கணவன் உருக்குலைந்ததை
கண்ணெதிரே கண்ட மனைவி
கல்லறையில் கண்ணீருடன்
வானங்களுக்கு நேரே கையெடுத்து
இயேசுவை நோக்கி கூறின வார்த்தை
"ஏசுவே உம் நாமம் மகிமைபடுவதாக"
நெகடி அய்டின் முன்னாள் முகமதியர்.. இவர் சந்தித்த செம்சா என்ற ஓர் பெண்ணின் மூலம் இவர் இயேசுவை தெரிந்து கொண்டார். இவரின் மனமாற்றத்தை மற்றவர்களுக்கு அறிவித்த பின்னர் செம்சாவை திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளை தேவன் கொடுத்து ஆசீர்வதித்தார்.
தேவன் ஒருவரையும் சாதாரணமாக தெரிந்து கொள்வதில்லை. அதை போல இரட்சிக்கப்பட்ட நெகடி அவர்கள் தேவனுடைய ஊழியத்தை தன் இரண்டு நண்பர்களுடன் செய்ய ஆரம்பித்தார். ஊழியம் வேகமாக வளர்ந்தது. கிறிஸ்தவர்களை எதிர்க்கும், கொள்ளும் கும்பலுக்கும் இந்த செய்தி பரவியது. முகமதியராய் இருந்து கிறிஸ்தவராய் மாறிய இம்மூன்று பெயரையும் கொடூரமாக சிதைத்து கொன்றனர்.. விஷயத்தை கேள்விப்பட்ட இவர்களுடைய குடும்பத்தார் மனம் பதறி போயினர்..
5 பேர் கொண்ட ஓர் இஸ்லாமிய கொலை வெறி கும்பல் இவர்களை கடத்தியது. இதில் உகுர் என்ற கிறிஸ்தவர் முகத்தில் 100க்கும் மேற்ப்பட்ட முறை கத்தியால் குத்தப்பட்டிருந்தது.
தில்மன் மற்றும் நெகடி ஆகிய இருவரும் ஓர் நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டு பின் பல முறை குத்தப்பட்டுள்ளனர். பிறகு அவர்கள் கழுத்தை வெட்டி கொன்று தங்கள் கொலைவெறியை தீர்த்து கொண்டனர்.
அங்கிருந்த ஓர் கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது
"இந்த மென்மையான காரியத்தை நம் மதத்திற்காகவும், தேசத்திர்க்காவும் செய்திருக்கிறோம். எங்களோடு நீங்களும் பெருமை படவேண்டும்" என்பதே. இந்த கொடூரத்தை மதமா கர்ப்பித்தது??? மதம் என்பது அன்போடு மனதில் இருக்கும் வரை மனித நேயத்தை விட பலம் உள்ளதை இருக்கும். அது வெளியில் தலை விரித்து ஆடினால் மனிதனையே மிருகங்களை விட கொடியதாய் மாற்றி விடும். இந்த சம்பவம் ஓர் உதாரணம்.
இப்படி கொல்லப்பட்ட மூவரையும் அடக்கம் செய்ய கூட ஆள் இல்லாமல் தவித்த இவர்கள் தங்கள் சொந்த முயற்சியியால் தங்கள் கணவர்களின் உடலை அடக்கம் செய்தனர்.. இவர்களுக்கு சில ஊழிய நிறுவனங்கள் உதவி செய்தன. கல்லறையில் தன் கணவன் சிதைந்து கிடந்ததை பார்த்த மனைவியின் இதயம் நொறுங்கி போனது. கண்ணீரோடு தன் கணவனையே பார்த்து கொண்டிருந்தார்.
அதன் பிறகு நீதிமன்றத்தில் இந்த கொலை விசாரிக்கப்பட்டது. இதை பற்றி நேகடியின் மனைவி கூறும் போது "கணவன் இறந்து இந்நாள் வரை தேவன் என் இதயத்திற்கு வேண்டிய பெலத்தை கொடுத்து வருகிறார். என் கணவன் இல்லாமல் ஓர் பாலைவனத்தில் வாழ்வதை போல வாழ்ந்தாலும் என் கணவர் இயேசு கிறிஸ்துவுக்காக மரித்திருக்கிறார் என்று நினைக்கும் போது ஆறுதல் அடைகிறேன்".
