இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

லேவியராகமம்..... Leviticus

லேவியராகமம்

பெயர்க்காரணம்:
 
         ஆபிரகாமின் பேரன் யாக்கோபு யாக்கோபின் பிள்ளைகள் பன்னிருவர் இப்படி இருவரும் பனிரெண்டு குளங்களுக்கு தந்தையர் ஆகினர். இவர்களில் ஒருவன் லேவி . லேவி குளத்தின் தான் இறை வழிபாட்டிற்கு தேவையான ஆசிரியர்களை ஏற்படுத்த வேண்டும் என்று இறைவன் கட்டளை இட்டார்(எபி 7:11).ஆசாரம்=ஒழுக்கம். ஆசிரியர்களை ஏற்படுத்தியதோடு அவர்கள் தமக்கு செலுத்த வேண்டிய பலி களையும் அவற்றை செலுத்த வேண்டிய முறைகளையும் திட்டங்களையும் இறைவன் அறிவித்தார். லேவியரின் கடமைகளை கூறுகிற இறைவாக்கு ஆதலால் லேவியராகமம் எனப் பெயர் பெற்றது(லேவியர்+ஆகமம்). “ஆசாரியனுடைய ஆசார ஆகமம்” என்று எபிரேயே அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர் .
இறைவன் சீனாய் மாலையில் மோசேயின் மூலமாக தம் மக்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள் அடங்கிய நூலே லேவியராகமம். லேவியின் குலத்தலைவரான ஆசிரியர்கள் இஸ்ரவேல் மக்கள் வழிபாட்டில் முன்னின்று நடத்தினார்கள்.

இந்த இந்நூலின் முக்கிய பாத்திரங்கள்.
ஆரோன், ஆசாரியர்களும்,லேவியர்களும்.
இந்த நூலின் நோக்கம்
லேவியராகமம் ஆசாரியர் அல்லது அவர் போன்றவர்கள் வெளிப்படையான மேலும் அந்தரங்கமான ஒழுங்கு முறைகளைக் கொண்டு சமுதாயத்தை கடவுள் விரும்பும் வழியில் நடத்த வழிகாட்டி போல் விளங்கும் ஒரு சிறந்த நூலாகும். எல்லா செயல்களும் இறைவனின் நடத்துதலினால்  உள்ளன என்பதை லேவியராகமம் தெரிகிறது அதன் போதனைகள் இன்று வாழ்விற்கும் தொழிலில் சிறந்து விளங்குகின்றன நான் தூயராய் இருப்பது போல மக்களின் மத்தியில் இருந்து என்னால் பிரித்தெடுக்கப்பட்ட நீங்களும் தூயராக இருக்க வேண்டும் என்பதும் இஸ்ரவேல் மக்கள் தங்கள் சொந்த மக்களை பழிவாங்கவோ பகைக்கவோ  கூடாது.”உன்னில் நீ அன்புகூர்வதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக”(லேவி 19:18). என்பது இந்த நூலில் இரண்டு கண்களைப் போன்ற முக்கிய நோக்கங்களாகும்.
இந்த முறையில் வலியுறுத்தும் ஐந்து வகையான காணிக்கைகள்(பலிகள்).
1. தகனபலி: வாழ்வை முழுவதுமாக ஒப்படைப்பதற்கான அடையாளம் (அதி 1:1).
2. அவருடன் அல்லது தானிய காணிக்கை: நன்றி  உணர்விற்கு அடையாளம் (அதி 2:1).
3. சமாதான காணிக்கை (பலி): வளமான வாழ்வையும் ஒற்றுமையையும் காட்டும் அடையாளம் (அதி 3:1).
4. தள்ளத் தகாத பாடங்களுக்கான காணிக்கை: பாவம் நீக்குவதற்குரிய அடையாளம் (அதி 4:1-5:13).
5. தனிப்பட்ட மீறுதல்களுக்கான குற்ற காணிக்கை: குற்றம் நீங்க பாவமன்னிப்பை பெற்ற தற்கான அடையாளம் (அதி 5:14-7:38).

