இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

2 இராஜாக்கள் விளக்கவுரை - 2 Samuel Introduction and explanation

 

2 இராஜாக்கள் விளக்கம்


நாம் அவரைத் தள்ளிவிட்டால் அவர் நம்மைத் தள்ளி விடுவார். நாம் அவருக்குக் கீழ்ப்படிந்தால், அவர் நம்மை ஆசீர்வதிப்பார். "எகூ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த் தரின் நியாயப்பிரமாண த் தின்படி தன் முழு இருதயத்தோடு நடக்கக் கவலைப்படவில்லை இஸ்ரவேலைப் பாவம் செய்யப்பண்ணின யெரேபெயாமின் பாவங்களை விட்டு அவன் விலகவும் இல்லை. அந்நாட்கள் முதல் கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்து போகப் பண்ணினார் (2 இரா . 10:31,32)


எபிரெய மூலமொழியில் இந்த ஒன்று, இரண்டு இராஜாக்களின் புத்தகங்கள் ஒரே புத்தகமாக அமைக்கப் பட்டிருந்தது என்று முன்பு கண்டோம். அது கிரேக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்டபோது, இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஏனெனில் கிரேக்க மொழியில் எபிரெய மொழியை விட விரிவான இடம் தேவைப்பட்டது. காகிதச் சுருளின் நீளத்தில் அவர்கள் மிக அளவாக எழுதினார்கள் கிரேக்கர்கள் எப்போதும் சுருக்கத்தில் விருப்பமுள்ளவர்கள்.


ஒன்று, இரண்டு இராஜாக்கள், சாமுவேல் நூல்களில் கூறப்பட்ட நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாகவே விளங்கு கின்றன என்று முன்பு கண்டோம். இரண்டு இராஜாக் களின் புத்தகம் ஒன்று இராஜாக்களின் புத்தகத்தைத் தொடர்ந்து நிகழ்ச்சிகளையே கூறுகிறது. சாலொமோன் ஆட்சிக்குப் பிறகு ஒரே நாடு இஸ்ரவேல், யூதா என இரு நாடுகளா சுப் பிரிந்த நிலையை நாம் கண்டோம். அதன் தொடர்ந்த வரலாற்றை இரண்டு இராஜாக்களில் நாம் காண்கிறோம். ஆகாபின் மகனான அகசியா இஸ்ரவேலின் அரசனான து முதல் இரண்டு இராஜாக்கள் தொடங்கி பாபிலோனியர் இஸ்ரவேலரை அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு போனதோடு முடிவடைகிறது. கி.மு. 855-ஆம் ஆண்டு முதல் கி.மு. 586.ஆம் ஆண்டு வரையிலான சுமார் 270 ஆண்டுக்கால நிகழ்ச்சிகளை இந்நூல் கூறுகிறது. இந்த நூல் நீதிநெறி விளக்கமாக அமைந்துள்ளது. இறைவனுக் குக் கீழ்ப்படிந்து நடக்கிறவர்கள் உயர்வான நிலையை அடைவதையும், கீழ்ப்படியாதவர்கள், தங்களை மட்டுமல்லா மல் தங்கள் நாட்டையும் துன்பத்திற்குள்ளாக்குவதையும் நாம் காணுகிறோம்.


இஸ்ரவேலும், யூதாவும்


சாலொமோன் மன்னன் மரணமடைந்த பின்னர் அவன் மகன் ரெகோபெயாம் ஆளுகைக்கு வந்தான், அவன் மிகவும் பிடிவாதமான பண்பு படைத்தவன், முதியோர் சொன்ன நல்ல யோசனைகளைத் தள்ளிவிட்டான் (1 இரா 12:8). வாலிபர்களின் தவறான யோசனைகளுக்குச் செவி கொடுத் தான் (1 இரா. 12:13,14). ஜனங்கள் யெரோபெயாமை இஸ்ரவேலுக்கு அரசனாக்கினார்கள், யூதா கோத்திரம் மட்டும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றியது. யூதாவுக்கு மட்டும் ரெகோ பெயாம் எருசலேமைத் தலை நகராகக் கொண்டு அரசனாக விளங்கினான். கி.மு. 937 முதல் பலஸ் தீனா, இஸ்ரவேல், யூ தாவென்று இரண்டு அரசுகளாகப்பிரிந்தது



