ஆவிக்குரிய விழிப்பு
ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் (லூக் 21:36)
ஆவிக்குரிய விழிப்பு என்பது நமது சரீர கண்களை திறந்துகொண்டு விழித்திருப்பதைக் குறிக்காமல், உள்ளான மனிதனில் காணப்படும் ஜாக்கிரதையும்/எச்சரிக்கையுமான உணர்வையே குறிக்கிறது. மேலும் மாம்ச கண்களைத் திறந்து நம்முடைய சரீரத்தில் எவ்வித பாதிப்பும் நேரிடாதபடிக்கு எப்படி காத்துக்கொள்கிறோமோ, அதைப் போலவே கண்ணுக்குப் புலப்படாத தீய ஆவிகளால் உள்ளான மனிதனில் எவ்வித பாதிப்புகளும் நேரிடாதபடிக்கு விழித்திருப்பதே ஆவிக்குரிய விழிப்பாகும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஆவிக்குரிய விழிப்பைப் பற்றி அநேக இடங்களில் வெளிப்படையாகவும், உவமைகள் மூலமாகவும் ஜனங்களுக்கு உபதேசித்து எச்சரித்ததை நாம் வேதத்தில் பார்க்க முடியும் விழித்திருந்து ஜெபம்பண்ணுவது (மாற் 14:38) வேறு (தூங்காமல் சரீரத்தில் கண் விழித்து ஜெபிப்பது); ஜெபம்பண்ணி விழித்திருத்தல் (லூக் 21:36; கொலோ 4:2; மாற் 13:33; மத் 25:13) வேறு (சாத்தானின் வஞ்சக வலையில் சிக்காமல் ஆவியில் விழித்திருப்பது/எச்சரிக்கையா யிருப்பது). ஆகையால் நாம் எப்போதும் ஜெபம் பண்ணுகிறவர்களாகவும் விழிப்புள்ளவர்களாகவுமிருக்கவேண்டுமென்றே தேவன் விரும்புகிறார்
விழித்திருத்தல்/விழிப்பாயிருங்கள் போன்ற வார்த்தைகளுக்கு கிரேக்கு மூல பாஷையில் Praygoreuo (பிரேகோரியோ). இதற்கு ஆங்கிலத்தில் vigilant, wake, watch என்ற வார்த்தைகள் பயன் படுத்தப்படுகின்றன. இதற்கு
- விழிப்புடனிருத்தல்
- எச்சரிக்கையுடனிருத்தல்
- உறக்கத்திலிருந்து எழுந்திருத்தல்
-உற்று நோக்குதல்
-கண் விழித்திருத்தல்
-உன்னிப்புடனிருத்தல்
போன்ற மேலும் பல அர்த்தங்களும் அடங்கும்.
வரப்போகும் தீங்குகளுக்கு தப்பி சர்வ வல்லமையுள்ள தேவாதி தேவனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக நாம் காணப்பட வேண்டுமானால் ஆவிக்குரிய விழிப்புடனிருப்பது மிக அவசியம் கொடிய நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆவிக்குரிய விழிப்பு என்பது அவசியமும் அவசரமுமாயிருக்கிறது. பரிசுத்த வேதாகமத்தில் விழித்திருத்தலைப் பற்றி அநேக காரியங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவைகளில் சில
நீதிக்கேற்ப விழித்திருத்தல்
நீங்கள் பாவஞ்செய்யாமல், நீதிக்கேற்ப விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களா யிருங்கள் (1 கொரி. 15:34) என்று வேதம் எச்சரிக்கிறது. தேவ ஜனங்கள் பாவஞ்செய்யாமல் எப்போதும் நீதிக்கேற்ப விழித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும். பாவமும் அநீதியும் நிறைந்த உலகில் நாம் வாழ்ந்து மாம்ச கண்களைத் திறந்து நம்முடைய சரீரத்தில் எவ்வித பாதிப்பும் நேரிடாதபடிக்கு எப்படி காத்துக்கொள்கிறோமோ, அதைப் போலவே கண்ணுக்குப் புலப்படாத தீய ஆவிகளால் உள்ளான மனிதனில் எவ்வித பாதிப்புகளும் நேரிடாதபடிக்கு விழித்திருப்பதே ஆவிக்குரிய விழிப்பாகும். எந்த சோதனைகள் வந்தாலும் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கேதுவாக ஆவியில் விழிப்பாயிருக்க வேண்டும். மற்றவர்கள் தூங்குகிறது போல நாமும் தூங்காமல் தெளிவாயிருக்க வேண்டும் (1தெச 5:6). பாவத்தில் விழுந்துபோகாமல் கறைபடாமல் பரிசுத்தமாய் வாழ வேண்டியது அவசியம்
விசுவாசத்தில் விழித்திருத்தல்
உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக் கொண்டு.. யூதா 1:20) என்று வேதம் சொல்கிறது. இறுதிவரை விசுவாசத்தில் நிலைத்திருக்க ஆவிக்குரிய விழிப்பு அவசியம். விசுவாசத்தில் நிலைத்து இராதவர்கள் ஆவிக்குரிய வாழ்வில் தோற்றுப்போக வாய்ப்பிருக்கிறது விசுவாசத்தில் நிலைத்திருக்க விசுவாச வார்த்தைகளை அறிக்கையிட வேண்டும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் (/யோவா 5:4). விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம் (எபி 11:6) என்று வேதம் சொல்கிறது. நமக்குள் வாசமாயிருக்கிற ஆவியானவர் விசுவாசத்தின் ஆவியானவர். வேதத்தை தினந்தோறும் வாசித்து தியானிப்பதோடு, சபைகூடி வருதலையும், விசுவாசிகளின் ஐக்கியத்தையும் விட்டுவிடாதிருக்க வேண்டியதும் அவசியம்
ஜெபம்பண்ணி விழித்திருத்தல்
இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷ குமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள் (லூக் 21:36) என்று இயேசு கூறியிருக்கிறார் விழித்திருந்து ஜெபிப்பது வேறு, ஜெபம்பண்ணி விழித்திருப்பது வேறு. இங்கு ஆண்டவர் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றே சொல்லி இருக்கிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகைக்கான அடையா எங்கள் தேசமெங்கும் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. தேசத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வைப் பார்க்கும்போதும் நம்முடைய இருதய மானது எச்சரிக்கையடைய வேண்டியது அவசியம் (லூக் 21:31).
