இயேசுவின் பாதபடியில்
பகுதி 2
சீடன்
சீடன் (குரு) எஜமான்:, இக்காலத்திjல் சில அறிவாளிகளும் அவர்களைப் பின்பற்றுபவர்களும் இயேசுவின் இரத்தத்தினால் பெற்ற
அபிஷேகத்தையும் இரட்சிப்பையும் அர்த்தமற்றதாகவும், பயனற்றதாகவும் கருதுகிறார்கள். கிறிஸ்து ஓர் சிறந்த நியர் (போதகர்) என்று, ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஓர் சிறந்த முன்மாதிரியானவர் என்றும், கூறுகிறார்கள். நம்முடைய சுயமுயற்சிகளும், கிரியைகளும்தான் இரட்சிப்புக்கும், நித்திய மகிழ்ச்சிக்கும் வழி நடத்தும் என்றும் கூறுகிறார்கள்.
குரு (எஐமான்) 1. ஆவிக்குரிய, சமயம் சார்ந்த கருத்துக்கள் தேவனுடைய ஆலயமாகக் கருதப்படும் இருதயத்தைச் சார்ந்த அது மூளை அறிவோடு தான் தொடர்புடையது அல்ல என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. இருதயம் தேவனுடைய பிரசன்னத்தினால் நிறைந்திருக்கும் பொழுது மூளை அறிவும் தெளிவுபெற்றிருக்கும். பகலின் வெளிச்சமின்றி நம் மாமிசக் கண்கள் ஒன்றையும் காண முடியாததுபோல நமது மனக்கண்கள் உண்மையான வெளிச்சம் அன்றி ஒன்றையும் அறிந்துகொள்ள முடியாது. இருட்டில் ஒருவர் ஓர் கயிறு கிடப்பதை, பாம்பு என்று தவறாக எண்ண முடியும். அதேபோன்று, இவ்வுலக ஞானிகள் ஆவிக்குரிய உண்மைகளை, சாதாரண மக்கள் அறிந்து கொள்வதினின்று வழிவிலகச் செய்து தவறான பாதையில் செல்ல வழிநடத்துவார்கள். அதனால்தான் சாத்தான் ஏவாளை வஞ்சித்தபொழுது ஓர் செம்மறி ஆட்டையோ அல்லது ஊர் புறாவையோ பயன்படுத்தாது மிருங்கங்களிலேயே மிகத் தந்திரமான சர்ப்பத்தையே பயன்படுத்தினான் அதேபோன்று அவன் கல்விமான்களின் ஞானத்தையும், அறிவாளிகளின் திறமையையும் தனக்குத் தேவையான முறையில் கருவிகளாகப் பயன்படுத்துகிறான். “ஆகையால் சர்ப்பங்களைப்போல வினா உள்ளவர் களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள் " என்று மத்.10:16 என்று இயேசு சொல்வதுபோல அறிவாளிகளாகவும், கெட்டிக்காரக்கருமாய் இருப்பவர்களாகவும் இருக்கவேண்டும்.
2. விசுவாசத்தோடு வெண்கல சர்ப்பத்தை நோக்கிப்பார்த்த இஸ்ரவேலர் எவ்வாறு பிழைத்தார்களோ அதேபோன்று, விசுவாசத்துடன் சிலுவையை நோக்கிப் பார்க்கும்பொழுது பாவமன்னிப்பைப் பெறுகிறார்கள் எண்.21:9; யோவா.3:14, 15) சிலர் அந்த வெண்கல சர்ப்பத்தை, சாதாரணமாக எண்ணி அதை நம்பாமல், மோசே நமக்கு ஓர் எதிர் நச்சையோ, சக்திவாய்ந்த மருந்தையோ, அல்லது இந்த சர்ப்பத்தின் விஷத்தை முறிக்கும் மருந்தையோ நமக்கும் கொடுத்தால், அது ஒரு வகைக்கு நம்பத்தக்க காரியம், ஆனா இந்த கம்பத்தால் விஷமிக்க அந்த நச்சுப் பொருளுக்கு எதிராக எப்படி செயல்பட முடியும்? என்று முறுமுறுத்தார்கள். முறுமுறுத்த அனைவரும் செத்து மடித்தார்கள். அதேபோன்று, இன்றைய நிலையிலும், தேவன் நியமித்த இரட்சிப்பின் வழியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தங்கள் பாவத்தின் விஷத்தினால் அழிந்துபோவார்கள்.