கி மு. 5 86 -ஆம் ஆண்டு எருசலேம் அழிக்கப்பட்டது


எபிரெயர் - பெயர்க்காரணம்


ஐபிராத்து நதியைத் தாண்டிப்போன சந்ததியாருக்கு எபிரெயர் என்ற பெயர் இடப்பட்டது ஆபிகாமின்

இஸ்ரவேல்


யாக்கோபின் மறுபெயர் இஸ்ரவேல். யாக்கோபு தன் உடன் பிறந்தவளாகிய ஏசாவுக்குப் பயந்து பாதான் ஆராமி லிருந்த தன் தாய்மாமன் வீட்டிற்குச் சென்றான். அங்கு லேயாள் ராகேலையும் மணந்து பிள்ளைகளைப் பெற்றான், ஆடுமாடுகளுடனும், குடும்பத் துடனும் சு லுக்குத் திரும்பினான், ஏசாவைச் சமாதானம் செய்து கொள்ள விரும்பினான், தனிமையாக இராத்திரியில் யாப் போக்கு என்னும் சிற்றாற்றின் கரையில் நடக்கும்போது, இறைவன் யாக்கோபுக்கு இஸ்ரவேல் என்னும் மறு பெயர் கொடுத்தார். அவன் சந்ததியார் இஸ்ரவேலர் என அழைக்கப்பட்டனர்


யூதா


இஸ்ரவேல் மக்கள் 80 ஆண்டுகள் ஒரே அரசின் கீழ் வாழ்ந்தார்கள், சாலொமோன் இஸ்ரவேல், யூதா என கோத்திரமும். பெஞ்சமின் மரணத்திற்குப் பிறகு இரண்டாகப் பிரிந்தது, யூதா கோத்திரமும் ஒன்றாக இணைந்து வாழ்ந்த தெற்குப்பகுதி யூதா என அழைக்கப் பட்ட து


தெற்குப் பகுதியாகிய யூதாவுக்குச் சாலொமோனின் மகன் ரெகோபெயாம் அரசன் ஆனான். யூதா, பெஞ்சமின் ஆகிய இரண்டு கோத்திரங்கள் நீங்கலாக மற்ற பத்துக் கோத்தரங்கள் வாழ்ந்த வட பகுதியாகிய இஸ்ரவேலுக்குப் யெரோபெயாம் அரசன் ஆனான். இஸ்ரவேல், யூதா மன்னர்கள் பட்டியல்கள் மேலே தரப்பட்டுள்ளன. இவ்வாறு ஏற்பட்ட இரண்டு பகுதிகளுள் வட இஸ்ரவேலை 19 மன்னர்களும், தன் பகுதியாகிய யூதாவை 20 மன்னர்களும் ஆண்டார்கள்.  பகுதியாகிய இஸ்ரவேலின் கடைசி மன்னன் ஓசெயா ஆண்ட ஒன்பதாம் ஆண்டு (கி.மு. 722-ஆம் ஆண்டு) அசீரியா மன்னன் சர்கோன் இஸ்ரவேலரைச் சிறை பிடித்து அசீரியாவிற்குக் கொண்டு சென்றான். இஸ்ரவேல் ஆட்சி ஓசெயாவோடு முடிவுற்றது


தென் பகுதியாகிய யூதா அரசு இஸ்ரவேல் ஆட்சியை விட 136 ஆண்டுகள் (கி.மு. 722 முதல் 586 வரை) நீடித்தது.