தூங்காமல் விழித்திருத்தல்:
மற்றவர்கள் தாங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்த வர்களாயிருக்கக்கடவோம் ( / தெச.5:5, 6 ) என்று வேதம் சொல்கிறது. நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவைப்போல் அதிகாலையிலும் இரவிலும் கண்விழித்து ஜெபிக்கும் பழக்கமுள்ளவர்களாயிருக்க வேண்டும் விழித்து ஜெபிக்க வேண்டிய நேரத்தில் சீஷர்களுடன் தூங்கின பேதுரு கிறிஸ்துவை மறுதலிக்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டதை மத்தேயு 26:40ல் வாசிக்கிறோம். அன்றைக்கு சிம்சோன் தெலீலாளின் மடியில் தூங்காமல் விழிப்பாயும் எச்சரிக்கையுடனும் இருந்திருப்பானானால் சத்துருவின் கையில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்திருக்க முடியும். நாம் தூங்காமல் ஜெபிக்கும்போது சத்துருவானவனின் தீய எண்ணங்களுக்கும் கிரியைகளுக்கும் அவன் கொண்டுவரும் சோதனைகளுக்கும் நீங்கலாக்கி தப்புவிக்கப்படுகிறோம்.
வஞ்சிக்கப்படாதபடி விழித்திருத்தல்
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்.. ( 16பது 5:8) என்று வேதம் சொல்கிறது. பிசாசானவனால் விழுங்கப்படாமல், ஏமாற்றம் படாமல், வஞ்சிக்கப்படாமல், திசைமாறாமல், தடுமாறாமல், மோசம் போகாமலிருப்பதற்கு விழிப்பு அவசியம். நாம் விழித்திருக்க வேண்டு மானால் தெளிந்த புத்தி அவசியம். தெளிந்த புத்தியென்பது மனதில் எவ்வித குழப்பமுமின்றி காணப்படுவதைக் குறிக்கிறது. கடைசி காலத் தைக் குறித்தும், பிசாசின் வஞ்சகங்களைக் குறித்தும் முன்னறிந்து முறியடிக்க வேண்டுமெனில் எப்போதும் விழித்திருக்க வேண்டும்
மனந்திரும்பி விழித்திருத்தல்
நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து (வெளி 3:2) என்று வேதம் சொல்கிறது. இக்கடைசி நாட்களில் சத்துரு வானவன் ஆவிக்குரிய உணர்வுகளை மழுங்கிப்போகப்பண்ணி, உண்மை யான மனந்திரும்புதலுக்குப் பதிலாக கள்ளத்தனமாக மனந்திரும்ப வைக்கிறான். அதாவது போலியான மனந்திரும்புதலுக்கு உட்படுத்து கிறான்; முழு இருதயத்தோடு, ஒரே மனதோடு மனந்திரும்பாமல் இரு மனதோடு (தேவனும் வேண்டும் உலகமும் வேண்டும்) அரை குறையாக மனந்திரும்ப வைக்கிறான். கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத் தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை (எரே 3:10). உண்மையாய் மனந்திரும் பினதைப்போல தங்களைக் காண்பித்துக் கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றுகின்றனர். மாயவித்தைக்காரன் சீமோன் கிறிஸ்துவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும், அவனுக்குள் இன்னமும் துர்க்குணம் இருக்கத்தானந் செய்தது. ஆகவே நமக்குள் மனந்திரும்புதல் மட்டுமின்றி மனந்திரும்புதலைக் குறித்த விழிப்பும் இருக்க வேண்டும்
வஸ்திரம் கறைபடாதபடிக்கு விழித்திருத்தல் ... விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக் கொள்கிறவன் பாக்கியவான் (வெளி 16:15) என்று வேதம் சொல்கிறது. தேவன் தந்த இரட்சிப்பின் வஸ்திரத்தைக் கவனமாய் காத்துக் கொள்ள வேண்டும். இதற்கு விரோத மாக அந்தகார ஆவிகள் போராடுகின்றன. உலகத்தால் கறைபடாத படிக்கு தன்னைக் காத்துக்கொள்ளுகிறதே... சுத்தமான பக்தியாயிருக்கிறது (யாக் 1:27).
0 Comments