இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

உபாகமம் ஓர் அறிமுகம் - Deuteronomy is an introduction

 

உபாகமம்


பெயர்க்காரணம்


உபாகமம் மோசேயினால் எழுதப்பட்ட ஐந்தாவது நூலாகும். இஸ்ரவேல் மக்கள் யோர்தான் நதியைக் கடந்து உங்களுக்குக் கொடுப்பேன் என்று உறுதிமொழி கூறப்பட்ட நாட்டை அடையுமுன் மோசே பேசிய இறுதி அருளுரைகள் அடங்கிய நூலே உபாகமம் ஆகும். மேலும் இது மோசேயி னுடைய வாழ்க்கையின் இறுதிக்காட்சியும், முடிவான ஊழியமும் ஆகும். உப+ ஆகமம் - உபாகமம் (Deuteronomy Deuter Second, Nomes Law LLA ar) இரண்டாம் கட்டளை என்று பொருள்படும் உபா. (17:18; முதல் கட்டளை யாத்திராகமத்தில் அருளப்பட்டதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்) 


கூறப்படும் செய்தி 


இந்த நூலில் இறைவன் மக்களுக்கு மோசேயின் மூலமாகக் கொடுக்கப்பட்ட வார்த்தைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூல் கீழ்ப்படிகிறவர்களுக்கு உண்டாகிற ஆசீர்வாதத்தையும், கீழ்ப்படியாதவர்களுக்கு உண்டாகிற சாபத்தையும் கூறுகிறது. இந்நூலில் சட்டப் பகுதியும், வரலாற்றுப் பகுதியும் இணைந்து காணப்படுகின்றன


இறைவன் சொல்வது "நீங்கள் என் மக்கள், நான் உங்கள் இறைவன். நீங்கள் என்னைச் சிநேகிக்கவேண்டும்; என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இல்லையேல் எண்ணில்லாத் துன்பங்களுக்கு ஆளாவீர்கள்.


இஸ்ரவேல் மக்கள் கூறுவது "நாங்கள் உம் மக்கள், நீர் எம் இறைவன், உம்மைச் சிநேகிப்போம். உம் கட்ட களுக்குக் கீழ்ப்படிவோம்" (திருத்திய பதிப்பு முன்னுரை.). 


வனாந்தரத்தில் மோசே


மோவாபின்

அருளுரையின் தொகுப்பே இந்நூலாகும். இந்நூல் மூன்று

பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டது


1. மோசே


இறை மக்களை இறைவன் கூறிய உறுதி மொழியின்படி நாட்டை உரிமையாக்கிக் கொள்ள விரைவுபடுத்துதல். 2. அந்நாட்டை அடைந்த பின்னர் அங்குச் வேண்டுவன யாவை என்பதைப்பற்றிய 3. மோவாபில் இஸ்ரவேலரோடு இறைவன் செய்ய குறிப்பு செய்து கொண்ட உடன்படிக்கையின் பொருளை உணர்த்துதல், உபாகமம் நினைவு கூருதலின் ஒரு நூலாகும். மோசே இறைவன் தங்களுக்குச் செய்தவற்றையெல்லாம் நினைவு படுத்தி, உறு நிமொழியாகக் கூறப்பட்ட நாட்டை அடைந்த பின்னர் மக்கள் இறைவனுக்குப் பணி செய்யுமாறு கட்டளையிடுகிறான் ஆசாரியர்களும், லேவியர்களும், மக்களும்

இதனை நினைவில் கொள்ள வேண்டும் என்கிறான்.


இறைவனிடம் முழு உள்ளத்தோடும், முழு ஆத்துமாவோடும்

முழுப் பலத்தோடும் அன்பு கூறவேண்டும் என்பதே

இந்நூலின் முக்கியப் பொருளாகும் (உபா. 6:5).


