இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

தானியேல் அதிகாரம் 2 Daniel Chapter 2

தானியேல் அதிகாரம் 2 Daniel Chapter 2

அதிகாரம் - 2
ராஜா கண்ட சொப்பனம்(தானி.2:1-4)

நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, சொப்பனங்களைக் கண்டதினால் அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது.

நேபுகாத்நேச்சார் சொப்பனங்களை கண்டதின் காரியம் என்ன? அவன் படுக்கையில்; படுத்திருக்கும் போது இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் அவனுக்குள் எழும்பிற்று(தானி. 2:29). எதிர்காலத்தில் நடக்கப் போகிற சம்பவங்கள் எப்படியாயிருக்கும், தன் சாம்ராஜ்யத்தின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற நினைவுகள் அவனுக்குள் எழும்பிற்று. அதனிமித்தமாக தேவன் அவனுக்கு சொப்பனங்களை கொடுத்தார்.  

ராஜா தன் சொப்பனங்களை  தெரிவிக்கும் பொருட்டு, பாபிலோனின் சகல சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைத்து, சொப்பனம் கண்டேன். அந்தச் சொப்பனத்தை அறியவேண்டும். என் ஆவி கலங்கியிருக்கிறது என்றான். கல்தேயர் ராஜாவிடம் சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரியபாஷையில் சொன்னார்கள்.

ராஜாவின் தீர்மானம்(தானி.2:5-11)

ராஜா அவர்களுக்கு பிரதியுத்தரமாக: என்னிடத்திலிருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால், நீங்கள் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்கு அறிவியாமற்போனால் துண்டித்துப்போடப்படுவீர்கள். உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும். சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் தெரிவித்தீர்களேயாகில், என்னிடத்தில் வெகுமதிகளையும் பரிசுகளையும் மிகுந்த கனத்தையும் பெறுவீர்கள். ஆகையால் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்குத் தெரிவியுங்கள் என்றான்.

ஒரு வேளை nநேபுகாத்நேச்சார் தான் கண்ட சொப்பனத்தை மறந்து போயிருக்கலாம் அல்லது தன்னுடைய ஞானிகள் மெய்யாகவே மறைபொருட்களை அறிகிறவர்களா என்பதை சோதித்து அறியவேண்டும்  என்ற எண்ணம் அவனுக்குள் வந்திருக்க கூடும்.

அதற்கு பாபிலோனிய ஞானிகள் மறுபடியும் பிரதியுத்தரமாக: ராஜா அடியார்க்குச் சொப்பனத்தைச் சொல்வாராக. அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்றார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: சொப்பனத்தை எனக்குச் சொல்லுங்கள். அப்பொழுது அதின் அர்த்தத்தையும் உங்களால் காண்பிக்கக்கூடுமென்று அறிந்துகொள்ளுவேன் என்று கூறுகிறான்;.

பாபிலோனிய ஞானிகள் தங்கள் இயலாமையை கூறுகிறார்கள். கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை. ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை. ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது. மாம்சமாயிருக்கிறவர்களோடே   வாசம்பண்ணாத தேவர்களேயொழிய ராஜசமுகத்தில் அதை அறிவிக்கத்தக்கவர் ஒருவரும் இல்லை என்றார்கள்.

ஞானிகளை கொலை செய்ய ராஜாவின் கட்டளை(தானி.2:12-16)

சொப்பனத்தை எங்களால் அறிவிக்க முடியாது என்று சாஸ்திரிகளும், ஞானிகளும் கூறியதை கேட்ட ராஜா மகா கோபமும் உக்கிரமுங்கொண்டு, பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலை செய்யும்படி கட்டளையிட்டான். தானியேலும் அவன் நண்பர்களும் பாபிலோனிய    ஞானிகளாக காணப்பட்டதினால் இந்த தீர்ப்புக்கு பாத்திராhக காணப்படுகிறார்கள். ஆகையால் இவர்களையும் கொலைசெய்ய தேடினார்கள்.

பாபிலோனின் ஞானிகளை கொலை செய்ய புறப்பட்ட ராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே தானியேல் யோசனையும் புத்தியுமாய்ப் பேசி இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாய் பிறந்ததற்குக் காரணம் என்ன என்று கேட்டான். அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான்.

தானியேல் ராஜாவினிடத்தில் போய், சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம்பண்ணினான். தேவன் ராஜாவின் கண்களில் தயவை கட்டளையிடுகிறார்.

