இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

இருதயத்தில் கிறிஸ்து (Christ In Your Heart ❤️)



இருதயத்தில் கிறிஸ்து

(Christ In The Heart ❤️)


ஒரு கடிகாரத்திற்கு அதன் பிரதான வில் எப்படியோ அப்படியே மனு ஷனுக்கு அவன் இருதயம் பிரதானம். இருதயமே மனுஷன். அவன் புறம்பே எப்படிக் காணப்பட்டபோதிலும், அவன் இருதயம் எப்படியி ருக்கிறதோ அதுவே அந்த மனுஷன். நாம் வெளித்தோற்றத்தின்படி மனுஷரை நிதானிக்கிறோம். அவர்கள் இருதயத்தை நாம் அறியமுடி யாது. தேவனோ வெளித்தோற்றத்தையல்ல, அவர்களுடைய இருதயத் தின் நிலைமையை அறிந்து தீர்ப்பிடுகிறார். இருதயம் சகல கேடுகளுக்கும் ஊற்றாயிருக்கலாம் அல்லது சகல நன்மைகளுக்கும் உற்றாயிருக்கலாம்.


"எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே மகாதிருக்குள்ளதும் கேடுபாடுள்ளதுமாயிருக்கிறது; அதை அறியத்தக்கவன் யார்?" இருத யத்திலிருந்தே சகல அக்கிரமங்களும் பாவங்களும் புறப்படுகிறதென்று ஆண்டவரும் சொல்லுகிறார். 


"நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக்காட்டுகிறான்; பொல்லாத மனு ஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லா ததை எடுத்துக்காட்டுகிறான். 


இருதயம் உள்ளான மனுஷன்; புறம்பே காணப்படுவது வெளியான மனுஷன். நன்மையானாலும் தீமையானா லும் உள்ளும் புறமும் ஒன்றுபோலிருப்பது உண்மை. உள்ளே அக்கிர மங்களும் வெளியே தேவ பக்தியும் தோன்றுவது மாயம். மாயக்காரரான வேதபாரகர், பரிசேயர் இரட்சிக்கப்படுவது கஷ்டம். அவர்களால் பாவி களென்று தள்ளப்பட்டவர்களோ இரட்சிப்புக்கு அருகரானார்கள். அவர் கலிடத்தில் மாயமில்லை. இருதயம் சரியாயிருந்தால் எல்லாம் சரியாயிருக்கும். ஆகையால் ஆண்டவர் நமது இருதயத்தைக் கேட்கிறார். அங்கே வசிக்க விரும்புகிறார்.



இருதயத்தில் கிறிஸ்து பிரவேசிப்பது ஜீவனின் உற்பத்தி.


 'என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்ப வேதனைப்படுகிறேன்' (கலா. 4:19). 

 

கலாத்திய சபையார் அங்கே குடியேறின யூதர்களாயிருக்கவேண்டும். நிருபத்தில் பழைய ஏற்பாட்டு வாக்கியங்களையும் உதாரணங்களையும் பவுல் தாராளமாக எழுதியிருக்கிறார். புறஜாதிகளுக்கு அவைகள் விளங்கா. அப்போஸ்தலன் சரீரத்தில் நல்ல சுகமில்லாதிருந்தும் கிறிஸ்துவை அவர்களுக்கு ஊக் கமாகப் பிரசங்கிக்க, அவர்களும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள். இப்படியிருக்க, வேறு பிரசங்கிகள் சுவிசேஷம் என்னும் பேராலேநியா யப்பிரமாணத்தின் கிரியைகளினால மாத்திரம் நீதி கடைக்கும் என்று வற்புறுத்திப் பிரசங்கிக்கவே, இந்தக் கலாத்தியர் கிறிஸ்துவையும், அவரது கிருபையையும் நழுவவிட்டுப் பின்வாங்கிப் போனார்கள். இதினிமித்தம் பவுல் அவர்களைக் கடிந்துகொண்டு, இரட்சிப்புக்குக் கிறிஸ்துவைத் தவிர வேறு வழியில்லையென்றும், அவரை உறுதியாய்ப் பற்றிக்கொள் ளாததால் அவர்கள் விழுந்தார்களென்றும் சொல்லி: "என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்ப வேதனைப்படுகிறேன்" என்கிறார். சிறு பிள்ளைகளே என்பது அப்போஸ்தலன்.


