எண்ணாகமம்
பெயர்க்காரணம்
இந்நூல் ஆங்கில மொழி பெயர்ப்பைத் தழுவி (Numbers) எண்ணாகமம் என்ற பெயரினைப் பெற்றது. எபிரெய மொழியில் 'பி மிட்பார்' (Bc midbar) என்பது கிரேக்க மொழியில் 'அரித்மாய்' (Arithmoi) என்று அழைக் கப்பட்டது. இதிலிருந்து இலத்தீன் மொழியில் 'நியூமெரி' (Numeri) என்று மொழிபெயர்க்கப்பட்டது. இந்த இலத்தீன் மொழியிலிருந்து ஆங்கில மொழி பெயர்ப்பின் அடிப்படையில் எண்ணாகமம் என்று அழைக்கப்படுகிறது
இந்நூல் 1,3,26 ஆகிய மூன்று அதிகாரங்களில் தலைமுறை அட்டவணை குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கிரேக்க மொழி பெயர்ப்பாளர் எண்ணாகமம் எனப் பெயரிட்டார் என்று தோன்றுகிறது. ஆனால் எபிரெயத் திருமறை முன்னுரையில் வனாந்தரத்தில் என்று பெயர் காணப்படுகிறது இஸ்ரவேல் மக்கள் சீனாய் மலையில் தங்கியிருந்த காலமுதல், கானான் நாட்டு எல்லையை வனாந்தரத்தில் நெருங்கிய வரை உள்ள சுற்றியலைந்து 40 பயணம் ஆண்டுகள் செய்த வரலாற்றைக் கூறுவதால் இப்பெயர் மிகப்பொருத்தமுடையதாகக் காணப்படுகிறது (எண். 9:1; 15:1,32) கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில், ஆசரிப்புக் கூடாரத்தில் மோசே யோடு பேசினார் (எண். 1:1).
நூலாசிரியர்
எண்ணாகமம் மோசேயினால் எழுதப்பட்ட நான்காம் நூலாகும், மற்ற நான்கு நூல்களின் தொடர்பான கருத்துக்கள் இந்நூலில் உண்டு சொற்பொருள், இனிமை கருத்துத் தொடர்பு, ஒருமைப்பாடு முதலியன இந்நூலில் உள்ளன. நிலையற்று வனாந்தர வாழ்க்கைக்குப் பின் நிலையான எதிர்காலம் உண்டு இந்நூலுள் காணப்படுகிறது. என்ற நம்பிக்கை லேவியராகமத்தின் முடிவில் இஸ்ரவேல் மக்கள் சீனாய் மலையின் அடிவாரத் தில் தங்கியிருந்ததைக் காண்கிறோம். மோசேயின் தலை மையில் வனாந்தரப் பயணம் தொடர்ந்து கானான் எல்லையை நெருங்கியவரையுள்ள செய்தி எண்ணாகமத்தில் காணப்படுகிறது. மோசே மாறியதையும் இந்நூலுள் தலைமை யோசுவாவிடம் காண்கிறோம் இறைவன் கொடுத்த உறுதிமொழியை நம்பாமல் பலமுறை முணு முணுத்த இஸ்ரவேல் மக்களின் அவல நிலையையும் இந் நூலுள் காணுகிறோம். மோசேயோடு தொடர்புடைய பல நிகழ்ச்சிகளை இந் நூலுள் காண்பதால் இந்நூலை மோசே எழுதினார் எனக் கருதலாம். இந்நூல் இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறது (எண் 6:12; 15:2). ஆசாரியன் ஆரோனின் பெயர் குறிப்பிட்டி ருப்பதை நாம் காணலாம் (எண். 8:2).
