கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள்
நமது கிறிஸ்தவ வாழ்விலே நாமெல்லாரும் அனுபவித்த பல்வேறு வகை அனுபவங்களான, சுத்திகரிக்கப்படுதலும் நியாயத்தீர்ப்புகளும் உள்ளன. ஆனால், வேதம் கூறுகின்ற விசேஷ நியாயத்தீர்ப்பு நிகழ்ச்சியைவிட, அவைகள் வேறுபட்டவைகள். கிறிஸ்தவ வாழ்விலே எது தவறானது மற்றும் எது சரியானது, எது சட்டப்பூர்வமானது எது வசதியானது என்பவை களில் சாதாரண நியாயத்தீர்ப்பை ஒருவர் எடுத்துத்தான் ஆகவேண்டும் (எபி. 5:14; 1 கொரி. 6:12; 10:23). ஆவிக்குரிய மனிதன் எல்லாவற்றையும் நியாயந்தீர்க்கிறான், ஆனால் அவன் ஒருவராலும் நியாயந்தீர்க்கப்பட்டான் (1 கொரி. 2:15). அப்படியென்றால் ஆவிக்குரியவன் பெருமையினால் நிரம்பியிருப்பதல்ல. ஆனால், உண்மையான ஆவிக்குரிய தன்மையென்பது, தாழ்மையும் சாந்தமும், ஏற்கனவே கர்த்தால் சிட்சிக்கப்பட்ட நிலையுமாகும் (1 கொரி. 11:31-32). காரியங்களை நியாயந்தீர்ப்பதற்கும், மக்களை நியாயந்தீர்ப்பதற்கும் மென்மையான வித்தியாசம் உள்ளது. அவைகளின் முன்னேற்றத்திற்காக நாம் காரியங்களை நியாயந்தீர்க்க வேண்டும் (நிகழ்ச்சிகள், நடைமுறைகள் உபதேசங்கள், முறைகளின் இயல்கள், செயல்பாடுள்ள முதலியன) ஜனங்களை நாம் நியாயந்தீர்க்கக்கூடாது, அது ஆக்கினைத் தீர்ப்பை உள்ளடக்கும்; அப்படிப்பட்ட நியாயத்தீர்ப்புகள் கர்த்தருக்கு உரியவைகள், நமக்குரியவைகளல்ல (ரோம. 14:4-10).
விசுவாசிகளின் நியாயத்தீர்ப்பு
நாம் எல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்க வேண்டும் (ரோம. 14:10). ஆவிக்குரிய உலகத்தில் அனுபவம் பெற்றவர்கள், மாம்ச சரீரத்தை விட்டு ஆவிக்குரிய உலகத்தில் நுழையும்போது, பல நேரங்களில் 'வாழ்வை-உற்று நோக்கி ஆராயும்” அனுபவங் களை அனுபவிப்பதை கவனிப்பார்கள். இந்த வாழ்வை-உற்றுநோக்கி ஆராய்வது, அதிகப் படியான ‘சுய-நியாயத்தீர்ப்பை ஒருவர் அவரது வாழ்வின் எல்லா நேர்மறை மற்றும் எதிர் மறையானவைகளை அனுபவிப்பதாகும்; ஒருவர் மற்றொருவருக்கு உண்டாக்கும் மனக்காயங் களையோ இன்பத்தையோ ஆழமாக உணர்வதாகும். இது வாழ்வை மறுமலர்ச்சியாக்கும் அனு பவமாகவும், ஒருவரை அதிகமான ஞானத்திற்கும் விளங்கிக் கொள்ளுதலுக்கும் கொண்டு வந்தாலும், இது 'கிறிஸ்துவின் நியாயாசனம்' என்று அழைக்கப்படும் நிகழ்ச்சி அல்ல.
