இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

ஆழமான ஜெப வாழ்க்கை




  ஆழமான ஜெப வாழ்க்கை

ஜெபம் என்பது மனிதன் தேவனோடும் தேவன் மனிதனோடும் பேசுவது தான் ஜெபம்
இதில் எப்படி ஒரு ஆழமான ஜெப வாழ்க்கைக்குள் போக முடியும்?
யார் நான்
கூட்டிச் செல்வது?
பார்க்கலாம்.

பரிசுத்த ஆவியானவருக்கு விட்டுக்கொடுத்தல்.
(ரோமர் 8.26)ல் ஆவியானவர் நம் பெலவீனங்களில் உதவி செய்கிறார். நமக்காக வேண்டுதல் செய்கிறார் . பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்கு கொடுக்கும்போது அவர் நம்மை நடத்துவார். அவர் நடத்துதல் வித்தியாசமாக இருக்கும். நாம் இதுவரை அப்படி ஜெபித்த இருக்க மாட்டோம். அது ஒரு வித்யாசமான அனுபவமாக இருக்கும். அவரே நம்மை நடத்துவார்.ஆனால் பெரும்பாலும் நாம் செய்கின்ற தவறு நமக்கு தெரிந்த காரியத்திற்கு மாத்திரம் ஜெபித்துவிட்டு ஜெபத்தை நிறுத்தி விடுகிறோம். ஏதோ இன்றைக்கு ஜெபிக்க வேண்டும் என்பது போல. பரிசுத்த ஆவியானவருக்கு விட்டுக் கொடுக்கும் போது மகிழ்ச்சி ஒரு பேரின்பம் நமக்குள் வந்து விடும். அவரே நம்மை வழி நடத்துவார் ஜெபத்தை விட்டு வெளியேற முடியாது.

    2. கர்த்தருடைய சமூகத்தில் காத்திருத்தல்( தரித்திருித்தல்)
நாம் பெரும்பாலும் கர்த்தருடைய சமுகத்தில் நேரத்தை செலவழிப்பது இல்லை ஒரு மணி நேரம் கூட செலவழிப்பதில்லை. மோசேவைப் பாருங்கள் கர்த்தர் நான் உண்மையோடு பேச வேண்டும் என்று சொன்னபோது சீனாய் மலையில் ஏறி கர்த்தர் பேசும் வரை காத்திருந்தார். ஏழாம் நாளில் கர்த்தர் மோசேயோடு பேசினார்.(யாத்திராகமம்24.16) அது மாத்திரமல்ல 40 நாள் இரவும் பகலும் கர்த்தரோடு பேசினார் . அது மாத்திரமல்ல அவருடைய சாயலயும் கண்டார். மோசே இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தும் தலைவனாயிருந்தும் கர்த்தரோடு நேரம் செலவழிப்பதையே பெரிய பாக்கியமாக எண்ணினார்.   


3. ரகசியத்தை வெளிப்படுத்துவார்
 (தரிசனம்,எதிர்கால நிகழ்வுகள்)
கர்த்தர் யாருக்கு ரகசியத்தை ஏற்படுத்துவார் தாம் நம்புகிற தம்மோடு நேரத்தை செலவிடுகிற பிள்ளைகளுக்கு மட்டும் தான் வெளிப்படுத்துவார். இதுவும் ஜெப வாழ்க்கையின் ஒரு படிநிலை. உதாரணமாக தானியேலின் வாழ்க்கையை பாருங்கள். பாபிலோனில் அவர் இருந்ததும் கர்த்தரோடு நேரம் செலவழிப்பதில் எந்த வகையிலும் சோர்ந்து போகவில்லை. பாவம் நிறைந்த பாபிலோனில் ஜெபத்தில் உறுதியாக இருந்தார். ஜெபிக்க கூடாது என்று இராஜா கட்டளையிட்ட போதும்(தானியேல் 6.8,9) தான் முன்பு செய்து வந்த படியே ஜெபம் பண்ணினார். கட்டளைக்கு பயப்படவில்லை. ஜெபத்தில் உறுதியாய் நின்றதினால் கர்த்தர் அநேக தரிசனங்களையும் எதிர்காலத்தில் நடக்கப்போகின்ற சம்பவங்களையும் பெரிய ரகசியங்களை வெளிப்படுத்தினார். நாம் ஜெபத்தின் ஆழத்திற்குள் போகப்போக தேவன் தம்முடைய ரகசியத்தை வெளிப்படுத்துவார்.

4.தேகத்தை விட்டு பிரிந்து செல்லுதல்
தேகத்தை விட்டு பிரிந்து செல்லுதல் என்றால் நம் ஜெபத்தில் கூட நம்மால் தேகத்தை விட்டு பிரிந்து போக முடியும்.உதாரணமாக எசேக்கியேல் தீர்க்கதரிசியை பாருங்கள்(எசேக்கியேல் 8ம்அதிகாரம்) இந்த அதிகாரத்தில் தெளிவாய் எழுதப்பட்டிருக்கும் கர்த்தருடைய கரம் அவர்மேல் அமர்ந்தபோது ஆவியானவர் அவரை வானத்துக்கும் பூமிக்கும் நடுவாக கொண்டுபோய் எருசலேம் ஆலயத்தில் மறைவில் நடக்கும் அருவருப்புகளை காண்பித்து தாம் செய்யப்போகிறதை காண்பித்தார். நாம் ஜெபத்தின் ஆழத்திற்குள் போகப்போக தேசத்தில் மறைவிலே நடக்கிற காரியங்களையும் பிசாசின் கிளைகளையும் அசுத்த ஆவிகளின் கிரியைகளையும் வெளிப்படுத்தி அவைகளைக் கட்டி அந்த காரியங்களுக்கு ஜெபிக்க வைப்பார். அது மட்டுமல்ல நாம் அறியாத காரியங்களை நமக்கு வெளிப்படுத்தி காண்பிப்பார்.

ஆழமான ஜெபத்திற்குள் போக பரிசுத்த ஆவியானவர் மாத்திரமே உதவ முடியும். கர்த்தருடைய சமூகத்தில் நேரத்தை அதிகமாக செலவிடுவோம் ஆவிக்குரிய வாழ்க்கையின் அவங்களையும் ரகசியங்களையும் அறிந்து கொள்வோம். தேவனை கண்டடைவோம்.

Post a Comment

0 Comments