யோவான் அடிக்கடி உபயோகிக்கிற அருமையான வார்த்தை. பவுல் இந்த ஒரு இடத்தில் மாத்திரம் அதை உபயோகிக்கிறார். கலாத்தியர் விஷயமாய் தாம் முன் எடுத்துக்கொண்ட பிரயாசம் வீணாயிற்றென்று கண்டு மறுபடியும் கஷ்டப்படுகிறேன் என்கிறார். கிறிஸ்து அவர்கள் இருதயத்தில் சரியாய் உருவாகவில்லை. அவர்களுடைய பின்வாங்குதல் அதைக் கெடுத்தது. கிறிஸ்து அவர்கள் உள்ளங்களில் உருவாகிறது அவர்களுக்கு ஜீவனும் மறுபிறப்புமாகும். கடவுள் மனுஷனை ஒரு சிறந்த நோக்கத்தோடே சிருஷ்டித்தார். ஆலயமாகிய மனுஷனுக்குள் தாம் வாசம்பண்ண வேண்டுமென்பதே அந்த நோக்கம். அவர் அவனுக் குள் வாசம் பண்ணி அவனை ஆண்டு நடத்துவதாலே . அவன் ஆசீர்வதிக்கப்படுவான், சிருஷ்டிகர் அவனில் மகிமைப்படுவார், ஏற்ற காலம் வரும்போது அவர் அவனைத் தமது மகிமையிலே சேர்த்துக்கொள்வார். வானத்திலும் பூமியிலுமுள்ள சர்வ சிருஷ்டிகளும் சிருஷ்டிகருடைய சித் தத்தைத் தவறாது நிறைவேற்றுவதாலே அவரை மகிமைப்படுத்துகின்றன. அதுபோலவே மனுஷனும் தேவ சித்தத்தைப் பூரணமாய் நிறைவேற்றி, அவருடைய நித்தியமகிமைக்குப் பங்குள்ளவனாக வேண்டுமென்பது தேவ தீர்மானம். இந்தத் தீர்மானத்துக்கு ஆபத்து வந்தது. பாக்கியமான நிலை மையிலிருந்த மனுஷன் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு, அவன் பொய்யை நம்பி தன் ஜீவனின் அதிபதியைப் புறக்கணித்தான்.


வெறுமையான அவனுடைய இருதய ஆசனத்தில் சாத்தான் ஏறிக்கொண்டான். சாத்தானைப்போலவே அவன் ஆளுகையும் இருக் கும். அவன் மனுஷ கொலைபாதகனும், பொய்யனும், வஞ்சித்துக் கெடுக்கிறவனுமானவன். அவன் ஆளுகைபின் பலனை விஸ்தரிக்க வேண்டியதில்லை. மனுமக்களை ஆண்டுகொண்ட பாவமும் சாபமும் மரணமும் சகல கேடுகளும் அவனாலே வந்தன. அவன் எப்படிப்பட் டவன் என்பதை இப்போது உலகத்தில் நடந்து வரும் யுத்தம் வெளிப்படுத்துகிறது. பட்டணங்களும், ஆலயங்களும் நிர்மூலமாயின. புருஷர் ஸ்திரீகள் குழந்தைகள் ஆயிரக்கணக்காய் மாண்டார்கள். போர் வீரரான வாலிபர்கள் இலட்சக்கணக்காய் அழிந்தார்கள், இன்னும் அழிகிறார்கள். பஸிபிக்கிலும் கீழ்க்கோடியிலும் யுத்தத்தால் உண்டாகும் அழிவுகள் கொஞ்சமல்ல. இந்தியாவுக்கும் என்ன சம்பவிக்குமோவென மக்கள் கலங்கித் தவிக்கிறார்கள். இக்கொடிய செயல்கள் யாவுக்கும் சாத்தானே காரணம் என்பதை மறுக்க முடியாது. ஒன்று 


"ஆண்டவர் நமக்குள்ளிருந்து நம்மை ஆளவேண்டும் அல்லது சாத்தான் நம்மை ஆளவேண்டும்"


நடுநிலைமையில்லை. தன்னை ஆண்டவரும் ஆளுகிறதில்லை; சாத்தானும் ஆளுகிறதில்லை என்று ஒருவரும் சொல்லமுடியாது. 


