இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

எருசலேமின் தேவாலயங்கள்- Temples Of Jerusalem

 

எருசலேமின் தேவாலயங்கள்


வெளிப்படுத்தின விசேஷம் 11:1,2


பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்து பார் ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிரகாரம் புறஜாதியருக்குக் கொ டுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப் போடு: பரி சுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார் கள்.


தாங்கள் கடவுளர்களாக எண்ணி வழிபட்டவர்களுக்கு வழிபாட்டு ஆலயங்களை அமைப்பதில் மனிதர்கள் எல்லாக் காலங்களிலுமே முனைப்புடன் செயல்பட்டிருந்திருக்கிறார்கள். பண்டைக் காலங்களில் கட்டப் பட்ட இப்படிப்பட்ட கோவில்களின் பிரமாண்டம் இன்றைக்கும் வியப்பூட்டு வதாக இருக்கிறது. மெசபடோமியாவில் காணப்பட்ட விக்கிரகங்களுக்கான கோவில்களின் பிரம்மாண்டம் பற்றி அறிய அக்காலங்களில் காணப்பட்ட சிக்கு ராத்களையும், பாகாலின் கோயில்கள் மற்றும் இஷ்டாரின் கோயில்களையும் பற்றிக் கண்டறியப்பட்ட அகழ்வாராய்ச்சி இடிபாடுகளைப் பார்த்தாலே போதும்.



விக்கிரகங்களை கடவுளாக எண்ணி வழிபட்டவர்கள் தங்கள் தெய்வங் களுக்காக இப்படி பிரம்மாண்டமான கோயில்களை எழுப்பிக் கொண்டிருக்க, மெய்யான தேவனை ஆராதிப்பதற்கான தேவாலயம் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தாவீதின் நாட்களில்தான் வித்திடப்பட்டது என்பது வியப்பான காரியம் தான் இத்தனைக்கும் இஸ்ரவேலர்கள் தெய்வத்தை உணர்ந்த அளவுக்கு வேறெந்த இனத்தாரும் தங்கள் தெய்வங்களை உணர்ந்திருக்கவில்லை. எகிப்தி

விருந்து வெளியேறின சமயங்களில் ஒவ்வொரு இஸ்ரவேலனும் தேவனை

தினமும் உணர்ந்தான். முகமுகமாய் அவருடைய மகிமையை அக்கினி ஸ்தம்பமாகவும், மேகஸ்தம்பமாகவும் கண்டான், வானத்திலிருந்து இறங்கிய மன்னா

வில் காலைதோறும் கர்த்தரின் கரம் வெளிப்பட்டது. இதையும் தாண்டி அவர்

பேசுகிறதையும், வழிநடத்துகிறதையும் உணர்ந்திருந்தார்கள் என்றாலும் அவருக்கு ஒரு தேவாலயம் அமைத்து வழிபடவேண்டும் என்கிற எண்ணம் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. இடைப்பட்ட காலங்களில் அவர்கள் தேவனைத் தொழுது கொள்ளாமலில்லை. அவர்கள் தங்கள் தொழுகையை ஆசரிப்புக் கூடாரம் என் கிற சிறிய தூக்கிச் செல்லக் கூடிய கூடார அமைப்பில் வைத்தே அவரை ஆரா தித்து வந்தார்கள். இஸ்ரவேலர்கள் தினசரி யாத்திரை செய்து வரும் நாட்களில் இப்படிப்பட்ட அமைப்பை ஏற்படுத்தி தேவனைத் தொழுதுகொண்டது நியா யம்தான். அவர்கள் யாத்திரை செய்யும் சமயங்களில் அவர்களுடைய ஆசரிப் புக் கூடாரமும் அவர்களுடனே யாத்திரை செய்தது. அவர்களுக்கு அந்தச் சமயத் தில் நிரந்தரமான தேசம் இல்லாமலிருந்தது. எனவே நிரந்தரமான ஒரு தேவால யம் அமைப்பது பற்றி அவர்கள் யோசிக்க வாய்ப்பில்லை என்று கருத இடமிருக்கிறது.


