பழைய ஏற்பாடு ஓர் அறிமுகமம்
1.அதியாகமம்
இந்த நூல் மோசேயினால் எழுதப்பட்டது என்பதனை நாம் அறிந்து கொள்ளலாம்.
ஆதியாகமம்(Genesis) என்ற சொல் கிரேக்க மொழியாகும். தொடக்கம்(Origin) என்பது இதன் பொருளாகும். ஆதியாகமத்தின் முதலாம் வார்த்தை எபிரேயு மொழியிலிருந்து “ ஆதியிலே”(In the beginning) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தொடக்கமும் முடிவில்லாத இறைவனைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றின் தொடக்கத்தையும் கூறுகிறது. ஆனால் முடிவு இங்கே இல்லை இதன் உண்மை என்னவென்றால் இறைவன் மனிதனுக்கு வெளிப்படுத்தும் எல்லாம் எதிர்கால வெளிப்படும் படிப்படியாக கூட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஆதியாகமம் நூலில் சாத்தான் ஒரு சிறப்பு பகைவனாக காணப்படுகிறான். அவனின் பிரியமான தாக்குதல் விளம்பரப்படுத்தப்பட்டு இருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை ஏனெனில் தான் இறைவனின் பகைவன் என்றும் மனித குலத்தை செஞ்சிக்கு அவன் என்றும் தன்னை இந்த நூலில் வெளிப்படுத்துகிறான் அவனுடைய அறிவை இந்த நூலில் முன் கூறுகிறது. அவனுக்கு உண்டாகும் தண்டனையையும் இன்னும் தெளிவாக விளக்குகிறது.
ஆதியாகமத்தின் செய்தியும் பொருளும்.
ஆதியாகமம் இறைவன் செயலாற்றுகிறார் என்பதை காட்டுகிறது நாம் வாழும் உலகத்தையும் மக்களையும் படைத்தவர் அவர் உண்டாக்கின அனைத்தும் நல்லவையாகவே விளங்கின. ஆனால் மக்களுக்கு மட்டும் அவர் முழு உரிமை தந்திருந்தார். மக்கள் அவருக்கு கீழ்ப்படியாமையைக் தெரிந்து கொண்டனர். அதன் பயனாக நாம் அவரிடம் இருந்து பிரிந்து உறவு நீங்கி புதியவர் ஆனோம். இந்த உலகமும் துன்பத்தையும் மரணத்தையும் அறிந்தது. ஆனால் இறைவன் மக்களை அப்படியே விட்டுவிடவில்லை . நோவா ஓடு ஒரு புதிய தொடக்கத்தை உண்டாக்கினார் தேவன் ஆபிரகாமை தெரிந்துகொண் டார் .அவன் சந்ததியின் மூலமாக எல்லா மக்கள் இனத்தையும் காப்பாற்றும் திட்டத்தை தொடங்கினார்.
ஆதியாகமத்தின் முக்கிய பாத்திரங்கள்.
ஆதாமும் ஏவாளும், காயீனும் ஆபேலும், நோவா, ஆபிரகாமும் சாராளும், லோத்து, ஈசாக்கு, ரெபெக்காள், யாக்கோபு, ஏசா, ராகேல், லேயாள், யோசேப்பு,அவன் சகோதரர்கள்.
ஆதியாகமம் தொடக்கங்களின் நூலாக இருக்கிறது.
1.ஆதி.1:1–25 உலகத்தின் தொடக்கம்
2. ” 1:26–2:25 மனித குலத்தின் தொடக்கம்
3. ” 3:1–7 உலகத்தில் பாவத்தின் தொடக்கம்.
4. ” 3:8–24 இரட்சிப்பு உறுதிமொழியின் தொடக்கம்.
5. “ 4:1–15 குடும்ப வாழ்வின் தொடக்கம்.
6. “ 4:16.9:29 மனிதன் உண்டாக்கின நாகரீகத்தின் தொடக்கம்.
7. ” 10–11 உலக நாடுகளின் தொடக்கம்.
8. “ 12–50 எபிரெய மக்களின் தொடக்கம்.
( ஆதாம் இறைவனோடு தொடங்கினான். கீழ்படியாமை மூலமாக விழுந்துபோனான்
ஆதி 3 ஆம் அதிகாரம்).
ஆதியாகமம்2000 ஆண்டு செய்திகளை நமக்குத் தருகிறது. கடவுளின் தொடங்கி யோசேப்பின் மரணத்தோடு முடிகிறது.
ஆதியாகமம் செய்தி சுருக்கம்
அ. படைப்பு (1:1–31).
படைப்பின் தொடக்கம் (1:1)
பூமியின் வெறுமையான நில (1:2)
பூமியின் ஆறுநாள் படைப்பு (1:3–31)
ஆ.ஆதாம் (2–5)
ஆதாம் ஏவாள் படைப்பு . ஏதேன் தோட்டத்தில் வைத்தல் நன்மை தீமை அறியத்தக்க மரணத்தின் கனியைப் புசிக்க வேண்டாம் என்ற கட்டளை. சாத்தான் (2:1–25).
சோதனையும் விழுதலும் (3:1–24).
காயின் ஆபேல் கொலைசெய்தல் கடவுளற்ற காயீனின் சேத் பிறப்பு (4:1–26).
ஆதாரமும் சே த்தும் சேத் முதல் நோவா வரை (5:1–32).
இ. நோவா (6–11).
வெள்ளப்பெருக்கு (6–8).