கிறிஸ்துவின் நியாயாசனத்திலே நமது தனிப்பட்ட வாழ்க்கையின் கணக்கை ஒப்புவிக்க வேண்டும் (ரோம. 14:10-12). இந்த நியாயாசனத்திலிருந்து யாரும் இழந்துபோவதில்லை. ஆனால், பலனைப்பெற்றுக்கொள்வதற்காக நியாயத்தீர்க்கப்படுகிறோம். சரியாக தங்கள் வாழ்வை வாழாதவர்கள், தங்களது பலன்களை இழக்கிறார்கள், தங்களது இட்சிப்பை அல்ல (1 கொரி. 3:11-15). தேவன் அன்பாயிருக்கிறார். அவரது நியாயத்தீர்ப்புகள் யாரை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்துகிறார் என்பதை பார்ப்பதற்காக உண்டானதல்ல. ஆனால், அவர் பலன் அளிக்கிறதற்கானதே. ரொனால்டு பக் தேவ தூத ஊழியங்களின் அவரது வெளிப்பாட்டில், விசுவாசிகளின் நியாயத்தீர்ப்பு என்பது நித்திய நாளுக்குள்ளே ஒருவர் ஊடுருவிச் செல்வதற்கு முன்பு கடந்து செல்லும் இருட்டான இரவு அல்ல; தனது மக்களுக்கு ‘நன்றி’ சொல்ல தேவன் தெரிந்தெடுத்த நாளாகும் (Angels on Assignments by Ronald Buck, pages 131-144). விசுவாசிகளினுடைய நியாயத் தீர்ப்பின் நேரத்தை அநேக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் காலக்கட்டமானது, ஆகாயத்திலே எடுத்துக்கொள்ளப்படுவதற்கும் யூதர்களுக்கான கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கும் இடையில் இருப்பதாக வைத்துள்ளார்கள்; இது பரலோகத்திலே, ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்துடன் நடைபெறும்.
தேசங்களின் நியாயத்தீர்ப்பு: ஆதாம் வாழ்ந்த பூமியின் நியாயத்தீர்ப்பு
அவரது இரண்டாம் வருகையில் ஒலிவ மலையின்மேல் இறங்கின உடனே கர்த்தராகிய இயேசு, அந்திக் கிறிஸ்துவையும் தேசங்களையும் அவரது மகிமையினாலும் வல்லமையி னாலும் ஏற்கனவே நியாயந்தீர்த்திருப்பார் (2 தெச. 2:8). சிங்காசனங்களையும் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருந்தவர்களுக்கு நியாயந்தீர்க்கும்படி ஒப்புக்கொடுக்கப் பட்டதையும் அப்போஸ்தலனாகிய யோவான் பார்த்தார் (வெளி. 20:4). தேசங்களின் நியாயத்தீர்ப்பைப் பற்றி இயேசு பேசியவைகளின் பகுதிதான் இவைகள் (மத். 19:28; 25:31 46). இயேசுவின் சீஷர்கள் தங்களது மாம்ச சிந்தையிலே இந்த ‘சிங்காசன-அறை’ இடங் களை தவறான உள்நோக்கங்களோடு தேடினதாக காணப்படுகிறது (லூக். 22:24-30). இருபத்து நான்கு சிங்காசனங்களால் சூழ்ந்த தேவனது சிங்காசன அறையை, அப்போஸ் தலனாகிய யோவான் கண்டார். இவைகள் வித்தியாசமான யுகங்களை சேர்த்தவைகளாகவும், ஆவிக்குரிய உலக நிர்வாகத்திற்கு சேர்ந்தவைகளாகவும் இருக்கக்கூடும் (வெளி. 4:4). பூமியிலே ஒரு முறைமையாக, கிறிஸ்துவின் இந்த பூலோக ஆளுகை சிங்காசனங்களோடு உண்டாக்கப்பட்டது. இவைகளால் ஆயிரம் வருடங்களில் கிறிஸ்து ஆளுகை செய்வார்.
ஆதாமின் யுகத்திலே (ஆதாம் முதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன் உள்ள கடைசி தலைமுறைவரை) பூமியின்மேல் வாழ்ந்த எல்லா மனிதர்களும், நியாயந்தீர்க்கப்பட்டு அவர்களது இரகசியங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன (ரோம. 2:16). ஆதாமின் இனத்தை தன்மேல் எடுத்துக்கொண்ட மனிதகுமாரனாகிய இயேசு, மனிதர்களின் சுபாவத்தை அறிந்த வராகையால், பூமி முழுவதையும் சத்தியத்தோடும் மனதுருக்கத்தோடும் நியாயந்தீர்ப்பார் (அப். 17:31). அவர் பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. எல்லாம் அவருக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமுள்ளது. அவருக்கே எல்லாரும் கணக்கொப்பு விக்க வேண்டும் (எபி. 4:13). விசுவாசிகளின் நியாயத்தீர்ப்பானது, இயேசுவுக்கு அன்பு, தியாகம், சேவை இவைகளின் அடிப்படையில் இருக்கும் வேளையில், தேசங்களின் நியாயத் தீர்ப்பு பூமி முழுமைக்கும் மற்றும் தேவனது இரண்டு பிரமாணங்களுக்கும் ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு தேசமும் எவ்வாறு சேர்ந்து அமைந்திருந்தது என்பதை பொறுத்து அமையும்: அவர்கள் தேவனை எப்படி நேசித்தார்கள் மற்றும் ஒருவரை ஒருவர் எப்படி நேசித்தார்கள் என்பதே. தேசங்களை எவ்வாறு நடத்தினார்கள் மற்றும் ஜனங்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு நடத்தினார்கள் என்ற அடிப்படையில் ராஜா (இயேசு) நியாயத்தீர்ப்பதின் ஒரு சிறிய தோற்றத்தை இயேசு கொடுக்கிறார் (மத். 25:31-46; ரோம. 2:13-16). இந்த பரீட்சையில் தேர்வடையாதவர்கள் நித்திய அக்கினிக்கு நியமிக்கப்படுகிறார்கள் (மத். 25:46; Gl6ufl. 19:20; 20:10).
