இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை (Second Coming Of Jesus Christ)

 

பல்வேறு வகையான கடைசிகால சம்பவங்களைப் பற்றிய உபதேசங்களின் கருத்துக்களை விளங்கிக்கொள்ளுதல்


‘Eschatology கடைசிகால சம்பவங்களை பற்றிய உபதேசம் என்ற வார்த்தை 'eschatos' என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்துள்ளது. அதன் பொருள் 'கடைசிகால சம்பவங்கள் என்பதாகும். அதை கடைசிகால உபதேசம் என்றோ அல்லது eschatology என்றோ நாம் அழைத்தாலும், பல்வேறு வகையான கருத்துக்களை முன்வைக்கும்போது, நாம் எழுதப்பட்ட தேவ வார்த்தையின் எல்லைகளுக்குள் இருக்கும் வரை, அது எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டாக்குவதில்லை. கடைசிகால உபதேசத்தின் பல்வேறு பகுதிகளைப் பற்றி ஒருவர் ஆராய்ந்து கண்டு பிடிக்க ஆரம்பிக்கும்போது, அவர் சந்திக்கும் முதற்காரியமே. கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, உபத்திரவகாலம், ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல், ஆயிரம் வருட அரசாட்சி இவைகளின் பல்வேறுவகையான கருத்துக்களாகும்.


உபத்திரவகாலம் - தானியேல் தீர்க்கதரிசனமாக  சொன்ன  ஏழு வருடகாலம் (தானி. 9:27). 


முன் உபத்திரவகாலம் - உபத்திரவகாலத்திற்கு முந்தினது


மத்திய-உபத்திரவகாலம் - உபத்திரவகாலத்தின் மத்தியில்


 பின்-உபத்திரவகாலம் - உபத்திரவகாலத்திற்கு பிந்தினது 

 

ஆயிரம் வருடம் - வெளி. 20:5-7ல் உள்ள கிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சி


முன் ஆயிரம் வருடம்  - ஆயிரம் வருடத்திற்கு முன்பு


பின் ஆயிரம் வருடம் - ஆயிரம் வருடத்திற்குப் பின்பு


ஆயிரம் வருடமின்மை - ஆயிரம் வருடகாலம் இல்லை


ஆகாயத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுதல் திருச்சபை இரகசியமாக எடுத்துக்கொள்ளப் படுதல் (1 கொரி. 15:51-54; 1 தெச. 4:17; 2 தெச. 2:1)


இவைகள் ஒவ்வொன்றின் விவரங்களுக்குள் போகு முன்பு, இந்த பலவேறு வகையான கருத்துக்களுக்கான காரணத்தை முதலாவதாக குறிப்பிடுவது அவசியமாகிறது. பல்வேறு வகையான எல்லா கருத்துக்களும், தங்களுக்கு வேதவாக்கிய அடிப்படையை கொண்டுள்ளன. இந்த கருத்துக்கள் எவ்வாறு வந்தன என்பதை நாம் விளங்கிக்கொள்வது அவசியமாகிறது.


மாறுபட்ட வகைப்படுத்துதல் மாறுபட்ட கருத்துக்கள்


இரண்டாவது வருகையைப் பற்றிய பல்வேறு வகையான எல்லா வேதவசனப்பகுதி களையும் எடுத்துக்கொண்டால், உதாரணமாக மத்தேயு 24-25 அதிகாரங்கள், மாற்கு 13ஆம் அதிகாரம், லூக்கா 21ஆம் அதிகாரம், 1 கொரிந்தியர் 15ஆம் அதிகாரம், 1 தெசலோனிக் கேயர் 4-5 அதிகாரங்கள், 2 தெசலோனிக்கேயர் 1-2 அதிகாரங்கள், 1 தீமோத்தேயு 4ஆம் அதிகாரம், 2 தீமோத்தேயு 3ஆம் அதிகாரம், சகரியா 14ஆம் அதிகாரம், மற்றும் வெளிப்படுத் தினவிசேஷம் 19ஆம் அதிகாரம், இவைகளைப் பின்வருமாறு நாம் வகைப்படுத்துகிறோம்:


1. ஒரே ஒரு ஒட்டுமொத்தமான கிறிஸ்துவின் இரண்டாம் வருகை காரணகாரியம் நாம் பின்-உபத்திரவகால கருத்தை ஏற்றுக்கொள்கிறோம் என காரணகாரியம் அதிகாரத்தோடு சொல் லும். ஏனெனில் இயேசுவின் இரண்டாம் வருகை உபத்திரவ காலத்திற்குப் பிறகு (பின் உபத் திரவ கால கருத்து) நடைபெறும் என்பது சுவிசேஷ விவர வர்ணனைகளிலிருந்து மிகவும் தெளிவாகிறது.


2. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இரண்டு-பகுதி உள்ளன: ஒன்று திருச்சபைக்கு (ஆகாயத்திற்கு எடுத்தக்கொள்ளப்படுதல் அல்லது இரகசிய இரண்டாவது வருகை) மற்றும் ஒன்று யூதர்களுக்கு (ஒலிவ மலையின் மேல் வந்து இறங்குதல் சக. 14:4).

இவைகளுக்கு இடையில் ஒரு தெளிவான யுக பிரிவு அப்படியென்றால் அது உபத்திரவகாலத்திற்கு முன்பு தான் இருக்க வேண்டுமென காரணகாரியம் அதிகாரத்தோடு சொல்லும் (முன்-உபத்திரவ கருத்து).


3. இரண்டு-பகுதி இரண்டாம் வருகை இருக்கிறது. ஆனால், புறஜாதிகளுக்கான யுகம் மற்றும் யூதர்களுக்கான யுகம் இவைகளுக்கிடையில் தெளிவான வேறுபாடு இல்லை. திருச்சபைக்கும் யூதர்களுக்குமான இருவருக்கும் விடுதலை யின் தொடர்ச்சியை விளங்கிக்கொள்ளுதலை வெளிக்கொண்டு வருவதில் மிகவும் உறுதியான மத்திய உபத்திரவகால கருத்தை காரணகாரியம் அதிகாரத்தோடு சொல்லும்.

மேற்குறிப்பிட்டுள்ள காரணகாரிய எண்ண ஒருமைப்பாட்டிலிருந்து நீங்கள் பார்க்கும்போது, எப்பொழுது இரண்டாம் வருகை நடைபெறும் என்பதின் பல்வேறுவகையான கருத்துக்களின் பிரச்சனை, அவைகள் வேதவாக்கியங்களின்படியானதா அல்லது இல்லையா என்பது அல்ல; மாறாக, இரண்டாவது வருகையைப் பற்றி வேதவாக்கிய பகுதிகள் எவ்வாறு வகைப்படுத்தப் படுகின்றன என்பதில்தான் பிரச்சனை இருக்கிறது. எல்லாக் கருத்துக்களும் வேத வாக்கியங்களின் படியானவைகளே; அந்த வேதவாக்கியங்கள் எவ்வாறு வியாக்கியானப் படுத்தப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன என்பதில்தான், அதே வேதவாக்கியங்கள் பல்வேறு கருத்துக்களை ஆதரிப்பது இருக்கிறது. பின்-உபத்திரவ கருத்திற்கு ஒரே ஒரு ஒட்டு மொத்த இரண்டாம் வருகை இருப்பதால், இரண்டு-பகுதி இரண்டாம் வருகையாக உண்டாக்க ஏன் வித்தியாசம் இருக்கிறது என்று விவரிக்க, மற்ற இரண்டு கருத்துக் களுக்கு இருப்பதுபோல இதற்கு அவசியமில்லை. இவ்வாறு இரண்டு-பகுதி இரண்டாம் வருகைக்குப் பின்னால் உள்ள காரண அறிவையும் எவ்வாறு மற்ற கருத்துக்கள் உண்டாயின என்பதையும் நாம் நோக்குவோம். (இந்த இடத்தில், நான் முன்-உபத்திரவ கருத்திற்கு நேராய் சாய்ந்து இருந்து, கிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சியைப் பற்றி மற்றும் முன் ஆயிர வருட கருத்தைப் பற்றி இருப்பதையும் இதை வாசிக்கிறவர் அறிந்து கொள்ள அனுமதிப்பது அவசியமாகிறது எனவே ஒருவேலை ஏதாவது தப்பான அபிப்பிராயம் எனது விவாதத்திற்கு சாயம் பூசுமென்றால், இதை வாசிக்கிறவர் விழிப்புணர்வடைய முடியும்).