எந்த இருதயமும் வெறுமையாயிருப்பதில்லை. 


கிறிஸ்து பன்னிருவரைத் தமக் குச் சீஷராகத் தெரிந்துகொண்டார். அவர்களெல்லாரிடத்திலும் அவர் அன்பாயிருந்தார். அவரில் பட்சபாதமில்லை. இப்படியிருக்க யூதாஸ்காரி யோத்தின் இருதயம் வர வர அவரைவிட்டுப் பிரிந்தது. சத்துருக்களுக்கு அவரைக் காட்டிக்கொடுக்கவும் அவன் தீர்மானித்தான். இது சாத்தா னுடைய தூண்டுதல் என்று வாசிக்கிறோம். கடைசியாக அவனுடைய இருதயம் முற்றிலும் கிறிஸ்துவை விட்டுப் பிரிந்தது. உடனே “சாத்தான் யூதாசுக்குள் புகுந்தான். ஆண்டவர் சொன்ன வேறொரு திருஷ்டாந் தம் இதற்கு அனுசரணையாயிருக்கிறது. அசுத்த ஆவி ஒருமனுஷனை விட்டுப் புறப்பட்டது. அவன் இருதயம் வெறுமையாயிற்று. அந்த அசுத்த ஆவி வறண்ட இடங்களில் அலைந்து இளைப்பாறுதல் தேடியும் கண் டடையாமல்: "நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன்“ என்றது. அங்கே வந்து பார்த்தால் அந்த வீடு இன்னும் வெறு மையாயிருப்பதோடு அதிகமான கேட்டுக்கும் அனுகூலமாயிருந்ததைக் கண்டு, திரும்பிப்போய் தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளோ டுவந்து அவன் உள்ளத்தில் குடியிருந்தது. அவன் நிலைமை முன்னிலும் அதிக மோசமாயிற்று. ஆண்டவரை அவன் ஏற்றுக்கொண்டிருப்பானானால் திரும்பிவந்த பிசாசுக்கு அங்கே இடமிராது. "என்னோடிராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்" என்றார். கிறிஸ்து இருதயத்தில் இல் லையென்றால் அவருடைய விரோதியாகிய சாத்தான் எப்படியும் இருத யத்தைக் கைப்பற்றிக்கொள்வான் என்பது நிச்சயம்.


