1 சாமுவேல்
அரசர் நூல்களைப்பற்றி நாம் படிக்க நுழைகிறோம். ஆறு நூல்களை நம் முன் காண்போம்
1 சாமுவேல் - மனிதனுடைய தெரிந்து கொள்ளுதல் - சவுல்
2 சாமுவேல் - கடவுள் தெரிந்துகொள்ளுதல்- தாவீது
1 இராஜாக்கள் - சாலொமோனும் இஸ்ரவேலும்
2 இராஜாக்கள் - இஸ்ரவேலின் அரசர்கள்
1 நாளாகமம் - சாலொமோனும் ஆலயமும்.
2 நாளாகமம் - அரசர்களும் ஆலயமும்
அரசர்களின் வரலாறு 1 சாமுவேலில் தொடங்குகிறது நீண்டகால நியாயாதிபதிகளின் ஆட்சி சாமு வேலோடு முடிவடைகிறது. சாமுவேல் நியாயம் விசாரிக் கும் பொறுப்பிற்கு வந்தபோது, மக்கள் மிக மோசமான நிலையில் இருந்தார்கள் நடைமுறையில் இறைவனை அவர்கள் தள்ளி விட்டார்கள் அவர்கள் தங்களுக்கு உலகப் பிரகாரமான ஓர் அரசன் வேண்டுமென்று சத்தமிட்டுக் கேட்பதை இந்நூலில் (1 சாமு. 8:4-7) நாம் அறிகிறோம்.
சாமுவேலின் இரண்டு நூல்களும் பழங்காலத்தில் எபிரெயு மொழியில் ஒரே நூலாகவே காணப்படுகின்றன ஆம் நூற்றாண்டில் கிரேக்க மொழி பெயர்ப்பில் இரண் டாகப் பிரிக்கப்பட்டது
நியாயாதிபதிகளில் இறுதியானவர் சாமுவேல் ஆவார். இவர் ஒரு தீர்க்க தரி சியும் ஆவார். இறைவன் தாம் தெரிந்து கொண்ட இஸ்ரவேல் மக்களுக்கு அரசராகவும்,தலைவராகவும், தந்தையாகவும் இருக்க விரும்பினார் இஸ்ரவேல் மக்களோ, தங்களைச் சூழ்ந்திருந்த நாடுகளின் மக்களை அரசர்கள் ஆண்டு நடத்துவதைக் கண்டனர் அவர்களைப்போலவே தங்களுக்கும் ஓர் அரசன் வேண்டு மென சாமுவேலிடம் தொடக்கத்தில் ஆணைக்கிணங்க முறையிட்டனர் தயங்கினார் எனினும் சாமுவேல் இறைவனின் அரசனை ஏற்படுத்தினார் சவுல் முதல் அரசன் ஆனான். ஆண்டவரின் வார்த்தைக்கு அவன் கீழ்ப்படியாமற் போகவே அவனுக்குப் பதிலாக பெத்லகேம் ஊரைச் சேர்ந்த ஈசாயின் மகன் தாவீதை ஆண்டவர் தெரிந்து கொண்டார். அவன் ஆடுகளின் மேய்ப்பன் அவனைச் சாமுவேல் அரசனாக அபிஷேகம்பண்ணினார். தாவீது எருசலேம் நகரைக் கட்டினான். இறைவனுக்குக் கூடாரத்தை அமைத்தான். சாமுவேலின் பிறப்பு முதல் சவுலின் இறப்பு வரையிலான நிகழ்ச்சிகளை இந் நூல் கூறுகிறது
1 சாமுவேல் நூல் சாமுவேலின் குழந்தைப் பருவமுதல் சவுலின் துன்பமான காலந்தொடங்கி, தா வீதைக் கடவுள் அரசனாகத் தெரிந்து கொள்ளும் வரை ஏறத்தாழ நூற்றுப் பதினைந்து ஆண்டுகளின் நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறது இந் நூல் சாமுவேல், சவுல், தாவீது ஆகிய மூன்று மனிதர் களின் தனிப்பட்ட வாழ்க்கைகளை மிகத் தெளிவான பட மாக நமக்குத் தருகிறது. சாமுவேல் கடைசி நியாயாதிபதி. அரசர்களில் சவுல் முதல் அரசன். இறைவன் நிலையான ஆட்சியை ஏற்படுத்த எண்ணியபோது, தாவீது நிலையான ஆட்சியை ஏற்படுத்த ஆயத்தமானான் (சங். 89).
இந்நூலை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, சிறப்பான பண்புகளைக் காணலாம்.