ஆனால், அவர்களுக்கென்று ஒரு சொந்த தேசம் அமைந்து பல காலம் தாண்டிய நிலையிலும் அவர்கள் தங்களுக்கென்று ஒரு வழிபாட்டு ஆலயத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்கிற சிந்தனையே தோன்றாமலிருந்ததுதான் வியப்பு


இந்நிலையில் இதற்கான முதல் சிந்தனை எழுந்தது தாவீதின் மனதில் தான். தாவீது இஸ்ரவேல் தேசத்தின் இரண்டாவது மன்னர். தாவீதுக்கென்று ஒரு அரண்மனை கட்டப்பட, அதில் குடியேறிய தாவீது, ஒரு நாள் இளைப்பாறி கொண்டிருந்தபோது தீர்க்கதரிசியாகிய நாத்தானிடம் தன் உள்ளத்தில் தோன்றுவ தைப் பகிர்ந்துகொண்டார். "பாரும். கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டில் நான் வாசமாயிருக்கும்போது தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவில் இருக் கிறதே." என்றார், அதுதான் தேவாலயம் கட்டப்படுவதற்கான முதல் சிந்தனை

தாவீதின் காலத்தில் வித்திடப்பட்ட தேவாலயம் கட்டுவதற்கான பணி கள் சாலமோன் மன்னராக இருந்த காலத்தில்தான் நிறைவேற்ற முடிந்தது. தாமத மாகக் கட்டினாலும் அதற்கொப்பான கட்டிடம் இல்லை என்று தேசங்கள் யாவும் மெச்சும் அளவுக்கு அதன் பிரமாண்டமும் அழகும் மேன்மையாக காணப்பட் டது.


மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் பாதுகாக்கப்பட்ட அந்த தேவாலயம் பின்னர் பிற தேசத்தவரின் படையெடுப்புக் காலங்களில் அழிக்கப்பட்டது. இஸ்ர வேலர்கள் மனம் திரும்பினபோது மீண்டும் அது கட்டப்பட வாய்ப்புகள் உண்டா னது. இப்படிப் பலமுறை கட்டப்பட்ட எருசலேம் தேவாலயத்துக்கும் கர்த்தரின் திட்டங்களுக்கும் ஒரு மறைமுக சம்மந்தம் இருப்பதை வேதத்தை ஆழமாக வாசிக்கும்போது தெரிகிறது. இதனால்தான் நாம் எருசலேம் தேவாலயம் குறித்து இத்தனை விலாவாரியாக யோசிக்க வேண்டியிருக்கிறது. தேவன் செய்யப் போகும் எதிர்காலத் திட்டங்களுக்கும் இந்த ஆலயம் பற்றிய நிகழ்வுகளுக்கும் கூட சம்மந்தம் இருக்கிறது









ஆ, கி.மு 606 ம் ஆண்டில் பாபிலோனியப் படையெடுப்பில் தரைமட்டமாக்கப்பட்டது. பாபிலோனிய மன்னர்கள் அந்நாட்களில் தங்கள் தேசத்தை விரிவு படுத்தக் கருதி தங்கள் அண்டை நாடுகளின் மேலெல்லாம் படையெடுத்தார்கள், பாபிலோனியர்களின் முக்கியமான நேபுகாத்நேச்சார் என்ற மன்னரின் காலத்தில் நடைபெற்ற படையெடுப்பு தான் யூதா பாபிலோனியர் வசமாயிற்று. மன்னர் நேபுகாத்நேச்சார் யூதர்களின் ஆலயம் எருசலேம் தேவாலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கினார். அதிலிருந்த விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் பாரம்பரிய பாபிலோனுக்கு கொண்டு சென்றார் மன்னரான


