இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

இயேசுவின் பாதபடியில் In the footsteps of Jesus

 

இயேசுவின் பாதபடியிள் 


பகுதி :1


சீடன்: ஆண்டவரே, தேவனுக்கு கீழ்ப்படியாமலும் அவரை தொழுது கொள்ளாமலும் வாழ்வது பாவம் என்பது தெளிவாக தெரிகிறது. அதனுடைய மரணத்துக்கேதுவான விளைவு உலகின் இன்றைய நிலையில் காணப்படுகிறது. ஆனால் உண்மையில் பாவம் என்பது என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. சர்வவல்லமையுள்ள தேவனின் சமூகத்தில் அவருடைய சித்தத்திற்கு எதிராக, அவருடைய சொந்த உலகத்தில் பாவம் எப்படி உருவானது


ஆண்டவர்: 1. பாவம் என்பது தேவனுடைய சித்தத்தை தள்ளிவிட்டு ஒருவனது சொந்த சித்தத்தின்படி வாழ்வது, உண்மையும் நீதியுமானதை விட்டுவிட்டு தன்னுடைய சுய இச்சையை நிறைவேற்ற அதில் இன்பம் காணலாம் என கருதுவது


ஆனால் இவ்வாறு செய்வதால் ஒருவன் உண்மை மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் அடைவதில்லை. பாவம் தனியான ஒன்றல்ல. அதனை யாரும் உருவாக்கியதாக கூறமுடியாது. அது ஒரு நிலைமை


சிருஷ்டிகர் ஒருவரே, அவர் நல்லவர், நல்ல சிருஷ்டிகர் தீமையான ஒன்றை படைத்திருக்க இயலாது. அது அவரது சொந்த இயல்புக்கு எதிரானதாகும். வேறு யாரும் பாவத்தை உருவாக்கவில்லை. முன்பே சிருஷ்டிக்கப்பட்டிருந்ததைத்தான் சாத்தானால் கெடுக்க முடிந்தது. ஆனால் அவனுக்கு எதையும் சிருஷ்டிக்கும் வல்லமை கிடையாது. எனவே பாவம் சிருஷ்டிப்புகளின் ஒரு பகுதி அல்ல. அது தனித்து உருவானதும் அல்ல. அது உண்மையற்ற தவறுகிற அழிவுக்குரிய ஒரு நிலைமையை தருவது.


எடுத்துக்காட்டாக வெளிச்சம் என்பது உண்மையாகவே நிலைத்திருக்கும் ஒன்று. ஆனால் இருள் அவ்வாறு நிலைத்திருக்கும் பொருள் அல்ல வெளிச்சம் இல்லாத பொழுது ஏற்படும் நிலை. அதே போன்று பாவமும் தீமையும் தம்மில் தாமே நிலைத்திருப்பவை அல்ல. அது நன்மையை இல்லாத இடத்தில் காணப்படும் ஒன்று தீமையின் இருண்ட நிலை மிகவும் பயங்கரமான து. இதனால் அநேகர் சரியான பாதையை விட்டு விலகிச் சென்று, சாத்தான் என்னும் பாறையில் மோதி அவர்களது வாழ்க்கைப்படகு சின்னாபின்னமாகி நரகமென்றும் இருளுக்குள் மூழ்கி அழிந்து போகிறார்கள். இதற்காகவே நான் உலகத்தின் வெளிச்சமாக மாமிசத்தில் வெளிப்பட்டேன். இதனால் என்மேல் விசுவாசம் வைப்பவர்கள் அழிந்து போகமாட்டார்கள். ஏனெனில் நான் அவர்களை இருளின் அதிகாரத்தினின்று மீட்டு, இருளின் நாமமோ அல்லது அதன் சுவடோ காணப்படாத, பரலோக பாக்கியத்திற்கு பாதுகாப்புடன் அழைத்து வருவேன் (வெளி.21:23, 22:5).