தானியேல் மற்றும் அவனுடைய நண்பர்களின் ஜெபம்(தானி.2:17-20)

தானியேல் தன் வீட்டுக்குப்போய், தானும் தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு தன் நண்பர்களோடு பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபிக்கிறார்கள். தேவன் தானியேலுக்கு தான் சொப்பனத்தையும் ரகசியத்தையும் அறிகிற கிருபையை கொடுத்திருந்தார். ஆகையால் தானியேல் தனியாக ஜெபித்திருக்கலாம். ஆனால் நண்பர்களோடு ஜெபிப்பது அதிக வல்லமையுள்ளது என்பதை தானியேல் அறிந்திருந்தார். ஒருவன் ஆயிரம் பேரையும் இரண்டுபேர் பதினாயிரம் பேரையும் துரத்துவார்கள் என்று வேதம் கூறுகிறது. இரண்டு மூன்று பேர் ஒருமனதாய் வருகிற  இடத்தில் நான் வருவேன் என்பது அவருடைய வாக்குத்தத்தம். அதன்படி அவர்கள் கூடி ஜெபித்தபோது மறைபொருள்களை வெளிப்படுத்துகிற கர்த்தர், நேபுகாத்நேச்சாருக்கு இராக்காலத்திலே சொப்பனத்தை கொடுத்ததுபோல, சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் இராக்காலத்திலே தரிசனத்தில் தானியேலுக்கு வெளிப்படுத்தினார்.

தானியேல் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துதல்(தானி.2:20-23)

தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்கும்முள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது. அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர். ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர். ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர். இருளில் இருக்கிறதை அவர் அறிவார். வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்தபடியினால், உம்மைத் துதித்துப் புகழுகிறேன் என்று தேவனை மகிமைப்படுத்துகிறான். "ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்" என்ற வார்த்தையிலிருந்து சொப்பனத்தின் அர்த்தம் புலனாகிறது.

தானியேல் பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய்: பாபிலோனின் ஞானிகளை அழிக்காதேயும், என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம். ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான். ஆரியோகு தானியேலை ராஜாவின் முன்பாகத் தீவிரமாய் அழைத்துக்கொண்டுபோய்: சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு புருஷனைக் கண்டுபிடித்தேன். அவன் ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான் என்றான்.

நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனம் அறிவிக்கப்படுதல்(தானி.2:25-35)

ராஜா தானியேலிடம் நான் கண்ட சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கக்கூடுமா என்று கேட்டான். தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது. மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார். உம்முடைய சொப்பனமும் உமது படுக்கையின்மேல் உம்முடைய தலையில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால், ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கையில், இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பிற்று. அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார். உயிரோடிருக்கிற எல்லாரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல. அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.

ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர். அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது. அது உமக்கு எதிரே நின்றது. அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.


அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையம் வெண்கலமும், அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது.

நீர் பார்த்தக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது. அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது.

அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று. அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று. சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று. சொப்பனம் இதுதான். அதின் அர்த்தத்தையும் ராஜசமுகத்தில் தெரிவிப்போம்.

சொப்பனத்துடைய அர்த்தம்(தானி.2:36-45) பசும்பொன்னான தலை(தானி.2:36,37)

பொன்னான தலை நேபுகாத்நேச்சாரை குறிக்கிறது என்று தானியேலே கூறுகிறார். 'பொன்னான அந்த தலை நீரே". ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர். பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார். சகல இடங்களிலுமுள்ள மனுபுத்திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்தார்.

நேபுகாத்நேச்சாருடைய ராஜரீகம் பராக்கிரமும் வல்லமையுள்ளதாக காணப்பட்டது. பாபிலோன், பொன்னகரி என்று வேதத்தில் அழைக்கப்படுகிறது(ஏசாயா.14:4). நேபுகாத்நேச்சார் 45 வருஷம் அரசாண்டான். அதன் பின்பு ஏவில்மெரோதாக் என்ற ராஜா (2இராஜா.25:27) 23 வருஷம் அரசாண்டான். அதன் பின்பு பெல்ஷாத்சார் என்ற ராஜா (தானி.5:1) 3 வருஷம் ஆக மொத்தம்  எழுபது வருஷம். இந்த எழுபது வருஷமும் தானியேல் பாபிலோனில் தான் இருந்தார். இஸ்ரவேல் ஜனங்களும் அடிமைகளாக காணப்பட்டார்கள். இராஜாக்களை தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்;, பாபிலோன் இராஜ்யம் என்றும் நிலை நிற்பதில்லை என்பதை வெளிப்படுத்தினாh. அதன்பின்பு வேறொரு ராஜ்யம் எழும்பும்.