எழுதிய காலம்
இஸ்ரவேல் மக்கள், வனாந்தரத்தில் சுற்றியலைந்த 38 ஆண்டு மாதங்களின் வரலாற்றை நாம் அறிய முடிகிறது (எண். 1:1; 33:38; 36:13 உபா . 1:3).) இக்கால முடிவில் ஏறத்தாழ கி.மு. 1401-ஆம் ஆண்டு இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது
எழுதியதன் நோக்கம்
இஸ்ரவேல் மக்கள் 40 ஆண்டுகள் சுற்றியலைந்த அவர்களின் அவிசுவாச வரலாற்றை வனாந்தரத்தில் வரலாற்றை இந்நூல் குறிப்பிட்டுள்ளது (எண். 14:32-34). இரண்டு எறைகளின் குடிமதிப்புக் கணக்கெடுப்பை இந்நூல் கூறுகிறது. இருபது வயது முதல் சேனையில் சேரத் தகுந்த யாவரையும் கணக்கெடுக்கும்படி இறைவன் கட்டளையிட்டார். மோசே மக்களை நான்கு பிரிவாகப் பிரித்தார். ஒவ்வொரு பிரிவும் தத்தம் சின்னங்களோடும் கொடிகளோடும் அமைத்து த் தங்க. இந்த தொடர்பு நி ம்ச்சி அடையாளச் கூடாரங்களை வரலாற்றோடு படுத்தப்பட்டுள்ளது (எண், 112,3; 26:2) இதனால் இந்நூலுக்கு எண்ணாகமம் என்ற பெயர் வைத் திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வனாந்தர அனுபவங் களைக் கூறுவதே இந்நூலின் நோக்கமாகும், கீழ்ப்படி பாமைத் தன்மையுடைய மக்களைத் தூய்மையான கடவுள் ஒழுங்கில் கொண்டுவர எழுதப்பட்ட து. எபிரெயர் நூலில் இந்த வனாந்தர அனுபவங்கள் கூறாமல் விடப் பட்டுள்ளமை (எபி. 11:29,30) இந்நூலின் மூலமாகத் தேவையான அநேக பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது. விசுவாச வாழ்க்கைக்கு இந்த மிகுந்த துன்ப மான வனாந்தர அனுபவம் வனாந்தர வாழ்வில் தங்கி உதவுகிறது. அவிசுவாச விடாமல் அதைக் கடந்து விசுவாச வாழ்வை விரும்பி அடியெடுத்து வைக்க இந்த அனுபவம் தேவைப்படுகிறது.
எண்ணாகமம் - செய்திச் சுருக்கம்
அ. இஸ்ரவேல் மக்கள் சீனாய் மலையில் எண்ணப்படு கிறார்கள் பயணத்திற்காக ஆயத்தமானார்கள் புறப்படுவதற்காகத் தங்கியிருந்த இடத்தில் ஆயத்த மா தல் (2:1-34)
(காலம் 20 நாள்கள் எண் 1:1, 10:11; அதி. 1-). பெருந்திரளான மக்களின் கணக்கெடுப்பு (1:1-54).
கிழக்குப் பகுதி யூதா இசக்கார் செபுலோன் (2:1-9).
தெற்குப் பகுதி. ரூபன், சிமியோன், காத் (2:10-16).
மையப்பகுதி, லேவியர் (2:17). மேற்குப் பகுதி எப்பிராயீம், மனாசே, பெஞ்சமின்
(2:18-24).
வடக்குப் பகுதி. தாண், ஆசார், நப்தலி (2:25-34)
லேவியர் கோத்திரம் தூய்மையான ஊழியத்திற்காகத் தெரிந்து கொள்ளப்படுதல் அவர்கள் கடமைகள்
ஒதுக்கப்பட்டன எண்ணிக்கை (3:1.51).
செய்யப்பட்டது
லேவியரின வித்தியாசமான குடும்பங்களின் ஊழியம் தொடர்பான அறிவுரைகள் மேலும் கூறப்படுதல்,(4:1-49).
பாளயத்திலிருந்து தீட்டை
(5:1-31).எவ்வாறு
நீக்குவது
நசரேய விரதம் (6:1-27)
பிரபுக்களின் தன்னார்வக் காணிக்கைகள் (7:1-89).
லேவியரின் சுத்திகரிப்பு (8:1-26)
முதல் பஸ்கா கொண்டாடப்படுதல் (9:1). *. சீனாய் மலைபிலிருந்து காதேஷ் பர்னேயாவரை
(அதி.10-12).
பயணம் தொடங்கப்படுதல் (10:1-36).
