இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

யாத்திராகமம்....... Exodus

யாத்திராகமம்

புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டை சார்ந்து இருப்பது போல யாத்திராகமம் ஆதியாகமத்தை சேர்ந்து அதனை பின்பற்றி தொடர்புடைய செய்திகளை கூறுகிறது. யாத்திராகமம் இறைவன் மனிதனை காப்பதற்கு செயலாற்றும் எழுச்சிமிகு வீர காவியமாக விளங்குகிறது . இந்த நூலில் உன்னதமான இறைவனின் மீட்பின் பணியை கூறுகிறது.

யாத்திராகமம் பழைய ஏற்பாட்டில் இரட்சிப்பின் மேன்மையை கூறுகிற முன் நூலாக இருக்கிறது. இந்த நூலில் இருளும் துக்கமும் நிறைந்த நிலையில் தொடங்குகிறது இருந்தாலும் மகிமையில் முடிகிறது. இந்த நிலையில் இறைவன் அடிமையாக்கிய தம் மக்களை தம் அன்பினால் மீட்பதற்கு எவ்வாறு இறங்கி வந்தார் என்று தொடங்கி விடுதலையாக்கப்பட்டு மக்கள் மத்தியில் அவர் எவ்வாறு மகிமையடைய இறங்கி வந்தார் என்று கூறி முடிகிறது.

யாத்திராகமம் என்பது பயணத்தைப் பற்றி கூறுகிற ஒரு நூலாகும். யாத்திராகமம்(Exodus) என்ற கிரேக்கச் சொல்லுக்கு “ வெளி வழி”(Way Out ) என்று பொருள் ஆதியாகமம் இல்லாமல் யாத்திராகமம் என்ற நூலுக்கு பொருளில்லை ஆதியாகமத்தை தொடர்ந்து செய்தியை யாத்திராகமம் கூறுகிறது பழைய ஏற்பாட்டு மற்றும் நூல்களும் தொடர்ந்து செய்திகளாகவே கூறுகின்றன. திருமறையின் ஒவ்வொரு எழுத்தாளரும் தன் சொந்த கருத்தை கூறாமல் ஒரு பெரிய தொடர்ந்த நாடகத்தின் தம் பகுதியை மட்டும் கூறியுள்ளனர். மோசேயினுடைய ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஆகிய ஐந்து நூல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பான வலிமையான கருத்துகளையே கூறுகின்றன.

இந்த நூலில் முக்கிய பாத்திரங்கள்.

மோசே, அவன் சகோதரன் , சகோதரி மிரியாம், எகிப்தின் அரசன் பார்வோன்.

முக்கிய நிகழ்ச்சிகள்

குழந்தை மோசேயை காத்தது(அதி 2).
மோசே தம் மக்களுக்கு தலைவராக அழைத்தது(அதி 3).
10 வாதைகள் (அதி 7-12).
முதலாவது கடந்து போதல் (அதி 12).
செங்கடலைக் கடந்தது (அதி 14).
பத்து கட்டளைகளை கொடுத்தது (அதி 20).
இஸ்ரேலை ஒரு நாடாக உண்டாக்குவதற்கு காட்டுதல் அவர்கள் அவர் சொல்லை ஏற்றல். (அதி 23,24).
பெண் கன்று குட்டியின் வரலாறு (அதி 32).
இறைவனுக்கு சிறப்பான கூடாரம் அமைத்தல் (அதி 36).

இந்த நூலை எழுதியவர் மோசே (யாத் 17:14,24:3-7,34,27,28) என்று இச்சான்றுகளால்  அறியலாம். நேரில் கண்டாக நிகழ்ச்சிகளை தெளிவாக விளக்குகிறார். இன்னும் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கப்பட்டதா எச்சரிக்கைக்காக அவர்களால் இது பார்வைக்கு வைக்கப்பட்டது.

இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்தில் சுற்றித் திரிந்தது (கி.மு.1440 முதல் 1400 வரை) எழுதப்பட்டது. யாக்கோபு எகிப்துக்கு போனது முதல் மோசே சீனாய் மலையில் பத்து கட்டளைகளை பற்றி இதுவரை 215 ஆண்டுகள். ஆபிரகாம் கடவுள் வார்த்தையை பெற்று புறப்பட்டது முதல் இஸ்ரவேலுக்கு போனது வரை 215 ஆண்டுகளுக்கு   மேலாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

யாத்திராகமம் செய்தி சுருக்கம்

1. வரலாற்றுப் பகுதி (அதி 1-18).
2. கட்டளை பகுதி ( அதி 19-40).