அதன்பின்னர் சுமார் 70 ஆண்டுகள் எருசலேமில் ஆலயம் இல்லாம் லிருந்தது. பாபிலோனின் சிறையிருப்பின் காலம் முடிந்த பிறகு, பெர்சிய ராக வாகிய கோரேஸ் என்பவரின் உதவியுடன் செருபாபேல் மற்றும் யோசுவா ஆகி யோரின் முயற்சியில் எருசலேம் தேவாலயம் இருந்த அதே இடத்தில் மற்றொரு சிறிய ஆலயம் கட்டப்பட்டது(ஏசாயா 44:28,எஸ்றா3:7-12). இதை இரண்டாவது தேவாலயம் என்கிறார்கள்


அதன்பின்பு கிரேக்கர்களின் ஆட்சிக் காலத்தில் யூதாவை ஆட்சி செய்த கிரேக்க சீரியனாகிய அந்தியோகு எப்பிபானஸ் என்பவன் அந்திக்கிறிஸ்துவின் ஆவியைப் பெற்றவன் என்று கருதப்படுகிறான். இவன் தன்னை எல்லோரும் கடவுளாக எண்ணி வழிபட வேண்டும் என்ற உத்தரவை தன் ஆட்சியின் இருந்த எல்லா தேசத்தாருக்கும் கட்டளையை அறிவித்தான். யூதர்கள் இதற்கு கீழ்ப்படியாமல் ஆங்காங்கே கலவரம் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களை அடக்க தன்னுடைய இராணுவத்தை கட்டவிழ்த்து விட்ட அந்தியோகு யூதர் ளின் உணர்வுபூர்வமான ஆலயமாகிய எருசலேம் தேவாலயத்தையும் தீட்டுப் படுத்த எண்ணினான். அதன்படி, எருசலேம் தேவாலயத்தின் பிரகாரங்களுக்குள் பன்றிகளைப் பலியிட்டு, ஆலயத்தின் உட்புறத்தில் கிரேக்கர்களின் தெய்வமான யூப்பித்தரின் சிலையை நிறுவினான். இதனால் தங்கள் ஆலயம் தீட்டுப்பட்டு விட்டதாக கருதிய யூதர்கள் அந்த ஆலயத்தை புறக்கணிக்க வேண்டியதாயிற்று,


இதற்கப்பால் பல காலங்களாக எருசலேமில் தேவாலயம் இல்லாதி ருந்தது. பின்னர் ரோமர்கள் ஆட்சிக்கு வந்தபோது, யூதாவை ஆள இதுமேயர் களை தங்கள் ஆட்சியின் கீழ் மன்னர்களாக நியமித்தனர். இந்த இதுமேய மன்னர்கள் ஏரோதியர் என்றழைக்கப்பட்டனர். இப்படி யூதாவின் மேல் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதலாம் ஏரோது, தன்னை யூதர்களின் நண்பன் எனவும், யூதன் எனவும் காண்பித்துக்கொள்ளக் கருதி எருசலேம் தேவாலயத்தைக் கட்ட ஆரம்பித்தான். இதுமேயர்கள் என்பவர்கள் யூதாவின் கலப்பினத்தார். இவர்களை யூதர்கள் என்று யூதர்கள் கருதுவதில்லை. இவர்களைப் பாதி யூதர்கள் என்றே அழைத்துவந்தார்கள். இந்த ஆலயத்தை அதிகப் பொருட்செலவில் ஏறத்தாழ நாற்பது ஆண்டு கால அளவில் கட்டினான். மிகவும் அழகிய வேலைப்பாடுளுடன் கட்டப்பட்ட இந்த எருசலேம் தேவாலயத்தில்தான் இயேசுகிறிஸ்து குழந்தையாயிருந்தபோதும், பன்னிரண்டு வயதுச் சிறுவனாக இருந்தபோதும் தன் பெற்றோரால் அழைத்து வரப்பட்டார். பின்னர் ஊழியம் செய்த காலத்தில் இந்த தேவாலயத்தில் பிரவேசித்த அவர் அங்கிருந்த காசுக்காரர்களையும், புறா விற்கிறவர்களையும் கண்டு கயிற்றினால் சவுக்கை உண்டு பண்ணி அவர்களை அடித்துத் துரத்தினார் என்று வாசிக்கிறோம்.


