இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

பரலோகம் எப்படி இருக்கும்....?

 



பரலோகம் எப்படி இருக்கும்…?


'பூமி' என்றால் என்ன என்ற கேள்விக்கு நாம் கல்வி பயின்ற பள்ளிகளில் விடை கண்டிருப்போம். பரலோகம் என்றால் என்ன என்ற கேள்வியை நாம் கல்விக் கூடங்களில் கற்கமுடியாது. பரலோகம் என்றால் என்ன என்று பூமியிலுள்ள ஒவ்வொரு மனிதனும் கேள்வி கேட்டாலும் அதற்கான பதிலை வேதத்தில் பெற்றுக்கொள்ளமுடியும். மாத்திரமே நாத்திகனானாலும், ஆத்திகனானாலும் இக்கேள்வியைக் கேட்பது எளிது. ஆனால் எந்த மனிதனும் இதற்கு பதிலை அறிவுப் பூர்வமாகக் கண்டடைய முடியாது, வேத அடிப்படையிலும் விசுவாசத்தினாலுமே நாம் இதற்குரிய பதிலைப் பெற்றுக்கொள்ளமுடியும்.


பரலோகம் என்பது பிதா வாசம்பண்ணும் இடம்:- இயேசு தமது சீடர்களுக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தபோது பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே என்றே ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார் (மத்.6:9). இயேசு வானத்தி லிருந்து (பரலோகத்திலிருந்து) வந்தவர் (யோவா. 6:51) என்பதால் பரலோகத்தில் பிதா வீற்றிருப்பதைக் குறிப்பிட்டிருக்கிறார். பிதாவானவர் பரலோகத்தில் வீற்றிருப்பதால் பூமியிலுள்ள அனைவரும் அவர் இருக்கும் இடத்தை நோக்கிப் பார்க்கிறோம். புதிய தேவாலயத் திறப்பு விழாவின் போது ஜெபித்த சாலெமோன், பரலோகத்தில் தேவன் வாசமாயிருக்கிறார் என்பதை அறிக்கையிட்டான் (1 இரா. 8:30). எனவே தேவன் வாசம்பண்ணும் இடமே பரலோகம் என்பதை சந்தேகமின்றி அறியலாம்.


2. பரலோகம் என்பது தேவனுடைய இராஜ்யம் :- பரலோகம் என்பது அண்ட சராசரங்களையும் படைத்துக், காத்து, அழிக்கும் வல்லமை கொண்ட ஒரே இறைவனாகிய கர்த்தர் தங்கி ஆட்சிசெய்யும் இராஜ்யமாகும். இது தேவனுடைய இராஜ்யம் என அழைக்கப்படுகிறது (யோவா. 3:5). பூமியில் மனிதன் தன்னுடைய வீட்டில் குடியிருப்பதுபோல் தேவன் உன்னதத்தில் குடியிருக்கும் இடமே பரலோ கமாகும். தாம் ஒருவரே நித்திய ஏகசக்கராதிபதியாய் என்றென்றும் இராஜாதி இராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தாவாகவும் சேனைகளின் தலைவராகவும் தேவனாகிய கர்த்தர் அதில் இராஜ கெம்பீரத்தோடு வீற்றிருக்கிறார்.


3. பரலோகம் என்பது கர்த்தர் தங்கியிருக்கும் ஆலயம்:- கர்த்தர் தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார். கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத் திலிருக்கிறது என்று அரசன் தாவீது கூறுகிறான் (சங். 11:4). பரலோகத்தில் தேவன் இருக்கும் இடம் ஆலயமாக இருப்பதால் அங்குள்ளவர்கள் அவருக்கு ஆராதனை செய்து அவரைத் தொழுது கொள்கின்றனர். பூமியிலும் நாம் அவருக்கென்று ஆலயத்தைக் கட்டி அதில் அவர் தங்கியிருக்கிறார் என விசுவாசிக்கிறோம். பூமிக்குரிய ஆலயத்தில் அவர் பிரசன்னராகி இருப்பதுபோல பரலோகத்திலிருக்கும் ஆலயத்தில் கர்த்தர் முழுமையாய் வீற்றிருக்கிறார். மண்ணுலகிலிருந்து நாம் அவரிடம் ஜெபிக்கும் எல்லா ஜெபங்களையும் கேட்டு பதிலளிக்கிறார் (1 நாளா. 21:26; 2 நாளா. 7:14; நெகே. 9:27; சங். 20:6; மத். 6:9).