தன் இருதயத்தில் தேவனை உடையவன் தேவ மனுஷன் என்றழைக்கப்படுவதுபோல, தன் இருதயத்தில் பிசாசை உடையவன் பிசாசென்று அழைக்கப்படுகிறான். யூதாசை சாத்தான் தூண்டினான், யூதா சுக்குள் அவன் பிரவேசித்தான், அந்த யூதாசைக் குறித்து: "பன்னி ருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள் ஒருவன் பிசாசாயிருக்கிறான்?' என்றார். பேதுரு ஆண்டவருக்கு எவ் வளவு அருமையானவரானாலும் சிலுவை கூடாதென்று சொன்னபோது: "எனக்குப் பின்னாகப்போ சாத்தானே" என்றார். நமக்குள்ளும் பிறரிடத் திலும் கிரியை செய்யும் சாத்தானைக் காணக்கூடிய பரிசுத்த பார்வை நமக்கில்லை. துர்நாற்றத்திலேயே காலமெல்லாம் குடியிருப்பவர்களுக்கு அந்த நாற்றம் தெரியாதது போல பாவத்தில் சஞ்சரிப்பவர்களுக்கு சாத்தானுடைய தந்திரங்கள் தெரிகிறதில்லை. நாம் பாவத்தைப் பிரதானமா கக் காண்கிறோம். இரட்சகரோ பாவத்துக்குக் காரணனான பிசாசைக் காண்கிறார். நாம் பாவம் செய்றோம் என்பதும், அந்தப் பாவத்துக்கு நாமே உத்தரவாதிகள் என்பதும் மெய்யாயினும் சாத்தான் சம்பந்தப்படாத பாவமில்லை என்பதை நாம் அறிய வேண்டும். ஒவ்வொரு பாவத்தின் பக்கத்திலும் அவன் நிற்கிறான். அவன் தன்னை மறைத்துக் கொள் ளுகிறான். "பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான். 34 ஆண்டவர் யூதரைப் பார்த்து: "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசா சினால் உண்டானவர்கள், உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்" என்றார். 'உலகம் முழுவதும் பொல்லாங் கனுக்குள் கிடக்கிறது." அவன், அவரவருடைய பாவ வாசல் வழியாய் உட்பிரவேசித்து இருதயத்தைக் கைப்பற்றிக்கொண்டு தன் இஷ்டப்படியே அவர்களை நடத்தி ஆத்துமாக்களை வேட்டையாடுகிறான். ஒருவனுடைய பயங்கரமான பார்வையும், மூர்க்கமான பேச்சும், அக்கிரமமான செய்கைகளும் சாத்தான்அவனுக்குள் இருக்கிறான் என்பதைக் காட்டு கின்றனவல்லவா? கல்விமான்கள் கல்வியற்றோர், தனவான்கள் ஏழை கள், உயர்ந்தோர் தாழ்ந்தோர், ஆண்கள், பெண்கள், அருமையாகப் பெற்று வளர்த்த மக்கள் யாவரும் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டுத் தங்கள் ஜீவியத்தைப் பாழாக்குகிறார்கள் என்பது நிச்சயம். இந்த மோசமான பிசாசின் வல்லமையிலிருந்து நமக்கு விடுதலைவேண்டும். நாம் எவ்வள வாய்க் கெட்டுப்போனபோதிலும் நம்மைப்பற்றிய அனாதித் தீர்மானத்தைப் பரமபிதா கைவிடவில்லை. அவருடைய அளவற்ற அன்பும் இலவச மான கிருபையுமே நமது இரட்சிப்புக்குக் காரணம். பிசாசின் கிரியை களை அழிக்கவும் அவன் ஆளுகையிலிருந்து நம்மை விடுவிக்கவும் அவர் தமது அருமைக் குமாரனை உலகத்தில் அனுப்பினார். இவர் தமது மரணத்தின் மூலமாய்ப் பிசாசை அழித்து, நமது பாவங்களை மன்னித்து, பிதாவோடு நம்மை ஐக்கியபடுதினார். கிறிஸ்துவுக்குள் பரமபிதா தாம் இழந்துபோன மனுஷனைக் கண்டடைந்தார், மனுஷனும் தான் இழந்துபோன பிதாவைக் கண்டடைந்தான்.


அவர் நமது இருதயங்களில் வசிக்க வழி உண்டாயிற்று. ஆண்டவர் நமக்கு வெளியேயிருந்து நம்மை இரட்சிக்கமுடியாது. அவர் நமக்கு வெளியேயிருந்து சரீரத்திற்குரிய ஆயிரம் நன்மைகளை நமக்குக் கொடுக்கலாம். ஆகாரம் கொடுக்கலாம்; வஸ்திரம் கொடுக்கலாம், உத் தியோகம் கொடுக்கலாம், சம்பாத்தியம் கொடுக்கலாம், வியாபாரம் லாபமாய் நடக்கலாம், வயல்கள் தானியங்களை விளைவிக்கலாம், இவை போன்ற சகல நன்மைகளையும் அவர் நமக்குத் தாராளமாய்க் கொடுக்கலாம். கிறிஸ்தவர்களுக்கும் தேவ பக்தருக்கும் மாத்திரமா இப்படிச் செய்கிறார்? எல்லாருக்குமே பட்சபாதமின்றி இவ்வாறு சரீர நன்மைகளை அருளுகிறார். இரட்சகர் சொல்லுகிறபடி நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் தேவன் நன்மை செய்கிறார். பார்க்கப்போனால் தேவ மக்களைப் பார்க்கிலும் தேவனற்றவர்களும் அவரைத் தேடாதவர்களும் உலகத்தில் செழிப்பாயிருக்கிறார்கள். அவர்கள் முழுமனதோடே பூமிக்குரியவைகளைப் பிரதானமாய்த் தேடுகிறபடியால் அவைகளை பெற்றுக்கொள்ளுகிறார்கள். சங்கிதகாரன் சொல்லுகிறபடி: 'இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கும் உலகமக்கள்" அவர்கள். அவர்களுக்குச் சகலமும் வாய்க்கும். தேவனற்ற ஐசுவரியவானுடைய நிலம் நன்றாய் விளைந்தது. ஏன் தீய்ந்துபோகக்கூடாது? சொல்லப்போனால் தேவனு டைய பிள்ளைகள் நிலைமை தான் உலகத்தில் கஷ்டமும் கவலையு முள்ளதாயிருக்கிறது.


