இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

2 சாமுவேல் விளக்கவுரை - 2 Samuel

 

2 சாமுவேல் 


சாமுவேலின் இரண்டு நூல்களும் பழங்கால எபிரெய மொழியில் ஒரே நூலாகவே குறிப்பிடப்பட்டுள்ளது என்று எண்டோம். கிரேக்க மொழியில் இரண்டு சாமுவேல் நூலானது இரண்டு இராஜாக்கள் என எழுதப்பட்டுள்ளது. இலத்தீன் மொழியில் இரண்டு சாமுவேல் என்று குறிக்கப் பட்டுள்ளது.


சவுல் இறைவனால் தெரிந்துகொள் ளப்பட்டு சாமுவேலால் மன்னனாக அபிஷேகம் செய்யப் பெற்றான். கர்த்தருக்குக் கீழ்ப்படியாமற் போகவே அரச பதவியி லிருந்து தள்ளப்பட்டான். கழுதைகளை த் தேடிப்போனான் சவுல். அவனுக்கு அரச பதவி ஆண்டவரால் கிடைத்தது. அதை மறந்தான்; உணர்வில்லாதவன் ஆனான் கடவுள் கட்டளையை மீறினான்; கீழ்ப்படியாதவன் ஆனான். அவனை அசுத்த ஆவி பிடித்து துன்பத்திற்கு ஆளானான் இறுதியில் தற்கொலை செய்து கொண்டான். இச்செய்தியை யும், சவுலுக்குப் பதிலாக ஆடுகளை மேய்த்து வந்த தாவீதைக் கர்த்தர் தெரிந்து கொண்டார் என்பதையும் சாமுவேலால் அவன் அபிஷேகம் செய்யப்பட்டான் என்பதையும், சாமுவேல் முதல் நூலில் கண்டோம்


இரண்டு சாமுவேல் புத்தகத்தில் தாவீதின் ஆட்சியைப் பற்றி நாம் அறிகிறோம். தமக்கு உண்மையுள்ளவர்களோடு இறைவன் உண்மையுள்ளவராய் விளங்குகிறார் சவுல் இறந்த பின்னர் தாவீது எப்ரோனைத் தன் வசமாக்கினான். பூத மக்கள் தாவீதை அரசனாக்கினார்கள் (அதி. 1-4). சவுலோடு சேர்ந்திருந்த மக்கள் யாவரும் தாவீதோடு சேர்ந்தார் கள். தாவீது யூதாவிற்கும், இஸ்ரவேலுக்கும் ஒரே அரசன் ஆனான். தன்னைக் கொடுமைப்படுத்திய. வேட்டையாடிய கொலை செய்யவும் துணிந்த சவுல் மரித்ததை அறிந்து தாவீது அவனுக்காகவும், தன் நண்பன் தாவீதுக்காகவும் அழுது புலம்புகிறான்


மோசே மரித்த பின்பு யோசுவா நூல் தொடங்குகிறது யோசுவா இறந்த பின்பு நியாயாதிபதிகள் நூல் தொடங்கு கிறது. ஆனால் 1 சாமுவேல் இறுதி அதிகாரத்தில் சவுல் இறந்த மு தலாம் செய்தி கூறப்பட்டிருந்தாலும் சாமுவேல் அதிகாரம் சவுலைப்பற்றியும், அவன் மகன் யோனத்தானைப்பற்றியும் கூறுகிறது. ஒரு வேளை இந்த அதிகாரம் 1 சாமுவேல் இறுதி அதிகாரமாக இருந்திருக்க வேண்டும் என அறிஞர் கருதுகின்றனர். சவுல் போர்க்களத் தில் இறந்தபோது, தாவீது அறுபது மைல்களுக்கப்பால் சிக்லாக்கில் இருந்தான். அமலேக்கியரை வென்று திரும்பும் போது, சவுலும் யோனத்தானும் இறந்த செய்தியைக் கேள்வியுறுகிறான். சவுலுக்கும், தாவீதுக்கும் பகைமை இருந்ததை அறிந்த அமேலக்கிய இளைஞன், சவுலின் மரணச் செய்திக் கூறினால் தாவீது மகிழ்வார் என்று நினைத்தான். ஆனால் தாவீது அவனை வெட்டி வீழ்த்து மாறு அறிவித்தான் (2 சாமு. 1:14,15). இறைவனால் அபிஷேகம் பெற்றவருக்குத் தீங்கு செய்யக்கூடாது என்பது தாவீதின் கொள்கை அதோடு நின்று விடாமல், தாவீது சவுலின் மீதும், யோனத்தான் மீதும் இரங்கற்பா பாடிய த 1 சாமு 1:19 முதல் 27 வரையுள்ள வசனங்களில் கிறோம் காண்


தாவீது சுற்றியுள்ள நாடுகளை வென்றான். இஸ்ர வேலின் அரசனாக எருசலேமைக் கைப்பற்றினான் எருசலேமைத் தலை நகராக்கினான். பெலிஸ்தியரை வென்றான். உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்தான். ஆலயம் கட்டத் தீர்மானித்தான்.