2 இராஜாக்கள்


நாவின் இருபது மன்னர்களில் எட்டு மன்னர்கள் சிறந் தவர்களாக விளங்கினார்கள் ஆகவே அவர்கள் ஆட்சி டித்ததை நாம் அறிகிறோம். பூ தாவின் இறுதியரசனான சிதேக்கியாவின் காலத்தில் கி.மு. 586-ஆண்டு பாபிலோன் மன்னன் நேபுகாத் நேச்சாரின் சேனாதிபதி நெபுசரதான் எருசலேமை அழித்து மக்களை ப் பாபிலோனுக்குச் சிறை பிடித்துச் சென்றான். யூதா பாபிலோனுக்கு அடிமையாகி விட்டது


யூதா நாட்டு மக்களை எச்சரிக்கத் தமது தீர்க்கதரிசிகளை அனுப்பினார் வடபகுதி பாகிய இஸ்ரவேலுக்கு எலியா, எலிசா, ஆமோஸ், ஓசியா ஆகிய நால்வரை அனுப்பினார். தென்பகுதியாகிய யூதா ஒபதியா, யோவேல், ஏசாயா மீகா, நாகூம் விற்கு செப்பனியா, எரேமியா, ஆபகூக் ஆக எட்டுத் தீர்க்கதரிசி களை அனுப்பினார். இஸ்ரவேலர் அசீரியருக்கு அடிமை யானதை 2 இராஜாக்கள் 17-ஆம் அதிகாரத்திலும், யூதா பாபிலோனுக்கு அடிமையானதை 2 இராஜாக்கள் 25-ஆம் அதிகாரத்திலும் காண்கிறோம்.


இறைவன் இஸ்ரவேல்


இறைவனின் எச்சரிப்பு நீர்க்கர் மூலமாய் அறிவிக்கப் பட்டும் அவர் வார்த்தைக்குச் செவி கொடாதபடியினால், இஸ்ரவேல், யூதா ஆகிய இரு நாடுகளும் முறையே அசீரி யருக்கும், பாபிலோனியருக்கும் அடிமையாக வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டு விட்டது


இந் நூலை எழுதிய ஆசிரியர் - காலம்


இரா ஜாக்களில் காணப்படுகிற இலக்கிய நடை எரேமியாவில் காணப்படுகிறது இந்த நூலின் நிகழ்ச்சி களைக் காணும் பொழுது. ஒரு தீர்க்கதரிசியே யிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது எழுதி ஐயமில்லாமல் எரேமியா எழுதினார் என்று கொள்ளலாம் எனவே 2 இராஜாக்கள் 24, 25-ஆம் அதிகாரங்கள் மட்டும் வேறு ஒருவரால் எழுதப்பட்டுச் சேர்த்திருக்கலாம் என்று அறிஞர் பெரு மக்கள் கருதுகிறார்கள், இந்நூல் கி.மு. 586-ஆம் ஆண்டுகளுக்கு முன் எழுதியிருக்கலாம் என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன அநேக


2 இராஜாக்கள் - செய்திச் சுருக்கம்


அ. எலியாவின் பின் வந்தவராகிய எலிசா தீர்க்கதரிசியின்ஊழியம் (அதி, 1-13) 

எலியா அகசியா மன்னனின் மரணத்தை முன்னறி எலியா விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்படுதல் வித்தல் (1:1-18).

8:1-35).


எலிசா, வியக்கத்தக்க முறையில் மோவாபியரை மேற் கொள்ளப்போவதை முன்னறிவித்தல் (3:1-27) 


எலிசா வியக்கத்தக்க ஐந்து அற்புதங்களை(4:1-44).நடத்துதல்


எலிசா சீரியாவின் படைத் தலைவன் நாகமானைக் குணப்படுத்துதல் (5:1-27).


சீரியர் சமாரியாவை பாதுகாத்தல் (6:1-33).


முற்றுகையிட்டபோது எலிசா

கர்த்தர், சீரியர் படையைத் தோற்றடையச் செய்தல்

(7:1-20).


இரண்டு யோராம் என்னும் பெயருடையவர்களின் ஆட்சி. யூதாவின் யோராம் ஆகாப் மகளை மணத்தல் அவன் இறந்த பின்னர் அவன் மகன் அரசனாகி ஓராண்டு ஆட்சி செய்தல் (8:1-29) அகசியா எகூ இஸ்ரவேலுக்கு அரசனாக அபிஷேகம் பெறுதல்.


எகூ இஸ்ரவேல் மன்னன் யோராமையும், யூதா மன்னன் அகசியாவையும், ஏசபேலையும் கொல்லுதல் (9:1-37).


