இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

தலைமைத்துவம் - Leadership

 

தலைமைத்துவம்


தரிசனப் பாதையில் நேரிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத் திலும் மேற்கொள்ளப்பட வேண்டிய விஷயங்களை சரியான விதத்தில் நிர்ணயித்து, அவற்றை ஒழுங்குபடுத்தி வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்பதற்கு தேவையான செயல் திட்டங்களை நன்கு திட்டமிட்டு அத்திட்டங்களை தரிசன வாழ்க்கையில் அமலாக்கி தம்மோடு இணைந் துள்ள உடன் தரிசன பங்காளர்களை அதில் ஆர்வத்தோடு பங்குபெறச் செய்வதற்கும், அவ்விதம் செயலாற்றும்போது ஏற்படக்கூடிய முரண் பாடுகள், தவறுகள், பிரச்சினைகள், சிக்கல்கள் போன்றவற்றிற்கு தீர்வு களைப் பெறும் வகையில் அவர்களுக்கு நல்வழி காட்டுவதற்கும், திருத்து வதற்கும் தேவனால் அபிஷேகிக்கப்பட்டு, பாரப்படுத்தப்பட்டு தெய்வீக ஞானமும், ஆத்தும பாரமும் கரிசணையும் கொண்ட சிறந்த தலைமைத் துவத்தை உடைய தரிசனத் தலைவவராக இருக்க வேண்டியது அவசியம்


தலைமைத்துவம் என்பது... எவ்வித வற்புறுத்துதலும், வலுக் கட்டாயமுமில்லாத வழிமுறைகளின் ஊடாக தேவ ஜனங்களை நடத்தி தரிசனம் நிறைவேறுதலுக்கு சிறப்பாக செயல்பட ஊக்குவிப்பதன்மூலம் சரியான திசையில் வழிநடத்திச் செல்லும் செயல்முறையாகும். மேலும் தற்போதிருக்கிற நிலையிலிருந்து முன்னோக்கி வளர்ந்து அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதுமாகும்.


தலைமைத்துவம் என்பது மாற்றத்தின் வழியாகச் சென்று மாற்றத் தைக் கொண்டுவருதல் என்றும் சொல்லலாம். தகப்பன் பிள்ளை மாற வேண்டும் என நினைக்கிறார்; பிள்ளை தகப்பன் மாறவேண்டும் என நினைக்கிறான். திருச்சபை போதகர் விசுவாசிகள் மாறவேண்டும் என நினைக்கிறார்; விசுவாசிகள் போதகர் மாறவேண்டும் என நினைக் கிறார்கள். ஆசிரியர் மாணவன் மாறவேண்டும் என நினைக்கிறார் மாணவன் ஆசிரியர் மாறவேண்டும் என நினைக்கிறான்.


செயல்திறன்மிக்க தலைமைத்துவம் என்பது தூரநோக்கு இலக்கு ஒன்றை நிர்ணயித்து அவற்றை அடைவதற்கான செயல் நுணுக்கத்தை விருத்தி செய்து, உடனிருப்போரின் ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப் பையும் ஒன்றுதிரட்டி, அதை அடைவதற்கான செயல்திட்டங்களை ஊக்குவிக்கின்ற சிறந்த செயல்முறையாகும். இந்த தலைமைத்துவம் சார்ந்த செயல்திறன் மிக்க தலைவராயிருப்பவர் தரிசனத்தில் எதிர்காலம் பற்றிய தூர இலக்கை உருவாக்குகிறவராயிருப்பார். அந்த தூர இலக்கை நோக்கி இயங்குவதற்கேதுவான அறிவுப்பூர்வமான செயல் திட்டங்களை விருத்தியடையச் செய்கிறவராயிருப்பார். இதன்படி தரிசனப் பாதையில் பயணித்து செயலாற்றுவதற்கு தேவையான ஒத்துழைப்பையும், முயற்சி யையும் வழங்குகிற மனித கூட்டத்தின் ஆதரவை ஒன்றுதிரட்டுகிறவராக இருப்பார். தரிசன திட்டங்களை அமல்படுத்தும் விஷயத்தில் முக்கிய பங்கெடுத்து செயலாற்றும் உடன் ஊழியர்களை சிறந்த முறையில் ஊக்கு விக்கிறவராயிருப்பார்.


