இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

இயேசுவின் பாதபடியில் ஜெபம் Prayer Part 2 Sadhu Sundhar Singh

 

இயேசுவின் பாதபடியில்

ஜெபம் பகுதி 2


ஜெபத்தின் மெய்பொருள் ஜெபமில்லாமல் தேவன் நமக்கு எதுவும் தரமாட்டார் என்றோ நம்முடைய தேவைகளை அறியமாட்டார் என்றோ பொருள் அல்ல. ஜெபத்தின் மூலமாக ஆசீர்வாதங்களை அருளும் தேவனையே நெருங்கி பற்றிக்கொள்வதுதான் ஜெபம். அப்பொழுது அவர் தர விரும்பும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்கிறோம். அவ்வாறே அப்போஸ்தலர்கள் மேல் ஆவியனாவரின் நிறைவு முதல் நாளே கிடைத்து விடவில்லை. பத்து நாட்கள் சிறப்பான ஆயத்தத்திற்கு பின்புதான் பெற்றுக்கொண்டார்கள்


ஆவலுடன் எதிர்பார்த்து காத்திராமல் ஒருவன் ஒரு ஆசீர்வாதத்தை பெற்றால் போதுமான அளவு அவன் அதை சிறப்பாக கருதுவதில்லை அதனை நீண்ட நாள் காத்துக்கொள்வதுமில்லை. எடுத்துக்காட்டாக, சவுல் தான் தேடாதபொழுதே பரிசுத்த ஆவியானவரையும் ராஜ்யபாரத்தையும் பெற்றுக்கொண்டான். வெகு சீக்கிரமே இழந்து விட்டான். சவுல் தன் வீட்டிலிருந்து தன் காணாமல் போன பிராணிகளை தேடிச்சென்றான் (1 சாமு.9:3, 10:11, 5:13-14, 31:4).


ஜெபத்தால் நிறைந்து வாழும் மனிதன் மட்டுமே தேவனை ஆவியிலும் உண்மையிலும் தொழுதுகொள்ள முடியும் பலர் ஆராதனை வேளைகளில் பரிசுத்த ஆவியானவரது சமூகத்தாலும் போதனையாலும் பாவ அறிக்கை செய்து, தலை வணங்கி மிகுந்த மனவாஞ்சையுடன் காணப்படுவர். ஆனால் சபையைவிட்டு வெளியே செல்லும் பொழுதே பிரகாசமிழந்து தான் முந்தி இருந்த நிலையை அடைந்து விடுவார்கள்.


3. நல்ல களிதரும் ஒரு மரத்தையோ மலர் தரும் செடியையோ நாம் சரியாக கவனிக்காவிட்டால் அது காட்டுசெடியை போலாகிவிடும். அதே போன்று, ஒரு விசுவாசி ஜெபத்தையும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் கயனமாக கைக் கொள்ளாவிடில் என்னில் நிலைத்திருப்பதில்லை. அதனால் ஆசீர்வாதமான ஆவிக்குரிய நிலையிலிருந்து விழுந்து தங்கள் பழைய பாவு வாழ்க்கையில் மறுபடியும் மூழ்கி விடக்கூடும்


