இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

இயேசுவின் பாதபடியில் ஜெபம் (Prayer) Part 1

ஜெபம்

பகுதி-1

சீடன் : சில வேளைகளில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது. "தேவன் நம்முடைய தேவைகளை முற்றும் அறிந்தவராக இருக்கிறார், தேவன் அவற்றை சிறந்த வழியில் நமக்கு தரும் வழியை தெரிந்தவராக இருக்கின்றார் நல்லவர்களுக்கு மட்டுமல்ல தீயவர்க்கும் செய்யவேண்டியவற்றை அறிந்திருக்கிறார். பின் எப்படி நாம் அவரிடம் அதைக்குறித்து ஜெபம் செய்ய முடியும்? நமது தேவைகள் இம்மைக்காக அல்லது ஆவிக்குரியதாக இருந்தாலும், நமது ஜெபங்களினால் நாம் தேவனது சித்தத்தை மாற்ற இயலுமா ?


ஆண்டவர்: 1. அவ்விதமான கேள்வியை கேட்பவர்கள் தங்களுக்கு ஜெபம் என்றால் என்ன என தெரியவில்லை என்று தெளிவாக காட்டுகின்றனர். அவர்கள் ஜெபிக்கும் வாழ்க்கையை வாழாதவர்கள். அல்லது தேவனிடம் ஜெபிப்பது என்பது ஒரு வகையாக பிச்சை கேட்பது போல் அல்ல என்பதை அறிந்திருப்பார்கள். தேவனிடமிருந்து இவ்வுலக தேவைகளுக்கான பொருட்களை பெற முயற்சிப்பது அல்ல ஜெபம். ஜெபம் என்பது தேவனையே உறதியாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுதல், அவர் ஜீவனை துவக்கியவர் ஜீவனின் ஆதாரமான அவரை கண்டடைந்து அவருடன் ஐக்கியத்தில் பிரவேசிக்கும்பொழுது வாழ்வின் முழுமையை பெறுகின்றோம். அவரால் வாழ்வு பரிபூரணப்படுகின்றது. தீமை செய்பவர்களுக்கு, அவர்கள் மேல் உள்ள அன்பினால், தேவன் அவர்கள் உலக வாழ்வின் தேவைகளை தருகிறார் ஆனால் அவர்களுக்கு ஆவிக்குரிய ஜீவன் இல்லாததால் ஆவிக்குரிய தேவைகளை காண்பிப்பதில்லை


அவர்களுக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அருளினாலும் அவர்களால் அதனை மகிழ்ந்து பாராட்ட இயலாதவர்கள்.

ஆனால் விசுவாசிப்பவர்களுக்கு இரண்டுவித ஆசீர்வாதங்களும் அருளப்படும் முக்கியமாக ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள், அதன் விளைவாக சீக்கிரமே அவர்கள் இவ்வுலக ஆசீர்வாதக்களை விரும்பாமல் ஆவிக்குரியவற்றின் மேல் தங்கள் அன்பினை முற்றிலும் செலுத்துவார்கள். தேவனுடைய சித்தத்தை நாம் மாற்றி அமைக்க முடியாது. ஆனால் ஜெபிக்கும் மனிதன் தனக்குரிய தேவசித்தத்தை கண்டுகொள்ள இயலும். இவ்விதமான மனிதர்களுக்கு, அவர்கள் இதயத்தின் ஆழத்தில் தேவன் தம்மை வெளிப்படுத்துகிறார். அவர்களுடன் பேசி ஐக்கியம் கொள்கின்றார். அவருடைய கிருபையான நோக்கங்கள் அவர்கள் நன்மைக்கென்றே என உணர்த்துகின்றார். அப்பொழுது சந்தேகங்களும் உறுத்தும் பிரச்சினைகளும் என்றென்றைக்குமாய் கடந்துபோய் விடுகின்றன


ஜெபம் என்பது பரிசுத்த ஆவியானவருக்குள்ளாக சுவாசிப்பதாகும். ஜெயிப்பவர்களின் வாழ்வில் தேவன் தமது பரிசுத்த ஆவியானவரை ஊற்றுகின்றார். அவர்கள் "ஜீவ ஆத்துமாக்கள் " ஆகின்றனர் (ஆதி.2:7; யோவா.20:22). அவர்கள் மரிப்பதில்லை. அவர்களது ஆவிக்குரிய நுரையீரல்கள் பரிசுத்த ஆவியானவரால் ஜெபமாக ஊற்றப்படுகின்றன அவர்கள் ஆவி சுகம், பெலன், நித்திய ஜீவனால் நிரம்பிவிடுகின்றது.