மேலும் தலைமைத்துவ தலைவர் என்பவர் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் திட்டமிடவும், தன்னுடனிருப்போருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், விசேஷித்த குணநலன்கள் கொண் டோரைக் கண்டுபிடித்து ஒருங்கிணைக்கவும், ஆக்கப்பூர்வமாக சிந்தித்து சிறப்பான விதங்களில் செயல்படவும், அடிக்கடி பரிசோதனை செய்து அதை சரிசெய்யவும் தேறினவராயிருப்பர். தலைமைத்துவத்திலிருப்போர் ஜனங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளவேண்டுமாயின், அவர்களுக்கும் ஜனங்களுக்குமுள்ள தொடர்பைப் பொறுத்து மற்றவர்களால் அங்கீகரிக்கப் படுகின்றனர். தலைமைத்துவத்திற்கு அடையாளம் மற்றவர்கள் பின்பற்றும் அளவைப் பொறுத்துதான் மாறுபடுகிறது. தலைவருக்கும் ஜனங் களுக்கு முள்ள உறவு சரியில்லையெனில் தலைவருக்கும் தேவனோடுள்ள நெருங்கிய ஐக்கியத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று விளங்கிக் கொள்ள முடியும்.


கிறிஸ்தவ தலைமைத்துவம் என்பது தன்னலமற்றது. சுயநலத்திற்கு அங்கு இடமில்லை (கலா 2:20). தேவனோடு நடந்து அவரது இதய பாரத்தைத் தங்கள் தரிசனமாகக் கொண்டு ஊழியஞ்செய்வது மேன்மையான பாக்கியமாகும். மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப் பூர்வமாக தேவ சித்தத்தின்படி செய்ய முனைப்புடனிருக்க வேண்டியது நல்லது (எபே 6:6). தலைமைத்துவம் என்பது கிடைத்த பதவியைப் பொறுத்ததல்ல; செய்யும் செயலைப் பொறுத்தது. சிலர்.. பதவி கொடுத்தால் மட்டுமே செயல்படுவர்; பதவியைப் பறித்தால்... செயலும் போய்விடும், ஆட்களும் காணாமற் போய்விடுவர் (1தீமோ 1:12). தரிசன தலைவர் என்பவர் தேவனிடமிருந்து அந்தஸ்தைப் பெற்று, அதற்கேற்ற விதத்தில் செயல்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு தரிசனத்தில் இணை வோரைக் கொண்டு, தரிசனத்திற்கான இலக்குகளை தீர்மானிப்பதிலும், அவற்றை நிறைவேற்றுவதிலும் செல்வாக்குமிக்கவராக இருப்பார்


*சிறந்த தலைமைக்குத் தேவையானவை...


*திட்ட மிடுதல் (Planning)


+] வடிவமைத்தல் (Organising)


+ நியமித்தல் (Staffing)


*இயக்குதல் (Directing)


*ஒருங்கிணைத்தல் (Co-ordinating)


*அறிக்கை அளித்தல் (Reporting)


+ வரவு செலவு திட்டமிடுதல் (Budgetting)


தலைமைத்துவ ஆள்குத்துவம்


+ பாடுகளில் முதலாவது பாதிக்கப்படுபவரும், பாடுபடுவதற்கான வரிசையில் முதலாவது நிற்பவரும் தலைவரே


*விரும்பாத வேலை/பொறுப்பாயிருந்தாலும் அதில் விருப்பத்தை உண்டாக்கி அதை அவர்கள் விரும்புமளவுக்குச் செய்கிறவரே தலைவர்


*தலைமைத்துவ குணங்கள் நம்மில் ஆவியானவரால் விதைக்கப் பட்டு வளர்க்கப்படுகிறது


*பிறரை தலைமையேற்று நடத்த தன்னையே வெற்றி பெற்றவராயிருக்க வேண்டியது அவசியம்.


• எதிர்க்கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்டிருக்கும் மக்களின் நடுவிலும் ஒப்புரவை ஏற்படுத்துபவர்கள்


+] மற்றவர்களிடம் இருக்கும் சிறந்த திட்டங்களை, மனப்பூர்வமாய் ஏற்றுக் கொண்டு செயல்படுத்துகிறவர்.


• தங்கள் பணியை மிகைப்படுத்திச் சொல்லாமலும், தேவ பாரத்தைச்


• சுமந்து பாடுபடுவதை பெரிதாய்க் காட்டிக்கொள்ளாமலுமிருப்பர். தேவனின் செல்வாக்கையும் அதிகாரத்தையுமுடையவராயிருந்து சோதனையை சந்திப்பர்; சகித்துக்கொள்வர்.


