இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

டேவிட் லிவங்ஸ்டன் வாழ்க்கை வரலாறு.... DAVID LIVINGSTONE LIFE HISTORY


டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு
(DAVID LIVINGSTONE LIFE HISTORY)

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று


அன்புள்ள அம்மா! இதோ இந்தப் பணம் நான் ஒரு வாரத்தில் சம்பாதித்தது என்று டேவிட் மிக உற்சாகத்தோடு தன் தாயின் மடியில் அவனுடைய சம்பளத்தை எடுத்து வைத்தான். குடும்பத்தின் வறுமையை ஓரளவு அவனுடைய சம்பாத்தியத்தால் குறைக்க முடிகிறது என்று அவன் உணர்ச்சி வசப்பட்டான். இந்தப் பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறாய் டேவிட் என்று அவன் தாய் கேட்க, அம்மா நீங்கள் அனுமதித்தால் இலத்தீன் மொழியின் இலக்கணப் புத்தகம் வாங்க விரும்புகிறேன் என்று நிதானமாய் பதிலளித்தான். அவனுக்கு படிக்கவேண்டும் என்று அத்தனை ஆர்வம் இருந்தது. அனால் வறுமை அவனுக்கு கல்வி கற்கும் வாய்ப்பை மறுத்துவிட்டது.

ஆரம்ப வாழ்க்கை

1813ம் ஆண்டு மார்ச் மாதம் பத்தொன்பதாம் திகதி டேவிட் லிவிங்ஸ்டன் ஸ்கொட்லாந்து தேசத்தில் பிறந்தான். அவனுடைய பெற்றோர் மிகவும் ஏழைகள். ஆனால் உண்மைக் கிறிஸ்தவர்கள். குழந்தைப் பருவத்தில் டேவிட் கிறிஸ்தவ ஒழுக்கங்களைப் பெற்றோரிடமே கற்றுக்கொண்டான். ஒன்பது வயதினிலேயே வேதாகமத்தை மிகக் கருத்தோடு படிக்கலானான். நூற்றுப்பத்தொன்பதாம் சங்கீதம் முழுவதும் அப்போது அவனால் மனப்பாடமாகச் சொல்லமுடியும். மிகுந்த வறுமையின் காரணமாக அவன் பள்ளிக்குச் சென்று கல்வி கற்கமுடியவில்லை. பத்தாம் வயதில் ஒரு பஞ்சாலையில் வேலைக்கு அமர்ந்தான். அங்கு காலை ஆறமணி முதல் இரவு எட்டு மணிவரை வேலைசெய்யவேண்டும். வேலை செய்யும்போது இலத்தீன் மொழி புத்தகத்தைத் தனக்கருகில் திறந்துவைத்துக்கொண்டு படித்துக் கொண்டே வேலைசெய்வான். வீட்டிற்கு வந்து மிகவும் களைப்பாய் இருந்தபோதிலும் நடு இரவுவரை படித்துக்கொண்டிருப்பான்.

கடின உழைப்பின் பயனாக இலத்தீன் மொழியில் நன்றாகத் தேர்ச்சி பெற்றான். அதன்பின் அறிவியலை கற்க ஆரம்பித்தான். ஆலையில் திறமையுடன் பணியாற்றியதால் பதவி உயர்வும், அதிக ஊதியமும் அவனுக்கு கிடைத்தன பதவி உயர்வு, ஊதிய உயர்வு இவ்விரண்டும் அவனுக்குக் கல்வி கற்கத் துணைபுரிந்தன. கோடைகாலங்களில் வேலைசெய்யுவும் குளிர் காலங்களில் கல்வி கற்கவும் வசதி கிடைத்தது. கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் கிரேக்கமொழியையும், மருத்துவமும் கற்று வந்தான். கோடைகாலத்தில் வேலைசெய்து கொண்டே இறையில் நூல்களைக் கற்றுவந்தான். கல்வியில் மேம்பாடு அடைய அவனுக்கு யாருடைய உதவியும் கிடைத்ததில்லை. அத்தனை கடின உழைப்பும், வாழ்க்கைத் துன்பங்களும் அவனுக்குப் பிற்காலத்தில் பணித்தளத்தில் பாடுகளைச் சகிக்க பயிற்சியாக அமைந்தது.