இந்த ஐந்து காணிக்கைகளும்(பலிகளும்) வாழ்க்கையை இறைவனிடம் முழுமையாக ஒப்படைப்பதற்கு  அடையாளங்களாக விளங்கின. ஒவ்வொருவரும் படைப்பும் குற்றமற்றதாக விளங்க வேண்டும். இந்த பலிகளை முன்னின்று நடத்தும் ஆசாரியன்  தூய்மையின் பிரதிநிதியாக விளங்க வேண்டும்.
இந்த நூலின் ஆசிரியரும் காலமும்
இந்த நூலை எழுதியவர் மோசே. கர்த்தர் மோசேயை அழைத்தார் என்று குறிப்பிட்டுள்ளது இந்த நூலில் மோசேயின் பெயர் 55 முறை  குறிப்பிடப்பட்டுள்ளது(லேவி 1:1),(மத் 8:4),(லேவி 14),(ரோமர் 10:5),.
லேவியராகமம் இஸ்ரவேல் மக்கள் எகிப்தை விட்டு புறப்பட்ட பின்னர் இரண்டாம் ஆண்டின் முதல் மாதத்தில் கொடுக்கப்பட்டது ஆகவே இந்த நூலின் கிமு 1439 ஆம் ஆண்டு எழுதப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த நூல் எழுத காரணம்
1. இறைவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று காட்டுவதற்காக எழுதப்பட்டது(யாத். 25:12).
2. இறைவன் தம்மை வழிபடுகிற இஸ்ரவேல் மக்கள் தூய்மை உடையவராகக விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்பதை அறிவிப்பதற்காக எழுதப்பட்டது (லேவி 11:45,19:2).
3. லேவியர் வகுப்பைச் சார்ந்த ஆசாரியர்கள் தங்கள் கடமைகளை செய்வதற்கு அறிவுரைகள் அளிப்பதற்காக எழுதப்பட்டது.(11:2).
4. வருகிற மீட்பர் அவருடைய பணி நிறைவேறுவதற்காக தீர்க்கதரிசன நிகழ்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காக எழுதப்பட்டது(எபி 10:1).

லேவியராகமம் செய்தி சுருக்கம்

அ. ஒரே தூய்மையான இறைவனை நெருங்குவதற்கு சரியான வழி.(அதி 1-10).
பலிகளின் மூலமாக (அதி 1-7).
இஸ்ரவேல் மக்களால் உண்டாக்கப்பட்ட ஐந்து வித்தியாசமான பலிகளைப் பற்றி விளக்கமான அறிக்கை இப்பகுதியில் கூறப்படுகிறது. இந்த பலிகள் கிறிஸ்துவின் மாதிரிகளாக விளங்குகின்றன கிறிஸ்து நிறைவேற்றின தொடர்பாக நமக்கு அவை விளங்குகின்றன.

இனிய சுவையுள்ள பலி

தகனபலி ( 1:1-17).
உணவு பலி ரத்தம் இல்லாத பலி தானியம் எண்ணெய் முதலானவை (2:1-16).
சமாதான பலி (3:1-17).

இனிய சுவை இல்லாத பலி

பாவ பலி (4:1-35).
குற்ற பலி (5:1-19).

பலிகளைப் பற்றிய சட்டங்கள் ஆசாரியர் ஒவ்வொரு பலியையும் எவ்வாறு செலுத்த வேண்டும் என்பதைப் பற்றிய மேலும் அறிவுரைகள் (6,7).