இரண்டு-பகுதியான கிறிஸ்துவின் இரண்டாம் வருகை


புறஜாதியாரின் காலத்தைக் குறிக்கும் வேதாகம வசனங்கள் உள்ளன. அது யூத யுகத்தில் இருந்து புறஜாதி யுகத்தை வித்தியாசப்படுத்தியது. அப். 15ல் எருசலேம் ஆலோசனை சங்கம், புறஜாதி கேள்வியை ஆலோசிக்கக் கூடினார்கள். தேவன் (இந்த சபையின் காலத்தில்) இப்பொழுது புறஜாதியாரை சந்தித்து, அவருடைய நாமத்திற்காக ஒரு ஜனத்தை பிரித்தெடுத்து, ஒரு நாளில் தாவீதின் கூடாரத்தை (யூத ராஜ்யத்தை குறிக்கும்) சீர்படுத்த திரும்பிவருவார் என அதில் முடிவு செய்தார்கள் (அப். 15:14-16). புறஜாதியாரின் காலத்தை யும் அதன் நிறைவேறுதலையும் குறித்து இயேசு பேசினார் (லூக். 21:24). புறஜாதியாரின் நிறைவு உண்டாகும் வரையில், யூதர்கள் புறக்கணிக்கப்படுகிறதையும் புறஜாதிகளின் இரட்சிப் பையும் பற்றி பவுல் பேசினார் (ரோம. 9:24-28; 11:15-25).


இயேசுவின் முதலாம் வருகையிலே, சுவிசேஷமானது முதலாவது யூதர்களுக்கும், பிறகு புறஜாதியாருக்கும் பிரசங்கிக்கப்பட்டது (ரோம. 1:16; 2:9-10). தனது பூலோக ஊ காலத்திலே, புறஜாதிகளுக்கல்ல, முதலாவது யூதர்களுக்கேதான் வந்ததாக இயேசுவே ஊழிய தெளிவுபடுத்தினார் (மத். 10:5-6; 15:24; யோவா, 4:22), யூதர்களுக்கு தனது சாட்சியை முடித்துக் கொண்ட பிறகு, முழு உலகத்தின் பாவத்திற்கும் சிலுவையிலே மரித்து, முழு உலகத்திற்கும் சென்று எல்லா சிருஷ்டிகளுக்கும் எல்லா தேசங்களுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி, இயேசு தனது சீஷர்களுக்குக் கட்டளையிட்டார் (மத். 28:19-20; மாற். 16:15). இயேசுவுக்கு இரண்டு-பகுதி முதல் வருகை இருந்தது என்று நாம் சொல்ல முடியும்: பிரதானமாக அவரது முதல் மூன்று ஆண்டுகள் யூதர்தகளுக்கும் அவரது உயிர்த்தெழு தலுக்குப் பிறகு அவரது ஊழியம் புறஜாதிகளை உள்ளடக்கும் முழு உலகத்திற்கும் இருந்தது. அப்படியென்றால் அவரது இரண்டு-பகுதி முதலாவது வருகையின் ஏறக்குறைய மூன்று ஆண்டு ஊழயத்திலே ஒன்று யூதர்களுடைய யுகத்திற்கும் (இது அவர் வளர்ச்சியடைந்த முப்பது ஆண்டுகளையும் மற்றும் மூன்று ஆண்டு ஊழியத்தையும் உள்ளடக்கும்) அவரது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு புறஜாதியாரின் யுகத்திற்கும் இடையே பிரிவு உண்டாயிருந்ததை விளக்கும்.


அவரது இரண்டாவது வருகையிலே, அதை இரண்டு-பகுதி இரண்டாவது வருகை என்று பிரிப்பதற்கு முடியும்: முதலாவது பகுதி புறஜாதிகளுக்கு (ஆகாயத்தில் எடுத்தக்கொள்ளப் படுதல்: மத்திய ஆகாயத்தில் வருதல் 1 தெச. 4:16-17). யூதர்களின் இரண்டாவது பகுதி (அவரது பாதம் ஒலிவ மலையின்மேல் வருதல் சக. 14:4). தானியேலின் கடைசி வாரத்தை, அது ஆரம்பமாவதற்கு முன்பே நடக்கும், ஆகாயத்தில் எடுத்தக்கொள்ளப் படுவதோடு யூதர் யுகமாக நாம் அதை எடுத்துக்கொண்டால், பிறகு இரண்டு பகுதி இரண்டாம் வருகைக்கு இடையே ஏழுவருட பிரிவு உண்டாகும். யூதர்களுக்கு அவரது வருகையை சபைக்கு அவர் தனியாக வருவதற்கு எதிரானதாக எடுத்தக்கொள்பவர்கள் ஒலிவ மலையின்மேல் அவரது பாதங்கள் வந்து இறங்குவது) 1 தெசலோனிக்கேயர் மற்றும் 2 தெசலோனிக்கேயர் வேத பகுதிகளை மத்திய ஆகாயத்தில் ஆண்டவரது இரகசிய வருகையின் வெளிப்பாடாகவே காண்கின்றனர் (1 தெச. 4:15-17; 2 தெச. 2:1).


ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல்: ஆகாயத்தில் இரண்டாவது வருகையின் முதல்-பகுதி


ஒன்று புறஜாதிகளுக்கும் ஒன்று யூதர்களுக்குமாக, கர்த்தரின் இரண்டாவது வருகையை இரண்டு பகுதிகளாக பிரித்தால், வேதத்திலுள்ள இரண்டாவது வருகையின் வேதவாக்கியங்களை, மிகவும் கவனமாக நாம் ஆராய்ந்து பார்ப்பது, அவசியமாகிறதென்பது தான் அதன் பொருள். மத்திய ஆகாயத்தில் அவர் வரும் முதலாவது வருகையை, சில வேத பகுதிகள் குறிக்கலாம். சில பகுதிகள் உலகத்திற்கு வரும் அவரது இரண்டாவது வருகையை குறிக்கலாம். எடுத்துக்கொள்ளப்படுதலில் அவரது வருகை புறஜாதிகளுக்குத் தான் என்பது மத்திய ஆகயத்தில் அவர்களுக்கான இரண்டாவது வருகை என்றால், அது இறையியலின்படி சரியானதாகாது; அவ்விதமே, ஒலிவமலையில் இறங்கும் யூதர்களுக்கான அவரது இரண்டாவது வருகையும் அவர்களுக்கான அவரது இரண்டாவது வருகை என்றாலும் இறையியலின்படி சரியானதாகாது. இவ்வாறு, இரண்டு - பகுதியான இரண்டாம் வருகை என்ற ஒரு புதிய வார்த்தையை உருவாக்குகிறோம்.


வானத்திலே எடுத்துக்கொள்ளப்படுதல் அல்லது இரண்டாம் வருகையில் ஆகாயத்திலே எடுத்துக்கொள்ளப்படுதலில் என்ன அடங்கியுள்ளது? இது விசுவாசிகளை அவரிடத்தில் ஒன்றாக சேர்ப்பதோடு, திருச்சபையின் யுகம் முழுமையடையும் என்பதையும் குறிக்கும் (2 தெச.2:1). 'இரண்டாம் வருகையில் ஆகாயத்தில்' என்ற சொற்றொடர் 1 தெச லோனிக்கேயர் 4:17லிருந்து வந்துள்ளது. அங்கு, சத்தத்தோடே கர்த்தர் வானத்திலிருந்து இறங்கி வரும்வதும் கூறப்பட்டுள்ளது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழுந்திருப்பார்கள், உயிரோடு இருக்கிறவர்கள் அவர்களோடு ஆகாயத்திலே தேவனை சந்திக்க மேகங்களுடனே எடுத்து கொள்ளப்படுவார்கள் அதே நிகழ்வு 1 கொரிந்தியர் 15:51-52ல் விவரிக்கப்பட்டுள்ளது. அங்கு மரித்தோர் உயிரோடு எழுப்பப்படுவார்கள், தங்களது புதிய ஆவிக்குரிய சரீரங்களைப் பெற்றுக்கொள்ள, இமைப்பொழுதிலே உயிரோடிருக்கிறவர்கள் மறுரூபமாக்கப்படுவார்கள்.


தேவனோடு நடந்து காணப்படாமற்போன ஏனோக்கு, ஆகாயத்திலே எடுத்துக்கொள்ளப் படுவதற்கு அடையாளமாயிருக்கிறார். அது ஆகாயத்திலே இரண்டாம் வருகையில் நடை பெறவேண்டும் (எபி. 11:5 அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார் Gireek root from metatithemi meaning to transport or be carried, includes transmutation எடுத்துச்செல்லப்படுதல் அல்லது கொண்டு செல்லுதல் என்று பொருள்படும் மெடாடிதிமி என்ற கிரேக்க மூல வார்த்தையில் இருந்து வருகிறது, மாற்றங்களுக்கு அப்பாற்பட்டது என்பதையும் உள்ளடக்கும்). ஆகாயத் திலே இந்த இரண்டாம் வருகை என்பது சிலநேரங்களிலே இரகசிய வருகை அல்லது ஆகாயத்திலே எடுத்துக்கொள்ளப்படுதல் (Rapture) என்றும் அழைக்கப்படுகின்றது.