லிவிங்ஸ்டன் விளையாட நேரம் இருந்ததில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் ஆற்றோரமாகச் செல்லும் பாதையில் தன் வீட்டிற்கு நடந்து செல்வதை இன்பமாக ரசித்து மகிழுவான். மீன் பிடிப்பதிலும் அவனுக்கு விருப்பமுண்டு. இயற்கை காட்சிகளைக் கூர்ந்து கவனிப்பான். பறவைகள், பலவகை பூக்கள், குன்றுகள் ஆகியவைகளைக் கவனித்து அறிவைப் பெருக்கிக் கொள்வான். பிரயாணத்தின்போது புத்தகங்களைப் படித்துச் செல்வதில் விருப்பமுடையவன். எல்லாவற்றிற்கும் வேதாகமத்தை வாசித்து தியானிப்பதில் அதிகப் பற்றுடையவன். இவ்விதம் வேதாகமத்தை எல்லாவற்றையும் விட நேசித்து, அவனுடைய பிற்கால வாழ்க்கையில் பெரிதும் உதவிற்று. வேதாகமமே அவனுடைய கடைசி நாட்களில் அவனுக்கு இணையற்ற துணையாய் இருந்தது.

ஆபிரிக்கா நாட்டிற்கு அழைப்பு

லிவிங்ஸ்டன் அவருடைய இருபதாவது வயதில் கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அயல்நாடுகளில் மிசனறியாகச் செல்லத் தீர்மானித்தார். ஒரு nஐர்மானிய மிசனறி மருத்துவம் தெரிந்த தேவஊழியர் தேவை என்று லிவிங்ஸ்டனுக்குக் கடிதம் எழுதினார். மருத்துவப் பணியைச் சீன நாட்டில் செய்ய அழைத்திருந்தார். அதனால் லிவிங்ஸ்டன் தன் மருத்துவப்படிப்பை முடித்ததும் சீன நாட்டிற்குச மிசனறியாகச் செல்ல முடிவெடுத்தார். கடவுளோ அவருக்காக வேறு திட்டங்களை வைத்திருந்தார். நாம் நம்முடைய செயல் திட்டங்களை கடவுள் கரத்தில் ஒப்படைக்கும்போது நம் விருப்பம் நிறைவேறாது போயினும் கர்த்தரின் சித்தம் தவறாது நிறைவேறும். சீன தேசத்தில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றமையால் லிவிங்ஸ்டன் சீனாவிற்குப் போவது தடையாயிற்று.

கர்த்தருடைய வழி நடத்துதலுக்காகக் காத்திருக்கும் போது, ராபர்ட் மொபட் என்னும் ஆப்பிரிக்க மிசனறி ஒருவர் இலண்டன் நகரில் ஆபிரிக்க நாட்டின் தேவைகளைக் குறித்துப் பேசினார். அவர் சொன்னதாவது: ஆபிரிக்க நாட்டில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் புகை மண்டலத்தை நான் பார்த்தேன். அவர்கள் கடவுளற்றவர்கள். கிறிஸ்துவை அறியாதவர்கள். உலகில் நம்பிக்கையற்றவர்கள். இந்தப் பேச்சு லிவிங்ஸ்டன் உள்ளத்தில் கிரியை செய்து. அதனால் ஆபிரிக்கா நாட்டிற்குப் போகத் தீர்மானித்தார். கப்பல் பிரயாணத்தின்போது நட்சத்திரங்களைக் கணித்து வழிகண்டுபிடிப்பது எப்படி என்ற கலைகை; கற்றுக்கொண்டார். தென்ஆபிரிக்க நாட்டின் கேப் டவுன் நகர் வந்து இறங்கியதும் வான சாஸ்திரம் கற்றுக்கொண்டார். இருண்ட காடுகளில் அவர் பிற்காலத்தில் பிரயாணம் செய்ய நேரிட்டபோது, வழி கண்டு பிடிக்க வானசாஸ்திர பயிற்சி அவருக்கு மகிவும் பிரயோஐனமாக இருந்தது.

இருண்ட கண்டத்தில் டேவிட் லிவிங்ஸ்டன்

கேப் டவுன் நகரில் இருந்து எருதுகள் இழுக்கும் கூண்டு வண்டியில் எழுநூறு மைல்கள் பிரயாணம் செய்து குருமான் என்ற இடத்தையடைந்தார். அங்குதான் ராபர்ட் மொபட் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவருடன் தங்கியிருக்கும்போது, கடவுள் பெரியதொரு திருப்பணியை ஆபிரிக்க நாட்டில் அவர் செய்ய விரும்புவதாகக் கண்டுகொண்டார். ஆபிரிக்க நாட்டின் மத்திய பிரதேசத்தில் பிரவேசிக்கவும், அதை சுவிசேசத்திற்குத் திறந்துவிடவும் தீர்மானித்தார். அதுவரை ஒருவரும் உடசெல்லாத பகுதியை கிறிஸ்துவின் நற்செய்திக்கென்று சென்று அடைய ஆவல் கொண்டார். இதுவரை எந்த மனிதனும் செய்திராத பெரும்பணியை அவர் செய்வேண்டுமென்று கடவள் அவரை அழைத்திருக்கிறார் என்று பூரணமாய் நம்பினார். எண்ணற்ற ஆபிரிக்க இனமக்கள் மத்தியபகுதியில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தி சொல்லப்படவில்லை. சுவிசேசத்திற்காக செல்லமுடியாத உட்பகுதிகளை தாமே சென்றடைய தீர்மானித்தார்.