சிருஷ்டிகர்த்தாவின் பிரசன்னத்தின் முன்பாக இந்த இருள் நிறைந்த பாவம் எப்படி பிரவேசித்தது என்று நீங்கள் கேட்கலாம். சாத்தானும் மனிதனும் தங்கள் சுயவிருப்பங்களை நிறைவேற்ற, தம் சுயவிருப்பப்படி, கட்டளைக்குப் புறம்பான, தகாத வழிகளில் செயல்பட்டதால் பாவம் தோன்றியது. இப்படிப்பட்ட பாவத்திற்குள் விழாதவாறு ஏன் தேவன் படைத்திருக்கக் கூடாது என்று நீங்கள் கேட்டால், மனிதன் ஓர் இயந்திரத்தைப்போல் உருவாக்கப் பட்டிருந்தால் தன் சுய விருப்பத்தின்படி செயல்பட்டு, அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியை அவன் அடையமுடியாமல் போயிருக்கும் என்பதே அதற்குரிய பதில். ஆதாமும், ஏவாளும் ஓர் பாவமில்லாத நிலையில் வாழ்ந்து வந்ததால், பொய், ஏமாற்றுதல், போன்ற காரியங்களை அறியாதிருந்தார்கள். எனவே தான் அவர்கள் சாத்தானின் தந்திரத்தின் ஏமாற்று வலையில் விழுந்துவிட்டார்கள். இப்படிப்பட்ட பாவம் பிரவேசிக்காத நிலையில் பெருமை என்ற ஒன்று இருந்ததை அறியாதவனாக இருந்த நிலையில் அந்த பெருமை அவனுக்குள் பிரவேசித்தால் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டான். ஆனாலும், இப்படிப்பட்ட பாவம் மனுக்குலத்திற்குள்ளும், சாத்தானிலும் பிரவேசித்தாலும், தேவன் தம் சர்வ வல்லமையினால் ஓர் புதிய நிலையை நமக்குக் கொடுத்து, பாவ நிலையிலிருந்து ஓர் உன்னத நிலைக்குக் கொண்டுவந்தார்


முதலாவதாக தேவனுடைய எல்லையற்ற அன்பு, அவர் மாமிசத்தில்   

வெளிப்பட்டதன் மூலமாகவும், இரட்சிப்பின் மூலமாகவும் வெளிப்பட்டது இல்லாவிடில் பிறசூழ்நிலைகளில் அது மறைக்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கும். இரண்டாவதாக பாவத்தின் கசப்பை ருசிபார்த்தவர்கள், மீட்கப்பட்ட பின்பு கசப்பான ஒன்றை ருசிபார்த்துவிட்டு, இனிப்பான தேனை ருசி பார்க்கும்பொழுது அனுபவிக்கும் பெரும் மகிழ்ச்சியைப்போன்று, பரலோகத்தின் சந்தோஷத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பார்கள் ஏனெனில் பரலோகத்தில் அவர்கள் பாவம் செய்ய மாட்டார்கள். ஆனால் தாழ்மையுடனும், அன்புடன் கூடிய கீழ்ப்படிதலுடனும், பிதாவாகிய தேவனை சேவித்து, நித்திய நித்திய காலமாய் அவரில் நிலைத்திருப்பார்கள்


சூரிய சந்திரனில் காணப்படும் புள்ளிகள், பிறைகள் போன்ற அவற்றில் காணப்படும் குறைகளைக் கண்டுபிடிப்பதில் மனிதன் தீவிரம் காட்டுகிறான். ஆனால் பாவத்தில் காணப்படும், கறைகளையும், பிழைகளையும் ஒரு சிறிதும் கண்டுகொள்ள மாட்டான். அதனால் அவனிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும் என்று அறிந்து கொள்கிறோம். ஓர் குஷ்டரோகியின் உடல் அவன் வியாதியின் காரணமாக மரத்துப்போய், உணர்ச்சியற்றதாகக் காணப்படுவதுபோல, பாவத்தின் விளைவாக மனிதனின் இருதயமும், மனதும் மழுங்கிப்போய், உணர்வற்றதாகக் காணப்படுவதால், தன் பாவத்திற்காக அவன் வருத்தப்படுவதோ அல்லது வேதனைப்படுவதோ இல்லை. ஆனால் அவர்கள் பயங்கரமான அழிவைச் சந்திக்கும் சமயத்தில், அங்கே அழுகையும் பற்கடிப்பும் நேரிடும்.