4. பரலோகம் என்பது இளைப்பாறும் இடம் :- பரிசுத்தமான ஆத்துமாக்கள் பூமியில் தங்கள் பிரயாசங்களை எல்லாம் முடித்து மரித்ததும் சென்று இளைப் பாறி ஓய்வெடுக்கும் ஸ்தலமே பரலோகமாகும். கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான் என்றெழுது. அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள் (வெளி. 14:13) என வேதத்தின் கடைசிப் புத்தகம் வாக்களிக்கிறது. பரலோகத்தில் செல்லுகிறவர்கள் பூமிக்குரிய சகல பாடுகளையும், சோகங்களையும், வருத்தங்களையும், பாவத்தையும், நோய்களையும், கவலைகளையும் விட்டு இளைப்பாறும் இடமே பரலோகமாகும். அங்கே இளைப்பாறுகிறவர்கள் பாக்கியவான்கள் என அழைக்கப்படுகின்றனர். ஏனெனில் அதற்குள் பூமியில் வாழும் அனைத்து மனிதர்களும் போவதில்லை. பாக்கியம் பெற்றோர் அதில் இளைப்பாறு கின்றனர். கிறிஸ்துவிடம் வருகிறவர்கள் அந்த பாக்கியத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோக இராஜ்யம் அவர்களுடையது (பத் 5:2), நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், பரலோகம் இராஜ்யம் அவர்களுடையது (மத். 5:10), என்று ஆண்டவர் கூறியபடியால் பூமியில் ஆவியில் எளிமையோடு வாழ்ந்து, துன்பப் பட்டாலும் நீதியின்படி நடந்து கர்த்தருடைய பிள்ளைகளாய் வாழ்கிறவர்களே பரலோகத்தில் இளைப்பாறுவார்கள்.

5. பரலோகம் சேவை செய்யும் இடம்:- இவர்கள் தேவனுடைய சிங்கா சனத்திற்கு முன்பாக இருந்து இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரை சேவிக்கிறார்கள் (வெளி. 7:15), இரவும் பகலும் தேவனை சேவிக்கும் சேவை எப்படி இருக்கும் என்று வேதம் நமக்கு விரிவாகக் கூறவில்லையெனினும் பரலோகத்தில் நாம் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கப் போவதில்லை. இளைப்பாறு தலை.தேவன் அளித்தாலும் நாம் சுறுசுறுப்போடும் மகிமையின் வேகத்தோடும் அவர் சமுகத்தில் அவரை சேவித்துக் கொண்டிருப்போம்.



7. பரலோகம் மகிழ்ச்சி நிறைந்த இடம் :- உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு (சங் 16:11). உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொன்னேன் ( யோவா. 15:11). பரலோகத்தில் தேவன் நம்முடைய கண்ணீர் யாவும் துடைப்பதால் அங்கு மகிழ்ச்சியும் நித்திய பேரின்பமும் நமக்கு உண்டு. இரட்சிக்கப்பட்டவர்களும் நீதிமான்களும் எஜமானின் சந்தோஷத்திற்குள் பிரவேசிக்கும்படி அங்கு அனுப்பப்படுவார்கள் (மத். 25:21,23). இந்தப் பரலோக சந்தோஷத்தின் ஒரு துளியைத்தான் பூமியில் இரட்சிக்கப் பட்டபொழுது நாம் அனுபவித்துள்ளோம். இதன் பூரண சந்தோஷத்தை அதற்குள் செல்லும்போதே நம்மால் அனுபவிக்க முடியும்.