அன்பான தேவன் எல்லா மனிதருக்கும் இலவசமாக ஆவிக்குரிய உலகப்பிரகாரமான தேவைகளை தருகின்றார். ஆனால் அவர் இரட்சிப்பையும் பரிசுத்த ஆவியானவரையும் இலவசமாக தருவதால் சாதாரணமாக மதிப்பிட ஏதுவாகின்றது. ஆனால் ஜெபம் அந்த ஈவின் மதிப்பை போதிக்கும். காற்று, தண்ணீர், வெப்பம், வெளிச்சம் இல்லாமல் வாழ்வது இயலாது. அவ்வாறே மனிதரது ஆவிக்குரிய வாழ்வுக்கென தேவன் இலவசமாக தரும் தெய்வீக ஈவை மனிதர் குறைவாக மதிப்பிட்டு தங்கள் சிருஷ்டிகருக்கு நன்றி செலுத்துவதில்லை. ஆனால் தங்கம், வெள்ளி, அரிய நகைகள், போன்றவற்றை பாடுபட்டு பெற்று அதனை மிக மேன்மையாக கருதுகின்றனர். அவற்றால் சரீர பசியையும் தாகத்தையும் நீக்க இயலாது ஆத்தும ஏக்கங்களை திருப்திபடுத்த இயலாது. இவ்வுலகத்திற்குரிய மனிதர்கள் இவ்வித மூடத்தனத்துடன் அறியாதுள்ளனர். ஆனால் ஜெபிக்கும் மனிதருக்கு உண்மை ஞானமும் நித்திய ஜீவனும் அருளப்படும் ஆவிக்குரியவற்றை


இவ்வுலகம் பரந்து விரிந்த கடல்போலுள்ளது. மனிதர்கள் அதில் மூழ்கி தமிழ்ந்து விடுகின்றனர். ஆனால் கடல் வாழ் உயிரினங்கள் ஆழமான தண்ணீரிலேயே வாழ்கின்றன. எப்படியெனில் அவை மேலே வந்து தங்கள் வாயை திறந்து தேவையான அளவு காற்றை பெற்றுக்கொள்கின்றன. ஆதனால் ஆழங்களிலே வாழ்கின்றன. அதைப்போல் தனிப்பட்ட ஜெபம் செய்வதனால் வாழ்க்கை சமுத்திரத்துக்கு மேலே வந்து உயிர்தரும் பரிசுத்த ஆவியானவரை பெறும் மனிதர்கள் இவ்வுலகில் பாதுகாப்புடன் வாழ்கின்றனர்


மீன் தனது முழு வாழ்வையும் கடலின் உப்பு தண்ணீரில் வாழ்ந்தாலும் அதற்குள் உப்பு ஏறாது. ஏனெனில் அதற்குள் உயிர் இருக்கின்றது. அதைப்போலவே ஜெபிக்கும் ஒரு மனிதன் பாவக்கறை படிந்த உலகில் வாழ்ந்தாலும் அவனுக்குள் பாவக்கறை படுவதில்லை, ஏனெனில் ஜெபத்தினால் அவன் வாழ்க்கை காப்பாற்றப்படுகின்றது.


கடலின் உப்புத் தண்ணீர் மேல் சூரியனின் சூடான ஒளிக்கதிர்கள் படும்பொழுது அவை நீராவியாக சென்று மேகமாக உருவாகின்றது. அது இனிமையும் புத்துணர்வும் தரும் தண்ணீர் ஆகி மழையாக பூமியின்மேல் பெய்கின்றது. (கடல் நீர் மேலெழும்பும்பொழுது தனது உப்பையும் கசப்பையும் விட்டுச் செல்கின்றது). அதைப்போன்றே ஜெபிக்கும் ஒரு மனிதனின் எண்ணங்களும் விருப்பங்களும் அவனது ஆத்துமாவில் இருந்து புகைமேகம்போல மேல் சென்று, நீதியின் சூரியனால் சுத்திகரிக்கப்பட்டு விடுகின்றன. அவனது ஜெபங்கள் மகிமையான மேகம்போல விண்ணிலிருந்து ஆசீர்வாதமான மழையாக பூமியிலுள்ளோருக்கு புத்துணர்வை பொழிகின்றது


5. நீர் வாழ் பறவைகள் தங்கள் வாழ்நாளை தண்ணீரில் நீந்தி செல்வதில் கழிக்கின்றன. ஆனால் பறக்க வேண்டிய நிலைவரும் பொழுது அதன் சிறகுகள் முற்றிலும் உலர்ந்த நிலையில் காணப்படுகின்றன அதைப்போலவே ஜெபித்து வாழும் மனிதர்கள் இந்த உலகில் இருந்தாலும் அவர்கள் உயர எழும்பி இந்த பாவம் நிறைந்த உலகைவிட்டு நித்திய இளைப்பாறுதலின் வீட்டை அடைய பறக்கும் வேளை வரும்பொழுது அவர்களில் பாவத்தின் தடயம் காணப்படுவதில்லை


