இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

சோம்பலின் ஆவி.... THE SPIRIT OF LAZINESS

சோம்பலின் ஆவி

ஒருவிசை சாத்தான் கிறிஸ்தவர்களை அழிப்பது எப்படி என்று கலந்து ஆலோசிக்க பிசாசுகளைக் கூட்டி மாநாடு நடத்தியதாம். ஒரு பிசாசு கிறிஸ்தவர்கள் மேல் போதை, மதுவை  ஏவி அவர்களைக் கொல்லலாம் என்றதாம். மற்றொரு பிசாசு கிறிஸ்தவர்களை இச்சை, விபச்சாரம் செய்ய வைத்து அவர்களைக் கொல்லலாம் என்றதாம். இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆலோசனை கூறினதாம். கடைசியாக ஒரு பிசாசு எழும்பி "மனிதனை சோம்பலுள்ளவனாக மாற்றி ஆத்தும இரட்சிப்பைக் குறித்து கவலையற்ற நிர்விசாரமாக்கி இன்னும் காலம் இருக்கிறது. பிறகு மனந்திரும்பலாம் என்று சொல்வேன்" என்றதாம். அப்பொழுது சாத்தான் வெற்றி முரசு கொட்டி அந்த பிசாசை பாராட்டிய அகமகிழ்ந்ததாம். ஆம் சோம்பல் கொடியது. சோம்பல் உள்ளவன் சொல்வதெல்லாம் பிறகு பார்க்கலாம். பிறகு செய்யலாம் என்பான், சோம்பல் உடனடிக் கீழ்ப்படிதலை தவிர்க்கும். சாக்குப்போக்கு சொல்வதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான்.

சோம்பேறியே எறும்பிடம் போய் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சாலமோன் கூறுகிறார். பிறந்தது முதல் இறப்பது வரை தூங்காத உயிரினம் அது. நீதி 6:7ல் அதற்கு எந்த அதிகாரியும் இல்லாதிருந்தும் கூட தன் கடமையில் கண்ணாயிருக்கும் என்று வாசிக்கிறோம். எறும்பு சிறிய உயிரினம் தான். ஆனால் கற்றுக்கொடுக்கும் பாடம் பெரிதல்லவா. நாம் அசதியாயிராமல் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்ற வேதம் அறிவுறுத்துகிறது. சோம்பலின் காரணமாக ஆத்துமாக்கள் பாதாளத்தை நோக்கி அல்லவா சென்று கொண்டிருக்கிறது. சோம்பலைக் கைவிட்டு சொந்த ஆத்துமாவைக் காப்பாற்றுவோம். சுறுசுறுப்பாய் இயங்கி பாதாளம் செல்லும் ஆத்துமாக்களையும் ஆதாயம் பண்ண தேவ கிருபையைத் தேடுவோமா!

சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது. நீதி 13.14

   

Post a Comment

0 Comments