நோவாவோடும் பிள்ளைகளோடும் உடன்படிக்கை நோவா தன் பிள்ளைகளுக்கு தந்த தீர்க்கதரிசன ஆசீர்வாதம்(9:1–29).
நாடுகளின் தொடக்கம் (10:1–32).
மக்கள் சிதறடிக்கப்படும் மொழிகளின் தொடக்கம் சேம் முதல் ஆபிராம் வரை உள்ள குடும்பம் (11:32).
ஈ. ஆபிரகாம் (12–23).
ஆபிரகாமின் அழைப்பு(12:1–10).
ஆபிரகாம் லோத்தை விட்டுப் பிரிதல் (13:1–18).
ஆபிரகாம் லோத்து வை விடுவித்தல் மெல்கிசேதேக்கினால் ஆசீர்வதிக்கப்படுதல் (14:1–24).
இறைவன் ஆபிரகாமோடு உடன்படிக்கையைப் புதுப்பித்தல் பெருக செய்தலும் (15:1–21).
இஸ்மவேல் பிறப்பு தவறான நடவடிக்கை (16:1–16).
உ.(அதி 24–27)
ஈசாக்கு காக ஒரு பெண்ணை தேடி பெறுதல்– கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் சான்றாக(24:1–67).
ஆபிரகாமின் இறுதி நாட்கள். ஈசாக்கு ஏர்டெல் பிள்ளை பெறுதல் ஏசா யாக்கோபு (25:1–34).
ஈசாக்கு உடன்படிக்கையை உறுதி செய்தல்(26:1–35).
ஈசாக்கு ஏசாவின் ஆசீர்வாதத்தை யாக்கோபுக்கு அளித்தல ்(27:1–46).
ஊ. யாக்கோபு(அதி 28–36).
இறைவன் பெத்தேலில் யாக்கோபோடோ பேசி உடன்படிக்கையைப் புதுப்பித்தல்(28:1–22).
யாக்கோபு ஒவ்வொருவருக்காகவும் 7 ஆண்டுகள் வேலை செய்து மேலயும் ராகேலையும் மனத்தில். லெவலுக்கு நான்கு பிள்ளைகள் பிறத்தல் (30.1–43).
யாக்கோபு கடவுள் மூலம் கட்டளை பெற்று வீடு திரும்புதல் லாபானிடம் வருந்தி கேட்டல் (31:1–55).
யாக்கோபு இறைவனுடன் போராடுதல் யாக்கோபும் ஏசாவும் ஒப்புரவு ஆகுதல் (33:1–20).
இஸ்ரவேல் என்று பெயர் மாற்றப்படுதல்(32:1–32).
யாக்கோபின் மகள் கடத்தி செல்லப்படுதல் யாக்கோபின் இரண்டு குமாரர்கள் கொலையாளிகளாக மாறி மாறி வஞ்சம் தீர்த்தல்.(34:1–31).
யாக்கோபின் அரசியலுக்கு திரும்பி வருதல் இறைவனோடு ஒன்றுபடுதல பெஞ்சமின் பிறப்பின் போது ராகேல் மரணம் அடைதல், ஈசாக்கு மரணம் (35:1–43).
ஏசாவின் குடும்பம் ஏதோமியர் (36:1–43).
ஏ. யோசேப்பு (அதி 37–50)
கொடிய சகோதரர்களால் அடிமையாக இருபது வெள்ளிக்காசுக்கு விற்றல் (37:1–36)
யூதாவின் பாவச்செயல் அவனுடைய பிள்ளைகள் (38:1–30).
யோசேப்பு போர்த்தி பாரிடம் அடிமையாதலல் போட்டிப் அவருடைய மனைவியின் தவறினால் சிறை செய்யப்படுதல் (39:1–23).
யோசித்து பார்வோனின் சுயம்புவாகி பானபாத்திரக்காரரின் கண்ட கனவுகளை தெளிவாகக் கூறல் (41:1–23).
யோசேப்பு பார்வோனின் தீர்க்கதரிசன கனவை விளக்குதல் பார்வோன் யோசேப்பை மேன்மைப்படுத்தி உயர்பதவி அளித்தல் (41:1–57).
யோசேப்பின் சகோதரர்கள் தானியம் கொள்ள வருதல் அவனை அவர்கள் அறியவில்லை சிமியோனை சிறைப்படுத்தி மற்றவர்கள் தங்கள் வீடு போக அனுமதித்தல் (42:1_38).
அவர்கள் பெஞ்சமின் ஓடு இரண்டாம் முறை வருதல்.(43:1–34).
யோசேப்பு பென்யமீன் அடிமையாக்க அச்சுறுத்தல் அவனுக்காக யூதா வேண்டுதல் (44:1–34).
யோசேப்பு தன் சகோதரர்களுக்கு தன்னை வெளிப்படுத்துதல் யாக்கோபு க்காக அவர்களை அனுப்புதல்(45:1–28).
யாக்கோபும் குடும்பமும் எகிப்துக்குப் புறப்படுதல்(46:1–34).
இஸ்ரவேலர் எகிப்தில் விருத்தி அடைதல்(47:1–31).
யாக்கோபு யோசேப்பின் பிள்ளைகளாகிய ஏப்பிராயிமையும் மனாசேவயும் ஆசீர்வதித்தல் (48:1–22).
யாக்கோபு தன் 12 பிள்ளைகளையும் தீர்க்கதரிசனம் கூறி ஆசிர்வதித்தார்(49:1–33).
யாக்கோபின் அடக்கமும் யோசேப்பின் மரணமும்(50:1–26).
0 Comments