இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

தரிசனம் - Spiritual Vision

தரிசனம்


நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசமைாகிக் காண்பிக்கப் போகிறவை களையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்து கிறதற்காக உனக்குத் தரிசனமானேன் (அப் 26:16)


தரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள் (நீதி 29:18). தரிசனமில்லாத இடத்தில் சீர்கேடு அல்லது தேக்கநிலை ஏற்பட்டு மந்தநிலை ஏற்படக்கூடும். ஆகவே, கர்த்தரால் அழைக்கப்பட்டு தெரிந்துகொள்ளப்பட்ட ஒவ்வொருவருக்குள்ளும் தரிசனம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை, ஒவ்வொருவரும் உணர வேண்டும். அவ்விதம் தேவனிடமிருந்து உன்னத தரிசனத்தைப் பெற்று, அந்த தரிசனத்தை அஸ்திபாரமாகக் கொண்டு ஊழியம் செய்கிறவர்கள் மட்டுமே வேகமாக முன்னேறிக்கொண்டு வருகிறதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. உன்னதத்திலிருந்து ஒருவருக்குக் கொடுக்கப்படும் தரிசனம் தனிப்பட்ட நபருடையதல்ல; அது தேவனுடையது என்பதைத் தெளிவாக அறிந்திருத்தல் மிக அவசியம். எனவே அந்த உன்னத தரிசனம் நிறைவேற ஒருவர் தன்னை முற்றும் முழுவதும் அர்ப்பணித்து இறுதிவரை அதற்காக செயல்படுவேன் என்று தீர்மானம் எடுக்கும்போது, கர்த்தர் அவரை மகிமையாய்ப் பயன்படுத்த வல்லவராயிருக்கிறார். தேவன் தமது தரிசனத்தை நிறைவேற்றுவதற்கு அவர்களைக் கையில் எடுத்துக் கருவியாக உபயோகப்படுத்துவார்.



தரிசனம் பிறக்கும் விதம்...


+ தேவனோடு இருக்கும் உன்னத உறவில் பிறப்பது தரிசனம் தேவபாரத்தை விளங்கிக்கொள்ளும்போது வெளிப்படுவது


தேசத்தின் நிலைகளைக் கவனிக்கும்போது கிடைப்பது... தேவையுள்ள மக்களை மனதுருக்கத்தோடு பார்ப்பதால் பெறுவது


சத்துருக்களின் சவால்களைக் கேட்பதன் மூலம் பெறுவது


தேசத்தின் அலங்கோலங்களையும், அவல நிலைகளையும் தேவ சிந்தையோடு பார்க்கும்போது பிறப்பது


சாத்தானின் தந்திரங்களைத் தெளிவாய் அறியும்போது


நோக்கத்தைவிட தரிசனம் பெரியது. தரிசனத்திற்குள் நோக்கமும் இலக்கும் அடங்கியுள்ளது. தேவனின் இதய விருப்பம், எதிர்பார்ப்புகள் வாஞ்சை போன்றவற்றை நமதாக்கிக்கொண்டு ஜெபிக்கும்போது, அது "நம் தரிசனமாக'' மாறுகிறது.














தேசத்தின் மறுரூபத்தில் திருச்சபையின் பங்களிப்பு குறித்ததான சிறந்த தரிசனம் தலைவர்களுக்குள் இருக்க வேண்டியது அவசியம் எப்படியெனில்...


தரிசன ஓட்டத்தில் சபை மற்றும் ஊழியத்தில் ஏற்பட வேண்டி வளர்ச்சி, தரம் மற்றும் சபை மக்களின் மறுரூபம் குறித்த பார்வை


ஊழிய பணித்தளங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த பார்வை


உடன் ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டிய மறுரூப

பணிகள் குறித்த பார்வை


தேசத்தின் மறுரூபத்திற்காக செய்து கொண்டிருக்கிற செய்ய

வேண்டியவைகள் குறித்ததான பார்வை


செய்து முடித்தவைகளைக் குறித்ததான மதிப்பீடு மற்றும் செய்ய வேண்டியவைகளைக் குறித்ததான மதிப்பீடு குறித்த பார்வை


இவ்வாறு தரிசனத்தின் வளர்ச்சியையும், விளைவையும் ஆராய்ந்து நிதானித்து, மேலும் சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியம்.