ஆயிரம் வருடம்
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மட்டும் ஏன் பிசாசு கட்டப்பட்டு, அதன் முடிவில் விடுதலையடைகிறான் என்பது ஜனங்களை ஆச்சரியத்திற்குட்படுத்தும் இரகசியங்களில் ஒன்றாகும் (வெளி. 20:4-10). மிருகத்தைபோலும் கள்ளத்தீர்க்கதரிசியைப்போலும் ஏன் அவன் அக்கினிக் கடலிலே தள்ளப்படவில்லை என்று மெய்யாகவே அநேகர் ஆச்சரியப்படு கின்றனர் (வெளி. 19:20). இந்தக் காரணங்களினால், சிலர் பின்-ஆயிரம் வருட கருத்துக் களை நோக்கி சாய்ந்துவிடுகின்றனர் (சபை யுகத்தை ஆயிரம் வருடத்தின் ஒரு பகுதியாக அமைத்துப் பார்ப்பதால்) மற்றவர்கள் ஆயிரம் வருடங்களை எழுத்தின்படி உள்ள காலமாக எண்ணாமல் வெறும் அடையாள காலமாக (ஆயிரம் வருட அரசாட்சி இல்லாத) எண்ணு கிறார்கள். ஒருவர் ஆயிரம் வருடங்களை எழுத்தின்படி வியாக்கியானம் செய்தால், அவர் பெரும்பாலும் முன் -ஆயிரம் வருட கருத்தையே எடுத்துக்கொள்பவராக இருப்பார்;
ஏனெனில், தற்கால இருபத்தொன்றாம் நூற்றாண்டின் அனுகூல அம்சத்தில் இருந்து, அமைதியும் ஒற்றுமையும் நிறைந்த ஆயிரம் வருடங்களை, மனித வரலாற்றிலே ஒரு இடத்திலோ காலத்திலோ நாம் கண்டதில்லை.
ஆயிரம் வருடம் என்பது பூலோகத்திலே பரதீசின் நேரமாக எண்ணப்படுகிறது. அந்தக் காலத்திலே ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும், சிங்கம் மாட்டைப்போல வைக் கோலைத் தின்னும், புழுதி சர்ப்பத்திற்கு இரையாகும். தேவனுடைய பரிசுத்த பர்வதத்திலே அவைகள் தீங்கு செய்வதுமில்லை கேடுண்டாக்குவதுமில்லை (ஏசா. 65:25). பூமியிலே பரதீசு இருந்த மற்றும் ஒரு காலம், வீழ்ச்சிக்கு முன்பிருந்த ஏதேன் தோட்டமாகும். ஆதாமும் ஏவாளும் பாவத்தில் விழாதிருந்திருந்தால் எப்படியிருக்கும் என்று அநேகர் ஆச்சரியப்படுகின்றனர் (திட்டம் A) ஏதோ ஒரு காலக்கட்டத்தில் கிறிஸ்து நிச்சயமாக தன்னை வெளிப்படுத்தியிருப்பார் என்று நான் உறுதியாக எண்ணுகிறேன்.