சிங்கத்தை வேட்டையாடுதல்

மோபட்சா என்ற மிக அழகான பள்ளத்தாக்குப் பிரதேசத்தில் மூன்று ஆண்டுகள் தங்கிப் பணிபுரிய தெரிந்து கொண்டார். அங்கிருக்கும்போது மேரி மொபட் என்பவரைத் திருணம் செய்துகொண்டார். அவள் ராபர்ட் மொபட் அவர்களின் குமாரத்தியாவாள். மோபட்சா பள்ளத்தாக்கில் சிங்கங்களின் தொல்லை அதிகமாய் இருந்தது. அவை மனிதர்களையும் ஆடு, மாடகளையும் கொன்று இழுத்துச் சென்றுவிடும். அங்கு வாழ்ந்த மக்கள் லிவிங்ஸ்டனின் உதவியை நாடினர். ஒரு சிங்கத்தைக் கொன்றுவிட்டால் மற்றயவை அங்கிருந்து ஓடிவிடும் என்று லிவிங்ஸ்டன் அறிந்திருந்தார். சில ஆபிரிக்க மக்களைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு சிங்கவேட்டைக்குச் சென்றார். ஒரு சிங்கத்தைச் சுடவே அது அவர்மேல் பாய்ந்து அவர் தோள்பட்டையைக் கிழித்துவிட்டது. இதற்குள்ளாக அவருடன் சென்றிருந்த மற்றவர்கள் சிங்கத்தைச் சுட்டு வீழ்த்தினர். இந்தக் காயம் மிகவும் ஆபத்தானதும் சுகமாக அதிகநாட்களை எடுத்துக்கொண்டதாகவும் இருந்தது. அவருடைய கரம் இதனால் பலவீனப்பட்டு ஊனமுற்றது. தோள்பட்டைத் தழும்பு அவர் சாகும்வரை நிலைத்திருந்தது. இந்தத் தழும்பை வைத்துத்தான் அவர் மரித்தபின் அவரது உடலைக் கண்டுபிடிக்கமுடிந்தது. அந்த இடத்தில் அநேக ஆபிரிக்கர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். லிவிங்ஸ்டனும் அந்த இடத்திலேயே அதிக வசதியாய் வாழ்ந்திருக்கலாம்.

வடபகுதியை நோக்கிச் செல்லுதல்

லிவிங்ஸ்டன் தங்கி பணிபுரிந்த இடத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் பஞ்சம் ஏற்பட்டது. மற்ற மக்களைப் போல அவரும் வெட்டுக்கிளி, சிலவகை தவளைகள் ஆகியவற்றைப் புசித்து வாழவேண்டியிருந்தது. வடபகுதியை நோக்கிச் செல்ல ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேடிக்கொண்டிருந்தார். வடபகுதிக்குச் செல்லவேண்டுமானால் மிகப் பெரிய வானந்திரத்தைக் கடக்கவேண்டுமென்று கேள்விப்பட்டார். அதுவரை ஒருவரும் அப்பெரிய வனாந்தரத்தைக் கடந்துபோனதில்லையென்று கேள்விப்பட்டார். முந்நூறு மைல்கள் பிரயாணம் செய்து அவ்வனாந்திரத்தைக் கடக்க முடிவெடுத்தார். தண்ணீர் இல்லாமையால் அநேகமுறை அவர் அவதிக்குள்ளானார். ஒருசமயம் அங்கு வாழ்ந்து வந்த மனிதன் ஒருவன் தீக்கோழி முட்டையில் உள்ள தண்ணீரை அவருக்குக் கொடுத்துக் காப்பாற்றினான். தீக்கோழி தன் முட்டைகளை மணலில் புதைத்து வைக்கும். அநேக நாள் பிரயாணத்திற்குப் பின் நகாமி ஏரியை வந்தடைந்தார். இதுவே அவருடைய முதல் புவியியல் கண்டுபிடிப்பு. அந்த ஏரியைக் கண்டுபிடித்த முதல் ஐரோப்பியரும் அவரே.

