1 இராஜக்கள் விளக்கவுரை
இராஜாக்கள் இரண்டு நூல்களும் பழைய எபிரெய மொழியில் ஒரே நூலாகக் காணப்படுகிறது. அரசர்களில் கட்சியைப் பற்றிக் கூறுகிறது. கி.மு. 970 முதல் 930 வரை ஆட்சி புரிந்த சாலொமோன் ஆட்சி தொடங்கி கி.மு. 580-ஆம் ஆண்டு பாபிலோனியரால் அடிமைப்படுத்தப்பட்ட செதேக்கியாவோடு இரண்டு இராஜாக்கள் முடிவடை கிறது சாலொமோலுக்குப்பிறகு ஒன்றாயிருந்த இஸ்ரவேல், இஸ்ரவேல், பூதா என இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. இந்த நூலின் தொடக்கத்தில் தாவீது வயது முதிர்ந்தவராக விளங்குகிறார். தாவீதின் மூத்த மகன் அதோனியா அரசனாக விரும்புகிறான். ஆனால் அவனுடைய மாற்றாந் தாய் பத்சேபாளின் மகன் சாலொமோன் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறான். அப்பொழுது தாவீதுக்கு வயது எழுபது. சாலொமோனுக்கு வயது பத்தொன்பது ஆகும் சாலொமோன் இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்டான் (1 இரா.1:39,40; 2:15).
சாலொமோன் தன் ஆட்சிக் காலத்தில் ஆண்டவருக் கென்று ஓர் அழகான ஆலயம் கட்டிய செய்தி இந்நூலில் கூறப்பட்டுள்ளது (1 இரா. 7:48-51) இஸ்ரவேல் மன்னர் களுள் சிலர் விளங்கினர் இறைவனை நேசிக்காத தீயவர்களாக விளங்கினர்.
இந்நூல் ஆலயம் கட்டும் பணியில் தொடங்கி அது அழியும் நிலையில் முடிவடைகிறது. சாலொமோனின் ஆட்சிக் காலம் மிக உயர்ந்த மேலான நிலையில் விளங் கியது. சாலொமோன் தன் தந்தையாகிய தாவீது ஆண்ட ஆட்சிப் பரப்பைவிடப் பத்து மடங்கு அதிகப் பரப்புள்ள நாட்டை ஆண்டான். உலகம் இதுவரை காணாத அதிசய அடையாள நிகழ்ச்சிகள் சாலொமோன் காலத்தில் நடந்தன
சவுல் மன்னன் ஆட்சியும். சாலொமோன் மன்னன் ஆட்சியும் தொடக்கம் மிகச் சிறப்பாக இருப்பினும் அவர் களின் வாழ்க்கை முடிவு இறைவனுக்குப் பிரியமில்லா ததாக முடிவடைகிறது. இவர்களின் இதயங்கள் இறைவனுக்கு முன்பாகத் தூய்மையாக முடிவில் காணப்படவில்லை (1 சாமு. 15:11; 1 இரா 11:4). இறைவன் நம் இருதயங் களையே விரும்புகிறார்.
சாலொமோன் தொடக்கத்தில் ஓர் உயர்ந்த நல்ல மனிதன்
1. சாலொமோன் சமயத்துறையிலும், அறிவுத்துறையி லும் மிகச் சிறந்த முறையில் வளர்க்கப்பட்டான் நாத்தான் சாலொமோனுக்குக் கொடுத்த புனை பெயர் "எதிதியா'' " இறைவனுக்குப் பிரியமானவன்" என்ப தாகும் (2 சாமு, 12:25)
2. இவனுடைய ஆட்சி மிகத் தெளிவாக இருந்தது. எல்லா நகர மக்களும் மகிழ்ந்தார்கள் (1 இரா . 1:45, 16).