மூவருடைய
அதிகாரங்கள் : 1- 7 சாமுவேல்
" 8-15 சவுல்
" 16-31 தாவீது
இந் த வரலாற்று நூல் நமக்குக் கவர்ச்சிகரமான மேலாடையின் வரலாற்றைக் கூறுகிறது. ஒவ்வொருவரும் உண்மையான வரலாற்றை அறிய விரும்புவார்கள்
நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும்போதே 1 சாமு வேலில் குறிப்பிட்டுள்ள அன்பான வரலாற்றுக் கதைகளை அறிந்திருக்கிறோம். சிறுவனான சாமுவேல் (அதி. 3). தாவீதும் கோலியாத்தும் (1 சாமு. 17), தாவீது யோனத் பான் சிநேகம் (1 சாமு. 18); இக்கதைகளை அறியாத வர்கள் இருக்க முடியாது
இந்த நூலை எழுதியவர்
இந்த நூலுக்கு மிக முக்கியமானவராகிய சாமுவேலின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் பெரும் பகுதி யைச் சாமுவேல் எழுதினார் என நம்பலாம் (1 சாமு. 10:25). நாத்தானும், காத்தும் அதனை முடித் தார்கள் (1 நாளா. 29:29,30). சாமுவேலின் மரணம் 1 சாமு 25:1-ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாவீதின் மரணம் 2 சாமுவேலில் குறிப்பிடப்படவில்லை இந்த நூல் தாவீது உயிரோடிருந்த காலத்தில் எழுதப் பட்டது என நாம் யூகிக்கலாம் சவுல் ஆண்டுகள் அரசாண்டான். சாமுவேல் 1 முதல் 24 அதிகாரங்களை எழுதினார். எழுதிய காலம் கி.மு. 1015-ஆம் ஆண்டுக்கு முன் ஆகும். நாத்தானும் காத்தும் 25-ஆம் அதிகாரம் முதல் முடிய கி.மு. 971-ஆம் ஆண்டு எழுதி முடித்திருக்க லாம்
1 சாமுவேல் - செய்திச்சுருக்கம்
அ. தீர்க்க தரிசியும், நியாயாதிபதியும் (அதி. 1-7) ஜெபத்திற்கு ஒரு பதிலும், சாமுவேலின் பிறப்பும் (1:1-28).
அன்னாளின் ஜெபமும், ஏலியின் தீயபிள்ளைகளும் (2:11-36).
இறைவன் சாமுவேலை அழைத்தல் (3:1-21).
ஏலியின் தீய பிள்ளைகள் நியாயம் தீர்க்கப்படுதல் பெலிஸ்தியர் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு(4:1-22).போதல்
உடன்படிக்கைப் பெட்டியினால் பெலிஸ்தியருக்குத் துன்பம் உண்டாதல் (5:1-12). உடன்படிக்கைப் பெட்டி இஸ்ரவேலுக்குத் திரும்புதல்
பெத்சி மேசுவுக்குக் கொண்டு வருதல் (6:1-21)
உடன்படிக்கைப் பெட்டி கிர்ஜாத் ஜெரீம் செல்லுதல்.
இறைவன் மிஸ்பாவில் விடுதலை தருதல், சாமுவேல் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தல் (7:1-17).
ஆ. இறையாட்சியைத்தள்ளுதலும், சவுலை அரசனாகத் தெரிந்து கொள்ளுதலும் (அதி. 8-15) இஸ்ரவேலர் அரசன் வேண்டுமெனக் கேட்டல்(8:1-22).
சவுல் சாமுவேலைச் சந்தித்தல் (9:1-27)
சவுல் அரசனாக அபிஷேகம் செய்யப்படுதல் (10;1-27) சவுல் அம்மோனியரைத் தோற்கடித்தல் (11:1-15) தன்னை ஓர் அரசனாக வெளிப்படுத்துதல் (12:1-25) சாமுவேல் தன் முதிர்ந்த கால அருளுரை ஆற்றுதல். இறைவன் சவுலின் சந்ததியைத் தள்ளி விடுதல் ஏனெனில் அவன் ஆசாரிய அலுவலகத்தை அறிமுகம் செய்தான் (13:1-23).
யோனத்தானின் துணிவும், சவுலின் அறிவீனமான குளுரையும் (14:1-52) சவுல் இறைவனுக்குக் கீழ்ப்படியாமையால் தனிப்பட்ட முறையில் அரச பதவிலிருந்து தள்ளப்பட்டான்(15:1-35).
இ. தாவீது அரசனாகத் அபிஷேகம் செய்யப்படுதல். ஆனால் தாவீது கடத்தப்படுதலும், துன்புறுத்தப்படுதலும் (அதி. 16-31)
தாவீது அரசனாகத் அபிஷேகம் செய்யப்படுதல்.
சவுலுக்காகப்பாடுதல் (16:1-23).
தாவீது கோலியாத்தை வெற்றி கொள்ளுதல் (17:11-58) தாவீதும், யோனத்தானும் (18;1-30) சவுல் தாவீதைக் கொல்லத் தேடும்போது தாவீதின் வேண்டுகோள் (19:1-24)
தாவீது திரும்புதல், யோனத்தானால் எச்சரிக்கப்படுதல், அரண்மனையை விட்டுக் காடு செல்லுதல்(20:1-43).
தாவீது ஆசாரியர்களின் உதவி பெறுதல். தாவீது காத் தின் அரசன் ஆகீசிடம் செல்லுதல் (21:1-15) தாவீது தன் வலிமையுள்ள மனிதர்களோடு ஒன்று கூடுதல், சவுல் ஆசாரியர்களைக் கொல்லுதல்(22:1-23).
தாவீதைப் பிடிக்கிற வகையில் சவுல் பின்தொடர்தல்(23:1-29).
தாவீது சவுலுக்குத் தப்புதல் (2411-22) சாமுவேலின் மரணம். தாவீதும் அபிகாயேலும்(25:1-44).
தாவீது சவுலுக்கு மீண்டும் தப்புதல் (26:1-25) தாவீது காத் மன்னன் ஆகீசுக்குப் பணி செய்தல் (27:1-12).
சவுலும், எந்தோர் சூனியக்காரியும் (28:1-25) தாவீது இஸ்ரவேலுக்கு எதிராகப்போரிடுதல் (29:1-11)
தாவீது அமலோக்கியரைத் தோற்கடித்தல் (30:1-31) சவுலின்படை பெலிஸ் தியரால் தோல்வியுறல், சவுல் தற்கொலை செய்து கொள்ளுதல் (31:1-13).
0 Comments