இந்த ஆலயத்தின் பிரம்மாண்டத்தை அவருக்கு விளக்கிக் காட்டிய அவருடைய சீஷர்களிடத்தில் இந்த ஆலயத்தின் எதிர்காலம் குறித்து தீர்க்க தரிசனமாக, " இவ்விடத்தில் ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப் போகும்." என்றார்(மத்தேயு 24:2). அவர் இதைச் சொன்னதற் காகவே தேவதூஷணம் சொன்னார் என்று குற்றம்சாட்டப்பட்டு, சிலுவையிலும் அறையப்பட்டார். இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் கி.பி.70ல் அப்படியே நிறை வேறியது. ரோமர்களின் ஆட்சிக்காலத்தில் யூதாவில் ஏற்பட்ட உள்நாட்டுக் கல வரத்தை அடக்க வெஸ்பேசியன் என்ற ராயன் தன்னுடைய மகனாகிய தீத்து என்பவரது தலைமையில் ரோமர்களின் ராணுவத்தை அனுப்பிவைத்தார். அவர் கள் யூதாவில் ஏற்பட்ட கலவரத்தை அடக்க முயன்றார்கள். யூதர்களில் பலர் தேவாலயத்தை தஞ்சமடைந்து அங்கிருந்து தங்கள் தாக்குதல்களை தொடங்கி னார்கள். இதனால் கோபமடைந்த தீத்துராயன் எருசலேம் தேவாலயத்தை அழிக்கும்படி தன்னுடைய படைவீரர்களுக்குக் கட்டளையிட்டான்.


எருசலேம் தேவாலயத்துக்கு தீ வைத்துக் கொளுத்தினார்கள். அப் போது நடந்த யுத்தத்தில் சுமார் பத்து லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதாக சரித் திரக் குறிப்புகள் சொல்லுகின்றன. இவர்கள் தவிர, சுமார் ஒரு லட்சம் யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். தாங்கள் தங்கள் மகிமையாக நினைத்து வந்த எருச லேம் தேவாலயம் பற்றி எரிவதைப் பார்த்த யூதரில் பலர் பைத்தியமாகி விட்ட னர் என்றும் ஜோசபஸ் என்கிற சரித்திர ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்


கி.பி 476 ம் ஆண்டில் ரோமப் பேரரசு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது அதன் பிறகு, ரோமர்களின் ஆட்சியின் கீழிருந்த பாலஸ்தீனத்தின் நிலப்பரப்புக் கள் அராபியர்கள் கைவசமாயிற்று. அதன்பின்பு கிறிஸ்தவர்கள் அவர்களுடன் பலமுறைகள் போர்கள் நிகழ்த்தியதன் விளைவாக சில காலம் குருசேடர்கள் என்றழைக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் கைவசமாயிற்று. அதன்பின்னர், துருக்கி யர்களின் படையெடுப்புக்குப் பிறகு அது துருக்கியரின் வசமாயிற்று. துருக்கி யரின் பேரரசை ஒட்டமான் பேரரசு என்று அழைக்கிறார்கள்.














இஸ்லாமியரின் கைவசம் எருசலேம் இருந்த காலகட்டங்களில் எருச லேம் தேவாலயம் இருந்த இடத்தில் இஸ்லாமியர்களின் மசூதி இங்கே கட்டப் பட்டது. இதை ஓமரின் மசூதி என்றும் Dome of the Rock என்றும் அழைக்கிறார்கள். இது இன்றைக்கும் எருசலேமில் காணப்படுகிறது. இது பழைய எருசலேம் தேவாலயம் இருந்த இடத்தின் மிக அருகாமையில் அதன் மகாப் பரிசுத்த ஸ்தலம் இருந்த இடத்திலிருந்து சுமார் 150 அடி தூரத்திலிருக்கிறது. இத்தனை சமீபத்திலிருப்பதினால் பழைய ஆலயம் இருந்த இடத்தில் யூதர்கள் தங்கள் ஆலயத்தைக் கட்ட நினைத்தாலும் அரசியல் காரணங்களால் அது இன்னும் நிறைவேறாமலேயே இருக்கிறது.