தாவீது ஒரு வியக்கத் தகுந்த ஆற்றல் வாய்ந்த மனிதனாக விளங்குகிறான். ஒரு மேய்ப்பனாக, பாடகனாக,போர்வீரனாக அரசனாக நாம் காண்கிறோம். ஒரு கவர்ச்சிகரமான மனிதனாக விளங்குவதை இந்நூலில் காணலாம். இந்நூல் தாவீதின் இறைபற்று, அடக்கம் பொறுமை, துணிவு, பெருந்தன்மை, இரக்கம் ஆகி பண்புகளை அழகுபடக் கூறுகிறது. சவுல் நாற்பது ஆண்டு களும், தாவீது நாற்பது ஆண்டுகளும் ஆண்டுள்ளனர் இருவரும் மக்கள் ஆதரவைப் பெற்றவர்கள். இருவரும் இறைவனுடைய ஆற்றல் வாய்ந்த வாக்குறுதியைப் பெற்றவர்கள். இருப்பினும் சவுல் தோல்வியைக் கண்டான். தாவீது வெற்றியைக் கண்டான். சவுலின் பெயர் இஸ்ர வேலரின் வரலாற்றில் தடையாக விளங்கியது. தாவீதின் பெயர் இன்றளவும் மேன்மை பெற்று விளங்குகிறது. சவுலின் தொடக்கம் மிகச் சிறப்பானது. முடிவோ பரிதாப மானது. தாவீதின் தொடக்கம் துன்பமானது. முடிவோ மேன்மையானது. இறைவன் தாவீதின் மூலமாகத் தம் சித்தத்தை நிறைவேற்றினார். 2 சாமுவேல் தாவீதின் முழு வாழ்க்கையை அழகாகச் சித்தரிக்கிறது இஸ்ரவேல் முழுவதையும் ஆண்டான். அவன் தாவீது ஆட்சிக் காலம் கி.மு. 1000 முதல் 960 வரை ஆகும். 2 சாமுவேல் நூலில் சவுலின் சந்ததியாரின் அழிவு, பெலிஸ்தியரோடு போர், தாவீதின் வெற்றிப் பாடல்கள், தாவீதின் இறுதி வார்த்தைகள், போர் வீரர் பட்டியல், தாவீது எடுத்த மக்கள் தொகைக் கணக்கு முதல் பல சிறு சிறு செய்தி களோடு முடிவடைகிறது


இறைவன் தாவீதுடன் நிலையான உடன்படிக்கை செய் தார். இஸ்ரவேலர்கள் இதை உணர் ந்தார்கள் தாவீதும் தன் வாழ்வின் மூலம் உணர்ந்து கொண்டான் சாமுவேல் நூல் சவுலைப்பற்றியும், தாவீ தைப்பற்றியும் கூறுகிறது. ஆனால் 2 சாமுவேல் தாவீதின் முழு வாழ்வை யும் கூறுகிறது


மனிதனுடைய மிகப் பெரிய ஆற்றல் இறைவனுக்குத் தன்னை முழுமையாக ஒப்படைப்பது என்பதே இந்நூல் 2 சாமுவேல்


தாவீதின் வாழ்க்கைமூலம் தெளிவாக்குகிறது. நீ யார் என்பதைவிட, நீ என்ன பதவி வகிக்கிறாய் என்பதைவிட, உன்னை ஆட்சி செய்கிறாரா என்பதே


இறைவன் முக்கியம்


இந்நூலை எழுதியவர், எழுதியகாலம்


தாவீதின் வரலாறு 1 சாமுவேல் 16-ஆம் அதிகாரத்தில் தொடங்குகிறது 2 சாமுவேல் நூல் தாவீதின் பெரும் பான்மையான நிகழ்ச்சிகளையும், நாற்பது ஆண்டுக்கால ஆட்சியையும் குறிப்பிடுகிறது எப்ரோன் ஆட்சி கி.மு 1011-ஆம் ஆண்டுத் தொடங்கி கி.மு. 1004-ஆம் ஆண்டு முடிகிறது. ஒன்று சேர்ந்த யூதாவையும், இஸ்ரவேலையும் கி.மு. 1004 முதல் 971-ஆம் ஆண்டு வரையிலான முப்பத்து மூன்று ஆண்டுகள் தாவீது ஆண்டான் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது (2 சாமு, 5:5)