தரிசனம் பெற்றவர்


நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி...சபைகளுக்கு அனுப்பு என்று விளம்பினது (வெளி |HI)


தேசத்தைப் பார்ப்பவர்


தேசத்தின் நிகழ்வுகளைக் கவனிக்கிறவர் சத்துருவின் கிரியைகளைக் கண்கானிக்கிறவர் ஜனங்களின் நிலையை நிதானிக்கிறவர் திட்டமிட்டபடி செயல்படுகிறவர்


இலக்குகளைத் தீர்மானிக்கிறவர்கவர்கள்


முழங்காலில் முன்னேறுகிறவர்களாயிருப்பர்

(நெகே 1:4)


+ தேவனுக்காகப் பற்றி எரிகிறவர்களாயிருப்பர் (யோவா 5:35) தேவ சித்தம் செய்கிறவர்களாயிருப்பர் (யோவா 4:34)


+ தேவனால் நடத்தப்படுகிறவர்களாயிருப்பர் (ரோம 8:14) + தேவ வார்த்தையைப் பெறுகிறவர்களாயிருப்பர் (1இரா 17:2) + கடினமாய்ப் பிரயாசப்பட அர்ப்பணித்திருப்பர் (1கொரி 11:23) +


உலகத்திற்கு ஒத்துப்போகாதவர்களாயிருப்பர் (ரோம 12:2) தேவனோடு நெருங்கி வாழ்கிறவர்களாயிருப்பர் (யோவா 8:29)


தேவ அன்பால் நெருக்கி ஏவப்படுகிறவர்களாயிருப்பர் (2கொரி 5:14) தேவனை மட்டும் பிரியப்படுத்துகிறவர்களாயிருப்பர் (கலா 1:10)


* தேவவைராக்கியம் பாராட்டுகிறவர்களாயிருப்பர் (எண் 25:11) மன்றாடும் இருதயம் உடையவர்களாயிருப்பர் (சங் 106:23)


தேவனின் இதய பாரத்தைப் புரிந்தவர்களாயிருப்பர் (ஆதி 18:20) தேவ சத்தம் கேட்கும் எல்லைக்குள் வாழ்வர் (1சாமு 3:10)


* தேவதிட்டத்திற்காக வாழ்வை முற்றும் அர்ப்பணித்திருப்பர் (லூக் 1:38) தேவ திட்டத்திற்காகப் பிறரை ஒருங்கிணைப்பர் (நெகே 2:18)



மேலும்...


சிறந்த தரிசனமும், விசேஷித்த செயல்பாடுகளும், துரித அறுவடையும் உடையவர்களாயிருப்பர்


+ தங்கள் வாழ்க்கையில் மற்ற எல்லாவற்றைப் பார்க்கிலும் ஜெபத்தை முக்கியப்படுத்தி முன்னிலைப்படுத்துவர் வாழ்க்கைக்காக ஜெபிக்கிறவர்களாயிராமல், ஜெபம் செய்வதையே தங்கள் வாழ்க்கையாகக் கொண்டிருப்பர்


தரிசனத்திற்காக ஜெபிக்கிறவர்களாயிராமல், ஜெபத்தையே தங்கள் தரிசனமாகக் கொண்டிருப்பர்


தரிசனத்திற்கு முன்னும் பின்னும் ஜெபத்தை அனுப்புவர்; இதையே தனது தலையாய கடமையாய் கொண்டிருப்பர் முன்பாக வைக்கப்பட்டிருக்கிற தேவ திட்டங்களை நிறைவேற்றி +

முடிப்பதற்கு எதிராய் எழும்பும் எந்தத் தடைகளையும் தகர்த்தெறிய

அறிந்திருப்பர்


+ தேவனோடு தனித்திருக்கவும், அவரோடு சமீபித்து கிட்டிச் சேரவும் விரும்பி அனுதினமும் அவரின் இதய பாரத்தை அறிந்துணர்ந்து

செயல்படுகிறவராயிருப்பர்


* தங்களுடைய கனவு, விருப்பம், வாஞ்சை, பாரம், ஆசை, இலக்கு எண்ணம், எல்லாம் தரிசனத்தை நிறைவேற்றுவதாகவே கொண்டிருப்பர்.

