3. சாலொமோன் தன் தந்தையின் சிறந்த அறிவுரை களோடு பதவி ஏற்றான் (1 இரா 2:1-9.. 4. இறைவனிடம் ஞானத்தைக் கேட்டுப் பெற்றான்
தூய்மையான தெரிந்து கொள்ளுதல் (1 இரா. அதி. 3). இஸ்ரவேலில் சாலொமோனின் ஆட்சி மிகச் சிறந்து விளங்கியது (1 இரா. அதி. 4).
சாலொமோனின் வாழ்க்கையில் மிக முக்கிய பணி ஆலயம் கட்டி முடித்தல், இறைவனுக்கு ஆலயம் ஒப்படைப்பு உன்னதமான நிலையில் காணப்படுகிறது 7. சாலொமோனின் ஆட்சி யாவராலும் நினைவு கூறப்படுகிறது.
8. சாலொமோனின் செல்வமும், புகழும் ஷீபா இராணி கண்டு வியக்கிற அளவுக்கு விளங்கின (1 இரா. 10:5).
9. சாலொமோனின் அழகு 45-ஆம் சங்கீதத்தில் குறிக்கப் பட்டுள்ளது. 10. சாலொமோனின் முக்கியமான பற்று உன்னதபாட்டில் விளங்குகிறது.
சாலொமோனின் பலவீனமும், இழி செயலும்
1. சாலொமோன் தன் தந்தை தாவீதைப்போல் இல்லாமல் தன் சகோதரனாகிய அதோனியாவைக் கொடுரமாய்க் கொலை செய்ய வழி செய்தான் (1 இரா. 2;24,25)
2. சாலொமோனின் இருதயம் சவுலைப்போல மிகவும் பெருமை கொண்டது (1 இரா 10:18-29)
3. சாலொமோன் புற நாட்டு மனைவிகளால் நடத்தப் பட்டான். அவன் விபசாரத்தில் விழுந்து போனான் (1 இரா. அதி. 11).
"அவிசுவாசிகளுடன் பிணைபடாதிருங்கள்"
(2 கொரி. 6:14), என்று பவுலடியார் கூறுவதை இங்கு நினைவு கூர வேண்டும்
இந்நூலை எழுதியவரும் காலமும்
இந்த நூலை யார் எழுதினார் என்று தெளிவாகத் தெரியாவிட்டாலும், தல்மோத்தின் பாரம்பரியத்தின்படி எரேமியா தீர்க்கதரிசி எழுதினார் என்பதற்குச் சான்று உள்ளது. இந்த நூலை எழுதியவர் ஒரு தீர்க்கராக அல்லது வரலாற்று ஆசிரியராகக் காணப்படுகிறார். இந்த நூல் ஒழுக்கமின்மையையும், விபசாரத்தையும் கண்டிக்கிறது கடவுளின் நீதியையும், நியாயத்தீர்ப்பையும் வெளிப்படுத்து கிறது. இந்த நூலின் மொழி நடை எரேமியா ஒத்துள்ள து (1 இரா. 8:8, 12:19) அடிமைப்பட்டுப்போன காலத்தில் நூலை பாபிலோனுக்கு எழுதப்பட்ட தான் குறிப்பிடப்பட்டுள்ளது (கி. மு. 586). முதல் இராஜாக்கள் நூல் 120 ஆண்டுக்கால நிகழ்ச்சிகளைக் கூறுகிறது. சால மோனின் ஆட்சித் தொடக்கம் கி. மு. 971 முதல் அகசியா ஆட்சி முடிவுவரை அடங்கியது இந்தக் காலமாகும்
1 இராஜாக்கள் - செய்திச் சுருக்கம் அ. சாலொமோனின் ஆட்சி (அதி. 1-11).
அதோனியா ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்தல் வயதான தாவீது, சாலொமோன் அரசனாகவும்
அபிஷேகம் பெறவும் உறுதி செய்தல் (1:1 53). தாவீது சாலொமோனுக்கு இறுதிக் கட்டளை
தாவீதின் மரணம் சாலொமோன் ஆட்சியை வளர்த்தல் (2:1-46).