ஒரு வாலிபன் உயரமான சிகரத்திலிருந்து கீழே தவறி விழுந்து விட்டான். காயமடைந்தான், மிக அதிகமான இரத்தம் இழந்துவிட்டதால் மரண தருவாயை நெருங்கி விட்டான். அவனது தந்தை அவனை மருத்துவரிடம் எடுத்துச் சென்றார். மருத்துவர், "ஒரு உயிர் இரத்தத்தில்தான் உள்ளது. இந்த வாலிபனது உடலில் மிகவும் இரத்தம் குறைந்து விட்டது. யாராவது தியாகத்துடன் தனது உயிரையும் இவனுக்காக இழக்க விருப்பத்துடன் இரத்தம் கொடுத்தால் இவன் பிழைக்க முடியும். அல்லது அவன் இறந்து விடுவான்" என கூறினார். அந்த தந்தையின் உள்ளம் மகன் மேலுள்ள அன்பினால் நிரம்பி வழிந்தது. தன் இரத்தத்தை கொடுக்க முன் வந்தார், அந்த வாலிபனின் நரம்புகளில் இரத்தம் ஏற்றப்பட்டவுடன் அவன் சுகமடைந்தான். மனிதன் பரிசுத்தம் என்னும் உயர் ஸ்தலத்திலிருந்து விழுந்துவிட்டான். பாவத்தில் விழுந்து காயப்பட்டு கிடக்கிறான். அந்த காயங்களால் அவனது ஆவிக்குரிய வாழ்வு முடிவை அடைந்து மரிக்கும் தருணத்தில் இருக்கின்றான். ஆனால் அந்நிலையில் என்னை விசுவாசித்தால் எனத நித்தியமான ஆவிக்குரிய இரத்தத்தை அவனுக்குள் ஊற்றுகிறேன். அதனால் மரணத்திலிருந்து விடுதலையாகி நித்திய ஜீவனை அடைய முடியும். “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவா.10:10). இதனால் நித்திய வாழ்வு வாழ இயலும்
பழங்காலம் முதல் மனிதர்கள் மிருகங்களுடைய இரத்தத்தை குடிக்க கூடாதென்ற நியமம் இருந்தது. அதனால் அவர்கள் சில நோய்கள் வராமல் காக்கப்பட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. மேலும் மிருகங்களுடைய மாம்சத்தையும் புசித்து இரத்தத்தை குடிப்பதனால் மனிதனிலிருந்த சில மிருக இயல்புகள் பலமடையக் கூடும் என்றும் கருதப்பட்டது. ஆனால் இப்பொழுது, "என் மாம்சம் மெய்யான போஜன மாயிருக்கிறது. என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது" (யோவா.6:55). ஏனெனில் அவை ஆவிக்குரிய ஜீவனை அருளுகின்றன. அவற்றால் பூரணசுகமும் பரம சந்தோஷமும் மகிழ்வும் பெற்றுக்கொள்ள இயலும்
5. பாவ மன்னிப்பு என்பது முழுமையான இரட்சிப்பு என பொருள்படாது. அது பாவத்திலிருந்து முழுமையான விடுதலை பெறும்பொழுதுதான். ஒரு மனிதன் பாவத்திலிருந்து மன்னிப்பு பெற்றாலும் கூட அவனது பாவத்தினால் வந்த வியாதியினிமித்தம் மரிக்க கூடும். எடுத்துக்காட்டாக, ஒரு மனிதன் தனது மூளையில் ஏற்பட்ட வியாதியினால் நெடுநாளாக பாதிக்கப்பட்டிருந்தான. அப்பொழுது மற்றொரு மனிதனை தாக்கி கொன்றுவிட்டான். அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபொழுது அவனது உறவினர்கள் அந்த சூழ்நிலையை எடுத்துக்கூறி அவனுக்கு இரக்கம் பாராட்டும்படியாக மேல் முறையீடு செய்தார்கள். அப்பொழுது கொலைக் குற்றத்திலிருந்து மன்னிப்பு தந்து அவனுக்கு விடுதலை கிடைத்தது. ஆனால், அவனுடைய நண்பர்கள் அந்த நற்செய்தியை அவனிடம் அறிவிக்க விரைந்து சென்றபொழுது அவன் மரித்துவிட்டான். அவனை கொலை செய்ய வைத்த அந்த வியாதியினால் இறந்துவிட்டான்