எவ்வளவுக்கு அவர்கள் கிறிஸ்துவைப் பின் தொடர்ந்து அவர் சாயலுக்கு மாறுகிறார்களோ அவ்வளவுக்குக் கஷ்ட நிலைமையிலிருப்பார்கள். என்றாலும் உண்ண ஆகாரமும் உடுத்த வஸ்திரமும் தலைசாய்க்க இடமும் இல்லாமற்போவதில்லை. அவர்கள் தரித்திரர் என்றெண்ணப் - பட்டாலும் ஆவிக்குரிய காரியங்களில் அநேகரை ஐசுவரியவான்களாக் கும் பொக்கிஷம் அவர்களிடத்திலுண்டு. அவர்கள் கிறிஸ்துவை ஒப்பற்ற செல்வமாக ஏற்றுக்கொண்டிருப்பதால் உலகத்தில் "எந்த நிலைமையிலும் மனரம்மியமாயிருக்க. அவர்களுக்குத் தெரியும். எவ்விடத்திலும் எல் லாவற்றிலும். திருப்தியாயிருக்கவும், பட்டினியாயிருக்கவும், பரிபூரணம டையவும், குறைவுபடவும் ஆண்டவரால் போதிக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் செல்வமாய் வாழ்வதைக் கண்டு அவர்கள் பொறா மைப்படுவதில்லை. கடவுள், மனுஷருக்குப் புறம்பேயிருந்து ஏராளமான சரீர நன்மைகளை அருளுகிறார் என்றும், அவர்கள் அவரை மறந்து பாவ வழிகளில் சென்றாலும் அவர் அவர்களை உலக நன்மைகளால் நிரப்புகிறார் என்றும் கவனித்தோம். ஆனால் அவர் நமக்குள் வராமல் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் கடுகளவு நன்மையையாகிலும் நாம் காணமுடியாது. வினை எங்கேயோ அங்கே அதற்குப் பரிகாரம் உண்டாகவேண்டும்.


மனுஷனில் காணப்படும் கேடுகள் யாவும் அவன் இருதயத்திலிருந்து புறப்படுகின்றன. அந்த இருதயம் சாத்தான் கைவசமிருக்குமளவும் இந்தக் கேடுகள் நீங்க வழியில்லை. ஆகையால் கிறிஸ்து நமக்குள் உருவா கவேண்டியது அவசியம். அவர் உட்பிரவேசிக்காமல் நமக்கு நிவாரணம் இல்லை. 


''குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்; தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவனில்லாதவன்". அவர் உட்பிரவேசிக்கா மல் நமக்குள் ஜீவனில்லை. "அவரே நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து.


 அவர் உட்பிரவேசிக்காமல் நமக்கு மறுபிறப்பில்லை. மறுபிறப்பில்லாமல் நாம் தேவ மக்களாக முடியாது. மறுபிறப்பில்லாமல் நாம் தேவ ராஜ் யத்தைக் காணவோ, அதில் பிரவேசிக்கவோ முடியாது. மறுபிறப்பில் லாமல் மகிமையில் பங்கு பெற முடியாது. கிறிஸ்து நமது இருதயத் தில் வீற்றிருக்கும்போது நமது ஜீவியம் முழுவதையும் மாற்றுகிறார். தாம் சிலுவையில் சம்பாதித்த இரட்சிப்பின் ஆசீர்வாதங்களை நமது ஜீவியத் தில் பலிதப்படுத்துகிறார். ஆண்டவர் தமது சீஷர்களோடு இருந்த நாட் களில் எவ்வளவோ அருமையாய் அவர்களுக்குப் போதித்தார். அவர்கள் அவைகளை அறியவுமில்லை, அவைகளைக் கைக்கொண்டு நடக்க முடியவுமில்லை. போதித்ததுமன்றி தாமே அவைகளுக்கு முன்மாதிரி யாக நடந்து காண்பித்தார். அந்த மாதிரியின்படி நடக்க அவர்களால் முடியவில்லை. அவர்களால் அப்போது முடியாதென்று ஆண்டவருக்குத் தெரியும். ஆகையால் அவர் அவர்களைக் கடிந்துகொள்ளவில்லை. அவர்தாமே அவர்களுக்குள் பிரவேசித்து அவர்கள் ஜீவியத்தை மாற்றி, அவர்களைப் பலப்படுத்தினால் அல்லாமல் அவர்கள் இரட்சிக்கப்பட மாட்டார்களென்பதை ஆண்டவர் அறிவார். அவர் உயிர்த்தெழுந்த பின் சீசர்களிடம் பேசின சமயத்தில்:

