மேல் போட்டால் உடனே அவை அவர்களை விட்டு ஓடிப் போனது என்று சொல்லப்பட்டிருக்கிறது ஆகவே உபவாசமும் ஜபமும் நம்மை பெலனடைய  செய்யும்.

2. பரிசுத்த ஆவியின் பலத்தினாலும் வார்த்தையாலும்

இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று கரையேறினவுடனே ஆவியானவராலே பிசாசினால் சோதிக்கப்படும்படி வணாந்தரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார் நாற்பதுநாள் இரவும் பகலும் புசியாமலும் குடியாமலும் இருந்தார் ஆவியிலே நிறைந்தவராய் நாற்பதுனால் முடிந்த பின்பு இயேசு சரீரத்தில் சோர்வுள்ளவராய் இருந்தார்‌.சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து அவரைச் சோதிக்கும் போது அவர் கர்த்தருடைய வார்த்தையினாலே அவனை கடிந்து கொண்டு ஜெயித்தார்‌.(மத்தேயு 4அதிகாரம்).

3. சாட்சியின் வசனம்

நாம் ஒரு வார்த்தையை  பிரயோகிக்கும் போது அது நம்முடைய வாழ்க்கையில் உள்ள தாய் இருக்க வேண்டும் உதாரணமாக பரிசுத்தம் என்ற வார்த்தையை பிரயோகித்தால் அது நம் நம் வாழ்க்கையில் இருந்து வெளிப்பட வேண்டும். வசனத்தின்படி உன் வாழ்க்கை இல்லாவிட்டால் பிசாசை ஜெயிக்க முடியாது. இயேசு தாம் சொன்ன வார்த்தையின் படி வாழ்ந்தார். அது மட்டுமல்ல தன் சொந்த வாழ்க்கையில் சாத்தானை ஜெயித்து வராக இருந்தார் . சொந்த வாழ்க்கையில் பாவத்திற்கு இடம் கொடுக்காமல் வசனத்தின்படி நாம் வாழும்போது நாம் சாத்தானை ஜெயிக்க முடியும்.

4. தேவனின் வல்லமையிலும் சர்வாயுதவர்கத்தினாலும், இடைவிடாத ஜெபத்தினாலும்

தேவனுடைய வல்லமை பெற்றவர்களாக வேண்டும் சாத்தானின் தந்திரத்திற்கு எதிர்த்து நிற்க திராணிஉள்ளவர்களாய் மாறும்படி தேவனுடைய சர்வ ஆயுத வர்க்கத்தையும் தரித்து கொண்டவர்களாய்(எபேசியர் 6:10,11) சத்தியம், நீதி, சுவிசேஷம், ஆயத்தம், விசுவாசம், தேவனுடைய வார்த்தை , ஜபம் ஆகியவற்றை தரித்து கொண்டவர்களாய் மாறுவோம். அப்பொழுது சாத்தானை எதிர்த்து நிற்க திராணி உள்ளவர்களாய் நாம் மாறிவிடுவோம்.

ஆகையால் பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அவன் அப்பொழுது உங்களை விட்டு விலகி ஓடிப்போவான்(யாக்கோபு 4:7) என்று எழுதியிருக்கிறது நாம் சாத்தானுக்கு இடம் கொடுக்கும் காரியம் நம்மிடம் இல்லாமல் வார்த்தைக்கு கீழ்படிந்து நடப்போம் அவன் தந்திரங்களை நிர்மூலமாக்குவோம் தேவ சித்தத்தை நிறைவேற்றுவோம்.

Post a Comment

0 Comments