ஓமரின் மசூதி இருக்கும் இந்தப் பகுதியை இஸ்லாமியர்கள் தங்கள் புனித ஸ்தலங்களான மெக்கா, மதீனாவுக்கு சமமாக நினைக்கிறார்கள். இங்கு ஏறெடுக்கப்படும் பிரார்த்தனைகளுக்கு மற்ற இடங்களில் செய்யப்படும் பிரார்த் தனைகளை விட, மூன்று மடங்கு அதிக சக்தி இருப்பதாக நம்புகிறார்கள். தவிர வும், இங்குள்ள அல்-அக்ஸா என்ற மசூதியிருக்கும் பகுதியிலிருந்துதான் முகம் மது நபி அவர்கள் விண்ணகம் ஏறிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இஸ்லாமியர்கள் தங்கள் புனித ஸ்தலங்களில் இதைப் பிரதானமா


னதாக கருதுகிறார்கள். எனவே, இன்றளவும் எருசலேமில் தேவாலயம் இல்லை. அதன் இடிபாடுகள் மாத்திரமே காணப்படுகிறது. இது இப்படியிருக்க, யோவான் வெளிப்படுத்தின விசேஷத்தில் ஒரு தேவாலயத்தைக் காண்கிறார். யோவான் தரிசனத்தில் கண்ட இந்த தேவாலயம் பரலோகத்திலிருக்கிற தேவாலயம் என்கிறதாக பலர் நினைப்பதுண்டு. ஆனால், இது பரலோகத்திலிருக்கும் தேவாலயத்தைக் குறிப்பதல்ல. யோவான் தேவால யத்தைக் கண்ட சம்பவம் வெளிப்படுத்தின விசேஷம் 11 ம் அதிகாரத்தில் சொல்


லப்பட்டிருக்கிறது. வாசித்துப் பாருங்கள்


பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து தேவனுடைய ஆலயத்தையும்,பலிபீடத்தையும் அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார் (வெளி 11:1)


யோவான் இந்த தரிசனத்தைக் காணும் சமயத்தில் எருசலேமில் தேவா லயம் எதுவும் இருக்கவில்லை. யோவான் கண்ட இந்த தரிசனங்களின் துவக்கம் வெளிப்படுத்தின விசேஷம் பத்தாவது அதிகாரத்திலிருந்து ஆரம்பிக்கிறது அதின் தொடர்ச்சிதான் பதினோராவது அதிகாரத்திலும் சொல்லப்படுகிறது. பத்தா வது அதிகாரத்தின் துவக்கத்தில் யோவான் ஒரு பலமான தேவதூதன் வானத்தி லிருந்து இறங்கிவரக் காண்கிறார். வானத்திலிருந்து தூதன் இறங்கி வருவதாக யோவான் காண்பதினால் யோவான் வானத்தில் இருக்கவில்லை என்றும் பூமியில் நின்றபடி அந்த தூதனைக் காண்கிறார் என்று அர்த்தமாகிறது. எனவே, அதை யொட்டி அவர் கைகளில் ஒரு கைக்கோல் கொடுக்கப்பட்டு ஆலயத்தை அளக் கும்படி சொன்னது, பூமியிலுள்ள ஒரு ஆலயத்தைப் பற்றியதான செய்தியாகத் தான் சொல்லப்பட்டிருக்கிறது.


பூமியில்தான் அந்தச் சமயத்தில் ஆலயமே இல்லையே, அப்படியா னால் அவர் எந்த ஆலயத்தைப் பார்த்தார் என்று கேட்கக் கூடாது. இருக்கிற ஆலயத்தைப் பார்ப்பதற்குப் பெயர் தீர்க்கதரிசனம் அல்ல. வரப்போகிற காரி யத்தைப் பார்ப்பதற்குப் பெயர்தான் தீர்க்கதரிசனம். யோவான் கண்டது வரப் போகும் ஆலயம். இன்னொரு முறை கட்டப்படப்போகும் எருசலேம் தேவா லயம்


