இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

2.விலக வேண்டியவைகள் - ஆவிக்குரிய விழிப்பு


2.விலக

வேண்டியவைகள்


பிசாசானவனின் மறைமுக கண்ணிகளுக்கும் கட்டு

களுக்கும் சிக்கிக்கொள்ளாமல் நமது விலையேறப்பெற்ற ஆத்துமாவைக் கவனமாய் காத்துக்கொள்ள வேண்டுமெனில், வேதத்தில் சொல்லப் பட்டுள்ள விலக வேண்டிய காரியங்களை அறிந்து அவைகளை விட்டு விலயிருக்க வேண்டியது மிகவும் அவசியம். உலக அசுத்தங்களையும், அருவருப்புகளையும், இச்சைகளையும் விட்டு விலகும்போதுதான், பரிசுத்தத்தையும் தேவனோடுள்ள மேலான ஐக்கியத்தையும் காத்துக் கொள்ள முடியும். இவற்றில் மிக முக்கியமானது உலகத்துக்கு ஒத்த வேஷம் தரியாமலும் (ரோம 12:2) மனிதருக்குப் பிரியமாய் வாழாமலும் இருப்பதாகும் (கலா 1:10)


வேதாகம முன்மாதிரிகளான யோசேப்பு, தானியேல் போன்ற பரிசுத்தவான்கள் தங்கள் வாலிப வயதில் விலக வேண்டியவைகளை விட்டு விலகியதால் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட நன்மைகளையும் சிம்சோன் தன் வாலிப வயதில் விலக வேண்டியவைகளை விட்டு விலகாததால் அவனது வாழ்வில் ஏற்பட்ட நஷ்டங்களையும், அடைந்த தோல்வியையும் குறித்து பரிசுத்த வேதத்தில் பார்க்க முடியும். ஆகவே மாறுபாடான சந்ததியை விட்டு விலகி நம்மைக் காத்துக் கொள்ள (அப் 2:40 வேண்டியது மிகவும் அவசியமாயிருக்கிறது




விலக வேண்டியவைகள்


ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென் றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குக் தன் உதடுகளை விலக்கிக்காத்து, பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப்


பின்தொடாக்கடவன்... (1பேது 3:10,11)


தீதான காரியங்களுக்கு விலக வேண்டும் (உபா 23:9)


அந்நிய ஜாதியாரின் அருவருப்புகளுக்கு... (எஸ்றா 9:1)


தீமையை விட்டு... (சங் 34:14)


- தீயோருடைய வழியை விட்டு.. (நீதி 4:14.15)


மூடனுடைய முகத்தை விட்டு.. (நீதி 14:7)


துன்மார்க்கத்தை விட்டு.. (எசே 18:27)


மாறுபாடான சந்ததியைவிட்டு... (அப் 2:40)


அசுசியானவைகளை விட்டு... (அப் 15:20)


- வேசித்தனத்தை விட்டு .... (அப் 15:20; 1கொரி 6:18)


- விக்கிரகாராதனையை விட்டு.. (1கொரி 10:14)


வேசிமார்க்கத்தை விட்டு.. (1தெச 4:3)


சீர்கேடான வீண்பேச்சை விட்டு... (2தீமோ 2:16)


கட்டுக்கதைகளை விட்டு.. (1தீமோ 4:7)


சாத்தானைப் பின்பற்றுவதை விட்டு... (1 தீமோ 5:15)


பாலியத்துக்குரிய இச்சைகளை விட்டு.. (2தீமோ 2:22)


தர்க்கங்களை விட்டு.. (2தீமோ 2:23)


மாம்ச இச்சைகளை விட்டு.. (1பேது 2:11)


விக்கிரகங்களை விட்டு... (1யோவா 5:21)


பாவங்களை விட்டு.. (2இரா 15:18)


பொல்லாப்பு/கபடத்தை விட்டு.. (1பேது 3:10)




வாக்குவாதங்களை விட்டு... (தீத் 3:9)


அநியாயத்தை விட்டு.. (2தீமோ 2:19)


. பொய்யான கொள்கையின் விபரீதத்தை விட்டு.. (1தீமோ 6:20)


கெட்ட சிந்தையுள்ளவர்களை விட்டு... (1 தீமோ 6:5)


- சத்தியமில்லாதவர்களை விட்டு.. (1தீமோ 6:5)


ஒழுங்கற்று திரிகிறவர்களை விட்டு.... (2தெச 3:6)


பொல்லாங்காய்த் தோன்றுபவைகளை விட்டு.. (1தெச 5:22)


பிரிவினை உண்டாக்குவோரை விட்டு.. (ரோ 16:17)


இடறல் உண்டாக்குகிறவர்களை விட்டு... (ரோ 16:17)


மாறுபாடான எண்ணத்தை விட்டு... (ஓசி 11:7)


பொல்லாத வழியை விட்டு... (யோனா 3:8)


கைகளின் கொடுமையை விட்டு.. (யோனா 3:8)


- தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களை விட்டு விலக வேண்டும் (1தீமோ 6:5)


தேவபக்தியின் வேஷம் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களை விட்டு விலக வேண்டும் (2தீமோ 3:5)


விலகக் கூடாதவைகள்


பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியில் பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்? (எபி 12:25)


கர்த்தர் விதித்த வழியை விட்டு விலகக் கூடாது (யாத் 32:8)


கர்த்தருடைய சந்நிதியை விட்டு... (ஆதி 3:8)


கர்த்தர் விதித்த வார்த்தைகளை விட்டு... (உபா 28:13)


கர்த்தரை விட்டு.. (உபா 28:20)


கர்த்தரின் கற்பனைகளை விட்டு.. (நியா 2:17)




உத்தமத்தை விட்டு... (யோபு 31:6,7)


கர்த்தருடைய பிரமாணங்களை விட்டு.. (2சாமு 22:23)


கர்த்தர் கட்டளையிட்டவைகளை விட்டு.. (1இரா 15:5)


வேதத்தை விட்டு.. (சங் 89:30; 119:51)


நியாயத்தை விட்டு.. (ஏசா 58:2)


நீதியை விட்டு.. .(எசே 18:24)


கர்த்தரின் முகத்தை விட்டு... (ஓசி 11:2)


கர்த்தரின் கட்டளைகளை விட்டு... (மல் 3:7)


விசுவாசத்தை விட்டு.. (1தீமோ 4:1)


சத்தியத்தை விட்டு.. (2தீமோ 2:18)


பரத்திலிருந்து பேசுகிறவரை விட்டு... (எபி 12:25)


உறுதியிலிருந்து.. (2பேது 3:17)


புத்தி/ஞானத்தை விட்டு...( நீதி 8:31)


கிருபை/சத்தியத்தை விட்டு.. (நீதி 3:3)


செம்மையான வழியை விட்டு.. (2நாளா 20:32)


பரிசுத்த கற்பனையை விட்டு.. (2பேது 2:21)


ஜீவனுள்ள தேவனை விட்டு.. (எபி 3:12)


கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று... (2கொரி 11:3)


சபை கூடிவருதலை விட்டு (எபி 10:25)


நாம் கேட்டவைகளை விட்டு.. (எபி 2:1).


Post a Comment

0 Comments