அவர் மறுபடியும் பிரயாணப்பட்டு அநேக ஆபத்துகளைக் கடந்து செல்லவேண்டியிருந்தது. மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடந்த ஆபிரிக்க இனமக்களும், போயர் எனப்பட்ட டச்சுக்காரர்களும் தென் ஆபிரிக்காவில் குடியேறினவர்கள். இவர்கள் அவருக்கு அதிக ஆபத்தை விளைவித்தனர். போயர்கள் ஆபிரிக்கர்களை அடிமைகளாகப் பிடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தார்கள். இதை லிவிங்ஸ்டன் கண்டித்தார். ஒரு சமயம் அவருடைய உடைகள், உடமைகள், புத்தகங்கள், மருந்துகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர். ஆனாலும் அவர் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது இன்னல்களைக் கடந்து சென்று ஐhம்பசி நதியைக் கண்டுபிடித்தார். இது ஆபிரிக்காவில் மத்திய பாகத்தில் அமைந்துள்ள நதியாகும். இவ்விடத்திலும் அவரால் தங்கி பணிபுரிய இயலவில்லை. இப்பகுதியில் விசக்காய்ச்சல் பரவியிருந்ததே அதற்குக் காரணம்.

தனியே பிரயாணப்படுதல்

ஆபிரிக்க நாட்டின் மத்திய உட்பகுதிக்குள் மேலும் செல்ல விரும்பினார். அதனால் தன் மனைவி பிள்ளைகளை இங்கிலாந்து நாட்டிற்குத் திருப்பியனுப்பிவிட்டார். அவர்களால் அத்தனைக் கடினமான பிரயாணத்தை மேற்கொள்ளமுடியாது. கிறிஸ்துவக்குப் பணியாற்றுவதில் தாகமுற்றவராய் ஆபிரிக்க காடுகளில் நுழைந்து உட்பகுதி மக்களைச் சந்திக்கச் சென்றார். ஆபிரிக்க நாட்டின் நடுப்பகுதியை கிழக்கு மேற்காகக் கடந்து செல்லத் தீர்மானித்தார். இந்த நீண்ட பிரயாணம் ஆபிரிக்காவின் பூகோள அமைப்பில் புதிய கண்டு பிடிப்பாகும். 1855-1856ம் ஆண்டுகளில் இந்தக் கண்டு பிடிப்பு பிரயாணத்தை மேற்கொண்டார். ஆபிரிக்க இன மக்கள் பலரை இந்தப் பிரயாணத்தில் அவர் சந்தித்தார். அவர்கள் அதுவரை வௌ;ளை மனிதனைக் கண்டதில்லை. அவருடைய அன்பும், அனுதாபமும், மருந்துச்சேவையும் பல ஆபிரிக்க இன மக்களை நண்பர்களாக்கிற்று. அவர்கள் மத்தியில் அவர் தங்கிக் கிறிஸ்துவைப் பிரசங்கித்து மருத்துவச் சேவையும் புரிந்தார். சில இன மக்கள் அவரை விரோதித்தனர். அதனால் அவர் அநேகமுறை உயிர்தப்பிப் பிழைக்க வேண்டியதாயிற்று.

அடிமை வியாபாரம்

இந்தப் பிரயாணத்தின்போதுதான் விலிங்ஸ்டன் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி விற்று தொழில் நடத்தும் பயங்கர நிலைமையைக் கண்டு பயந்தார். ஆப்பிரிக்கர்களைப் பிடிக்க அவர்கள் வாழும் கிராமத்தைத் திடீரென்று தாக்கி, மக்களைப் பிடித்து அடக்குவார்கள். ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் அனைவரையும் அடிமைகளாகப் பிடித்துவிடுவார்கள். கிராமத்தைத் தீக்கிரையாக்கி நீண்ட கனத்த மரத்துண்டகளை அவர்களுடைய தோளின்மேல் வைத்து, கழுத்தை மரத்தோடு இணைத்து விடுவார்கள். இவ்விதமாக காடுகளின் வழியே நடத்தப்பட்டு கடற்கரை நகரங்களில் அடிமைகளாக விற்றுப்போடப்படுவார்கள். அவர்கள் தப்பிப் போகாதபடி நீண்ட இரும்புச் சங்கிலிகளோடு அத்தனை மக்களும் இணைக்கப்பட்டிருப்பர். காட்டினுள் நடந்துபோகையில் நோய்வாய்ப்படுகிறவர்களையும், காயப்படுகிறவர்களையும் மரிக்கும்படி அங்கேயே விட்டுச் செல்வர். மனித எலும்புக்கூடுகள் எங்கும் சிதறிக்கிடக்கும். அழகிய செழிப்பான ஆபிரிக்க கிராமங்கள் தரைமட்டமாக்கப்பட்டு தீக்கிரையாகி அவாந்தரமாகக் காணப்படும். இக் கோரக்காட்சிகளும் கொடிய அடிமை வியாபாரமும் லிவிங்ஸ்டன் இதயத்தை நெகிழவைத்தது. இந்நிலையை ஆபிரிக்காவின் ஆறாதபுண் என வர்ணித்துள்ளார். இதை எப்படியாவது வோராடு அழிக்கும்வரை போராடுவேன் என்று தீர்மானித்தார். அடிமை வியாபாரக்கொடுமையை நிறுத்தவும் ஆபிரிக்காவின் உட்பகுதி பரதேசங்கட்கு தன்னைப் பின்பற்றிவரும் மிசனறிகள் செல்லவும் மார்க்கங்களை கண்டுபிடிக்கவேண்டுமென உறுதிகொண்டார். இருண்ட கண்டத்தின் அடர்ந்த காடுகளின் நடுவே பாதை கண்டுபிடிக்கவேண்டியவர்தானே என்பது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். பலமுறை அவரை அடிமைகளாகப் பிடித்து விற்பனை செய்யும் வியாபாரி என கருதினர். ஆபிரிக்க மக்கள் அவரைப் பிடித்து துன்புறுத்தவும், கொல்லவும் முயற்சித்தனர். கர்த்தரின் கரம் அற்புதமாய்க் காப்பாற்றியது.