8 பரலோகம் அழியாத நிரந்தரமான இடம் :- இந்த பூமிக்குரிய கூடாரமானது நிலையில்லாதது. அழிந்துபோகக்கூடியது. பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும் தேவனால் கட்டப்பட்ட கைவேலையில்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம் ( 2 கொரி. 5:1). இந்த பூமியின் வாழ்வு நிலையில்லாததும் நிசந்தரமற்றதுமாகும். நம்முடைய ஜீவியக் காலம் இவ்வளவு என்று நம்மால் உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் பரலோக வாழ்வோ நித்தியமானதும் நிலையானதுமானபடியால் அதன் ஜீவிய காலம் முடிவற்றது என நம்மால் நம்ப முடியும். முடிவில்லாத அந்த வாழ்க்கையை நம்மால் இப்பொழுது புரிந்துகொள்ள முடியாதென்றாலும் அங்கு சென்ற பின்பு புரிந்து கொள்ள முடியும்.


8. பரலோகம் சந்தோஷமுள்ள சமுதாயம் :- பரலோகத்திலே நாம் ஒரு பரிசுத்த சமுதாயமாய் பரிசுத்தவான்களோடு வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம் (எபி. 12:22-24). ஆகவே பரலோகம் சென்றதும் நாம் இயேசுவோடு மட்டும் தனியே வாழுவோம் என ஒருவரும் கருதக்கூடாது. அங்கு ஒரு பரிசுத்தமுள்ள சமுதாய வாழ்வு காத்திருக்கிறது. தேவன், இயேசு கிறிஸ்து ஆயிரம் பதினாயிரமான தேவ தூதர்கள், மூப்பர்கள், முற்பிதாக்கள், நீதிமான்கள், பரிசுத்தவான்கள், சீயோன் மலை, பரம எருசலேம் ; சர்வ சங்கமாகிய சபை, இயேசு கிறிஸ்துவின் இரத்தம், ஜீவ நதி, ஜீவ விருட்சம் ஆகியவற்றோடு நாம் ஐக்கியம் கொள்ளும்படியே பரலோகத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த முழுக் கூட்டத்தோடு இணைந்து நாம் தேவனோடு உறவுக்கொள்ளும் சமுதாய வாழ்வே பரலோகமாகும்.


9. பரலோகம் என்பது நித்திய பாதுகாப்புள்ள இடம்:- பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களை சேர்த்து வைக்கவேண்டாம். இங்கே பூச்சியும், துருவும். அவைகளைக் கெடுக்கும். இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள். அங்கே பூச்சியாவது, துருவாவது கெடுக்கிறதுமில்லை. அங்கே திருடர் கன்னமிட்டு திருடுகிறதுமில்லை (மத். 6:19-21). பிராணிகளால் வரும் சேதம் (பூச்சி), இயற்கையின் கெடுதி (துரு), மனிதனின் தீயசெயல் (கன்னமிட்டுத் திருடுதல்) பரலோ கத்தில் நடப்பதில்லை. அதாவது பிராணிகளோ, இயற்கையின் காலநிலையோ, பாவிகளோ அங்கு இருப்பதில்லை. பூமியில் மனிதனுக்கு மனிதன் கெடுதி செய்வதுபோல் பரலோகத்தில் ஒருவரும் கெடுதி செய்யமுடியாது. அங்கே கள்ளரும், கொள்ளைக்காரரும், பொருளாசைக்காரரும், திருடரும், சூனியக் காரரும், விபச்சாரக்காரரும், கொலைபாதகரும், சாத்தானும் நுழைய முடியாத தால் தீங்குகள் அங்கே நடப்பதில்லை. எனவே பூமியை விடப் பரலோகம் பாதுகாப்பு நிறைந்த இடமாகவும், அழிவில்லாமல் வாழக்கூடிய வாசஸ்தலமாக இருக்கிறது.


10. பரலோகம் என்பது மகிமையடைந்தோர் வாசம்பண்ணும் இடம் : பரலோகம் மகிமையடைந்த சரீரத்தோடு நாம் வாழுகின்ற ஒரு ஸ்தலம். நாம் இப்பொழுது வாழும் பூமி நிச்சயமான ஒரு ஸ்தலமாக இருப்பது எப்படி உண்மையோ, அதுபோலவே தேவன் நமக்கென ஆயத்தம் செய்திருக்கும் பரலோகமும் நிச்சயமான ஒரு ஸ்தலமாக இருப்பது உண்மையே. பரலோகம் என்பது பூலோகத்தின் தொடர்ச்சியல்ல. அதன் மகிமையில் கோடியில் ஒரு பங்கைக் கூட பூமியின் மகிமைக்கு ஒப்பிடமுடியாது. பரலோகம் அத்தனை மகிமை யுள்ள ஒரு மெய்யான வாசஸ்தலம். நமது பரிசுத்த உணர்வுகளின் ஏக்கங்கள் அனைத்தும் பரலோகில் திருப்தியாக்கப்படும். தேவன் ஜீவ மன்னாவையும், ஜீவத் தண்ணீரையும் பரலோகில் நமக்கென கொடுப்பது எதற்காக நமது பசியையும் தாகத்தையும் தீர்ப்பதற்காகவே. தேவனை முக முகமாய்க் காண காத்திருந்த ஆத்துமாக்களில் உண்டான களைப்பைப் போக்கும்படியே தேவன் பரலோகில் இளைப்பாறுதலைத் தருகிறார்.