நீரில் மூழ்குபவனின் தலைக்குமேல் டன் கணக்கில் எடையுள்ள தண்ணீர் இருந்தாலும், அவன் மூச்சுத் திணறி இறக்கும் வரைக்கும், அதன் எடையை அறியாததுபோல, பாவத்தில் மூழ்கிக்கிடக்கும் அநேகர் அந்த பாவத்தின் சுமையை உணரமாட்டார்கள். ஆனால் நீரில் இருந்து வெளியே வந்து, உதவியை நாடுகிறவன், நீரின் பாரத்தை உணருகிறான் அதேபோன்று பாவத்தின் பாரத்தை உணருகிறவன், மனந்திரும்பி என்னிடத்தில் வருகிறவன், இலவசமாக, மெய்யான இளைப்பாறுதலைக் கண்டடைவான். இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே நான் வந்திருக்கிறேன் என்று மனுஷகுமாரன் கூறுகிறார் (மத்.11:28; லூக்.19:10).


மரணம் நேரிடுவதற்கு முன்னர் சரீரத்தின் ஒவ்வொரு அவயவமும் செயலிழந்து, பலவீனமாகக் காணப்படத் தேவையில்லை. உடலின் இதர அவயங்கள் எவ்வளவு திடகாத்திரமாக இருந்தாலும் இருதயத்திர அல்லது மூளையிலோ ஓர் பாதிப்பு ஏற்பட்டால் மாத்திரம் போதும், வாழ்க்கை முடிந்து போகும். அதேபோன்று ஒரு சிறு பாவத்தின் நச்சுத் தன்மையின் விளைவாக மனதும், இருதயமும் பாதிக்கப்பட்டால் போதும் அது ஒருவருடைய ஆவிக்குரிய வாழ்க்கையை மாத்திரம் அல்ல, முழுக்குடும்பத்தையோ, அல்லது நாட்டையோ என்? அது ஒரு இனத்தையோ பாதித்துவிடும். ஆதாமின் பாவம் இத்தகைய தன்மையுடையதாயிருந்தது. என்னிலிருந்து வெளிப்பட்ட ஓர் வார்த்தை, லாசருவைக் கல்லறையிலிருந்து உயிரோடு எழுப்பியிருந்தால், முழு மனுக்குலத்திற்கும் நித்திய ஜீவனைக் கொடுக்க அது வல்லது


மிருகங்களோ அல்லது பறவைகளோ நீண்ட நாட்கள் மனிதனோடு தங்கியிருந்து விட்டு மீண்டும் தன் இனத்துடன் சேர்ந்து கொள்ளச் சென்றால், அவற்றை அன்புடன் வரவேற்பதற்குப் பதிலாக அவற்றை, அவை இறக்கும்வரைத் தாக்குகின்றன. ஏனெனில் அவை நீண்ட காலம் மனித்னுடன் தங்கி பழகிவிட்டதால் அவற்றின் இயற்கையான பழக்க வழக்கங்களின்றும் முற்றிலும் மாறுபட்டு காணப்படுவதே இதற்குள் காரண மாகும். இவ்வாறு தன் இனத்தைச் சேர்ந்தலை மனிதனுடன் பழகியாதால், அவற்றில் ஏற்பட்ட மாறுதல்களால், அவற்றை தம் சமுதாயத்தில் சேர்த்துக் கொள்ளாமல் இருக்கும்பொழுது, தும்மார்க்கரோடு மிகவும் நெருக்கமான தொடர்புகொண்டுள்ள பாவிகளை, பரலோகத்தில் உள்ள பரிசுத்தவான்களும், தூதர்களும் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள்? இதனால், பரிசுத்தவான்களுக்கும், தூதர்களுக்கும் பாவிகளின் மீது அன்பு இல்லை என்பது அர்த்தம் அல்ல, ஆனால் பரலோகத்தில் மிகவும் பரிசுத்தமான சூழ்நிலையே அப்படிப்பட்டவர்களுக்கு ஓர்வித வெறுப்பை உண்டாக்கும் இவ்வுலகத்தில் வாழும் பொழுதே பரிசுத்தவான்களோடு உறவுகொள்ள விரும்பாத நிலையில், நிரந்தரமாக பாவிகள் நித்தியத்தில் பரிசுத்தவான்களுடன் சந்தோஷமாக எவ்வாறு வாழமுடியும். இப்படிப்பட்ட பரலோக சூழ்நிலை, பாவிகளுக்கு நரகத்தைப்போல அறுவறுக்கத்தக்க தாகவே காணப்படும்


