இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

பரிசுத்த ஆவியானவர்

பரிசுத்த ஆவியானவர் நம்மை நடத்துவார்


*"என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்"* (யோவான் 14:26).

ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்தை விட்டுச் செல்லும்படியான
வேளைவந்தது. இனி யார் தங்களை நடத்துவார் என்பது பெரிய கேள்வி. அப்பொழுதுதான் இயேசு, சீஷர்களுக்கு இவ்விதம் சொன்னார். திரியேக தேவனில் ஒருவரான பரிசுத்த ஆவியானவர் சபைக்கு, ஒவ்வொரு விசுவாசிக்கு கொடுக்கப்பட்ட ஈவாக இருக்கிறார். இன்றைக்கு அவரே நம்மில் வாசம் பண்ணுகிறவராகவும், நம் மத்தியில் வாசம்பண்ணுகிறவராகவும் இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிப்பார். நமது வாழ்க்கையின் அனைத்துக் காரியங்களுக்கும் அவரை நாம் சார்ந்து செல்லும்போது சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்தப்படுவோம்.

‘உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும் பண்ணுவேன்’ (எசே 36 : 27).

பிதாவானவர்: பரிசுத்த ஆவியானவரை நம்மில் எப்போதும் வாசம் பண்ணுகிறவராக நமக்குக் கொடுத்திருக்கிறார்.

நீ ஒவ்வொரு காரியத்திலும் அவரை நோக்கிப் பார். அப்பொழுது நீ எல்லாவற்றிலும் தெளிவாய் வழிநடத்தப்படுவாய். இந்தப் பொல்லாத உலகில் நாம் இவ்விதமான தேவ ஒத்தாசையில்லாமல் கைவிடப்படவில்லை. சோர்ந்து போயிருந்த சீஷர்களுக்கு இது எவ்வளவு பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கும்?

மேலும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது, பரிசுத்த ஆவியானவர் தேவனின் வார்த்தையான சத்தியத்தின் அடிப்படையில் நம்மோடு பேசும், அவர் சத்தத்தை நாம் கேட்கமுடியும்! உன் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரோடு அவ்விதமான ஐக்கியமும் உறவும் உனக்கு இருக்கிறதா? ‘உலகம் அந்த சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப்பெற்றுக் கொள்ளமாட்டாது;

அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால் நீங்கள் அவரை அறிவீர்கள்.’ (யோவான் 14 : 17).  

Post a Comment

0 Comments