11.பரலோகமும் நிச்சயமான ஒரு ஸ்தலமாக இருப்பது உண்மையே. பரலோகம் என்பது பூலோகத்தின் தொடர்ச்சியல்ல. அதன் மகிமையில் கோடியில் ஒரு பங்கைக் கூட பூமியின் மகிமைக்கு ஒப்பிடமுடியாது. பரலோகம் அத்தனை மகிமை யுள்ள ஒரு மெய்யான வாசஸ்தலம். நமது பரிசுத்த உணர்வுகளின் ஏக்கங்கள் அனைத்தும் பரலோகில் திருப்தியாக்கப்படும். தேவன் ஜீவ மன்னாவையும், ஜீவத் தண்ணீரையும் பரலோகில் நமக்கென கொடுப்பது எதற்காக நமது பசியையும் தாகத்தையும் தீர்ப்பதற்காகவே. தேவனை முக முகமாய்க் காண காத்திருந்த ஆத்துமாக்களில் உண்டான களைப்பைப் போக்கும்படியே தேவன் பரலோகில் இளைப்பாறுதலைத் தருகிறார்.


12. பரலோகம் என்பது தேவனுடைய வீடு என அழைக்கப்படுகிறது: நமது முற்பிதாக்கள் பரலோகத்தைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்திய பதம் தேவனுடைய வீடு என்பதாகும். யாக்கோபு சொப்பனத்தைக் கண்டு விழித்த பின்பு, இது தேவனது வீடேயல்லாமல் வேறல்ல. இது வானத்தின் வாசல் என்றான் (ஆதி. 28:17). தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும் நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்று சாலெமோன் அரசனும் கூறினான் (1 இராஜ. 8:13), ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு (யோவா.14:2) என்று பரலோகத்தைப் பிதாவின் வீடு என சீடர்களுக்கு அறிவித்தார்.


13. பரலோகம் ஆலயம் என அழைக்கப்படுகிறது :- பரலோகத்தைக் குறித்து வேதம் பயன்படுத்தும் மற்றொரு பதம் தேவனது ஆலயமாகும். “என் தேவனை நோக்கி அபயமிட்டேன் ; தமது ஆலயத்தினின்று என் சத்தத்தைக் கேட்டார்" (2 சாமு. 22:7), கர்த்தர் தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார், அவருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது (சங். 11:4). உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம் (சங். 65:4). ஆகிய வசனங்கள் தேவனுடைய ஆலயம் என்பது தேவன் வாசம்பண்ணும் பரலோகம் என்பதையே குறிப்பிடுகின்றன. ஏசாயா தன்னுடைய தரிசனத்தில் ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கக் கண்டேன். அவருடைய வஸ்திரத் தொங்கலால் தேவலாயம் நிறைந்திருந்தது (ஏசா. 6:1) எனக் குறிப்பிடுவதும் இந்தப் பரலோக ஆலயத்தையே.


14. பரலோகம் வாசஸ்தலம் என அழைக்கப்படுகிறது :- பரலோகம்

என்பதற்கு வாசஸ்தலம் என்ற பதமும் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சீயோனில் அவர் வாசஸ்தலமும் இருக்கிறது (சங். 76:2). தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும் விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாய் இருக்கிறார் (சங். 68:5). என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு (யோவா. 14:2), நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாய் இருக்கிறோம் (2 கொரி. 5:2). போன்ற வசனங்கள் பரலோகத்தை வாசஸ்தலம் என்றே தெரிவிக்கின்றன.