தேவனோ, தேவ ஜனமோ, பாவிகளை பரலோகத்திலிருந்த வெளியேற்றி அவர்களை நரகத்தில் தள்ளிவிடுகிறார்கள் என்று என்னிவிடவேண்டாம். ஏனெனில் தேவன் அன்புள்ளவர். ஒருவரையும் ஒருபோதும் நரகத்தில் சாரூபவர் அல்ல. அவர் ஒருபோதும் அப்படிச் செய்யவே மாட்டார். பாவியினுடைய நாற்றமெடுத்த வாழ்க்கையே அவனை நரகத்தில் உள்ளுகிறது. ஒவ்வொரு மனிதனின் இருதயத்தில் குடிகொண்டிருக்கும்; நல்ல, அல்லது தீய பண்புகளுக்கு ஏற்றவாறு, அவர்கள் வாழ்நாட்கள் முடிவுக்கு வருவதற்கு முன்பே பரலோகமோ, அல்லது நரகமோ அவர்களை நெருங்கிச் சேர்கிறது. எனவே இந்த நித்திய ஆக்கினைக்கு தப்பிக்கொள்ள வால்சையுள்ள யாராயிருந்தாலும், அவன் தன் பாவத்தை உண்மையாக அறிக்கையிட்டு தன் இருதயத்தை எனக்கு (இயேசுவும்) ஒப்புவிக்கக் கடவன் அப்பொழுது என்னுடைய பிரசன்னத்தினாலும், பரிசுத்த ஆவியின் தூண்டுதலினாலும், அவன் நித்திய காலமாய் தேவனுடைய இராஜ்ஜியத்தின் பிள்ளையாக மாறமுடியும்.


இவ்வுலகில் ஓர் அரசனுக்கோ அல்லது அரசாங்கத்திற் எதிராகவோ

புரட்சி செய்பவன், மற்றொரு நாட்டிற்கு தப்பித்து ஓடி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால் தேவனுக்கு எதிர்த்து நிற்பவன் எங்கு ஓடிச் சென்று தன்னைக் காத்துக் கொள்வான்? அவன் எங்கு சென்றாலும் பரலோகத்திற்கோ அல்லது நரகத்திற்குக் கூடச் சென்றாலும், தேவன் அங்கு நித்தியமாய் இருப்பதை உணருவான் (சங்.139:7, 8). பாவ அறிக்கை செய்து தேவனிடத்தில் தன்னை அர்ப்பணிக்கும் பொழுது மாத்திரம் பாதுகாப்பைப் பெறமுடியும்,


ஆதாமுக்கும், ஏவாளுக்கும், தங்களை மூடி மறைத்துக்கொள்ள அத்தி இலைகள் போதுமானவைகளாகக் காணப்படவில்லை. அதனால் தேவன் அவர் களுக்குத் தோல் உடைகளைக் கொடுத்தார். அதுபோலவே, வரும் கோபத்திற்குத் தன்னைத் தப்பித்துக்கொள்ள மனிதனுடைய நன்மையான கிரியைகள் அந்த அத்தி இலைகளைப் போன்று பயனற்றவை. என்னுடைய (தேவனுடைய) நீதியின் வஸ்திரத்தைத் தவிர வேறொன்றும் காப்பாற்ற முடியாது.