மார்பும் அதின் புயங்களும் வெள்ளி(தானி.2:39)

நேபுகாத்நேச்சாருக்கு பின்பு கீழ்த்தரமான வேறோரு ராஜ்யம் தோன்றுகிறது. சிலையின் மார்பும், புயங்களும் வெள்ளியாக காணப்படுகிறது. பொன்னிலிருந்து கீழ்தரமான உலோகம் வெள்ளி. அதிலிருந்தே வரபோகிற ராஜ்யம் நேபுகாத்நேச்சாருடைய இராஜ்யபாரத்தை பார்க்கிலும் சற்று கனவீனமானதாக காணப்படும் என்பதை அறியலாம். கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான். மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான்(தானி.5:30,31). அதன்பின்பு கோரேஸ் என்ற பெர்சிய ராஜா ராஜ்யபாரத்தைக் கட்டிகொள்ளுகிறான்(தானி.6:28). அவனுடைய ஆவியை தேவன் ஏவினதினால் தான் நேபுகாத்நேச்சாரால் இடிக்கப்பட்ட ஆலயத்தை கட்ட செருபாபேல் போன்றவர்களை அனுப்பினான்.

கோரேசுக்கு பின்பு  அர்த்தசஷ்டா ராஜா வருகிறான். இவனும் பெர்சிய ராஜா தான். இந்த ராஜாவின் அரண்மனயில் தான் நெகேமியா பானபாத்திரகாரனாக இருந்தான்(நெகே.1:11).   இந்த ராஜா எருசலேமின் அலங்கத்தை கட்ட நெகேமியாவை அனுப்புகிறான். அhத்தசஷ்டாவுக்கு பின்பு அகாஸ்வேரு ராஜா வருகிறான். அந்த ராஜாவுக்கு ராஜாத்தியாக தான் எஸ்தர் காணப்பட்டாள். இவர்களுடைய காலத்திலும் யூதர்கள் அடிமையாக காணப்பட்டார்கள். ஆமான் யூதர்களை அழிக்க ராஜாவினிடத்தில் கேட்டு தீர்மானம்; பண்ணின போது, மொர்தெகாய் மூலம் அந்த செய்தியை எஸ்தர் ராஜாத்தி கேள்விப்பட்டு ராஜாவோடு பரிந்து பேசி யூதர்களுக்கு இரட்சிப்பைபெற்றுகொடுக்கிறாள். அர்த்தசஷ்டா ராஜா இந்திய தேசம் முதல் எத்தியோப்பிய தேசம் வரைக்கும அரசாண்டார்(எஸ்தர் 1:1) என்பதிலிருந்து பெர்சிய ராஜ்யமேன்மை வெளிப்படுகிறது. சுமார் இருநூறு வருஷம்;(கி.மு.535-335) பெர்சிய ராஜாக்கள் ஆளுகை செய்கிறார்கள். அதன்பின்பு வேறொரு ராஜ்யம் எழும்புகிறது.

வயிறும் அதின் தொடையும் வெண்கலம்(தானி.2:39)

பெர்சிய ராஜ்யங்களுக்கு பின்பு பூமியெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்யம் ஒன்று எழும்பும். நேபுகாத்நேச்சார் கண்ட சிலையில் வயிறும், தொடையும் வெண்கலமாக காணப்படுகிறது. வெள்ளியை விட வெண்கலம் சற்று கீழ்தரமான உலோகம். இது கிரேக்க சாம்ராஜ்த்தை குறிக்கிறது. இது மேதிய பெர்சிய சாம்ராஜ்யத்தை விட சற்று பலகீனமானதாக காணப்படும். மாசிடோனியாவை பிலிப்பு என்ற ராஜா ஆண்டான். அவன் மகன் தான் அலெக்ஸாண்டர்.  கிரேக்க ராஜ்யத்தை ஒரு சாம்ராஜ்யமாக மாற்றினவர் இந்த அலெக்ஸாண்டர். இவன்; இருபது வயதில் ராஜாவாகி உலகமெங்கும் ஆண்ட பெரிய சக்கிரவர்த்தி. இந்தியாவின் எல்லை வரைக்கும் கடந்து வந்தான் என்று சரித்திரம் கூறுகிறது. அரிஸ்டாட்;டில் என்ற தத்துவ மேதை இவனுடைய ஆசிரியர். அரிஸ்டாட்;டில் அலெக்ஸாண்டரி;டம் கிரேக்க கலாசாரத்தை பரப்பினால் நீ உலகத்தையே ஆளலாம் என்று ஆலோசனை கூறியிருந்தான். அதன் நிமித்தமாய் இவன் மேற்கொள்ளுகிற ராஜ்யங்களில் எல்லாம் கிரேக்க கலாசாரத்தை பரப்பிவந்தான். புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது என்பதிலிருந்து கிரேக்க கலாச்சாரம் இஸ்ரவேலிலும் வேரூன்றி காணப்பட்டதென்பது புலனாகிறது. இவனுடைய ஆட்சியிலும் இஸ்ரவேல் தேசம் அடிமையாய் காணப்பட்டது. அலெக்சாண்டர் முப்பத்திமூன்றாவது வயதில் மரித்து போகிறான்.  அவனுக்கு பின் மகன் ஆட்சிக்கு வர இல்லாததினாலே அவனுடைய இராணுவ தளபதிகள் தேசத்தை பிரித்து ஆளுகை செய்தார்கள். சுமார் நூற்றியறுபது வருஷம்;(கி.மு.306-146)இவர்கள் ஆளுகை செய்கிறார்கள் அதன்பின்பு வேறொரு ராஜ்யம் எழும்புகிறது.

கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்(தானி.2:40)

கிரேக்க சாம்ராஜ்யத்திற்கு பின்பு ரோம ராஜ்யம் தோன்றுகிறது. இது நாலாவது ராஜ்யம். இரும்பைப்போல உரமாயிருக்கும். இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சிதறடிக்கிறதோ, அப்படியே இது நொறுக்கித் தகர்த்துப்போடுகிற ராஜ்யம். ரோம ராஜ்யம் கி.மு146-ல் துவங்குகிறது. உலக வல்லமை பெற்ற ராஜ்யமாக காணப்பட்டது. இவர்களுடைய ஆட்சியிலும் யூதர்கள் அடிமைகளாக காணப்பட்டார்கள். ரோமர்களின் ஆட்சி கொடூரமானது. சிலுவையில் அறைதல் போன்ற கொடூரமான தண்டனைகள் இவர்களுடைய ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது.  ரோம ராஜ்யம் சாம்ராஜ்யமாக அகஸ்து ராயனுடைய (கி.மு. 27 )நாட்களில் கட்டப்பட்டது.

கல் ராஜ்யத்தின் தோற்றம் (தானி.2:44)

அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார். ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து உருண்டுவருகிறது. அந்த கல் இயேசு கிறிஸ்து. அவரை வேதம் மூலைக்கல், தலைக்கல் என்;றும் அழைக்கிறது.

இந்த கல் எப்பொழுது வெளிப்பட்டது?  இயேசு கன்னிமரியாளின் பாலகனாக ரோமர்களுடைய ஆட்சியில் தான் பிறந்தார். அகுஸ்துராயனுடைய ஆட்சியின் போது உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று கட்டளை பிறந்தது.  சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.  அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்(லூக்கா.2:1-7).

இயேசுவின் பிறப்பு, வளாப்பு, ஊழியம், சிலுவையில் அறையப்பட்டு மரித்தல்;, அடக்கம்பண்ணப்படுதல், உயிர்தெழுதல், பரமேறுதல் இவையெல்லாம் ரோம ஆட்சியில் தான் நடந்தது.  இயேசு இந்த பூமியில் வேறொரு ராஜ்யத்தை நிறுவும்படிக்கு வந்தார். அவருடைய முதல் பிரசங்கமே வேறொரு இராஜ்யத்தைப்பற்றியதாக காணப்பட்டது. மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது(மத்.4:17)). நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே(மத்.12:28). அது தான் கல் ராஜயத்தின் துவக்கம்.

இயேசு பரமேறினபின்பு, பூமியில்  தேவனுடைய ராஜ்யம் சபையாக காணப்படுகிறது.  இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை(மத்16:18). கிறிஸ்துவாகிய கல்லின் மேல் கட்டப்பட்து தான் சபை. சபை தோன்றின நாளிலிருந்து அதை அழிப்பதற்கு அனேகர் முயற்சித்தார்கள். முயற்ச்சித்தவர்கள் அழிந்தார்களே ஒழிய சபையாகிய கல் ராஜ்யம் வளர்ந்து கொண்டு காணப்படுகிறது. கிறிஸ்துவுககு பின்பு சுமார் 300 வருஷம் வரைக்கும் ரோமர்கள் கிறிஸ்தவர்களை மிகவும் நெருக்கினார்கள். நீரோ போன்ற ரோம சக்கிரவர்த்தி அனேககரை கொன்றான். கான்ஸ்டன்டைன் என்ற ரோமசக்ரவர்த்தி கிறிஸ்தவனானபின்பும் ரோம கலாச்சாரங்களை கிறிஸ்தவத்திற்குள் புகுத்தி விட்டதினாலே உண்மையுள்ள கிறிஸ்தவர்கள், வேதத்தின்படி ஜீவித்தவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்.   இந்த கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான், இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத்.21.44) என்று இயேசு கூறியிருக்கிறாரே. இந்த வார்த்தையின்படி, மணவாட்டி சபை வளர்ந்துகொண்டே காணப்பட்டது.