நாம் வேதத்தில் காணும் நிகழ்ச்சிகளிலே திட்டம் Bஆக இருந்திருக்க முடியும் (திட்டம் A முதல் திட்டம் Z மற்றும் அதற்கு மேலும் உள்ளத்தில், கிறிஸ்து ஏதாவது வழியில் தன்னை வெளிப்படுத்தியிருப்பார் என யூகிக்கலாம்). பூமிக்காக இன்னும் திரை திறக்கப்படவிருக்கும் பூர்வ திட்டம் Aவினுடைய பகுதிகள் இன்னும் வெளிப்படுத்தப்படாமலிருக்க முடியும் (ஆதாமும் ஏவாளும் வீழ்ச்சியடையாமலிருந்திருந்தால்). அவர்கள் மரிக்கும்முன்பு ஏறக்குறைய ஆயிரம் வருடம் (தொள்ளாயிரத்திற்கு மேல்) உயிரோடிருந்த முதல் தலைமுறை மனிதர்கள், ஆயிரம் வருட கீழ்ப்படிதலின் முடிவில் கிறிஸ்துவின் விசேஷ வெளிப்பாடு அவர்களுக்கு உண்டாயிருந்தது, காத்திருந்திருக்க வேண்டும் என்பதையே குறிக்கிறது (அவ்விதமே மோசேயின் காலத்திய முதல் தலைமுறையினர், நாற்பது ஆண்டுகளாக கீழ்ப்படியாதவர்களாய் இருந்ததற்கு பதிலாக, வாக்குத்தத்த தேசத்திற்குள் சென்றதை நாம் யூகிக்க முடியும் அவர்கள் வீழ்ச்சியடைவதற்காகவே தேவன் அவர்களை உண்டாக்கினார் என்று யாரும் நினைக்கவே கூடாது முன்தீர்மானம் என்பதைப் பற்றி அஸ்திபார சத்திய தொகுப்பு 13ஐ வாசியுங்கள்). துர்அதிஷ்டவசமாக, பூமிக்கு இயேசுவின் இரண்டாம் வருகைக்கு பிறகு வரும் ஆயிரம் வருடத்திலேதான், நாம் இந்த இரகசியத்தை கண்டுபிடிக்க இயலும்.
பெரிய வெள்ளைச் சிங்காசன நியாயத்தீர்ப்பு: வானமும் பூமியும் அகன்று போயின
ஆயிரம் வருடத்தின் முடிவில், பெரிய வெள்ளைச் சிங்காசனம் தோன்றும். அதன் மகிமைக்கு முன்பாக முழு பூமியும் வானம் முழுமையும் நிற்க முடியாமல் அகன்று போகும் அளவிற்கு, அது அவ்வளவு வல்லமையுள்ளதாயிருந்தது. எல்லா வானமும் எல்லா பூமியும் அந்த பெரிய வெள்ளைச் சிங்காசனத்திற்கு முன் அகன்று போயின. அறிந்த உலகம் மற்றும் பூமிக்கு மேலும் கிரகமண்டலங்களைச் சுற்றிலும் உள்ள, ஆவிக்குரிய எல்லா உலக எல்லைகள் மட்ட நிலைகளையும் இந்த வல்லமையுள்ள சிங்காசனம் பாதிக்கிறது. ஆதாம் யுகத்திற்கு முன்பே இருந்த பிசாகம் அவனது கூட்டங்களும் பூமியிலே தேவனுக்கு விரோத மாக ஊக்கமாக வேலை செய்தவர்கள் எல்லாருக்கும். ஏற்கனவே இந்த பெரிய வெள்ளைச் சிங்காசனம் தோன்றும் முன்பே அவர்களுக்குச் செய்யப்பட வேண்டியவைகள் செய்தாயிற்று (வெளி. 20:10). ஆவிக்குரிய மண்டலத்தின் இருட்டு இருப்பிடமான, மரணமும் பாதாளமும், இந்த பெரிய வெள்ளைச் சிங்காசனத்தின் கீழ் நியாயந்தீர்க்கப்பட்டு விட்டார்கள் (வெளி. 20:14).
இந்தப் பெரிய வெள்ளைச் சிங்காசன நியாயத்தீர்ப்பு என்பது இந்தப் பிரபஞ்சத்தின் பூமியும் அதைச் சுற்றிலுமுள்ள வானங்களும்) எல்லா பகுதிகளுக்கும், ஆயிரம் வருடத்தில் வாழ்ந்த எல்லாருக்கும் வல்லமையான கணக்கு முடிக்கும் செயலாகும். ஆதாமுக்கு முந்தின மற்றும் ஆதாம் காலத்திய நாகரீகங்களும், ஒவ்வொருவர் மேலிருந்த அதன் செல்வாக்கும். அதாவது இந்த பிரபஞ்சத்தின் பகுதியிலே சேவை செய்த தேவ தூதர்கள், மனிதர்களின் செல்வாக்குகளின் கணக்கு வழக்குகள் முடிக்கப்படுவதாகும். பிரபஞ்சத்தின் இந்தப் பகுதிக்காக தேவ திட்டங்களுக்கு ஒத்துப்போவதை சார்ந்தே நியாயத்தீர்ப்பிருக்கும்.
0 Comments