15. பரலோகம் சிங்காசனம் என அழைக்கப்படுகிறது:- வானம் எனக்கு சிங்காசனம்; பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப் பட்டது ? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது ? (ஏசா. 66:1). என்ற வசனத்தில் தேவன் தங்கியிருக்கும் ஸ்தலம் சிங்காசனம் என அழைக்கப் படுகிறது என்பதை அறியலாம். இயேசு கிறிஸ்துவின் மலைப் பிரசங்கத்திலும் தேவன் வீற்றிருக்கும் இடம் சிங்காசனம்' என அறிவித்தார். வானத்தின் பேரில் சத்தியம்பண்ண வேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம் (மத். 5:34) என்பதால் வானத்தின் பேரில் சத்தியம் பண்ணுகிறவர்கள் தேவ சிங்காசத்தின் பேரில் சத்தியம் பண்ணுகிறார்கள். வானம் அவர் சிங்காசனம் என்றால் அதில் வீற்றிருக்கிறவர் எத்தனை பெரியவராயிருப்பார் !


16. பரலோகம் மகிமை என அழைக்கப்படுகிறது :- பரலோகத்தைக் குறிப்பதற்கு மகிமை என்ற வார்த்தையும் வேதத்தில் சில இடங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. சங்கீதக்காரன் இதைக் கூறும்போது முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர், பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு என்றான் (சங்.73:24-25). ஸ்தேவான் மரிக்கும் போது, அவன் வானத்தை அண்ணாந்து பார்த்து தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலது பாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு, அதோ வானங்கள் திறந்திருக் கிறதையும் மனுஷகுமாரன் தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான் (அப். 7:55-56). தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்..... மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார் (1 தீமோ. 3:16). கிறிஸ்துவானவர் 'மகிமையின்' நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த ரகசியம் (கொலோ. 1:27). இந்த வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மகிமை என்ற வார்த்தை பரலோகத்தையே குறிக்கிறது.


17. பரலோகம் வானம் என்று அழைக்கப்படுகிறது :- வேதத்தில் சில இடங்களில் பரலோகத்தைக் குறிப்படுவதற்கு வானம் என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து (மத்.14:19) எனக் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் வானம் என்ற பதம் தேவனது வாசஷ்தலத்தைத் குறிப்பதற்காக கூறப்பட்டுள்ளது. இளைய குமாரன் தன் தகப்பனிடத்திற்குப்போய் தகப்பனே பரத்திற்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன் (லூக். 15:18) எனக் கூறுகையில் பரத்திற்கு என்ற பதம் பரலோகத்தையே குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கூறிய வசனங்கள் பரலோகம் என்பது ஒரு மெய்யான இடம் என்பதையும், நிஜமான ஸ்தலம் என்பதையும் தெளிவாகக் கூறுகிறது. மாத்திரமல்ல, பரலோகம் என்பது தேவன் இனிமேல் உருவாக்கக்கூடிய ஒரு ஸ்தலமல்ல. பரலோகம் என்பது ஏற்கெனவே இருக்கின்ற ஒரு ஸ்தலம், அங்கு தேவனும் தேவ தூதர்களும் வாசம் செய்கின்றனர். மூப்பர்கள், முற்பிதாக்கள் மரித்த பரிசுத்தவான்கள் அங்கு இளைப்பாறுகின்றார்கள், தேவன் தன்னுடைய சகல வல்லமையான செயல்களையும் அங்கிருந்தே செயல்படுத்துகின்றார்.


18. பரலோகம் என்பது ஆச்சரியமான ஸ்தலம் :- எழுதியிருக்கிறபடி தேவன் தம்மில் அன்புகூறுகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை ( 1கொரி. 2:9) என வசனம் கூறுவதால் பரலோகத்தை நமது மாம்சக் கண்களாலும், கற்பனையினாலும் நினைத்துப்பா பூமியில் நாம் பார்த்து பிரம்மிக்கக்கூடிய எத்தனையே 22/107 மூளையால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பரலோகமோ இதுவரை நம் கண்களால் கண்டிராத, நம் செவிகளால் கேட்டிராத, இப்படி இருக்கும் என்று எந்த மனிதனும் தன் இருதயத்தில் நினைத்துக் கூட பார்த்திராத அளவிற்கு ஆச்சரியமான ஒரு ஸ்தலமாகவே இருக்கும். பரலோகத்திலிருந்து ஒருவர் பூமிக்கு வந்து அதை மனிதர்களுக்கு எவ்வளவுதான் விவரித்துக்கூறினாலும், மனித மூளையால் அதை கிரகித்துக்கொள்ளமுடியாத அளவிற்கு பாலோகம் அத்தனை ஆச்சரியமான ஸ்தலமாகும்.