சாலொமோனின் ஜெபம் ஞானமும், உணர்வுமுள்ள இருதயம் தருமாறு இறைவனிடம் வேண்டல் இறைவன் பதில் அளித்தல் (3:1-28). சாலொமோனின் ஆட்சித் திறமையும் ஞானமும்(4:1.34).
ஆலயம் கட்டுவதற்காக பொருள்களை ஆயத்தம் செய்ய ஈராம் சாலொமோனுக்கு உதவி செய்தல் (5:1-18) சாலொமோன் ஆலயம் கட்டுதல் (அதி. 6-7) ஆலயம் இறை ஒப்படைப்பு செய்யப்படுதல் சாலொமோனின் அருளுரையும், ஜெபமும் (8:1-68).
இறைவன் சாலொமோனுக்கு
இரண்டாம்முறை தரிசனமாதல். சாலொமோனின் (9:1-28). சில திட்டங்கள் ஷீபா ராணி சாலொமோனிடம் வருதல் (10:1-29) சாலொமோன் கடமை தவறுதல் நியாயத் தீர்ப்பு எரொபெயாம் (11:1-43). இறைவனின் நியமிக்கப்படுதல்
ஆ. இராஜ்யபாரம் பிரிக்கப்படுதல் (அ தி. 12-16) ரெகோபேயாம், எரோபெயாம், ஆகாப். ரெகோபெ யாமின் கீழ் ஆட்சி பிரிக்கப்படுதல், எரொபெயாமின் பாவம் (12:1-33)
ஒரு கடவுள் மனிதன் எரொபெயாம் பீடத்திற்கு எதிராகத் தீர்க்க தரிசனம் சொல்லுதல் (13:1-34). எரொபெயாம்மீது தீர்க்க தரிசன த்தின்படி நியாயத் தீர்ப்பு. தெற்கு நாட்டை ரெகொபெயாம் ஆட்சிசெய்தல் (14:1-31) அபியாவும், ஆசாவும் யூதேயா முழுவதையும் ஆட்சி செய்தல், நாதாபும் பாஷாவும் (15:1-34). இஸ்ரவேல் முழுவதையும் ஆட்சி செய்தல். ஏலா, சிம்ரன், ஒம்ரி, ஆகாப் இஸ்ரவேலை ஆளுதல் (16:1-34). எலியாவும் ஆகாபும் (அதி. 17-22) எலியா காணப்பட்டு
மூன்று ஆண்டுகள்மழை
பெய்யாமல் வரண்டிருக்கும் என முன்னறிவித்தல். கேரீத் ஆற்றண்டை அதிசயமாய் இறைவன் உணவளித்தல். சாரிபாத் விதவை மகனை உயிரோடு எழுப்புதல் (17:1-22). எலியா பாகால் தீர்க்க தரிசிகளைப் போட்டியில் வெல்லுதல். யேகோவாவே உண்மையான என்று மக்கள் ஒப்புக்கொள்ளுதல், மழை (18:1-64). கடவுள் பெய்தல் சோர்வடைந்த எலியாவை இறைவன் உற்சாகப்படுத்துதல் (19:1-21)
ஆகாப் சீரியரை இரண்டு முறை வெல்லுதல். ஆனால் கொடிய பெனாதாத்தை விட்டுவைத்தல் (20:1-43) ஆகாபும், ஏசபேலும் திராட்சைத் தோட்டத்திற்காக நாபோத்தைக் கொல்லச் செய்தல் எலியாவின் அறிவிப்பு.
ஆகாப் தன்னைத் தாழ்த்துதல் (21:1-29)
தவறான தீர்க்கதரிசனத்தின் மூலமாக உற்சாகப்படுதல். யோசபாத்தோடு ஆகாப் சீரியருக்கு எதிராகக் கிலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் செல்லு தல். ஆகாப் அம்பினால் மரணமடைதல் (22:1-53)
0 Comments