உபத்திரவங்கள்

ஆபிரிக்க இனத்தலைவன் ஒருவன் ஒரு சமயம் லிவிங்ஸ்டனிடம் உங்களுடைய தேசம் இந் நற்செய்தியை எங்களுக்கு ஏன் முன்னமேயே அறிவிக்கவில்லை? ஏன் முன்னோர்கள் அனைவரும் சத்தியத்தை அறியாமலே மரித்துப்போனார்கள். நீர் வந்து எனக்குச் சொன்ன நற்செய்தி ஒன்றையும் அவர்கள் அறியாத நிலையில் மரித்துவிட்டனரே. இது எப்படி என்று கேட்டான். இவனே முதல் முதலாகக் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவன். இக்கேள்வி லிவிங்ஸ்டன் மனதில் ஆழமாய்ப் பதிந்தது. அன்றிலிருந்து நூற்றுக்கணக்கான ஆபிரிக்க இன மக்களைத் தேடிச் சென்றார். நுழைய முடியாத காட்டுப் பகுதிகளிலும் துரிதமாக முன்னேறிச் சென்றார். இந்தப் பணி சுலபமானதல்ல. அவருடைய உடைகள் கிழிந்து கந்தலாயின. பாதங்களில் கொப்புளங்களும் சரீரத்தில் புண்களும் காயங்களும் ஏற்பட்டன. சிலசமயம் ஆபிரிக்கர்கள் அவருக்கு ஆகாரம் விற்க மறுத்துவிடுவர். அந்தச் சமயங்களில் பட்டினி கிடப்பார். கிழங்குகளின் விதைகளைத் தின்று உயிர்வாழ்ந்தார். தரையில் படுத்துறங்குவார். கிறிஸ்துவினிமித்தம் சரீர பாடுகளுக்குள்ளானார். முப்பத்தொருமுறை ஆபிரிக்க விசக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் உடல் எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தது. காய்ச்சலின் கடுமையால் மனக்குழப்பமும் மறதியும் ஏற்படும். தன்னுடன் வரும் நபர்களின் பெயரை மறந்துவிடுவார். கிழமை நாட்களைப் பற்றிய நினைவு அற்றுப்போகும். இவை ஒன்றும் அவரைச் செயலிழக்கச் செய்ய முடியவில்லை. வேதாகமத்தை அடிக்கடி வாசித்து உற்சாகத்தையும் ஆறுதலையும் அடைவார். நாட்குறிப்பில் அவர் கிறிஸ்துவில் மாத்திரம் நான் ஆறதல் அடைந்தேன். எங்கும் செல்ல ஆயத்தமாயுள்ளேன். ஆனால் அது முன்னேற்றப் பாதையாகவே இருக்கவேண்டும் என்று எழுதினார். அவர் கொடுத்த அறைகூவல் என்னவென்றால் அடிமை வியாபாரிகள் ஆபிரிக்காவைப் பிடிக்க அந்நாட்டிற்குள் பிரவேசிக்கமுடியுமென்றால் கிறிஸ்துவின் அன்பினால் அனுப்பப்பட்ட மிசனறிகள் கிறிஸ்துவுக்கென்று ஆபிரிக்கரைப் பிடிக்க அந்நாட்டை ஊடுருவிச் செல்லாமல் இருப்பார்களோ என்பதே.

