இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

நீ வேறுப்படவனாக இருக்கவேண்டும்....You Must be Different

நீ வேறுபட்டவனாக இருக்கவேண்டும்.

உலகப் பிரசித்திப்பெற்றவர்களுள் ஒருவர் அபிரகாம் லிங்கன், அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே மிகச் சிறந்தவர்களில் இவர் ஒருவர். இவர் இளவயதிலேயே தன் தாயை இழந்தவர். அவர் தாய் மரிக்கும் தருவாயில் ஆபிரகாம் லிங்கனை தன் அருகில் அழைத்து ''நீ வேறுபட்டவனாக இருக்கவேண்டும்" என்று கூறி மரித்துப் போனார். இந்த ஒரு வார்த்தையை தன் இருதயத்தில் என்றும் வைத்து ஒரு வேறுபட்ட மனிதனாக தன் இளமை வயதிலும், எந்த உத்தியோகத்திலும், ஏன் அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே ஒரு மனிதனாக வாழ்ந்து காட்டினார்.

கிறிஸ்தவ ஜீவியம் என்பதும் ஒரு வேறுப்பட்ட வாழ்க்கையாகும். அது மேலான நோக்கமுடையது. அது சாதாரண வாழ்க்கையன்று. அசாதாரண, வேறுபட்ட வித்தியாசமான, சிறந்த வாழ்க்கையாகும்.

இயேசுகிறிஸ்துவும் மலைப்பிரசங்கத்தில் மக்களுக்கு ஆலோசனைகளை கூறும் போது, நீங்கள் விசேஷித்தவர்களா? நீங்கள் விசேஷித்துச் செய்கிறதென்ன? என்ற வினாக்களை எழுப்புகிறார். ஆம் சகோதர, சகோதரிகளே புறஜாதிகளை விட கிறிஸ்தவ மக்களிடம் விசேஷித்தவைகளை உலகம் எதிர்பார்க்கிறது. ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்களே
என்று இயேசு குறிப்பிடும் போது உன் செயல்கள் அவர்களைவிட ஒருபடியாவது உயர்ந்து இருக்கவேண்டு மென்றுதான் வலியுறுத்துகிறார். எவைகளில் விசேஷித்து இருக்கமுடியும்?

1) சத்துருக்களை சிநேகிப்பதில்
2) சபிக்கிறவர்களை ஆசீர்வதிப்பதில்
3) பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்வதில்
4) துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபிப்பதில்
5) தீமையோடு எதிர்த்து நிற்காமலிருப்பதில்

இந்த தியானத்தை வாசிக்கிற அன்பரே, கிறிஸ்துவுக்குள் விசேஷித்தவர்களாயிருங்கள், கிறிஸ்துவின் அன்பைப் பிரதிபலியுங்கள், பரலோகம் உங்களுடையது.

Post a Comment

0 Comments