தேவனின் சிநேகிதன்
ஒருவன் தன் சினேகிதனோடே பேசுவது போல கர்த்தர் மோசேயோடே முகமுகமாய் பேசினார்.(யாத்.33:11)
பிறருக்காக மன்றாடுவதும் மன்றாட்டு வீரர்களாக உருவாக்கப்படுவதும்
எளிதான காரியமல்ல. மன்றத்து ஜெபத்திற்கு அர்ப்பணித்தவர்கள் தமக்கென்று வைத்திருக்கும் வாழ்க்கை முறைகளை மாற்றி அமைப்பதற்கு தேவையான நேரத்தை செலவிடுவதற்கும் அர்ப்பணிக்கிறவர்களுக்கு தேவன் மன்றாட்டு அபிஷேகத்தை அளவில்லாமல் அளிக்கிறார். இந்த மன்றாட்டு அபிஷேகத்தை பெற்ற மன்றாட்டு வீரன் தேவனால் தம்முடைய சினேகிதன் என்று அழைக்கப்படுகிறான். அதுமட்டுமன்றி தான் தேவனுடைய சினேகிதன் என்று அவரால் அழைக்கப்படுவதில் பெருமிதம் கொள்கிறான். தேவனுடைய சினேகிதன் என்றால் தன்னை தமது விலையேறப்பெற்ற ரத்தத்தினால் மீட்டுக்கொண்டு தேவாதி தேவன் மேல் தனியாத தாகம் கொண்டவன் என்பதாலும். இப்படிப்பட்ட தான் தேவனோடு தனித்திருக்கும் அனுதினமும் ஓழுங்கும் கிராமமாய் கடைப்பிடிப்பவனாக இருப்பான்.
மேலும் தேவன் தம்மை நோக்கி ஜனங்களுக்காக மன்றாடி ஜெபிக்கிற அவனோடு நட்பையும் சினேகத்தையும் வைத்துக்கொள்வதை அதிகம் வாஞ்சிக்கிறார். எனவே தம்மோடு தனித்திருந்து அனுதினமும் சஞ்சரிக்கும் மனிதனை தேவன் தேடுகிறார்(ஆதியா.5.22). மேலும் ஜெபம் மன்றாட்டு வீரனாகிய தம்முடைய சினேகிதன் தமக்கு அருகில் நெருங்கி வர வேண்டும் என்று தமது அன்பின் ஆழம் அகலம் நீளம் உயரத்தை உணர்ந்து அனுபவிக்க வேண்டும் என்றும்(ரோமர்.11.33). இதை நன்கு அறிந்து கொண்டு சிநேகிதன் அனுதினமும் தேவனோடு சஞ்சரிக்க விரும்புவதால் அவருக்குள் வளருகிற அனுபவத்தையும் அவரை போல மாறுகிற கிருபையையும் பெற்றுக் கொள்கிறான.
சினேகிதர் என்று தேவனால் அழைக்கப்பட்டவர்கள்.
ஆபிரகாம் (ஏசாயா.41.8; யாக்.2.23)
மோசே (யாத் 33.11)
யாக்கோபு (ரோமர் 9.13)
லாசரு (யோவான் 11.11)
சீஷர்கள் (யோவான் 15.15;16.27)
தேவனுடைய சிநேகிதன் என்பவன் அவருடைய இருதயத்தை நன்கறிந்தவனாகவும் தினமும் தன் சிநேகிதன் ஆகிய ஒருவனிடத்தில் தம்முடைய காரியத்தை மறைக்காமல் வெளிப்படுத்துவதற்கு ஏற்ற நம்பிக்கைக்குரியவனாகவும் இருக்கிறான் (ஆதியா 18:18). ஜெப ஸ்நேகிதன் தேவனுடைய ரகசியங்களை அறிந்து அதற்கான உத்தரவாதத்தோடு ஜெபிக்கிற உன்னத அனுபவத்தை உடையவனாக இருக்கிறான். இந்த உன்னத அனுபவங்கள் சில நாட்கள்/ சில மாதங்கள்/ வருடங்களுக்குள் நடந்து விடுவதல்ல. தொடர்ந்து தேவனுக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் வாழவும் உத்தரவாதத்தையும் உண்மையோடும் ஜெபிக்கவும் செயல்படவும் தூவங்கும் போது கிடைக்கிறது(எண் 12:6). நாம் தேவனுக்கு சினேகிதமாய் மாறுவதால் தேவனுக்கு அருகில் அல்லாமல் தேவனின் இருதயத்தில் அருகில் வாழும் பாக்கியத்தையும் சிறப்பான இடத்தையும் பிடிக்கிறோம். இதில் மொத்தம் தேவபாரதி சுமந்து ஜெபிக்கிற உன்னதமான சிலாக்கியத்தை பெறுகிறோம்.
சிநேகிதன்…….
1.தேவனோடு கூட வாழ்கிறவன்(ஆதி 39:3)
2.தேவா உறவில் வாழ்கிறவன்(யோவான் 17:24)
3. தேவ சமூகத்தை தேடுகிறவன்(மாற்கு 1.35; சங்கீதம் 5:3)
4. தேவ அன்பில் வாழ்கிறவன்(யோவான் 13:23;14:21)
5. தேவனுடைய இருதயத்தை அறிந்தவன்(ஆதி 18:20)
6. தேவ பாரத்தை சுமக்கிறவன்(ஆதி 18:20-30)
7. தேவனுக்கு முன்பாக நிற்பவன்(ஆதி 18:22;1இரா 17:1)
8. முகம் முழங்காலில் பட குனிந்து ஜெபிக்கிறவன்(1 இரா 17.42)
9. தேவ இறக்கம் வெளிப்படும் வரை ஜெயிக்கிறவன்(1இரா 17:41,42)
10. தேவனுக்கும் மனிதனுக்கும் நடுவாக நிற்பவன்(உபா 5:5)
11. தேவன் எழுதிய தீர்ப்பை மாற்று கிறவன்(யாத் 32.10-14)
12. ஜெபத்தில் போராடுகிறவன்(கொலோ 4:12)
13. இடைவிடாமல் விண்ணப்பம் பண்ணுகிறவன்(1சாமு 7:8)
14. தன் உயிரையும் பொருட்படுத்தாதவன்(எஸ்தர் 4:16)
15. ஜனங்களுக்காக வழக்காடு கிறவன்(யோபு16:21)
16. கெஞ்சுகிறவன்(யாத் 32:11)
17. பரிந்து பேசுகிறவன்(யாத் 32:32)
18. உபவாசிக்கிறவன்(உபா 9:18;10:10)
19. திறப்பில் நிற்கிறவன்(சங் 106:23)
20. பெருமூச்சு விட்டு அழுகுகிறவன்(எசேக் 9:4;21:6)
21. கண்ணீர் வடிக்கிறவன்(எரே 9:1;13:17;14:17)
22. பாவமன்னிப்புக்காக மன்றாடுகிறவன்(யாத் 32:32)
23. அழிவு தடுத்து நிறுத்தப்பட ஜெயிக்கிறவன்(எசே 22:30)
இந்த சிறந்த அனுபவங்கள் மன்றாட்டு் வீரனுடைய ஜெப அறிவாக இல்லாமல்
ஜெப அனுபவ மாகவும் பழக்கவழக்கமாக மாறி விட வேண்டும்.
0 Comments