லிவிங்ஸ்டன் உயர்த்தப்படுதல்

ஆபிரிக்காக் கண்டத்தின் நதிகள், ஏரிகள் இவைகளின் கண்டுபிடிப்பு லிவிங்ஸ்டனைப் புகழ் பெறச் செய்தது. விக்டோரியா நீர்வீழ்ச்சியைக் கண்டு பிடித்தது இதில் முக்கியமானது. இந்த நீர்வீழ்ச்சியை ஓசையிடும் மேகம் என்று வர்ணித்துள்ளனர் ஆபிரிக்கர். அதன் அருகில் ஆபிரிக்கர்கள் செல்லவே பயந்தனர். அவர் இங்கிலாந்துக்குத் திரும்பியதும் பெரிய அளவில் வரவேற்கப்பட்டு பாராட்டப் பெற்றார். பதினாறு ஆண்டுகள் ஆபிரிக்க காடுகளில் பணி செய்து, ஒன்பதாயிரம் மைல்கள் பிரயாணத்தில் ஈடுபட்டவர். நடை பயணமாகவும், படகிலும் நீண்ட தூரங்களைக் கடந்தவர்.. ஆபிரிக்காவின் பு+கோளப் பிரதேசங்களை வெளி உலகிற்கு முதல் முறையாக அறிவித்தவர் இவர். இத்தனை ஆராய்ச்சிகளுக்காக அவருக்குத் தங்கப்பதக்கங்களும், கௌரவப்பட்டங்களும் வழங்கப்பட்டன. திரள் திரளாக மக்கள் கூட்டம் அவரைப் பார்க்கவும், அவர் சொல்வதைக் கேட்கவும் கூடினர். செய்தித்தாள்கள் அவரைப் பற்றியும் ஆபிரிக்க நாட்டின் புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றியும் எழுதியது. அவரும் பிரயாணக்கட்டுரை மற்றும் ஆபிரிக்க நாட்டில் புதிய மார்க்கங்களைப் பற்றி எழுதி புத்தகமாக வெளியிட்டார்.

மறுமுறை ஆபிரிக்க நாடு செல்லுதல்

அரசாங்கத்தின் பிரதிநிதியாக இங்கிலாந்து அரசு அவரை நியமித்தது. அரசு அதிகாரியாக ஆபிரிக்க நாடு திரும்பினார். புதிய இடங்களை ஆராயவும் மிசனறி ஊழியம் தொடர்ந்து செய்யவும் அரசாங்கம் அவருக்கு அனுமதியளித்தது. பல உதவியாளர்கள் தன்னுடன் இருந்தார்கள் என்றாலும் காய்ச்சலினால் அவதிப்பட்டு ஒவ்வொருவராக அவரைவிட்டுப் பிரிந்து போயினர். மூன்று மாதங்களுக்குப் பின்னர் அவரது மனைவி புதியபணித்தளத்தில் அவருடன் போய்ச் சேர்ந்தாள். அவளும் விசக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துபோனாள். அவளை ஒரு மரத்தின்கீழ் புதைத்தனர். அவரது பிரயாண ஆரம்ப நாட்களிலேயே ஒரு பெண் குழந்தை மரித்துப் போனதால் ஆபிரிக்க மண்ணில் புதைத்திருந்தார். மனைவியின் இழப்பு அவருக்கு பெரிய இழப்பாக இருந்தது. இந்த மிகப் பெரிய இழப்பு என் இதயத்தைப் புளிந்து விட்டது என்று எழுதினார். எப்போதும் அவருடைய குறிக்கோள் யாதெனில் உலகக் கவலைகள் இழப்புகள் எதுவும் என் முன்னால் உள்ள பணியை நம்பிக்கையற்ற நிலையில் விட்டுவிட என்னை அனுமதிக்கமாட்டேன். என் தேவனாகிய கிறிஸ்துவில் பெலனடைந்து புது உற்சாகத்தோடு முன்னேறிச் செல்வேன் என்றும் எழுதினார்.

ஆபிரிக்க நாட்டில் அவருடைய உயிருக்கு எப்போதும் ஆபத்துக்கள் நேரிட்ட வண்ணமாகவே இருந்தன. ஒருமுறை காண்டாமிருகம் வேகமாய் அவரை எதிர்த்து இடித்துத் தள்ள ஓடி வந்தது. அவர் அருகில் வந்ததும் சடுதியாய் நின்றுவிட்டது. அவர் நம்பியிருந்த தேவன் அவரைப் பாதுகாத்தார். இன்னொருமுறை ஓர் ஆபிரிக்க எதிரி பத்து அடி தூரத்திலிருந்து ஒரு ஈட்டியை அவர்மேல் எறிந்தான். அவர் கழுத்தின் ஓரமாய் பாயந்து சென்ற ஈட்டி மரத்தில் குத்தி நின்றது. எவ்வகை ஆபத்து நேரங்களிலும் கர்த்தர் அவரோடிருந்தார். அவர் ஆரம்பித்த பணி முடியும் வரை தேவனுடைய கரம் அவரை ஆச்சரியமாய் பாதகாத்தது என்று முழங்கினார். அடுத்து வந்த பெரிய இழப்பு யாதெனில், பிரிட்டிஸ் அரசாங்கம் அவருடைய சம்பளத்தை நிறுத்திவிட்டது. அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் அவருக்கு விரோதமாய்ச் செயல்ப்பட்டு அரசின் உதவியை நிறுத்திவிட்டனர். அதனால் அவர் இங்கிலாந்து திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது கர்த்தர் வெகு விரைவில் வேறு வழியில் நண்பர்கள் மூலமாய் பண உதவி கிடைக்கச் செய்தார். மறுமுறையும் ஆபிரிக்க நாடு திரும்பிய லிவிங்ஸ்டன் பின் ஒருபோதும் இங்கிலாந்து நாட்டிற்கு செல்லவேயில்லை.