  'நான் உங்களோடு இருந்தபோது" என் கிறார். அந்த மூன்று வருஷகாலமாய் அவர் அவர்களோடுகூட இருந் தார். அவர்களுக்கு வெளியே அவர்கள் பக்கத்தில் இருந்தார். அவர் களுக்குள் அவர் இருக்கவில்லை. ஆனால் அவர் அவர்களுக்குள் இருக்கும் நாள் வருமென்று அறிவித்தார். இப்போது சரீரத்தில் நான் உங்களோடு இருக்கிறேன். உங்களை இரட்சித்து ஆவிக்குரியவர்களாக உங்களை மாற்றமுடியவில்லை. எவ்வளவு காலம் நான் உங்களோடிருந்தாலும் உங்கள் பாவங்களும், பலவீனங்களும், அறிவீனங்களும் நீங்கி நீங்கள் இராஜ்யத்தின் பிள்ளைகளாகப் போகிறதில்லை. ஆகையால் நான் கட்டாயம் உங்களை விட்டுப் போகவேண்டும். போவேனாகில் நான் மறுபடியும் என் ஆவியின்மூலம் உங்களுக்குள்ளே வந்து என்னை உங் களுக்குள் வெளிப்படுத்துவேன். "அந்நாளில் நான் உங்களுக்குள்ளே இருப்பதை நீங்களே அறிவீர்கள்" என்றார். அந்தப்படியே பெந்தெ கொஸ்தே நாளில் அவர் அவர்களுக்குள் வந்து அவர்கள் இருதயங் களை ஆண்டுகொண்டார். ஆ, அவர்களில் எவ்வளவு ஆச்சரியமான மாறுதல்! அவர் சிலுவையில் சம்பாதித்த இரட்சிப்பின் ஆசீர்வாதங்களை அவர்கள் இருதயங்களில் பலிதப்படுத்தினார். சிலுவையை முழுவதும் பகைத்து வெறுத்த அவர்கள் இந்த இரட்சிப்பின் ஆசீர்வாதங்களைத் தங்கள் இருதயங்களில் பெற்றவுடனே, சிலுவையின் மகத்துவத்தை எங் கும் கூறி அறிவித்தார்கள். கிறிஸ்து அவர்கள் இருதயங்களில் உருவாக, அவரே அவர்களுடைய ஜீவனாகியிராவிட்டால் அவர்கள் ஒன்றுக்கும் உதவமாட்டார்கள். கிறிஸ்தவர்களில் அநேகர் ஆவிக்குரிய காரியங்களில் ஒன்றுக்கும் உதவாமல் தானே இருக்கிறார்கள். பெந்தெகொஸ்தே நாளில் சாத்தான் புறம்பாகத் தள்ளப்பட்டான்.