அதிகாரங்கள் 40 இஸ்ரயேல் மக்கள் வனாந்தரத்திலே அலைந்து திரிந்த ஆண்டுகள் 40.

அ. அடிமைத்தனத்தில் இஸ்ரவேலர் (அதி 1:1-22).
ஆ. இஸ்ரவேலர் மீட்கப்படுதல் ( 2-14).
  விடுதலை வேண்டி எழுப்புதலும் மறுப்பும் மோசே மீதியான் செல்லுதல் (2:1-25).
 மோசே இஸ்ரவேல் அவரை மீட்க அழைத்தும் தயக்கமும் (3:1-22).
 மோசே இரண்டு தடைகளை கூறுதல் கர்த்தர்  அதற்கு பதிலளித்தல் . மோசே எகிப்து செல்லுதல் .(4:1-31).
  இஸ்ரவேலர் செல்வதற்கு பார்வோன் மறுத்துக் கூறுதல். அதிகமான பாரத்தை அவர்கள் மேல் சுமத்துதல். (5:1-23).
  கர்த்தர் தன் வாக்குறுதியை புதுப்பித்தல் .மோசேயின் குடும்பம். (6:1-30).
  பார்வோனுக்கு  பல அடையாளங்களை காட்டுதல் இஸ்ரவேலரை அனுப்புவதற்கு மறுத்தல் முதல் வாதை ரத்தம் வருதல் (7:1-25).
  எகிப்தின் மீது மூன்று வதைகள். (8:1-32).
 மேலும் மூன்று வாதைகள்.(9:1-35).
 மேலும் இரண்டு வாதைகள் (10:1-29).
கடைசி வாதையை முன்னறிவித்தல் (11:1-10).
முதற்பிறப்பு மரணம் பஸ்கா வாசல் நிலை கால்களில் ரத்தம் தெளித்தல் (12:1-51).
முதற் பிறப்பை கர்த்தருக்காக பிரித்து வைத்தல் இறைவனின் தூய பாதுகாப்புடன் பயணம் தொடங்கல். (13:1-22).
இஸ்ரவேலர் செங்கடலை கடத்தல் எகிப்தியரின் சேனை அழிக்கப்படுதல்  (14:1-31).

இ. சீனாய் மலைக்கு பயணம் (அதி 15-18)
மோசேயின் பாடல் மாராவின் கசப்பான தண்ணீர் இனிமையாக மாறுதல் (15:1-27).
மன்னாவினாலும்,காடையினாலும், பசித்தவர்களை திருப்தியாக்குதல் (16:1-36).
கண் மலையில் இருந்து தண்ணீர் அமலேக்கியரை வெல்லுதல்(17:1-16).
மோசேயின் மாமனார் எத்திரோ ஆலோசனை கூறுதல் (18:1-27).
சீனாய் மலையில் 10 கட்டளைகள் கொடுக்கப்படுதல் (19-24).
கட்டளைகள் கொடுக்கப்படுதல் மக்கள் ஏற்றுக் கொள்ளுதல் (19:1-25).
பத்து கட்டளைகள் சட்டத்தின் மூன்று பிரிவுகள். (20:1-20).
நியாயத்தீர்ப்புகள் சமூக ஒழுங்கு. (20:21-23).
நியாயத்தீர்ப்புகள் தலைவனுக்கும் அடிமைக்கும் உள்ள தொடர்புகள் குற்றங்கள் தண்டனை காயங்கள் பொறுப்புகள் ஈடுசெய்தல் சொத்துரிமை திருட்டுக்கு தண்டனை தொகை பலவிதமான சட்டங்கள் (அதி 21-24).
கூடாரமும் ஆசாரியத்துவம் (25-40).
கூடாரம் அமைப்பதில் அறிவுரை கூறுதல் அதனுடைய அளவு . மக்கள் கர்த்தரை சந்தித்தல் அதற்குரிய சோதனை பொருள்கள் ஒழுங்குகள் (அதி 25-27).
ஆசாரியனைப் பற்றிய வழிமுறைகள் உடல்கள் ஒப்படைப்பு பலியின் காணிக்கை முறைகள் முதலியன.(அதி 28-29).
கூடாரத்தை பற்றிய விரிவான விளக்கம் (அதி 30,31).
இடையில் மக்கள்  பொன் கன்றுக்குட்டியை வழிபடுதல் மோசே அவர்களுக்காகப் பரிந்து பேசுதல். (அதி 32-34).
முன் அறிவித்த  திட்டத்தின்படி கூடாரம் கட்டுதல்(35-40).

Post a Comment

0 Comments