அவருடைய கடைசி கண்டுபிடிப்புகள்

லிவிங்ஸ்டன் தனது அறுபதாவது வயதில் ஆபிரிக்க நாட்டின் மத்தியப்பகுதியில் தம்முடைய கடைசி ஆராய்ச்சியில் இறங்கினார். வயது சென்ற நிலையில் பல வருட பாடுகள் நிறைந்த பிரயாணங்கள், சொந்த வேலைக்காரர்களின் உண்மையற்ற தன்மை, அபிரிக்க இன மக்களின் விரோத மனப்பான்மை, இவைகளெல்லாம் அவருடைய இந்தக் கடைசி பிரயாணத்தில் வெளிப்படையாகக் காணப்பட்டது. அவருக்கு வரும் கடிதங்கள், பொருள்கள் யாவும் களவாடப்பட்டன. ஓர் அரேபிய வணிகனிடம் தம்முடைய சில உடமைகளைக் கொடுத்துவைத்திருந்தார். அநேகநாட்கள் இவரைப் பற்றி அவன் ஒன்றும் கேள்விப்படாததால் அவர் உடமைகளையெல்லாம் விற்றுவிட்டான். குறைந்த ஆகாரம் கந்தலான உடை, உடைமைகளெல்லாம் இழந்த நிலையில், வறுமை மிக்க மனிதனாய், அன்பற்ற ஆபிரிக்க மக்கள் மத்தியில் வாழ்ந்து வந்தார். அவர் அனுப்பும் எல்லாக் கடிதங்களும் கிழித்தெறியப்பட்டன. இவரை விரோதித்த அடிமை வியாபாரிகள் கடிதப்போக்குவரத்தை நிறுத்திவிட்டனர். மருந்துகள் அடங்கிய அவரது பெட்டியும் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. காய்ச்சலினால் அவர் அவதிப்படும்போது மருந்துகள் இல்லாததால் தம்மைக் குணப்படுத்திக்கொள்ளமுடியவில்லை. வெளி உலகுடன் அவருக்கிருந்த எல்லா தொடர்புகளும் அறுபட்டுப்போயின. வெளிநாடுகளில் அவரைத் தெரிந்த நண்பர்கள் அவர் மரித்துவிட்டாரென்றே எண்ணியிருந்தனர். கர்த்தர் அவரைக் கைவிடவில்லை. திக்கற்றவராய் விட்டுவிடவும் இல்லை.

நியுயோர்க் கெரால்ட் என்ற அமெரிக்க செய்தித்தாளின் ஆசிரியர் கென்றி ஸ்டான்லி என்பவரை லிவிங்ஸ்டனைத் தேடி கண்டு பிடிக்கும்படியாக ஆபிரிக்க நாட்டிற்கு அனப்பினர். பல மாதங்கள் ஸ்டான்லி பிரயாணம் செய்து லிவிங்ஸ்டனை உஐ;ஐp என்ற இடத்தில் சென்று சந்தித்தார். உணவுப் பொருட்கள் மருந்துகள் ஆகியவற்றை ஸ்டான்லி தன்னுடன் எடுத்து வந்திருந்தார். லிவிங்ஸ்டன் பலமடையவும் சுகம் பெற்று புத்துயிர் பெறவும் ஸ்டான்லி சந்திப்பு உதவிற்று. தொடர்ந்து சில மாதங்கள் ஸ்டான்லி அவரோடு தங்கியிருந்தார். அந்நாட்களில் லிவிங்ஸ்டனின் கிறிஸ்துவைப் போன்ற தியாக வாழ்க்கை ஸ்டான்லிக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்தது. நாஸ்தீகனான ஸ்டான்லி லிவிங்ஸ்டனோடு தங்கியிருந்ததால் சிறந்த விசுவாசியாக மாறினார். ஸ்டான்லி விலிங்ஸ்டனை தன்னோடு அமெரிக் தேசத்திற்கு வரும்படி வற்புறுத்தினார். லிவிங்ஸ்டனைத் தனது எஞ்சிய வாழ்க்கையை வசதியாக வாழவும் பேரும் புகழும் பெறவும் அமெரிக்க நாட்டிற்கு வரும்படி அழைத்தார். லிவிங்ஸ்டன் அவரோடு செல்ல மறுத்துவிட்டார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட தேவப்பணி முற்றுப்பெறாமல் தன்னால் எங்கும் வரமுடியாது என்று கூறிவிட்டார்.