உபாகமம் இரண்டு மாத நிகழ்ச்சிகளைத் தன்னகத்தே கொண்ட நூலாகும். அவற்றுள் குறிப்பாக முப்பது நாள்கள் மோசேயின் மரணத்திற்காகத் கொண்டாடியதும் அடங்கும் 


மோசே யோர் தானுக்குச் செல்லும் வழியில் ஒரு மாதத்திற்கு முன் ஏழு நாள்கள் கூறிய ஆலோசனைகளை இந்நூல் கூறுகிறது (உபா. 1:1-3). முதல் ஐந்து நூல்களில் ஐந்நூறுக்கும் அதிகமாகக் கர்த்தர் கூறுகிறார் என்ற சொற்றொடரை நாம் காணமுடிகிறது திருமறையை எழுதிய தூய எழுத்தாளர் யார்? (2 பேதுரு 1:21).


இயேசு பெருமான் விரும்பிய நூல் உபாகமம்


இயேசு பெருமான் தம் சோதனை நேரத்தில் போராடி வெற்றி காணும் கருவியாக உபாகமம் வசனங்களைப் பயன்படுத்தினார். மத் 4:1-11; லூக்கா 4:1-13 இவ்விடங் கனில் உபாகமம் 8:3; 6:16,13; 10:20 ஆகிய வசனங்களைப் பயன்படுத்தினார்


நூலாசிரியர்


இந்நூலை எழுதியவர் மோசே (உபா. 1:1 31:9, 22 24-27). இந்த நூலில் மோசேயின் பெயர் 30 முறை பயன் படுத்தப்பட்டுள்ளது. மோசே தன்மையிடத்தில் பேசுவதை யும் நாம் காண முடிகிறது ( உபா. 1:16,18, 3:21, 29:5), பழைய ஏற்பாட்டில் எழுத்தாளர் கள் உபாகம த்தை மோசே எழுதினார் என்று குறிப்பிட்டுள்ளார்கள். 2 நாளா 25:4 உபா 24:16-ஆம் வசனத்தோடு ஒப்பிடுக. இயேசு பெருமா னும் உபாகமத்தை மோசே எழுதினார் என்று குறிப்பிட் டுள்ளார். மத். 19:7-9, RUT. 24:1-4 ஒப்பிடுக யோவான் 5:45-47, உபா. 18:15 ஒப்பிடுக. லூக்கா 20:28 25:5,6 ஒப்பிடுக. பவுலடியாரும் உபாகமத்தை மோசே எழுதினார் என்று கூறியுள்ளார், ரோமர் 10:19 உபா. 32:29 ஒப்பிடுக


எழுதிய காலம்


இந்நூல் ஏறத்தாழ இரண்டு மாத நிகழ்ச்சிகளைக் கூறுகிறது (உபா. 1:3, 3415,8. யோசுவா 4:19). வனாந் தரத்தில் சுற்றியலைந்த நிகழ்ச்சிகளை இந்நூல் மேலும் விமர்சனம் செய்கிறது. இந்நூல் ஏறத்தாழ கி.மு. 1400-ஆம் ஆண்டு எழுதப்பட்டது எனக் கொள்ளலாம்


உபாகமம் - செய்திச் சுருக்கம் 


 மோசேயின் இறுதியான அருளுரைகள்


நான்கு அருளுரைகள். அவை 1,5,27,29 ஆகிய அதிகாரங் களில் தொடங்குகின்றன (அ தி. 1-30)


முதல் அருளுரை இஸ்ரவேல் மக்கள் ஒரேபிலிருந்து மோவாப் சமவெளி மட்டும் செய்த பயணத்தைப் பற்றிய ஒரு விளக்கம் (அதி. 1:4).



ஒரேபிலிருந்து காதேஷ் மட்டும் (111-46). பயண விளக்கம் அமலேக்கியர் மேல்


காதேசிலிருந்து பாசான் மட்டும் வெற்றி (2:1-37).


பாசான் முதல் பெத்பியோர் மட்டும் ஆஃக்மீது வெற்றி (3:1-29).


சீனாய் மலையில் பெற்ற உடன்படிக்கை யையும்

இறைவன் மீதுள்ள விசுவாசத்தையும் நினைவுபடுத்தி அவற்றைக் கடைபிடிக்குமாறு மக்களை வற்புறுத்துதல்

(4:1-49).