ஏனெனில், இரவிலே திருடன் வருகிறவிதமாய் இந்த நிகழ்ச்சி இருக்கும் என்பதால், இவ்வாறு அர்த்தங்கொள்ளப்படுகிறது (1 தெச. 5:2; 2 பேது. 3:10). இது ஒலிவமலையின் மேல் நமது ஆண்டவர் இறங்குவது, எல்லாரும் காணக்கூடிய ஒன்றாகையால் (மத். 24:27 கிழக்கிலிருந்து மேற்கு வரையும் மின்னலடிக்கிறதைப்போல்) வித்தியாசமானது. மெய்யாகவே, ஒலிவமலையின்மேல் இறங்குவது யூதர்களுக்கான இரண்டாம் வருகை - இரகசியமான நிகழ்ச்சியாக இருக்காது.


ஆகாயத்திலே எடுத்துக்கொள்ளப்படுதல் நடைபெறும்போது, அது இரண்டாவது முறையாக மரித்தோர் அதிகமாக உயிரோடு எழுவது நடைபெறும். முதலாவது சரீர உயிர்த்தெழுதல் (வெறும் சரீர உயிர்த்தெழுதல் மட்டுமல்ல, ஆனால், அழிவில்லாத ஆவிக்குரிய சரீரத்திற்கு சரீர உயிர்த்தெழுதல்) இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தபோது நடைபெற்றது. அவர் எழுந்த போது, பழைய ஏற்பாட்டுக் காலத்திலே பாதாளத்திலே அவருக்காக காத்துக்கொண்டிருந்த எல்லாரும் (ஆபிரகாமின் மடி லூக். 16:19-31), அவரோடு எழுந்து, தங்களது ஆவிக்குரிய சரீரங்களைப் பெற்றுக்கொண்டார்கள் (மத். 27:52-53). பாதாளத்திலே 'ஆபிரகாமின் பகுதிப் பிரிவை' இயேசு எழுத்தின்படியே காலிசெய்துவிட்டார். மரணத்தின் காவலில் இருந்தவர்களை, அவரோடு பரலோக பரதீசுக்கு எடுத்துச் சென்றுவிட்டார் (எபே. 4:8-10). மரித்தோரிலிருந்து எழுந்திருக்கப்போகிற இவர்கள், முதற்பலன்களைப் போன்றவர்களாக இருக்கிறார்கள் (1 Gemfl. 15:20-23).


மரித்தோரிலிருந்து எழும் இரண்டாவது இன்னுமொரு பெருங்கூட்டம், மத்திய ஆகாயத்தில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இருக்கும் (1 கொரி. 15:23, 52; 1 தெச. 4:16, 17). இந்த நிகழ்ச்சிக்கு முன்பு, கிறிஸ்துவுக்குள் மரிக்கும் ஒவ்வொருவரும், பரலோகத்திலே கர்த்தருடைய பிரசன்னத்திலே இருப்பார்கள். ஆனால் அவர்கள் புதிய உயிரோடு எழும்பின அழியாத சரீரங்கள் இல்லாமல் இருப்பார்கள்; அவர்களது ஆவிகளும் ஆத்துமாக்களும் பரலோகத்தில் இருக்கும். இரத்த சாட்சியாக ஸ்தேவான் மரித்தபோது, அவரது ஆவியை ஆண்டவர் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டார் (அப். 7:56-60). சரீரத்திலில்லாமலிருப்பது (மரிப்பது) கிறிஸ்துவோடு இருப்பதாகும் (பிலி. 1:21-24), 'ஆத்தும-தூக்கம்' என்று ஒன்று மில்லை. ஆவிக்குரிய ஆத்தும உணர்வுத்தன்மை என்பது, சரீரமரணத்திற்குப் பிறகு ஆவிக்குரிய உலகில் தொடர்ந்து இருக்கும்.