+ தரிசனத் தலைவர்கள் தனக்கு ஏற்படும் தோல்வி ஒரு முடிவல்ல என்பதை அறிந்திருப்பர்


• தலைமைத்துவ முதிர்ச்சி திறமைமிக்க தலைவர்கள் முழுமனதுடனான கீழ்படிதலும், தியாகமனப்பான்மையும் உடையவர்களாக இருப்பர்


• தலைவனின் ஆவிக்குரிய முதிர்ச்சி, தேவனின் தோட்டத்திலிருந்து வரும் நறுமணமாகும். அது அவனைச் சுற்றியுள்ள சூழலை மாற்றி மெய்தேவனை நிரூபித்துக்காட்டும் வல்லமையுடையதாயிருக்கிறது. தலைவனின் திறமைகளும், ஆழமான அர்ப்பணிப்பும், தோல்வி களைப்பு என்னும் பள்ளியில் பட்டை தீட்டப்பட்டதாயிருக்கும். 


• சோம்பேறிகளும், ஒழுங்கற்றவர்களுமாயிருப்பவர்கள் உண்மையான தலைமைத்துவத்தை ஒருபோதும் பெறுவதில்லை.



+ தைரியமான தலைவர்கள் விரும்பத்தக்கதும், அழிவைக் கொண்டு +

வருகிறது மான சூழ்நிலைகளை அமைதியுடன் எதிர்கொள்வார்கள். 


• பெருமைக்கு பலியாகியிருப்போர் அந்தப் பாவம் தன்னிடம் இருப்பதைப்பற்றிய அறிவே இல்லாமலிருப்பர். பெருமையின் மோசமான வெளிப்பாடு சுயமாகும் 


• தலைவர்கள் எந்த அளவுக்கு ஒரு பாதையில் பயணப்பட்டிருக்கிறார்களோ, அந்த அளவுக்குத்தான் தங்களைப் பின்பற்றுகிறவர்களையும் அழைத்துச் செல்ல முடியும்


• தலைவர்கள் தெய்வீக ஞானமுள்ளவர்களாயிருக்க வேண்டும். அறிவைப் பயன்படுத்தும் திறன்தான் ஞானம். ஞானமானது பரத்திலிருந்து வரும் பகுத்தறிவு. அறிவு கற்றுக்கொள்வதன் மூலம் வருகிறது. ஞானம் என்பது பகுத்தறிவு, தீர்ப்பு, அனுபவம் போன்ற ஆற்றலின் கலவை.


தலைமைத்துவ ஆவிக்குரிய நிலை...


ஆவிக்குரிய தலைவர்கள் தாங்களாகவோ அல்லது குறிப்பிட்ட தேவ மனிதராலோ நியமிக்கப்படுவதில்லை; தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு, அபிஷேகிக்கப்பட்டு, பாரப்படுத்தப்பட்டு நியமிக் கப்படுகின்றனர். பின்னர் அவர்கள் முதிர்ச்சி நிலையை எட்டும் சமயத்தில் தலைமைத்துவ நிலைக்கு உறுதி செய்யப்படுகிறார்கள்.


தலைமைத்துவ தலைவர்கள் பரலோகத்தாலும், பூலோகத்தாலும் பாதாளத்தாலும் நன்கு அறியப்பட்டிருப்பார்கள்.


தலைமைத்துவ தலைவர்கள் தன்னைத்தானே வெறுமைய தேவனையே முற்றும் சார்ந்திருப்பர். ஆகவே அவரது ஆவியினால் சரியான பாதையில் வழிநடத்தப்படுகிறவர்களாயிருப்பர்.


தாழ்மை என்கிற அடையாளத்தைப் பெற்றவராயிருப்பர்.


தேவனால் அங்கீகரிக்கப்பட்டவர்களாயிருப்பர் (ஏசாயா 42:1).


நல்ல சுபாவங்கள் இருந்தால் மட்டும் போதாது; தேவ ஆவியான


வரின் அனுக்கிரகமும் அபிஷேகமும்தான் ஒருவரை சிறந்த


தலைமைத்துவ தலைவராக்கும் தலைவர்களின் வாழ்க்கை தேவ சாயலையும், தெய்வீக குணங் களையும் வெளிப்படுத்துவதாக (பிரதிபலிப்பதாக) இருக்கும்.