இந்த மன்னிப்பு கிடைத்ததினால் இந்த கொலையாளி எதுவும் பயன் பெற்றானா? அவனுடைய வியாதியிலிருந்து சுகம் பெற்றிருந்தால்தான் உண்மை பாதுகாப்பு அவனுக்கு இருந்திருக்கும். அப்பொழுதுதான் அந்த மன்னிப்பினால் வரும் உண்மை ஆனந்தத்தை அவன் உணர்ந்திருக்க முடியும். இந்த காரணத்தினாலேயே, மனந்திரும்புகின்ற விசுவாசிகள் தங்கள் பாவநோயிலிருந்தும் பாவத்தினால் வரும் தண்டனையாகிய மரணத்திலிருந்தும் இரட்சிக்கப்படும்படியாக நான் மாம்சத்தில் மனிதனாக உருவாகி வந்தேன். இவ்வாறு பாவத்தின் தண்டனையிலிருந்தும் மரணத்திலிருந்தும் அவர்களை இரட்சித்துக்கொண்டேன் (மத்.1:21) அவர்கள் மரணத்தை மேற்கொண்டு கடந்து நித்திய ஜீவனை சுதந்தரித்துக்
கொள்வார்கள் 6. அநேக மக்களுக்கு வாழ்க்கை ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது, ஒரு அருவியின் கரையில் இருந்த மரக்கிளையில் காணப்பட்ட தேன்கூடு ஒரு வேடனின் கண்களில் பட்டது. அவன் அந்த கிளைமேல் ஏறி அமர்ந்து அதனை சுவைக்க துவங்கினான். ஆனால் அவன் அறியாமலிருந்தது என்ன? அந்த நேரத்தில் அவன் மரண ஆபத்தில் இருந்தான். அந்த அருவியில் ஒரு முதலை அவனை விழுங்க தன் வாயை பெரிதாக திறந்து காத்திருந்தது. அந்த மரத்தின் அருகே சில ஓநாய்கள் சுற்றி நின்றன. எல்லாவற்றிலும் மோசமாக, அந்த மரத்தின் வேர்கள் பூச்சியால் அரிக்கப்பட்டு விழுந்து விடும் தருவாயில் இருந்தது. சிறிது நேரத்திற்குள் அந்த மரம் உடைந்து விழுந்தது. அந்த வேடன் சற்றும் அறியாமல் அந்த முதலைக்கு இரையானான். இந்த விதமாகவே மனிதனின் ஆவி, சரீரத்தினால் உடுத்தப்பட்டு இருக்கும்பொழுது, மிகக் குறைந்த நேரம் மட்டுமே, தவறான கடந்து போகக் கூடிய பாவ சந்தோஷங்களை காண்கிறது. பாவம் மனிதனின் மூளையில் தேன் கூண்டு போல காணப்படுகிறது. இவ்வுலகின் மிக பயங்கரமான காட்டின் நடுவில் இருப்பதை அவன் உணரவில்லை. சாத்தான் அவனை துண்டுதுண்டாக கடித்து சிதறடிக்க காத்திருக்கிறான். நரகம் அவனை விழுங்க தன் வாயைத் திறந்து வைத்துள்ளது. அப்பொழுது இவை எல்லாவற்றிலும் மோசமாக பாவக்கிருமியானது வெளியே தெரியாத வகையில் வேர்களை அரித்து தின்று விட்டது. சரீர வாழ்வு வேர் இழந்தது. அதனால் ஆத்துமா விழுந்து நித்தியமான நரகத்தின் அழிவுக்கு இரையாகிவிட்டது. ஆனால் என்னிடத்தில் வரும் பாவியை நான் பாவத்திலிருந்தும் சாத்தானிடமிருந்தும் நரகத்தினின்றும் மீட்டு இரட்சித்து அவனுக்கு நித்திய மகிழ்ச்சியை அருளுவேன். “அதனை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்து போடமாட்டான் (யோவா.6:22).