 இரண்டாம் அருளுரை கட்டளையின் வளர்ச்சியும் ஓர் ஆய்வும் (அ தி. 5:26)


பத்துக் கட்டளை மீண்டும் சொல்லப்படுதல். சீனாய் மலையின் அனுபவத்தை மக்களுக்கு நினைவபடுத்துதல் (5:1-33).


இறைவனின் கட்டளைகளை க் கடைப்பிடிக்க மேலும்

எச்சரிக்கை (6:1-25) 


கொடிய கானானியரிடமிருந்து முழுவதும் தனிமைப் படுத்துமாறு கட்டளையிடல் வாக்களிக்கப்பட்டபடி அவர்களை மேற்கொண்டு வெற்றி பெறல் (7:1-26).


பற்பல எச்சரிக்கைகளும், புத்திமதிகளும் (அதி 8:13). 


சட்ட ஆலோசனை இறை மக்கள் தூய்மையான உணவையே உண்ண வேண்டும் (14:1-29)


 விடுதலையின் ஏழாம் ஆண்டு (யாத், அதி. 23) மீண்டும் கூறுதல் (15:1-23)


தேசிய மூன்று பண்டிகைகள் (16:1-22; யாத். 23)


 ஒரு அரசனைப்பற்றிய அறிவுரைகள் (17:1-30) 

 

மோசேயின்  மேசியாவைப்பற்றிய தீர்க்கதரிசனம் (18:1-22)


நகர அகதிகளைப் பற்றிய சட்டம் மீண்டும் கூறப்படுதல் (19:1-31) 


போரைப்பற்றிய அறிவுரைகள் (20:1-20)



பற்பல ஒழுங்கு முறைகள் கொலை செய்ததற்கான அடிமைக்குத் திருமணம். திருத்த முடியாத பிள்ளை களை நடத்தும் வகை போன் றவை (அதி. 21).


விசாரணை (அதி. 21- 25)


மனைவியைத் தள்ளி விடுதல் (அதி. 24). முதற்பலனைக் காணிக்கையாகத் தருதல் (26:1-19)


மூன்றாம் அருளுரை (அதி. 27,28). ஆசீர்வாதங்களும், சாபங்களும், ஏபால் மலையிலும் கெரிசிம் மலையிலும், சீகேம் எங்கே உள்ளதோ அந்தப் பள்ளத்தாக்கின் ஒவ் வொரு பக்கத்திலும் உயர்ந்து நிற்கும் மலைகள் இவை' லேவியர் பள்ளத்தாக்கின் மத்தியில் நின்றார்கள். சில மக்கள் ஒவ்வொரு பக்கத்திலும் மலைகளின் தாழ்வான பகுதிகளில் நின்றார்கள்


4 நான்காம் அருளுரை (அதி. 29,30). உடன்படிக்கை நிலத்தோடு தொடர்புடையதாக உள்ளது. (பலஸ்தீனி யா உடன்படிக்கை .


உடன்படிக்கைக்கு முன்னுரை (29:1-20) 


உடன்படிக்கையாவது மக்கள் இ

கீழ்ப்படியாமல் போவார்களானால் அவர்கள் நிலத்திலிருந்து அது துரத்தப்படுவார்கள் மனம் திரும்புவார்களானால் இழந்ததைப் பெற்றுக் கொள்வார்கள் (30:1-20)


ஆ. அதி. 31 முதல் 34 வரை: மோசேயின் இறுதிக் காட்சி கள். வாழ்க்கையும், ஊழியமும் ( அதி 31-34) நூல் முற்றுப் பெறுதல் (31-1-30) பாடல் பாடப்படுதல் (32:1-51)


ஆசீர்வாதம் கொடுத்தல் (33;1-29). வாழ்வு முடிதல் (34:1-12)


இந்த அதிகாரம் மோசேயினால் எழுதப்படவில்லை முதல் 8 வசனங்களை யோசுவா எழுதினார் என்றும், இறுதி 4 வசனங்களை எஸ்றா எழுதினார் என்றும் சொல்லப்படுகிறது.

Post a Comment

0 Comments