மக்கள் எகிப்தின் மாமிசத்தை நினைத்துத் தெபேரா வில் முறையிட்ட போது, கர்த்தர் அவர்களை அடித் தல் கர்த்தரால் கிப்ரோத் அட்டாவாவில் நடுக்கத்தையும் நியாயத்தீர்ப்பையும் அனுப்புதல் (11:1-35)
மிரியாமும், ஆரோனும் மோசேயிக்கு விரோதமாய் முறையிடுதல், மிரியாம் தொழுநோயால் பாதிக்கப் படுதல் (12:1-16)
இ. காதேஷில் பல ஆண்டுகள் சுற்றித் திரிதல். காதேஷ் திரும்புதல், (காலம் 40 நாடகள் பிறகு 38 ஆண்டுகள் எண் 14:34; (அதி. 13-20).
வாக்களித்த நாட்டை வேவு பார்க்க ஆள்களை அனுப் புதல் அவர்கள் தீமையான கொணர்தல் (13:1 32)
ஒரு செய்தியைக்
விசுவாசமின்மையின் காரணமாக மக்கள் அந்நாட்டை UOLU மறுத்தல் கர்த்தரால் நாற்பதாண்டுகள் வனாந்தரத்தில் தண்டிக்கப்படுதல் (14:1-45)
அவர்கள் நாட்டையடைந்தபோது, அறிவிப்புகள் கவனிக்கப்படுதல் (இறைவனுடைய நோக்கம் மாறாது) (15:1-41).
கோராவும், அவன் கூட்டாளிகளும் கலகம் செய்தல்
(16:1-50).
ஆரோனின் தடியின் துளிர்கள், அவன் கர்த்தரின் ஆசாரியன் என்பதை உறுதி செய்தல் (17:1-13) ஆரோனைப்பற்றியும் லேவியரைப்பற்றியும் அறிவுரைகள் (18:1-32)
சிவப்புக் கிடாரியின் சடங்கு (சுத்திகரிப்பு) (19:1-22). காதேசில் தங்குதல். மோசே கோலினால் இரண்டு முறை கன்மலையில் அடித்தல், தண்ணீர் புறப்படுதல் ஆரோனின் மரணம் (20:1-29).
ஈ. காதேசிலிருந்து யோர்தான் வரை. (காலம் 6 மாதங் கள் எண். 33:38; உ பா, 1:3; அ தி. 21:36)
வெற்றி முறையிடுதல், கொடிய பாம்புகள்; வெண்கலப் பாம்பு உயர்த்த ப்படுதல் (21:1-35; யோவான் 3115)
பீலேயாமும் அவனுடைய தீர்க்க தரிசனங்களும் மோவாப் அரசன் பாலாக், இஸ்ரவேலருக்குச் சாபமிட இவனைப் பயன்படுத்த முயற்சி செய்தல். அதற்குப் பதிலாக இறைவன் ஆசீர்வதிக்கக் கட்டாயப் படுத்து தல், மேன்மையான மேசியாவின் தீர்க்கத் தரிசனங்கள் கொடுக்கப்படுதல் (22:1-24:1,25).
இஸ்ரவேல் மனிதர்கள் மோவாபின் விலை மகளிரான கொடிய பெண்களோடு உடன்படுதல். அவர்கள்
நியாயத்தீர்ப்படைதல் (25:1-18)
புதிய தலைமுறை கணக்கிடப்படுதல் (26:1-65) மோசேயிக்குப் பதிலாக யோசுவா தெரிந்துகொள்ளப்படுதல் (27:1-23).
1-40 பலவகையான காணிக்கைகள் ஆணையிடப்படுதல் (28:1-29)
வாக்குறுதிகளைப் பற்றிய குறிப்புக்கள் (30:1-16)
மீதியானியரை மேற்கொண்டு வெற்றி (31:1-54).பெறுதல்
ரூபன், காத், மனாசே பாதி பேர் யோர்தானின் கிழக்குத் தேசத்தைத் தெரிந்துகொள்ளுதல் (32:1-42) இஸ்ரவேலரின் பயணங்களின் சுருக்கம் (33:1-56) தேசத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் பற்றிய குறிப்புக்கள் (34:1-29).
புகலிடமான பட்டணங்கள் (35:1-34)
ஒவ்வொரு குலத்தவரும் தங்களுக்கு உரிய உரிமையை அடைதல் (36:1-13).
0 Comments