இவரை பொறுத்த வரை தன் கணவர் இயேசுவுக்கு விசுவாசமாகவும், மரணத்தின் மூலம் தேவனுக்கு மகிமையான ஆசீர்வாதமாகவும் இருந்தார் என்று நன்றி செலுத்துகிறார்.
சேஷமா (நேகடியின் மனைவி) சூசன்னா (தில்மன் மனைவி) இருவரும் ஓர் பேட்டியில் தங்கள் கணவனை கொன்றவர்களை மன்னிப்பதாக கண்ணீரோடு கூறினார். இந்த செய்து துருக்கு தேசத்தையே அசைத்தது. துருக்கி முழுவதும் இவ்விருவரையும் பற்றி பேச ஆரம்பித்தனர்.. தேவன் இவர்களை சாட்சியாய் நிறுத்தினார்.
ஒரு முறை நீதிமன்றத்தில் சேஷமா அமர்ந்திருந்த போது ஒரு குரல் கேட்டது. "நான் சிலுவையில் வெற்றியை பெற்றேனா இல்லையா?" என்று தேவன் பேசினார். சேஷமா மறுமொழியாக "ஆம்.. சிலுவையில் நீர் வெற்றி சிறந்தீர்" என்று கூறினார். தேவன் மறுமொழியாக "இவர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் தங்கள் மரணத்தின் மூலமாக. அவர்களின் சாட்சிகளின் மூலமாகவும், இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தின் மூலமாகவும், இவர்கள் கோலியாத்தை வென்றிருகின்றனர். இவர்களை கொன்றவர்கள் தோற்று பொய் விட்டார்கள்"
இந்த நிகழ்வை இன்றும் சேஷமா நினைவு கூறுகிறார். சேஷமா இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார். இன்றும் இவரையும் குழந்தைகளையும் கொன்று விடுவார்களோ என்ற மரண பயத்துடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் விசுவாசத்தில் வளர்ந்து வருகிறார். இவருடைய மகன் "அம்மா கவலைபடாதிருங்கள்" என்று தன் மழலை குரலில் ஆறுதல் படுத்தி வருகிறான். தேவன் மேல் உள்ள நம்பிக்கையை தொடர்ந்து இழக்காமல் குடும்பமாக சாட்சியாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர்..
இந்த சாட்சியை படிக்கும் அன்பான சகோதரா சகோதிரி.... நம் வாழ்க்கையில் நாம் இழந்து போன சிறு சிறு காரியங்களுக்கும் சோர்ந்து போய், சபைக்கு போகாமலும், வேதம் வாசியாமலும், ஜெபிக்காமலும், ஊழியத்தில் பங்கேடுக்காமலும் இருக்கிறோமா? இவர்களை குறித்து யோசித்து பாருங்கள். தங்கள் கணவருடைய தலை வெட்டப்பட்டும் அவர்களை மன்னித்து அவர்களும் இயேசுவை காண வேண்டும் என்று பகிரங்கமாக சாட்சி கூறும் இவர்கள் முன் நம் விசுவாசம் எப்படி?
சிறு காரியங்களினால் இன்று முகம் குடுத்து பேசாத கிறிஸ்தவர்கள் பல பேர் உண்டு. முகபுத்தகத்திலும் சண்டை போடும் பல கிறிஸ்தவ நண்பர்களை கண்டிருக்கிறேன். ஆனால் இவர்கள் தங்கள் கணவரை கலுத்தருத்தவர்களை மன்னித்து அவர்களையும் பரலோக ராஜியத்திர்க்குள்ளாக அழைக்கிறார்கள். நாமும் இப்படிப்பட்ட விசுவாசத்தோடு அன்போடு நாட்களை சந்திப்போம்.
என்னத்தை இழந்தாலும் இயேசுவை இழந்து விடாதீர்கள்..
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்
0 Comments