தேவனுக்கு தங்களது வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் முதலிடம்

கொடுத்து அவரைக் கனப்படுத்த அறிந்திருப்பர் எந்த சமயத்திலும், எந்த நிலையிலும் தரிசனத்தையே தங்களது 

கண்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக் கொண்டிருப்பர்


* எந்தவொரு மனிதனையும் பின்பற்றிப் போகாமல், இறுதி மூச்சு வரை தங்களை நம்பி தேவன் தந்த தரிசனத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற வாஞ்சையோடு வாழ்ந்திருப்பர்


தரிசனத்தின் மையத்திலிருந்து தங்களை வழிவிலகச் செய்யும் சாத்தானின் அனைத்து உபாய தந்திரங்களைக் குறித்தும் அறிந்திருப் பதோடு மிகவும் எச்சரிக்கையாயிருப்பர்


தடைகளைக் கண்டு துவளாமல், கடினமாய் உழைத்து, தேவ பலத்தை சார்ந்து, போராடி பிரயாசப்பட்டு தரிசனத்தை நிறைவேற்றி முடிப்பர்.



+ தங்கள் வாழ்வில் நேரிடுகிற ஒவ்வொரு சம்பவங்களும் தீமைக் கேதுவாய் அல்லாமல், நன்மைகேதுவாய் நடக்கிறது என்பதில் அதிக நம்பிக்கையுள்ளவர்களாயிருப்பர்


+ தாங்கள் செயலாற்றும் அனைத்து கிரியைகளுக்கும் பின்னால் தங்களுடனிருந்து செயலாற்றும் சர்வ வல்ல தேவனுடைய பலத்தக் கரத்தைக் காண்கிறவர்களாயிருப்பர்


தங்களுக்கும், தங்கள் தரிசனங்களுக்கும் எதிராய் எழும்புகிறவர்களைக் குறித்து மனம்பதறாமல், நொந்துகொள்ளாமல் அதற்குப் பின்னால் தங்களுக்கு தரிசனம் அளித்த தேவனுடைய தயவுள்ள கரம் தங்களைத் தாங்கி நடத்துவதை காண்கிறவர்களாயிருப்பர்


.தங்களுடைய புயபலத்தை நம்பி சுயமாய் நடக்காமல், முற்றும் முழுதும் கர்த்தருடைய சித்தத்திற்கும் வழிநடத்துதலுக்கும் அர்ப்பணித்து அவரையே சார்ந்து கொள்கிறவர்களாயிருப்பர் தேவன் தங்களை நடத்திக்கொண்டு போகும் கடினமான பாதை


களைக் குறித்து மனமடிவாகாமல் அதைச் சந்தோஷமாகவும் உற்சாக மாகவும் ஏற்றுக்கொள்கிறவர்களாயிருப்பர்


தேவன் தங்களுக்குத் தந்த தரிசனத்தை, தேவன் காட்டும் பாதையில் சென்று, தேவன் விரும்பும் நேரத்தில், தேவனுடைய பார்வைக்கு மிகவும் அருமையானபடி செய்து முடித்து தேவனால் உயர்வையும் மேன்மையையும் அடைகிறவர்களாயிருப்பர்


பிறர் தங்கள்மேல் தவறாய்க் குற்றஞ்சாட்டினாலும் அதை சகித்துக் கொண்டு தரிசனத்தை நோக்கி முன்னேறிச் செல்கிறவர்களாயிருப்பர் * தங்களுக்குத் தீமை செய்தோரை பழவாங்கும் எண்ணத்தைக்

கொண்டிராமல், தீமைக்கு நன்மை செய்கிறவர்களாயிருப்பர்


மனிதராலும், மற்ற எவைகளாலும், எக்காரணத்தைக் கொண்டும் தேவன் தங்களுக்குத் தந்த தரிசனத்தையும், திட்டத்தையும் தடுத்து நிறுத்த முடியாது என்பதில் உறுதியாயிருப்பர்


தேவனிடமிருந்து தரிசனத்தைப் பெற்றவர்கள் என்பதை தங்கள் நற்பண்புகள், நற்செயல்கள் மூலமாக நிரூபித்துக் காட்டுவர்.


தரிசனப் பாதையில் வழிவிலகாமலும், இடறாமலுமிருந்து சரியான பாதையில் பயணித்து வெற்றியடையும்படி முன்னேறி சாதனை படைத்து அநேகருக்கு முன்மாதிரியாயிருப்பர்.



Post a Comment

0 Comments