ஒரு குளத்திளருகில் அல்லது ஏரிக்கரையில் கொக்கு ஒன்று அசையாமல் நிற்பதை நாம் பார்க்கும்பொழுது, அது அந்த தண்ணீரை உற்றுப்பார்க்கும்பொழுது தேவனுடைய சிருஷ்டிப்பைக் குறித்து அல்லது அந்த அருமையான தண்ணீரை பார்த்து மகிழ்கிறது என நினைக்கத் தோன்றும், ஆனால் அது அப்படியல்ல! அது மணிக்கணக்கில் அசையாமல் நின்று கொண்டிருக்கும். ஆனால் சிறு தவளை அல்லது மீன் வருவதைக் கண்டதும் அதன் மேல் குதித்து கொத்தி விழுங்கிவிடும். அநேகர் ஜெபத்தைக் குறித்தும் தியானத்தைக் குறித்தும் இவ்வித மனநிலையுடன் உள்ளனர். அளவிடப்பட முடியாத கடலைப்போன்ற வலிமையுள்ள தேவனிடம் வரும்பொழுது அவர்கள் தெய்வீக மனைப்பான்மைப்பற்றியோ, அவரது அன்பைப் பற்றியோ, அவர் தரும் பாவமன்னிப்பு, சுத்திகரிப்பு மற்றும் அவர் நம் ஆத்துமாவின் தாகத்தை தீர்ப்பவர் என்பதைப்பற்றியே சற்றும் நினைப்பதில்லை. அவர்கள் மன எண்ணமெல்லாம் சிறப்பான ஒரு விருப்பமான பொருளை பெற்றுக்கொள்வதே. அதன் மூலமாக கடந்துபோகிற இந்த உலக இன்பங்களில் முழுவதுமாக மூழ்கி திளைப்பதுதான். இவ்விதமாக அவர்கள் உண்மை சமாதானத்தின் ஊற்றைவிட்டு திரும்பி சென்று அழிந்து போகிற இந்த உலக சந்தோஷங்களில் தங்களை மாய்த்துக் கொள்கிறார்கள்


5. தண்ணீரும் பெட்ரோலும் பூமிக்குள்ளிருந்து கிடைக்கின்றன. அவை பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக தோற்றமளிக்கின்றன. ஆனால் இயற்கை கபாவத்தில் அவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை. ஒன்று எரிகிற நெருப்பை அவித்துவிடும். மற்றது எரியவைக்கும். அவ்வாறே இந்த உலகமும் அதன் ஐஸ்வர்யமும், இருதயமும் தேவன் மேலுள்ள அதன் தாகமும் ஒன்றுபோல காணப்படலாம், இதயத்தின் வாஞ்சையை இவ்வுலக பொருள் பெருமை, உயர்வுகள் ஆகியவற்றைக் கொண்டு நிறைவேற்ற முயற்சிப்பது நெருப்பை பெட்ரோல் ஊற்றி அணைக்க முயல்வதாகும்; இருதயமோ தன்னை உருவாக்கின தேவனால் மாத்திரமே ஏக்கமும் வாஞ்சையும் றைவேறக் காணும் (சங்.42:1,2), என்னிடத்தில் இருக்கிறவங்க நான் வகண்ணீரை தருகிறேன். "நான் கொடுக்கும் தண்ணீர் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது. நான் அவனுக்கு கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவ காலமாய் ஊருகிற நிரூற்றாயிருக்கும்” (யோவா,4:14)


6. மனிதர்கள் வீணாக இந்த உலகத்திலும், உலகத்திலுள்ள பொருட்களினாலும் சமாதானத்தை தேடி வீண் முயற்சி செய்கின்றனர். ஆனால் அனுபவத்தினால் உண்மையான சமாதானமும் திருப்தியும் உலகினால் கிடைப்பதில்லை என்பதை அறிந்துகொள்கின்றனர். ஒரு வெங்காயம் தன் கரத்தில் கிடைத்தபொழுது அதன் ஒவ்வொரு தோலாக பிரித்து ஏதாகிலும் உள்ளே இருக்குமா என தேடிப்பார்க்கும் சிறுவனைப்போல் உள்ளனர். ஒரு டப்பாவினுள் மூடியை திறந்தால் ஏதாகிலும் கிடைக்கும் என்பதுபோல எதிர்பார்ப்புடன் பார்த்த அந்த சிறுவனுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு வெங்காயம் பல அடுக்கான தோல்களை உடையது. இவ்வுலகமும் அதைச் சார்ந்த பொருட்களும் மாயைதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது (பிர.12:8). இதை அறிந்தபின் மனிதன் உண்மை சமாதானத்தின் ஊற்றை காண்கிறான் (ஏசா.55:1; எரே 2:13; வெளி.22:17).