சாத்தான் தந்திரமான பேச்சினாலும் வசிகரத்தினாலும் மனிதரை ஏமாற்றி தன்னிடம் இழுத்து விழுங்கி விடுகிறான். எப்படி ஒரு பாம்பு தனது கண்களில் பளிச்சிடும் ஒளியினால் சிறு பறவைகளை கவர்ந்திழுக்கிறதோ அவ்விதமாகவே செய்கிறான். ஆனால் என்மேல் விசுவாசமாயிருப்பவர்களை நான் அந்த பழைய பாம்பினிடமிருந்தும் ஆத்துமாவை அழிக்க மயக்குதல்களை தரும் இந்த உலகத்தினின்றும் மீட்டு இரட்சிக்கிறேன். நான் அவர்களை விடுதலையாக்குகின்றேன். ஒரு பறவை இந்த பூமியின் புவிஈர்ப்பு விசையை எதிர்த்து எளிதாக திறத் வானத்தில் பறந்து செல்வதுபோல அவர்கள் ஜெபமாகிய செட்டைகளால் உயர பறந்து தங்கள் இருதய வாஞ்சையாகிய பரம வீட்டை இறுதியில் அடைந்து விடுகின்றனர். எனது இனிமையான அன்பினால் அவர்கள் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்.
மஞ்சள் காமாலை நோய் உள்ள ஒரு மனிதன் எல்லாவற்றையும் மஞ்சள் நிறமாக காண்பதுபோல, பாவிக்கும் சித்தாந்தவாதிக்கும் சத்தியம் அவனது
பாவ மாதிரிகளுக்கும், கருத்துகளுக்கும் ஒத்த ரூபமாக காணப்படுகின்றது அவர்கள் என்னையும் தங்களைப்போன்ற ஒரு பாவி என எண்ணுவார்கள் ஆனால் பாவிகளை இரட்சிக்கும் எனது கிரியையானது இந்த உலகின் நல்மதிப்பீட்டுக்கு சார்ந்ததல்ல. அது விசுவாசிகளின் வாழ்வில் தடுக்கமுடியாத விதத்தில் கிரியை செய்யும். லேவிதான் இன்னும் பிறவாதிருந்த பொழுதே ஆபிரகாமின் அரையிலிருந்து எனக்கு தசமபாகம் செலுத்தினதுபோல எல்லா தலைமுறைகளிலும் என்னை விசுவாசிப்வர்கள் யாவரும் சிலுவையிலிருந்து அவர்கள் பாவத்திற்கென செய்யப்பட்ட பாவமன்னிப்பாகிய மீட்பை பெற்றுக்கொள்வார்கள். இந்த இரட்சிப்பு உலகின் எல்லா நாட்டு மக்களுக்கும் உரியது
ஒரு மனிதன் தன் சொந்த முயற்சியினால் செய்யும் நற்கிரியைகளால் இரட்சிப்பை அடையமுடியும் என்பது மிகவும் மடமையானது. அவன் இன்னும் மறுபடியும் பிறக்கவில்லை. உலக அதிபதிகளும், ஆசிரியர் களும் ஒழுக்கத்தைப்பற்றி கூறும்பொழுது "நீ நன்மை செய்து நல்லவனாக ஆகிவிடு” என்கின்றனர். ஆனால் நான், “நீ நற்கிரியை செய்யுமுன்பே நல்லவனாக ஆகிவிடு" எனக் கூறுகிறேன். உனக்குள் புதிய நன்மையான ஜீவன் வரும்பொழுது உருவாகும் விளைவுதான் நல்லசெய்கைகள்.