ஆவிகளாகவும் ஆத்துமாக்களாகவும் நாம் வாழ்ந்து வளரும்பொழுது, நமக்கு ஏன் ஒரு சரீரம் அவசியம்? என்ற கேள்வி சில நேரங்களில் கேட்கப்படுகிறது. இன்னும் நாம் பூரண மாய் அறிந்து கொள்ளாத தேவனுடைய திட்டங்கள் இருக்கின்றன. அவைகளுக்காக நமக்கு புதிய ஆவிக்குரிய சரீரங்கள் அவசியமாகின்றன. அந்த சரீரங்கள் புதிய வானத்திற்கும் புதிய பூமிக்கும் ஆயத்தமாயிருக்கும் (வெளி. 21:1). பரலோக பொருளினால் உண்டான இயேசுவின் உயிர்த்தெழுந்திருந்த சரீரத்தைப்போல, புதிய ஆவிக்குரிய சரீரமானது அழிவில்லாததாய் இருக்கும் (1 கொரி. 15:48-54).


யூதர்களுக்கான இரண்டு-பகுதி இரண்டாம் வருகை: ஒலிவமலையின்மேல் இறங்குதல்


இந்த இரண்டு-பகுதி இரண்டாம் வருகை, தானியேல் தீர்க்கதரிசனமாய் உரைத்தபடி, உபத்திரவ வார முடிவில் நிச்சயமாகவே நடைபெறும் (மகா உபத்திரவமாகிய ஏழு ஆண்டுகள்). தானியேல் தீர்க்கதரிசனத்தின் பாழாக்குகிற அருவருப்பைக் குறித்து இயேசு பேசினார் (மத். 24:15). உபத்திரவவாரத்தின் மத்திய பகுதியிலே பாழாக்குகிற அருவருப்பு உண்டாகும் என்பது தானியேல் புத்தகத்திலிருந்து தெளிவாகிறது. அதன் பொருள் என்ன வெனில், ஏழு ஆண்டு உபத்திரவகாலம், இரண்டு மூன்றரை ஆண்டுகளாகப் பிரிக்கப்படுவதே (தானி. 9:27). பாழாக்குகிற அருவருப்பை யூதேயாவிலுள்ளவர்கள் காணும்போது, மலை களுக்கு ஓடிப்போகும்படி இயேசு சொல்கிறார். ஏனெனில் நடைபெறும் உபத்திரவம் மிகவும் கொடியதாய் இருக்கும் (மத். 24:15-21). மிகுந்த உபத்திரவம் உண்டாயிருக்கும்.


நாட்கள் குறைக்கப்படாதிருந்தால் ஒருவரும் தப்பிப்போவதில்லை (மத்.24:22 தெரிந்து கொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்) உடனடியாக மகா உபத் திரவத்திற்குப் பிறகு இப்பிரபஞ்ச வல்லமைகள் அசைக்கப்படும். அப்பொழுது இயேசு மகிமை யோடும் மிகுந்த வல்லமையோடும் வானத்தின் மேகங்கள் மேல் வருவார் (மத். 24:29-30).


இரண்டாம்-பகுதி இரண்டாம் வருகையானது பகிரங்க நிகழ்ச்சியாகும். தமது மகிமையின் பிரசன்னத்தினால் துன்மார்க்கரைப் பட்சிக்கும் சர்வலோக நீதிபதியாய் இயேசு வருவார் (2 தெச. 1:7-10). இந்த பகிரங்க இரண்டாவது வருகையில், கர்த்தர் ஒலிவ மலையிலே இறங்கி, பாவ மனிதனாகிய அந்திக்கிறிஸ்துவையும், உலகின் எல்லா தேசங்களையும் எதிர்த்து சந்திப்பார் (சக. 14:1-5: 2 தெச. 2:3-8). இந்த இரண்டாம் வருகைதான். ஆதாமின் யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து, ஆயிரவருடத்தில் அழைத்துச் செல்லும் (Glasfl. 19:11 20:4). இயேசு ஏசா. 61:1-2ஐ வாசிக்கையில், அவர் வாக்கியத்தின் மத்தியில் (லூக். 4:18-19) உள்ள 'அநுக்கிரக வருஷம்' என்ற இடத்தில் நிறுத்தியது, கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. அதே வசனத்தின் இரண்டாம் பகுதி 'கர்த்தருடைய நீதி சரிக்கட்டும் நாளைப்' பற்றி பேசுகிறது. அது நேரடியாக இரண்டாம்-பகுதி இரண்டாம் வருகையைக் குறிக்கிறது.

Post a Comment

0 Comments