9. அக்கினி சுவாலையின் எரிக்கும் தன்மையையும், அழிக்கும் தன்மையையும் அற்றுப்பூச்சி நினைப்பது இல்லை. அதனுடைய பிரகாசத்தினால் அது சர்க்கப் பட்டு, அதற்கள் வேகமாய் ஓடிச் சென்று அழிந்துபோகிறது. அதேபோன்று மனிதனும் பாவத்தின் நச்சுத் தன்மையையும், அழிக்கும் தன்மையையும் உணராதவனாக, அதன் கவர்ச்சியினால் பார்க்கப்பட்டு, நித்திய அழிவுக்கு நேராய் விரைந்தோடுகிறான். ஆனால் நான் என் (தேவன்) ஒளியினால், மரணத்தினின்று பாவியை மீட்டெடுத்து, ஜீவனையும், நித்திய மகிழ்ச்சியையும் அவனுக்கு அளிக்கிறேன். என்னுடைய ஒளியினால் கிடைக்கக்கூடிய விலையேறப்பெற்ற ஈவுகளை தான் சுதந்தரித்துக்கொள்ளும் வகையில் அவள் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான்.


பாவம் என்பது ஓர் மாயமான தோற்றமோ அல்லது ஓர் கற்பனையோ அல்ல. ஆனால் அது மனிதனின் தீய எண்ணங்களின் செயல்பாட்டால் ஏற்பட்ட ஆவிக்குரிய இருளின் நிலை. பெரிய அம்மை என்னும் நோய் குறுகிய காலத்தில், நிரந்தரமாக ஓர் மனிதனின் அழகிய தோற்றத்தைக் கெடுத்து ஓர் அறுவறுக்கத்தக்க தோற்றத்தை ஓர் மனிதனுக்கு ஏற்படுத்துவதுபோல, பாவமாகிய தீய வித்து அவனுக்குள் நிலைகொண்டிருந்து அவனுடைய ஆவியை சின்னாபின்னப்படுத்தி இறுதியில் அவன் ஆவியை அழித்துப் போடுகிறது. தேவன் தீமையை சிருஷ்டிக்காததுபோல வியாதியையும், சரீர வேதனைகளையும் உருவாக்கவில்லை. மனிதனின் கீழ்ப்படியாமையினாலேயே தோன்றியது வேதனையும், வியாதியும் கற்பனையின் விளைவுகளல்ல. மூடி மறைக்கப்பட்டுள்ள பாவங்களின், வெளிப்படையாகக் காணப்படும் விளைவுகளே ஆகும். அது ஒருவரின் தனிப்பட்ட பாவமாகவோ, அல்லது அவர் அங்கத்தினனாக உள்ள ஓர் குடும்பத்தின் பாவமாகவோ இருக்கலாம். அந்தக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, என்னுடன் இணைத்து கொள்வார்களானால் என்னுடை சுகமளிக்கும் இரத்தம் அவர்களுக்குள் பாய்ந்து, மறைந்து கிடக்கும் வெளிக்குவராத பாவ ரோகங்களை குணமாக்கும். அவர்களுக்கு நித்தியத்திற்கான ஆரோக்கியத்தைத் தருவேன். அப்படிப்பட்ட ஆரோக்கியமான நிலைமையில் மனிதனை உருவாக்கி, அவன் தன் தேவனும் ஆண்டவருமானவருடன் நித்திய காலமாய் மகிழ்ச்சியுடன் வாசம் செய்யச் செய்வேன். 



Post a Comment

0 Comments