ஆசாரிய தன்மை மூலமாக(8-10).
ஆசார்யனின் இறை ஒப்படைப்பு(8:1-36);(யாத் 28,29).
ஆசாரியர்களின் பணியின் தொடக்கம் (9:1-24).
நாதாபும் அபியூவும் தகாத முறையில் பலி செலுத்தியதால் இறைவனால் தண்டனை பெறுதல் .(10:1-20).
இறைவனின் மக்கள் தூய்மையாக விளங்க வேண்டும்( 11-24).
அவர்களின் உணவு (11:1-47).
தாயின் தூய்மைக்கு ஏதுவான சடங்குகள் (12:1-8).
தொழுநோயாளிகளின் சுத்திகரிப்பு (13:1-14).
தொழு நோயாளி சுத்திகரிக்கப்பட்டாரா இல்லையா என்பதை பரிசோதித்தல் தொழுநோயாளி என்று எவ்வாறு கண்டுபிடிப்பது (13:1-59).
தொழு நோயாளி தன் சுத்திகரிப்பின் நாளுக்கான சட்டம் (14:1-57).

தனிப்பட்ட வாழ்வில் சுத்திகரிப்பதற்கான பல்வேறு சட்டங்கள் (15:1-33).

ஓராண்டு முடிவிற்கான தேசிய சுத்திகரிப்பு ஈடு செய்யும் நாள். (16:1-34).

அவர்களின் வழிபடும் இடம் அவர்களின் சமாதானத்துக்கு தடை சட்டத்தை உண்ணக் கூடாது (17:1-16).

ஒருவரோடு ஒருவர் தூய்மையாக இருப்பதற்கு மக்களின் உறவு முறை (18:1-20)

ஆசாரியர்களுக்காக ஒழுங்குமுறைகள் ஆசாரியர்களின் பழியில்லாத காணிக்கை (21:1-22).

ஆ. வழிபாட்டிற்காக சிறப்பான ஏழு காலங்கள் (23:1-44).

1.பஸ்கா: முதலாம் மாதம் பதினான்காம் நாள் (ஏப்ரல்) சிலுவையைப் பற்றி பேசுதல்
2. புளிப்பில்லாத அப்பம்: முதலாம் மாதம் பதினைந்தாம் நாள் முதல் 25ஆம் நாள் வரை. மனம் மாறுதலுக்கு பிறகு தூய வாழ்வை பற்றி பேசுதல்.
3.முதற்பலன்: கோதுமை அறுவடை தொடக்கம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மாதிரி.
4.முழு ஓய்வு :(காத்திருத்தல்) முதற் பலனுக்கு பிறகு ஐம்பதாவது நாள் பெந்தகோஸ்தே  திருச்சபையின் தொடக்கம் பற்றி பேசுதல்.
5. எக்காளங்கள்: ஏழாம் மாதம் முதல் நாள்( அக்டோபர் மாதம்) ஆண்டவர் வருகையின் முன்மாதிரி இஸ்ரவேலரை மீண்டும் கூட்டுச் சேருதல்.
6. ஈடுசெய்யும் நாள்: ஏழாம் மாதம் பத்தாம் நாள்(அதி 16). இஸ்ரவேலர் ஈடுசெய்யும் நாளை குறித்து பேசுதல்.
7. கூடாரம்: ஏழாம் மாதம் 15 முதல் 21 ஆம் நாள் வரை  திரளான ஆசீர்வாதங்கள் . இஸ்ரவேலர் தனிமையான ஓர் இடத்தை ஒதுக்கி வைத்தல் . என்ணை அப்பத்திற்காக அறிவுரை இறைவனை பழித்ததற்காக  தண்டனை.

இ. இறைவன் கொடுக்கும் தேசத்தை பற்றிய சட்டம்.(24:1-23).
ஓய்வும் ஆண்டு ஜுபிலி ஆண்டு. ஏழைகளுக்காக உடன்படிக்கை (25:1-55).
பொதுவான வாக்குறுதியும் எச்சரிக்கையும்(26:1-46).
கடவுளுக்கு உறுதிமொழி (27:1-34).

Post a Comment

0 Comments