ஆண்டவர் சிங்காசனமேறி இழந்துபோன இருதயங்களைத் திரும்ப வும் கைப்பற்றிக்கொண்டார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய சகல ஆசீர் வாதங்களினாலும் நிறைந்தார்கள். தேவநாமம் மகிமைப்பட்டது. ஆண் டவர் நமக்கு வெளியேயிருந்து நம்மை இரட்சிக்க முடியாது. அவரே நமது இரட்சிப்பு. ஒளி வேண்டுமானால் சூரியன் வேண்டும். ஒளியை சூரியனிலிருந்து பிரிக்கமுடியாது. இரட்சிப்பை இரட்சகரிலிருந்து பிரிக்க முடியாது. அவர் புறம்பேயிருந்து நமக்கு ஆகாரமோ, வஸ்திரமோ, பணமோ கொடுக்கலாம். இரட்சிப்பின் ஆசிர்வாதங்கள் அதைப்போல் எடுத்துக்கொடுக்கிற காரியங்கள் அல்ல. ஆவியாயிருக்கிற கர்த்தர் நமது ஆவியோடு சம்பந்தப்பட்டு, நமக்குள் கிரியை நடப்பித்து நம்மை இரட்சிக்கிறார். இந்த உள்ளான மாறுதலை அறியாதவர்கள் கிறிஸ்தவர் கள்அல்ல, இரட்சிக்கப்பட்டவர்களுமல்ல, தேவ ராஜ்யத்திற்குரியவர்களு மல்ல. இனி வெளிப்படும் மகிமையில் பிரவேசிக்கப்போகறவர்களுமல்ல. ஆயிரம் ஆராதனைகளுக்கு ஒழங்காய்ப்போனாலும், நற்கருணைப் பந் தியில் சேர்ந்தாலும், சபை ஆசரிப்புக்காக பொருள் சகாயம் செய்தா லும், கிறிஸ்து நமது இருதயங்களில் உருவாகாவிட்டால், அவர் நமக்குள் இராவிட்டால் சகலமும் வீணாகும். பவுல் தமது குணப்படுதலைப்பற்றி என்ன சொல்லுகிறார்? அவரிலுண்டான ஆச்சரியமான மாறுதலுக்குக் காரணமென்ன? எந்த அப்போஸ்தலனாகிலும் அவர் கிட்ட நெருங்கி அவரோடு தர்க்கிக்க முடியுமா? அவரைக் கிறிஸ்தவனாக்க முடியுமா? பவுல் எப்படி இரட்சிக்கப்பட்டார்?


 "தேவன் தமது குமாரனை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தார்"

 

 என்கிறார். அவர் ஜீவியம் மாற்றப்பட்டதற்கு இரகசியம் அதுதான். அது முதல் கிறிஸ்துவே பவுலின் இருதயத்தில் வாசம்பண்ணி தமது அடியானைப் பரிபூரணமாய் ஆசீர் வதித்து நடத்தினார். பிறப்பின்படி கிறிஸ்தவர்கள் தொகை பெருகலாம். இந்துக்களுக்குப் பிறந்தவர்கள் இந்துக்கள். மகமதியருக்குப் பிறந்தவர்கள் மகமதியர். அதுபோல கிறிஸ்தவர்களுக்குப் பிறக்கிறவர்கள் கிறிஸ்தவர் களென்று எண்ணப்படுகிறார்கள். ஆனால் இயற்கைப் பிறப்பு நம்மை கிறிஸ்தவர்களாக்காது, தேவ ராஜ்யத்திற்குரியவர்களாக்காது. ' 'மாம்சத் தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியா யிருக்கும்.'''ஆவியினால் உண்டாகும் மறுபிறப்பு, அவசியம். இந்த மறுபிறப்பு கிறிஸ்து நமக்குள் உருவாகுகிறதினாலே உண்டாகும். இது நாம் அறிந்திருக்கிற நிச்சயமான அனுபவம். அவரை விசுவாசிக்கி றோம், விசுவாசிக்கறோம் என்று வாயினாலே சொல்லுவதில் பிரயோ ஜனமில்லை. கிறிஸ்துவை இருதயத்தில் ஏற்றுக்கொள்ளாத விசுவாசம் விசுவாசமல்ல. 

 

'அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்".


விசுவாசமும் ஏற்றுக்கொள்ளுதலும் சேர்ந்தே வருகிறது. அவரை இருதயத்தில் ஏற்றுக்கொள்ளும்போது மாம்சப் பிறப்பிலிருந்து நாம் நீங்கி தேவனாலே பிறந்து அவருக்குப் பிள்ளைகளாகிறோம். இந்தப் பிறப்யைக் குறித்து பேதுரு: "இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்த தினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமான சுதந்திரத்திற்கேதுவாக ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்" என்கிறார். உயிர்த்தெழுந்த இரட்சகர் தமது ஆவியின் மூலமாய் நமக்குள் பிரவேசித்து, தமது ஜீவனாலே மறு பிறப்பை நம்மில் உண்டாக்கி, நம்மை தேவ மக்களாக்குகிறார்.




Post a Comment

0 Comments