இதுவரை மூன்று முறைகள் எருசலேம் தேவாலயம் கட்டப்பட்டிருக் கிறது. யோவான் கண்டது நான்காவது தேவாலயம். அதாவது நான்காவது முறையாக எருசலேமில் கட்டப்படப் போகும் தேவாலயம் யோவான் இந்த ஆலயத்தை அளக்கும்படி கட்டளை பெறுவதாகக் கண்


டது எந்தக் காலகட்டம் என்பதையும் வேதத்திலிருந்தே நாம் தெரிந்து கொள்ள முடியும். வெளி 11:2ல் அது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிரகாரம் புறஜாதியருக்கு கொடுக் கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப் போடு, பரிசுத்த


நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்


(வெளி11:2) சாலமோன் கட்டிய ஆலயத்திலும், இரண்டாவதாகக் கட்டப்பட்ட ஆலயத்திலும் மகா பரிசுத்த ஸ்தலம், உட்பிரகாரம்,வெளிப்பிரகாரம் ஆகிய மூன்று அமைப்புகள் மாத்திரமே இருந்தன. அதில் புறஜாதியருக்கான பகுதி என்பது இல்லாமலிருந்தது. ஆனால், மூன்றாவதாக ஆலயத்தைக் கட்டின ஏரோது ராஜா ஒரு கலப்பினத்தைச் சேர்ந்தவரானபடியினால் அவர் புறஜாதியருக்கென்று நான்காவதாக ஒரு பிரகாரத்தை உண்டு பண்ணியிருந்தார். இந்த நான்காவது பிரகாரத்தில்தான் காசுக்காரரின் கடைகளும், பலிப்பொருட்களை விற்பவர்களின் கடைகளும் காணப்பட்டன. என் வீட்டைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று இயேசு கோபமடைந்ததும் இந்தப் பிரகாரத்தைக் கண்டுதான்


இந்தப் புறஜாதியர்தான் எருசலேமை நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள் என்ற சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாற்பத்திரண்டு மாதங்கள் என்பது உபத்திரவ காலத்தின் பிற்பகுதியாகிய மூன்றரை ஆண்டுகள். புறஜாதி யரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும் (லூக்கா 21:24)


உபத்திரவ காலத்தின் பிற்பகுதியில் எருசலேம் தேவாலயம் அளக்கப்ப டுகிறது என்றால் அது உபத்திரவ காலத்தின் துவக்கத்திலேயோ அல்லது உபத் திரவ காலம் துவங்கும் முன்பாகவோ கட்டப்பட்டிருக்க வேண்டும்.


உபத்திரவ காலம் துவங்குவதின் முதல் அடையாளம் அந்திக்கிறிஸ்து யூதர்களோடு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்வதாகும். ஒருங்கிணைக்கப்பட்ட உலக நாடுகளின் தலைவனாக உருவாகும் அந்திக்கிறிஸ்து, படிப்படியாக தன்னை முழு உலகத்திற்கும் தலைவனாக உருவாக்கிக்கொள்வான். இதன் காரணமாக, பாலஸ்தீன் மற்றும் அராபியாவிலுள்ள நாடுகள் யாவரும் இவனுக் குக் கீழ்ப்படிவார்கள். இவன் அரசியலில் மாத்திரமல்ல, மதத்திலும் ஒற்றுமை யையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வருகிறவனாக இருப்பான். இதனால், யூதர்கள் தங்கள் பழைய ஆலயம் இருந்த இடத்திலேயே தங்களுக்கான புதிய ஆலயத்தைக் கட்டிக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். தானியேலின் எழுப தாவது வாரத்தில் இது நடைபெறும்