லிவிங்ஸ்டனின் இறுதி காலம்

ஓராண்டு காலம் மேலும் தமது பயணத்தில் ஈடுபட்டிருந்த லிவிங்ஸ்டன் சரீர பெலவீனத்தால் அக்கடி சோர்வுற்றார். அவருடன் இருந்த சில உண்மையுள்ள ஆபிரிக்க நண்பர்கள் மூங்கில் கம்புகளால் கட்டப்பட்ட தொட்டிலில் வைத்து அவரைத் தூக்கிச் சென்றனர். பெரும் மழை, குளிர் ஆகியவற்றால் அவருடைய சுகவீனம் மேலும் அதிகரித்தது. நாட்குறிப்பில் அவரால் எழுதமுடியவில்லை. ஆபிரிக்க இளைஞர்கள் அவரை அன்போடு கவனித்து வந்தனர். ஒரு சிறு குடிசையில் வைத்து அவரைப் பராமரித்தனர். அவருக்கிருந்த சக்தியும் பெலனும் நாட்கள் செல்லச் செல்ல குறைந்துவிட்டன. மே மாதத்தில் ஒரு நாள் காலை (1873ம் ஆண்டு) அவருடைய குடிசைக்குள் அவரது நண்பர்கள் பிரவேசித்தபோது அவர் படுக்கையருகே முழங்காலில் நின்றவண்ணம் இருந்தார். கரங்களால் தாக்கப்பட்ட அவரது முகம் தலையணை மேல் சாய்ந்திருந்தது. nஐபநிலையில் அவரது உயிர் பிரிந்திருந்தது. ஆபிரிக்க நாட்டின் கிறிஸ்துவை அறியாத கணக்கற்ற ஆத்துமாக்களுக்காக nஐபித்துக்கொண்டே பரலோகம் சென்றடைந்தார் என்பதில் சிறுதும் ஐயமில்லை. மரிக்கும் தருவாயிலும் ஆபிரிக்கர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று மன்றாடியபடியே உயிர்துறந்தார்.

உண்மையுள்ள அவரது ஆபிரிக்க நண்பர்கள் அவருடைய இருதயத்தை எடுத்து ஆபிரிக்க நாட்டில் மத்தியப் பகுதியில் புதைத்தனர். அவரது சரீரத்தைக் கெடாத வண்ணம் பதம் செய்து தொளாயிரம் மைல்கள் கடற்கரைப் பகுதிக்கு சுமந்து சென்றனர். அவரது உடல் இங்கிலாந்து எடுத்துச்செல்லப்பட்டது. சிங்கத்தால் பீறுண்ட அவரது தோள்பட்டை தழும்பை வைத்துதான் அவரது உடல் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது. இங்கிலாந்தின் உயர்ந்த மனிதர்களும், புகழ்பெற்றவர்களும் அடக்கம் செய்யப்பட்டிருந்த வெஸ்ட் மினிஸ்டர் அபே என்னும் இடத்தில் தேசமரியாதையுடன் நல்அடக்கம் செய்யப்பட்டார். ஆயிரக்கணக்கில் மக்கள் வௌ;ளம் புரண்டு வந்து அவருக்குக் கடைசி மரியாதையைச் செலுத்தினர். அக்கூட்டத்தில் வயது சென்ற ஒரு மனிதன் பரிதாபமான உடைகளோடு மனம் உடைந்து அழுதுகொண்டிருந்தான். அவர் ஏன் இப்படி அழுகிறார் என்று கேட்க டேவிட் லிவிங்ஸ்டனுடன் நானும் ஒரே கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். ஓய்வு நாள் பாடசாலையில் ஒன்றாகவே வேலைசெய்தோம். அவரே கடவுளின் வழியைத் தெரிந்துகொண்டு உலகில் ஒப்பற்ற பணியைச் செய்து முடித்தார். நானோ என் சொந்த வழியைத் தெரிந்துகொண்டு விரும்பப்படாதவனாக அவமரியாதைக்குரியவனாக வாழ்கிறேன். தேசம் முழுவதும் அவரை இன்று புகழ்ந்து மரியாதை செலுத்துகிறது. என்னை ஒருவரும் அறியமாட்டார்கள். எதிர்காலமும் எனக்கு ஒன்றுமில்லை. குடிகாரனுடைய பிரேதக் குழியே எனக்காகக் காத்திருக்கிறது என்று கூறி அழுதார்.

Post a Comment

0 Comments