7. உலகம் கானல் நீரைப் போன்றது. உண்மையை தேடும் ஒருவன்


தன்னுடைய ஆவிக்குரிய தாகத்தை தணிக்க ஏதாகிலும் கிடைக்குமா எனத் தேடுகிறான். ஆனால் ஏமாற்றமும் நம்பிக்கையின்மையும் மட்டுமே அவனை சந்திக்கின்றன. ஜீவ தண்ணீரானதை மனிதனால் செய்யப்பட்டவைகளிலும், வெடிப்புள்ள தொட்டிகளிலும் கண்டுபிடிக்க இயலாது. ஆனால் என்னிடம் தூய இருதயத்துடனும் ஜெபத்திலும் நெருங்கி சேருபவன் என்னில் ஜீவ தண்ணீர் ஊற்றை கண்டடைவான். அதன் மூலம் திருப்தியும், புத்துணர்வும் நித்திய வாழ்வும் கிடைக்கும் (ஏசா.55:1; எரே.2:13; வெளி.22:17).


ஒரு பெண் தன் குழந்தையை கரங்களில் சுமந்து கொண்டு மலைப்பாதையில் சென்றபொழுது, அந்த குழந்தை அருகிலிருந்த அழகான மலர் ஒன்றை பார்த்துவிட்டது; உடனே துள்ளி குதித்து தன் தாயின் கரங்களிலிருந்து எழும்பி கீழே மலைச் சரிவில் ஒரு பாறையில் விழுந்து தலையில் அடிபட்டதால் உடனே மரித்துவிட்டது. அந்த குழந்தையின் பாதுகாப்பு தாயின் கரங்களில் தான் இருந்தது என தெளிவாகின்றது.


அக்குழந்தையின் மரணத்துக்கு காரணமான அந்த ஈர்க்கும் மலர்களில் இல்லை. தன் வாழ்வில் ஜெப அனுபவம் இல்லாத விசுவாசியும் இப்படியே இருக்கிறாள். இவ்வுலகின் வசீகரமான இன்பங்கள், கடந்து போகக் கூடியவை என்றாலும் அவன் எனது அன்பை மறக்கிறான். தாயின் அன்பைக் காட்டிலும் என் அன்பு பெரியது. அவ்வன்பையும் ஆவிக்குாய பாலையும் புறக்கணித்து எனது கரத்திலிருந்து துள்ளி விழுந்து மறைகிறான்.


தாயின் அன்பு ஆதரவு, ஒரு குழந்தையின் சிறு முயற்சியால் அதற்க கிட்டும்படியாக அமைந்துள்ளது. எனது குழந்தைகளும் என்னைத் தேடி வராமலிருந்தால் அவர்கள் ஆத்துமாவை காத்திடும் ஆவிக்குரிய பலனான பாலை பெற இயலாது. ஒரு சிறு குழந்தைக்கு அதன ையாரும் சொல்லித் தருவதில்லை, சுயமாகவே அது தாயினிடம் நெருங்கி சேருகின்றது. அந்த உணர்வு அதற்கு உள்ளது. அதைப்போன்றே ஆவியினால் பிறந்தவர்களும் என்னிடத்தில் நெருங்கி ஜெபிக்க ஆவிக்குரிய உணர்வை பெற்றுள்ளனர். இந்த உலக சித்தாந்தமும் ஞானமும் அதை போதிப்பதில்லை


இயற்கையாக மனிதனிடத்தில் பசியும் தாகமும் இருக்கும்படியாக நான உருவாக்கியுள்ளேன். இல்லையெனில் அவன் தன்னை கடவுளாக கருதக்கூடும். ஆனால் ஒவ்வொரு நாளும் அவனுடைய தேவைகள், தன்னை உருவாக்கின மகத்தானவரிடம் தன் வாழ்வு இணைக்கப்பட்டிருப்பதை நினைவூட்டுகின்றன. தன்னுடைய குறைவுகளும் தேவைகளும் நன்கு தெரிவதனால் அவன் என்னில் நிலைத்திருக்கிறான். நான் அவனில் நிலைத்திருக்கிறேன். அப்பொழுது அவன் என்னில் ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடைகிறான்.

Post a Comment

0 Comments