கசப்பான கனிகளை தொடர்ந்து தரும் ஒரு மரமானது இறுதியில் இனிமையானதை தரும் என மூடன்தான் கூறுவான். உண்மையில் ஒரு கசப்பான மரம் இனிமையான கனிதரும் மரத்தில் ஒட்டி இணைக்கப்பட்டால் அது இனிய மரமாகும். இனிமையான மரத்தின் ஜீவன் அந்த கசப்பான மரத்தில் கடந்து செல்லும் பொழுது அதன் இயற்கையான கசப்புத் தன்மை நீங்கி விடுகிறது. இதுதான் புதிய சிருஷ்டி' எனப்படுகிறது. ஒரு பாவியும் கூட நன்மையானதை செய்ய விரும்பும்பொழுதும் பாவம் செய்கிறான் ஆனால் அவன் மனந்திரும்பி விசுவாசத்தினால் என்னில் ஒட்டிக்கொள்ளும் பொழுது அவனிலுள்ள பழைய மனிதன் செத்து விடுவதால் அவன் ஒரு புதிய சிருஷ்டியாகிறான். இந்த புதிய வாழ்வு இரட்சிப்பை துவக்கமாக கொண்டுள்ளது. அதன் கனிகளாக நற்கிரியைகள் உருவாகின்றன. இந்த கனி எப்பொழுதும் நிலைத்திருக்கும்
10. அநேகர் மனிதனில் காணப்படும் சில நற்கபாவங்கள் அவனுக்கு உண்மை சமாதானத்தை தருவதில்லை என அனுபவரி தியாக கற்றுள்ளனர் அது மனிதனுக்கு இரட்சிப்பின் நிச்சயத்தையோ அல்லது நித்திய வாழ்வையோ தருவதில்லை. நித்திய ஜீவனை பெற தேடி என்னிடம் வந்த வாலிபனின் நிலை இதனை காட்டுகிறது. என்னைப்பற்றிய அவனது முதல் எண்ணம் தவறானதாக இருந்தது. சில உலகப்பிரகாரமான ஞானிகளும் அவர்களது பின்பற்றுவோரும் இந்நாளில் காணப்படுவதைப்போல என்னையும் கருதினான். இந்த ஞானிகள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைபோல தங்கள் வாழ்வில் எள்ளளவும் உண்மையற்றவர்களாக இருந்தனர். அதனால் நான் அவனிடம், "நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவர் ஒருவருமில்லையே?" எனக் கூறினேன். ஆனால் அவன் என்னில் நன்மையையும் ஜீவனையும் அளிக்கும் ஒருவரை காண இயலாதவனாக இருந்தான். நான் அவனை என்னுடன் சேர்த்துக்கொண்டு உண்மையில் நல்லவனாக மாற்றி அவனுக்கு வாழ்வு தர விரும்பினேன். ஆனால் அவன் மனமடிந்து துக்கத்துடன் திரும்பி சென்று விட்டான். அவனது வாழ்க்கை ஒன்றை தெளிவாக காட்டுகிறது. அவன் பத்து கட்டளைகளை கடைபிடித்து நடந்ததும் அவனது நன்மையும் அவனுக்கு மனதிருப்தியையோ நித்திய ஜீவனுக்கான உறுதியையோ தரவில்லை. அவனது நற்கிரியைகள் அவனுக்கு சமாதானத்தை அளித்திருந்தால் அவன் என்னைத் தேடி வந்திருக்கமாட்டான். அல்லது அப்படி வருத்தத்துடன் என்னைவிட்டு சென்றிருக்கமாட்டான்.
இன்னும் சிறிது காலத்திற்குப்பின் பவுல் என்ற வாலிபன் என்னை அறிந்து கொண்டான். அவனது இதயத்தின் வாஞ்சை முற்றிலுமாக நிறைவேறியது வருத்தத்துடன் திரும்பி சென்றுவிடாமல் அவன் எல்லாவற்றையும் விட்டு என்னை பின்பற்றினான் (பிலி.3:6-15). தனது சுய நீதியை நம்புவதை விட்டு என்னை பின்பற்றுபவன் என்னிடத்திலிருந்து மெய் சமாதானத்தையும் நித்திய ஜீவனையும் பெறுவான்.
0 Comments