தேவன் தங்களுக்குக் கொடுத்த உடன் ஊழியர்களையும் ஜனங் களையும் இறுமாப்பாய் ஆளாமல், தேவனுடைய விலையேறப் பெற்ற சொத்துகள் என்று எண்ணி சரியான விதத்தில் நடத்துவர்


தலைமைத்துவ தலைவரின் பார்வை தேவன் பார்க்கிற பிரகார மாகவே இருக்கும். அதாவது தேவன் ஒரு காரியத்தை அல்லது ஒருவரை எப்படி பார்ப்பாரோ அப்படியே தாங்களும் ஆவிக்குரிய கண்களால் பார்த்து நிதானிப்பார்கள்,


உதாரணம்


மலையைச் சுற்றிலும் குதிரைகளும் இரதங்களும் அதாவது தேவன் அனுப்பும் பாதுகாப்பு படைகளை ஆவிக்குரிய கண்களில் கண்டு தேவனுக்காக தைரியம் கொள்கிறவர்களாயிருப்பர் (2இரா 6:17)


மனசாட்சியின் சுவரில் தேவனின் விரல் எழுதும் வார்த்தைகளைப் படிப்பதோடு அதின் அர்த்தத்தை ஆவிக்குரிய ரீதியில் புரிந்து கொள்கிறவர்களாயிருப்பர் (தானி 5:5-31). அந்தகாரத்தின் திரையை விலக்கி சிங்காசனத்தில் வீற்றிருக்கிற


தேவாதி தேவனின் இரக்கத்தை ஜனங்களுக்கு வெளிப்படுத்துகிறவர்களாயிருப்பர்


மலையின்மீது காட்டப்படும் மாதிரியை அதாவது ஊழியம் செய்ய வேண்டிய விதங்களைத் தாங்கள் ஆவிக்குரிய கண்களால் நேரடியாக தரிசிப்பதுமல்லாமல் தரிசனத்தில் தங்களோடு இணைந்திருப்பவர் களுக்கும் விளக்கிக் காட்டுகிறவர்களாயிருப்பர் (எபி 8:5; 1பேது 2:21).


தேவனால் தரிசனத்தில் காட்டப்படும் காரியங்களை தாங்கள் விளங்கிக் கொள்வதோடு பின்வரும் சந்ததிகளுக்கும் அதை எழுதி வைப்பவர்களாயிருப்பர் (வெளி 1:19)


தலைமைத்துவத்தைப் பின்பற்றுதல்...


ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன்' (மத் 16:24) என்ற வசனத்தின்படி தலைமைத்துவத்தை விரும்புகிறவர்கள் கிறிஸ்துவை மனப்பூர்வமாகவும் உண்மையாகவும் பின்பற்றி அவரைப்போல மாற வேண்டும். இவ்விதம் கிறிஸ்துவைப் பின்பற்றினால் தலைமைத்துவத்தில் சிறந்த மகத்துவமான வெற்றியைப் பெறலாம். இதன்மூலம் சபை வளர்ச்சி, சபைபெருக்கம், திரளான ஆத்தும அறுவடை, தேசத்தில் மறுரூபம் ஆகியவை உண்டாகும்


மோசேயின் தலைமைத்துவம்...


இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவ சந்ததியில் எட்டினது. தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்.தேவன் அவர்களை நினைத்தருளினார்" (யாத் 2:23-25)



தேவாதி தேவன் எகிப்து தேசத்தில் அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரலைக் கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி ஒரு சிறந்த மனிதனைத் தெரிந்துகொண்டு தலைவராக ஏற்படுத்துகிறார் தேவன் ஒரு தலைவரை ஏற்படுத்துவதற்கு முன்னர் அவர்களை சில காலம் மறைத்து வைத்து, கற்றுக்கொடுத்து, பயிற்சியளித்து தலைமைத் துவத்திற்கு தகுதியாக்குகிறார். இதன் அடிப்படையில் தேவனின் அழைப்பு மோசேக்கு கிடைத்தபோது அவன் பாலைவனத்தின் பிற்பகுதியில் தனது மாமனார் எத்திரோவின் மந்தையை பராமரித்துக் கொண்டிருந்தான், உயர்கல்வி கற்றிருந்த, அரண்மனை சுகபோகங்களில் பழகியிருந்த ஒரு மனிதனுக்கு மிகத் தாழ்வான அந்த காலத்தின் சூழ்நிலைகள் அவனைக் கசப்புள்ள மனிதனாக மாற்றுவதற்கு எதுவானதாயிருந்தது அ மந்தையை மேய்ப்பது ஒரு தாழ்வான தொழிலாகக் கருதப்பட்ட நிலையில் அவன் தன்னைத்தானே நொந்து கொண்டு கவலையினாலும், வருத்தத் தினாலும், ஏமாற்றத்தினாலும் நிறைந்து தேவனது சத்தத்தைக் கேட்கும் எல்லையை விட்டு விலகுகிறதற்கும் ஏதுவான வாய்ப்புகள் ஒருவேளை இருந்திருக்கக்கூடும்