ஒரு கப்பல் தண்ணீரில் தான் மிதந்து நிற்க வேண்டும். ஆனால் தண்ணீர் அந்த கப்பலுக்குள் வருவது தவிர்க்க வேண்டியதும் அபாயகரமும் ஆனது. அதைப்போன்றே ஒரு மனிதன் இவ்வுலகில் வாழ்வது நன்மையும் மற்றவர்களும் உதவியுமாக இருக்கின்றது. அவன் தன்னை உலகத்தில் மிதக்கும் நிலையில் மேற்கொண்டு வாழ்வது மற்றவர்களையும் தனனையும் பரமஸ்தலத்தில் கொண்டு சேர்க்க உதவும். ஆனால் உலகம் அவனது இதயத்திற்குள்ளே பிரவேசித்து விட்டால் அது மரணமும் அழிவுமானது அதனால் ஜெபிக்கும் ஒரு மனிதன் தனது இதயத்தை அவருடைய ஆலயமாக காத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது இவ்வுலகிலும் மறுமையிலும் சமாதானமாக இளைப்பாற இயலும்


தண்ணீர் இல்லையென்றால் வாழ இயலாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் தண்ணீரில் மூழ்கிவிட்டால் நாம் மூச்சுவிட இயலாமல் மரிக்க நேரிடும். நாம் குடிக்கவும் மற்ற தேவைகளுக்கும் தண்ணீரை பயன்படுத்துவது தேவையாக உள்ளது. ஆனால் நாம் தண்ணீருக்குள் விழுந்து மூழ்கி விடக்கூடாது. அதைப்போன்றே இந்த உலகத்தையும் உலகப் பொருட்களையும் எச்சரிக்கையுடன் உபயோகிக்க வேண்டும். அவை இன்றி வாழ்க்கை கடினமாக இருக்கும். மனிதர் பயன்படுத்துவதற்காகவே தேவன் உலகத்தை படைத்தார். மனிதர் தங்களையே அதற்குள் மூழ்கடிக்கக் கூடாது. அப்படியானால் ஜெபமாகிய மூச்சு நின்று போய் மரிக்க நேரிடும்.


9. ஜெப வாழ்வை வாழ்வதை நிறுத்தும் பொழுது ஆவி தன்னை இழந்துபோகின்றது. உதவியாக தெரிந்த உலகத்தின் பொருட்கள் துக்கத்தையும், அழிவையும் தருகின்றன. சூரியன் தனது ஒளியினாலும் வெப்பத்தினாலும் காய்கறிகள் வளர உதவும். அவை காய்ந்து அழிந்திடவும் செய்யும். காற்று எல்லாவற்றுக்கும் பலனைத்தரும், அவை அழிந்து விடவும் செய்ய இயலும். அதனால் விழித்திருந்து ஜெபிக்க வேண்டும்


நாம் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் உலகத்திற்குரியவர்களாக வாழக்கூடாது. நாம் இந்த உலகத்தாரல்ல. அப்பொழுது இவ்வுலகின் பொருட்கள் பயனுள்ளதாகவும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் உதவியாக இருக்கும். ஆனால் ஒரு நிபந்தனை உண்டு. ஆவி தன் முகத்தை எப்பொழுதும் நீதியின் சூரியனின் திசையில் திருப்பியிருக்கவேண்டும். சில அழுக்கான நிலங்களில் வளர்ந்துள்ள மலர் செடிகளின் நறுமணம் அங்குள்ள தீமையான நாற்றத்தை மேற்கொள்கிறது. அந்த செடிகள் சூரியனை நோக்கியிருந்து வெளிச்சமும் வெப்பமும் பெறுகின்றன. அந்த அழுக்கான நிலம் செடிகளுக்கு தீமையாக இராமல் உரமாக இருந்து அவை வளர அதைப் போன்றே, ஜெபம் செய்யும் ஒரு மனிதனின் இதயம் என்னையே நோக்கி திரும்பியிருக்கிறது. என்னிடமிருந்து ஒளியும் வெப்பமும் பெறுகிறான். இந்த தீய உலகின் துர்கந்தமான சூழல் மத்தியிலே அவனது பரிசுத்தமான வாழ்வின் நறுமணம் என்னை மகிமைப்படுத்துகின்றது. அவனிடத்திலிருந்து இனிய மணம் மட்டுமல்ல என்றென்றும் நிலைத்திருக்கும் கனியும் உருவாகின்றது. 


Post a Comment

0 Comments