சாமுவேல் நூலை நாத்தானும், காத்தும் சேர்ந்து எழுதியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது (1 நாளா 29:29) அதுவுமல்லாமல் எழுதித் தொகுத்தவர் யாசேர் என்று வேறொரு சான்று உள்ளது (2சாமு. 1:18) சாலொமோனின் மரணத்திற்குப் பின்னர் கி. மு 931-ஆம் ஆண்டு எழுதியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது


சாமுவேல் -- செய்திச் சுருக்கம்


அ. தாவீது எப்ரோனிலிருந்து யூதேயா முழுவதையும் ஏழு ஆண்டுகள் ஆட்சி செய்தல் (அதி. 1-4). சவு லுக்காகவும், யோனத்தானுக்காவும் தாவீது புலம்புதல் (1:1-27)


தாவீது எப்ரோனிலிருந்து யூதேயா முழுவதையும் ஆட்சி செய்தல், இஸ்போசேத் இஸ்ரவேலை ஆட்சி செய்தல் (2:1-32)


அப்னேர் தாவீதிடம் சென்று, இஸ்ரவேல் முழு வதையும் ஆளுமாறு வேண்டல், அப்னேரை யோவாப் கொல்லுதல் (3:1-39) 



இஸ்பேசேத் கொல்லப்படுதல் (4:1-12),


ஆ. தாவீது எருசலேமிலிருந்து இஸ்ரவேல் முழுவதையும் ஆண்டுகள் ஆட்சி செய்தல் (அகி. 5-24), தாவீது இஸ்ரவேல் முழுமைக்கும் அரசனாதல் எருச லேமைக் கைப்பற்றி அதனைத் தலைநகராக்குதல்

(5:1-85).


உடன்படிக்கைப் பெட்டியைத் தாவீது எருசலேமுக்குக் கொண்டு வருதல் (6:1-23)


தாவீதின் உடன்படிக்கை (7:1-29). தாவீதின் வெற்றிகள் (8:1-18)


தாவீது யோனத்தான் மகன் மேவிபோசேத் நண்பனாகக் கொள்ளுதல் (9:1-13) 


தாவீதின் சேனை அம்மோனியரையும், சீரியரையும்

தோல்வியடையச் செய்தல் (10:1-19)


தாவீதின் பெரியபாவம் - விபசாரம்- கொலை(11:1-27).


தாவீதின் மனம் திரும்புதல் மன்னிக்கப்படுதல். ஆனால் அவன் பிள்ளை இறத்தல் (12:1-31)


அம்னோன் தாமாரைக் கற்பழித்தல் தாமாரின் சகோதரனாகிய அப்சலோம் அம்னோனை வஞ்சகமாகக் கொல்லுதல் (13:1-39) தாவீது அப்சலோமை மன்னித்தல் (14:1-33).


அப்சலோம் தாவீதுக்கு எதிராகக் கலகம் செய்தல்(15:1-37).


அவனை எருசலேமை விட்டு ஓடுமாறு செய்தல் அப்சலோம் எருசலேமைத் தன் கட்டுக்குள் எடுத்துக் கொள்ளுதல் (16:1-23).


அப்சலோம் தவறான ஆலோசனைகளைக் கேட்டல் தாவீது தப்பி ஓட அனுமதித்தல் தாவீது யோர் தானைக் கடந்து மக்ணாமுக்குச் செல்லுதல் (17:1-29) அப்சலோமின் தீவிர முயற்சி தோல்வியுறல். அப்ச லோம் கொல்லப்படுதல் (18:1-33).


தாவீது எருசலேமுக்கு க் திரும்புதல், யோவாபுக்குப் பதிலாக அமாசாவுக்குப் படைத் தலைமைப் பதவி வழங்குதல் (19:1-43).


யோவாப் அமாசாவைக் கொல்லு தல் சேபாவின் கலகத்தை அடக்குதல் (20:1-26) தாவீதும் கிபியோனியரும் பெலிஸ்தியர்மீது போர் தொடுத்தல் (21:1-22)


கடவுள் செய்த விடுதலைக்காக தாவீது நன்றி செலுத் தும் பாடல் (22:1-51)


தாவீதின் இறுதி வார்த்தைகள். தாவீதின் வலிமை வாய்ந்த மனிதர்களின் பெயர்ப்பட்டியல் (23:1-39) தாவீதின் பாவமும் அதனால் உண்டான வாதையும் (24:1-25).


Post a Comment

0 Comments