ஆகாபின் வழிவந்த யாவரையும், கொல்லுதல் பாகல் வழிபாட்டை ஒழியச் செய்தல் (10:1-36)


கொடிய அத்தாலியாள், அரச பரம்பரையைச் சேர்ந்த அனைவரையும் கொன்று 6 ஆண்டுகள் ஆட்சி செய்தாள்


அவள் கொலையுண்ட பிறகு, யோவாஸ் அரசனானான் (11:1-21).


யோவாஸ் காலத்தில் ஆலயம் பழுதுபார்க்கப்படுதல். அவன் கொல்லப்படுதல் (12:1-21)


எக்கு வின் மகன் யோவகாஸ் அரசனாதல், எலிசாவின் மரணம் (13:1-25)


ஆ. எலிசாவின் மரணம் முதல் இஸ்ரவேல் மக்கள் சிறைப் பட்டுப் போகும்வரை வடக்குப்பகுதி ஆட்சி (அதி, 14-17).|


யூதாவை அமத்சியா ஆட்சி செய்தல். இஸ்ரவேலை யோவாசின் மகன் இரண்டாம் எரோபெயாம் ஆட்சி செய்தல் (14:1-29)


யூதாவை அசிரியா (உசியா) 52 ஆண்டுகள் ஆட்சி செய்தல். அசரியாவிற்குப் பின்னர் அவன் மகன் யோ தாம் அரசனாதல், இஸ்ரவேலில் சகரியா, சல்லும், மெனாகேம், பெக்காகியா, பெக்கா ஆட்சி செய்தல் (15:1-38).


யூதாவைக் கொடிய ஆகாஸ் ஆட்சி செய்தல் (16!1-20) அசிரியா மன்னன் இஸ்ரவேலைச் சேர்ந்த பத்துக் கோத்திரங்களைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டு செல்லுதல் இஸ்ரவேலுக்கு எதிராக இறைவனின் குற்றச்சாட்டு (17;1-41).


வடக்கு (இஸ்ரவேல்) ஆட்சி முடிவடைதல். யூதாவின் சிறந்த அரசன் எசேக்கியா ஆட்சியில் மறுமலர்ச்சி அசீரியர் யூதாவினுள் புகுதல் (18:1-37)


எசேக்கியாவின் ஜெபத்திற்கு விடையாக றைவன் அசீரியர் படையை அழித்தல் (19:1-37)


எசேக்கியா நோய்வாய்ப் படுதல், வியக்கத்தக்க முறை யில் குணமடைதல், அவன் வாழ்க்கையில் முடிவால் நிகழ்ச்சிகள் (20;1-21). மனாசே, அவன் மகன் ஆமான் கடவுளுக்கு எதிராக ஆட்சி செய்தல்


(21:1-26)  சிறந்த மன்னன் யோசியாவின் காலத்தில் மறுமலர்ச்சி தொடங்குதல்


 (22:1-20) யோசிய மேலும் செய்த சீர் திருத்தங்கள்,

 

 எகிப்து மன்னன் பாரோன் நேகோ போரில் யோசியாவைக் கொலை செய்தல், யோசியாவின் மகன் கள் யோவ காஸ், யோயாக்கீம் ஆகிய இருவரும் எகிப்து மன்னன் கட்டுப்பாட்டில் ஆட்சி செய்தல் (2311-37).


யோயாக்கீம் நேபுகாத் நேச்சாருக்குக் கப்பம் கட்டுதல், அவன் இறந்த பிறகு, அவன் மகன் யோயாக்கின் மூன்று மாதம் அரசனாதல், அவனைப் டாபிலோ னுக்குச் சிறை பிடித்துச் செல்லுதல். அவன் சிறிய தந்தை செதேக்கியா அரசனாகி நேபுகாத் நேச்சாருக்கு விரோதமாய்க் கலகம் செய்தல் (24:1-20)


எருசலேமின் முடிவான அழிவு மக்களைப் பாபிலோ னுக்குக் கடத்திச் செல்லுதல், மீதியான மக்களின் மேல் கெதலியாவை ஆளு நராக்குதல். இஸ்மவேல் கெ தலி யாவைக் கொல்லுதல். மீதியானவர்கள் எகிப்துக்கு ஓடிப்போதல் (25:1-30).

Post a Comment

0 Comments