ஆலயம் கட்டுவதற்கு இப்போதே தங்களை தயார் நிலையில் வைத்தி ருக்கும் யூதர்கள் தங்கள் பழைய இடத்திலேயே ஆலயம் கட்ட அனுமதி கிடைத்த உடனேயே தங்கள் பணிகளை ஆரம்பித்து அதை மிகவும் விரைவாக நிறைவுக்குக் கொண்டு வருவார்கள். ஆலயம் கட்டி முடிந்தவுடனேயே பழைய ஏற்பாட்டு நியமங்களின்படியே அங்கே விகளையும், காணிக்கைகளையும் செலுத்துவார்கள். தங்களுக்கு ஆலயம் ஏற்பட வழி செய்து கொடுத்த அந்திக் கிறிஸ்துவுக்கு நன்றியுடையவர்களாக இருந்து அவனுக்கு மரியாதை செலுத்து வார்கள். அவனுடைய ஆட்சியிலும் அவனுக்கு உதவி செய்வார்கள்


இதனைப் பயன்படுத்திக் கொண்டு சில காலத்திற்குள்ளாகவே அந்திக் கிறிஸ்து தன்னுடைய அதிகாரத்தை அந்த ஆலயத்தின் மேலும் செலுத்த ஆரம் பிப்பான். கி.மு 170ல் அந்தியோகு எப்பிபானஸ் செய்தது போல, ஆலயத்தின் மேல் தன்னை தேவனைப் போல உயர்த்திக்கொள்வான். தன்னுடைய மந்திர ஸ்தம்பன்ன வித்தைகளாலும் பிசாசின் வல்லமையினாலும் தன்னை தேவனைப் போலக் காண்பிப்பான். வேதம் இதைக் குறித்துத் தெளிவாகச் சொல்லுகிறது :


அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனெனப்படுவதெதுவோ ஆராதிக்கப்படுவதெதுவோ அவை யெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவ னாயும் இருப்பான். (2தெச 2:4)


இதையே பாழாக்கும் அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும் போது... என்று இயேசுவும் உரைக்கிறார் (மத்24:15)


இவ்வாறாக நான்காவதாக கட்டப்படும் எருசலேம் தேவாலயமும் தீட் டுப்பட்டுப் போகும். இந்தத் தீட்டுப்பட்ட ஆலயம் எருசலேமுக்கு உண்டாகும் அழிவின் நாட்களில் அழிக்கப்பட்டுப் போகும். இன்னும் சொல்லப் போனால் நான்காவதாகக் கட்டப்படும் தேவாலயமே தீட்டானவர்களால்தான் கட்டப்படும் அதன் பின்பு அந்திக்கிறிஸ்து அதின் மேல் தன்னை உயர்த்திக் கொள்ளுவதால் தேவாலயத்தின் கட்டிடம் மாத்திரம் அல்ல, அதன் ஆராதனைகளும் தீட்டானதாக மாறிப் போகும்


கடைசி நாட்களில் எருசலேமில் இரண்டு விதமான அழிவுகள் உண்டாக வேண்டும் என்று கர்த்தருடைய வேதம் சொல்லுகிறது


கடைசி நாட்களில் எருசலேமில் உண்டாகும் இரண்டு அழிவுகளில் ஒன்று, ஏழாம் தூதன் எக்காளம் ஊதும் சமயத்தில் நடக்கும். வாசித்துப் பாருங் கள் வெளி 16:17-19


ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான் அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது


சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின. பூமி மிகவும் அதிர்ந்தது. பூமியின் மேல் மனுஷர்கள் உண்டான நாள் முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.


அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகக் பிரிக்கப்பட்டது, புறஜா திகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்குத் தேவ னுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது


இரண்டாவது, எருசலேமில் உண்டாகும் யுத்தத்தின் நாட்களிலும் உண் டாகும். வாசித்துப் பாருங்கள். சகரியா14:1-5.


எருசலேமுக்கு விரோதமாக யுத்தம் பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன். நகரம் பிடிக்கப்படும். வீடுகள் கொள்ளையாகும். ஸ்திரீகள் அவமானப் படுவார்கள். நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப் போவார்கள். மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டு போவதில்லை


கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவது போல் அந்த ஜாதி களோடே போராடுவார்


அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின் மேல் நிற்கும்: அப்பொழுது மகாப் பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடு மையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்: அதி னாலே ஒரு பாதி வட பக்கத்திலும் ஒரு பாதி தென் பக்கத்திலும் சாயும்.


அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போ வீர்கள்: மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால் மட்டும் போகும். நீங் கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்கு தப்பி ஓடிப் போனதைப் போல் ஓடிப்போவீர்கள்: என் தேவனா கிய கர்த்தர் வருவார்: தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்


இந்த இரண்டில் ஏதாவதொன்றில் எருசலேமில் கட்டப்பட்டிருந்த நான்காவது தேவாலயம் முற்றிலுமாக அழிந்துபோகும்.


முதலாவது தேவாலயம் சாலமோன் மன்னரால் கட்டப்பட்டது. இரண்டா வது தேவாலயம் செருபாபேலினால் கட்டப்பட்டது. மூன்றாவது தேவாலயம் ஏரோதினால் கட்டப்பட்டது. நான்காவது தேவாலயம் அந்திக்கிறிஸ்துவால் கட் டப்பட்டது. (அந்திக்கிறிஸ்துவின் உதவியுடன் யூதரால் கட்டப்பட்டது). இவை யெல்லாம் குறுகிய காலங்கள் மாத்திரமே நடைமுறையிலிருந்து பின்னர் அழிந்து போன ஆலயங்கள்


இதையெல்லாம் தாண்டி எருசலேமில் மற்றொரு ஆலயம் கட்டப்படும்

என்று வேதம் சொல்கிறது. அது எருசலேமின் ஐந்தாவது ஆலயம். அதைக்கட்டப்போகிறவர் கிறிஸ்துவே கிறிஸ்துவின் வருகைக்குப் பிறகு, ஆயிர வருட அரசாட்சியின்போது, எருசலேமில் கிறிஸ்துவே ஒரு ஆலயத்தைக் கட்டுவார். சகரியா 6:1,13 வசனங் களில் அதைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது


இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை எனப்படும்

அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். அவர் மகிமை பொருந்தினவராய் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார். தம்மு

டைய சிங்காசனத்தின் மேல் ஆசாரியராயும் இருப்பார்


இந்த ஆலயம் மகிமைபொருந்தினதாகவும், ஒப்பில்லாத தன்மையுடை யதாகவும் இருக்கும். இந்த ஆலயத்தின் காரியங்கள் குறித்து எசேக்கியேல் 40 முதல் 44 வரைக்கும் உண்டான அதிகாரங்களில் வாசிக்கலாம்


ஆயிர வருட அரசாட்சிக்குப் பிறகு பரலோகத்திலிருந்து புதிய எருச லேம் இறங்கி அது பூமியில் ஸ்தாபிக்கப்படும். அந்தப் புதிய எருசலேமில் தேவா லயத்தை நான் காணவில்லை. சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும்,ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம் என்கிறார் யோவான் wm (வெளி21:22)


தேவனே ஆலயமாயிருந்தால் எவரும் அதைத் தொடவோ அழிக் கவோ முடியாது. முடிவில் உருவாகும் இந்த ஆலயமே எருசலேமில் என்றென் றைக்கும் நிலைக்கப்போகும் நிரந்தரமான ஆலயம்


கிறிஸ்துவே நம்முடைய ஆலயம் என்பது எத்தனை சந்தோஷமான செய்தி. கல்லினாலும் அல்ல, மனிதர்களுடைய கைவேலைப்பாடுகளினாலும் அல்ல. கர்த்தருடைய கிருபையினால் நமக்குக் கொடுக்கப்படப் போகும் கிறிஸ்து என்கிற தேவாலயம் எத்தனை உன்னதமானது. அது ஆவியினாலும், ஜீவனா லும் நிறைந்தது. அல்பாவும், ஒமேகாவுமானது. நித்தியமும் சத்தியமுமானது. அது ஒளியும், மகிமையுமானது


ஆ கிறிஸ்துவாகிய எங்கள் ஆலயமே, உம்மை நாங்கள் வாஞ்சிக்கிறோம்! 

Post a Comment

0 Comments