19. பரலோகம் பூரண அறிவுள்ள ஸ்தலம் :- இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய் பார்க்கிறோம். அப்பொழுது முகமுகமாய் பார்ப்போம். இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன் (1 கொரி. 13:12). மேற்கூறிய வசனம் இன்று நாம் பெற்றிருக்கிற குறைந்த அறிவையும், பரலோகத்தில் நாம் பெற்றுக்கொள்ளப் போகும் நிறைவான அறிவையும் வேறுப்படுத்திக் காட்டுகிறது. இம்மைக்குரிய மறுமைக்குரிய பல கேள்விகளுக்கு எத்தனையோ ஆண்டுகளாய் பதிலைப் பெற முடியாமல் குழம்பியிருக்கிறோம். ஆனால் இக்குழப்பங்களுக்கெல்லாம் பரலோகத்தில் நமக்கு பூரண பதில் கிடைத்துவிடும்.


20. பரலோகம் பிரிந்தவர்கள் சேரும் ஸ்தலம் - இந்த பூமியிலே நமக்கு . அருமையானவர்களை நாம் இழக்கக் கொடுப்பது தவிர்க்கமுடியாத ஒன்று. ஏனெனில் பூமியில் சரீர மரணம் ஒவ்வொருவருக்கும் நியமிக்கப்பட்ட ஒன்று. ஆனால் சரீர மரணத்தின் பின்பு அழிவில்லாத நம்முடைய ஆத்துமா பரலோகில் சென்று மகிமையடைந்த சரீரத்தில் என்றென்றும் இயேசுவோடு வாழும். ஆகவே நாம் பரலோகம் சென்றவுடன் இந்த பூமியில் நம்மை விட்டுப் பிரிந்து கிறிஸ்துவுக்குள் மரித்த நமக்கு அருமையானவர்களை அங்கே காண்போம். அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு இவ்விதமாய் எப்பொ ழுதும் கர்த்தருடனேகூட இருப்போம் (1 தெச. 4:16-17) என்று தெசலோனிக்கேயர் நிருபத்தில் பவுல் இதையே எழுதி வைத்துள்ளான். நமக்கு அருமையானவர்களை மாத்திரமல்ல, ஆதாம் முதற்கொண்டு கிறிஸ்துவின் வருகையில் எடுத்துக் கொள்ளப்படும் பரிசுத்தவான்கள் வரை அனைவரையும் நாம் அங்கே காண்போம்.

எல்லாப் பரிசுத்தவான்களும் ஒன்றாகக் கூடுகின்ற அந்த நாளும் அந்த இராஜ்யமும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.


எனினும் பூமியில் நாம் வாழும்பொழுது நமக்கு அருமையானவர்களுக்கும் நமக்கு முள்ள தொடர்பு பரலோகில் நீடிக்குமா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதிலாகும். ஏனெனில் கணவன் மனைவி இருவருடைய உறவும்கூட 'மரணம் நம்மைப் பிரிக்கும் வரை' என்று அவர்கள் கொடுத்த வாக்குப்படி மரணம் வரைதான் தொடரும். மரணத்தின் பின்பு பரலோகிலே அவர்கள் தேவ தூதர்களைப் போலத்தான் இருப்பார்கள். பூமியிலுள்ள மாம்சப் பிரகாரமான உறவுகளும், உடன் பிறந்த உறவுகளும் பரலோகில் தொடர்வதில்லை. எனவே பாலோகம் என்பது காலகாலமாய் பிரிந்திருந்த பரிசுத்தவான்கள் அனைவரும் சந்தித்து கூடிவாழும் இடமாகும்.

Post a Comment

0 Comments