கல்ராஜ்யம் பூமியை முழுவதுமாய் நிரப்புவது எப்போது?. சத்துருவின் கிரியைகளை முழுவதுமாய் அழிக்கப்படுவது எப்போது?  பாதங்களும் கால்விரல்களும் பாதி குயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும். ஆகிலும் களிமண்ணோடே இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும். கல்ராஜ்யம் பூமியை முழுவதுமாய் நிரப்புவதற்கு முன்பு, ரோம சாம்ராஜ்யத்தின் கடைசி சக்ரவர்த்தி வெளிப்படவேண்டும். அவன் தான் அந்திக்கிறிஸ்து.

மணவாட்டி சபை எடுக்கப்பட்ட பின்பு அந்திக்கிறிஸ்து என்னும் பாவ மனுஷன் ரோம சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக வெளிப்படுவான். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவனாக வெளிப்படுவான்;. பத்துகால்விரல்களைப்போல பத்து ராஜாக்கள் அவனோடு வெளிப்படுவார்கள், "நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்(வெளி.17:12)". நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள். ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள். 7 வருஷம் அவனுடைய ஆதிகாரம் பூமியில் காணப்படும்.

7 வருஷ முடிவில், இயேசு கிறிஸ்து தன்னுடைய ராஜ்யத்தை பூமியில் நிறுவுவதற்காக வருவார். வெளிப்படுத்தல் 19-ஆம் அதிகாரத்தில் வெள்ளைக்குதிரையின் மேல் ஏறி அவர் வருவார் என்று எழுதப்பட்டுள்ளது. ஆர்மொகதான் என்ற இடத்தில்  சாத்தானோடு யுத்தம் பண்ணி அந்திக்கிறிஸ்துவையும், கள்ளத்தீர்க்கத்தரிசியையும் உயிரோடு பிடித்து அக்கினியும் கந்தகமும் எரிகிற அக்கினி கடலிலே தள்ளுவார். சாத்தானை ஆயிரம் வருஷம் கட்டிப்போடுவார்.

இயேசு மீண்டும் இந்த பூமிக்கு வருவார். அவருடைய பாதங்கள் ஒலிவ மலையில் நிற்கும். கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீ;ர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்;கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்(அப்.1:12). பின்பு ஆயிர வருட அரசாட்சி உண்டாகும்.

ஆயிர வருட அரசாட்சியின் போது கல் பூமியை முழுவதும் நிரப்பும். கிறிஸ்துவின் கல்ராஜ்யம் பூமியை நிரப்பும். அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும், கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும், ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப் படுத்துக்கொள்ளும், சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்குங்குழந்தை விரியன் பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும். என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை, கேடுசெய்வாருமில்லை, சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தih அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்(ஏசாயா.11:5-9).   இப்பொழுது பூமியில் தோன்றுகிற இராஜ்யங்கள், இராஜக்கள் வல்லாம் தற்காலிகமானது. இயேசுவே இராஜாதி இராஜா. அவருடைய ராஜ்யம் என்றைக்கும் நிற்கும். அவருடைய ராஜ்யத்திற்கு முடிவிராது.

இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார். சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்று தானியேல் நேபுகாத்நேச்சாரிடம் கூறுகிறான்;.

நேபுகாத்நேச்சாருடைய பதில்(தானி.2:46-49)

 அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்பற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்குக் காணிக்கை செலுத்தவும் தூபங்காட்டவும் கட்டளையிட்டான். ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால், மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்குத் தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான். பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான். தானியேல் ராஜாவை வேண்டிக்கொண்டதின்பேரில் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மகாணத்துக் காரியங்களை விசாரிக்கும்படி வைத்தான். தானியேலோவென்றால் ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தான்.

Post a Comment

0 Comments