இந்நிலையில்தான் ஆச்சரியமும் அதிசயமுமான காரியமாய் அழைப்பின் சத்தம் உண்டானது. அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான். முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது (யாத். 3:2-4). இந்த சத்தத்தைக் கேட்டவுடன் மோசே தன்னிடம் பேசியது தேவன்தான் என்று சரியாக விளங்கிக்கொண்டான். இதுபோன்று தரிசனத்தை நிறைவேற்று வதற்கென்று தலைவர்களாக அழைக்கப்பட்ட ஒவ்வொருவரும் தேவனின் சத்தத்தைக் கேட்டு, அவரது அழைப்பைப் புரிந்து, சித்தமறிந்து செயல்பட வேண்டியது அவசியம்.


அந்நேரத்தில் மோசே தனது குறைகளையும், பெலவீனத்தையும், இயலாமையையும் சுட்டிக்காட்டி தலைமைத்துவத்துவத்தை ஏற்பதற்குத் தயங்குகிறார். ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாபு மந்ததாவும் உள்ளவன் என்றான். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினர் யார் ஊமையனையும் செவிடளையும் பார்வையுள்ளவளையும் குருடனையும் உண்டாக்கினவர் யார் கர்த்தராகிய நான் அல்லவா? ஆதலால், நீ போ நான் உன் வாயோடே இருந்து, பேச வேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்" (யாத். 4110-11).


கர்த்தருக்கு ஊழியம் செய்வது போன்ற பாக்கியம் இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை என்ற உணர்வு அந்நோத்தில் மோசேக்குள் இல்லை. இந்த உலகத்தின் எந்தப் பணியைக் காட்டிலும் இதுவே மாபெரும் பணியாகும். இப் பூமியில் இந்தப் பணிக்கு ஒப்பிட்டு எதையும் கூறிவிட முடியாது. ஆனால் இந்த மகிமையான ஊழியத்திற்கு தேவனால் அழைக் கப்பட்டால் மட்டுமே செய்ய முடியும், அழைக்கப்பட்டபின்பு நம்மை அதற்கேற்றார்போல் வழிநடத்துதல் என்பது தேவனின் பொறுப்பு வழிநடத்தப்படுதலின் நிச்சயம் என்பது வேதாகமத்தில் குறிப்பிடப் பட்டுள்ள பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பொறுத்தது. நம்மைக் கொண்டு செய்ய வேண்டிய காரியத்தை தேசத்தில் செய்து முடிக்க அவர் காத்திருக் கிறார். அதற்கு நம்மை விடுதலையின் கருவியாக பயன்படுத்த விரும்புகிறார்


ஆகையால் தேவ சத்தம் கேட்காதவரைக்கும். புரிந்துகொள்ளாத வரைக்கும், உறுதிப்படுத்திக்கொள்ளாதவரைக்கும் தரிசன தலைவர்களால் ஒருபோதும் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. தேவ சித்தத்தை சில வேளைகளில் உடனடியாக அறிந்து கொள்ளலாம்; சில வேளை களில் கால தாமதமாகலாம். ஆகையால் தேவன் நமக்கு நம்முடைய அழைப்பை உறுதிப்படுத்தும்வரை காத்திருக்க வேண்டும். தேவன் ஒருவனைக் கொண்டு செய்ய நினைக்கும் காரியத்தை அவனைக் கொண்டுதான் செய்து முடிப்பார். அதை ஒருபோதும் மாற்றமாட்டார். கர்த்தர் ஒருவரை தலைமைப் பொறுப்பேற்க அழைக்கும்போது எல்லாவற்றிலும் நிறைவானவர்களா யிருக்கிறார்களா என்று பார்த்து அதினடிப்படையில் அழைக்காமல் குறை உள்ளவர்களாக இருந்தாலும் தமது பார்வைக்கு நலமாகத் தோன்றுகிற வர்களை அழைத்து உருவாக்கி தலைவராக நியமித்து அபிஷேகிக்கிறார். பரிசுத்த வேதாகமத்தில் நாம் பார்க்கும் போது கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பேதுருவை ஆண்டவர் இயேசு அழைத்தார் (மத் 4:18,19).


Post a Comment

0 Comments