இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

மகிமை அடைந்தவர்களின் பேரானந்தம் பகுதி 2 (The Rapture Of The Glorified)

 

பகுதி 2


பரிசுத்தவான்கள் அடையப் போகிறதான பேரானந்தத்தைக் குறித்து நாம் விரிவாகப் பார்த்தோம். இப்போது அவர்கள் எவ்வாறு அந்த நிலமைக்கு வந்தார்கள் என்பதை சற்று ஆராய்வோம்:


எவ்வாறு அப்பாக்கிய நிலையை அடைந்தார்கள்?


அவர்கள் பூலோகத்திலே மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தததால் அப்பாக்கிய நிலையை அடைந்தார்கள் என்று நாம் கூறமுடியாது. ஏனென்றால் வசனம். இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்" என்று கூறுகிறது. பரலோகத்திலே ஆனந்தத்தை அனுபவிப்பவர்களில் அநேகர் பூலோகத்திலே வருத்தங்களையும் சோதனைகளையும் அனுபவித்து வந்தவர்களாகவே காணப்படுவார்கள். ஆகவே இப்போது வருத்தத்தையும் சஞ்சலத்தையும் அனுபவிக்கிற ஆத்துமாக்களே, இதை நினைத்து உங்களைத் தேற்றிக் கொள்ளுங்கள். அவர்கள் தங்களுடைய சொந்த நற்குணத்தினாலே அங்கு வந்திருக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் தங்களுடைய அங்கிகளை இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்" என்று காண்கிறோம். அவர்களுடைய வஸ்திரங்கள் வெளுக்கப்பட வேண்டியதாக இருந்தது. எப்போதும் கறையில்லாதவர்களாக அவர்கள் வாழ்ந்திருக்கவில்லை. அவர்களிடத்தில் குற்றங்குறைகள் இருந்தன. ஏதோ தகுதிகள் இருந்தபடியினால் அவர்கள் மோட்சத்தை அடைந்திருக்கவில்லை. அவர்கள்


கடவுளுடைய கிருபையின் ஐசுவரியத்தை அடைந்திருந்தார்கள். அவர்கள் அங்கு வந்தது எப்படி ? அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் மூலமாக அங்கு வந்தார்கள் என்பதே முதலாவது காரணம். வெயிலும் உஷ்ணமும் அவர்கள் மீது படாதபடிக்கு ஆட்டுக்குட்டியானவர்தாமே அவைகளைத் தம் மீது ஏற்றுக் கொண்டார். தேவனுடைய உக்கிர கோபாக்கினையாகிய தீர்ப்பானது நமது மீட்பரின் மீது செலுத்தப்பட்டது. அது அவரைத் தகித்து எரித்தது. துயரமும் அங்கலாய்ப்பும் அவரை ஆட்கொண்டது. நமது மீட்பர் அந்தப் பாடுகளை ஏற்றுக் கொண்டபடியால் நமக்கு இனி அந்தப் பாடுகள் இல்லை. பரலோகத்தைக் குறித்த நமது நம்பிக்கையானது கிறிஸ்துவின் சிலுவையில் இருக்கின்றது.


மீட்பரானவர் தமது இரத்தத்தை சிந்தினார் அவர்க பரலோகத்தை அடைந்ததற்கு இரண்டாவது காரணமாயிருக்கிறது. தங்கள் வஸ்திரங்களை அதிலே தோய்த்து அவர்கள் வெளுத்தார்கள். விசுவாசமானது அவர்களை மீட்பரோடு இணைத்தது. அவர்கள் அதிலே வெளுத்திருக்காவிட்டால் அவர்கள் சுத்தமாகியிருக்க மாட்டார்கள். கடவுள் அருளிச் செய்திருப்பவைகளை விசுவாசித்து ஏற்றுக் கொள்ளாவிட்டால் யாருமே மோட்சத்திற்கு வரமுடியாது. நீங்கள் என்ன நிலமையில் இருக்கிறீர்கள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் வஸ்திரங்களை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்திருக்கிறீர்களா? கிறிஸ்துவே உங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறாரா? அப்படி இல்லையென்றால் நீங்கள் மோட்சத்திற்கு வருவதில் என்ன நிச்சயமிருக்கிறது? அங்கே வருபவர்கள் மிகுந்த ஆனந்தத்தை அடைவார்கள் என சொல்லப்பட்டிருக்கிறது. வெயிலோ உஷ்ணமோ இவர்கள் மீது படப்போவதில்லை. ஏனென்றால் சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவர்தாமே இவர்களோடேகூட இருப்பார். கிறிஸ்துவை தரிசித்து அவர் சமூகத்தில் இருக்கிறவர்கள் துக்கமாயிருக்கக்கூடுமோ ? இயேசு தம்மையே முழுவதுமாக அவர்களுக்கு வெளிப்படுத்தியிருப்பதே அவர்களுடைய ஆனந்தத்துக்குக் காரணமாயிருக்குமல்லவா?


அதையும் தவிர்த்து அவர்கள் தேவனுடைய அன்பையும் அனுபவிப்பார்கள். ஏனென்றால் "தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்" என்று அந்த அதிகாரத்தின் கடைசி வசனம் சொல்லுகிறது. இயேசுக்கிறிஸ்துவின் இரத்தம் செலுத்தப்பட்டிருக்கிறது. இயேசுவின் பிரசன்னம் அனுபவிக்கப்படுகிறது. கடவுளின் அன்பு முழுவதுமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது - இவைகளே மீட்கப்பட்டவர்கள் பரலோகத்திலே பேரானந்தத்தை அனுபவிப்பதற்கான காரணங்கள். இவைகள் நமக்குப் போதிக்கும் காரியங்கள் யாவை என்பதை ஆராய்ந்து இந்த தியானத்தை முடிப்போம்:


நாம் கற்றுக் கொள்கிற பாடங்கள் யாவை?


பரலோகத்தில் காணப்படுகின்ற பேரானந்தம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், அதை அடையும்படிக்கு நாமும் ஏங்கித் தவிக்க வேண்டும் என்பதே. பரலோகத்தை அடைய வாஞ்சிப்பது மிகவும் நல்ல காரியமே. ஆனால், பூலோகத்திலே நாம் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தப்பிப்பதற்காக அதை வாஞ்சிக்கக் கூடாது. அதன்காரணமாக இவ்வுலகத்தை விட்டு சீக்கிரமாகப் போய்விட வேண்டும் என நினைத்துக் கொண்டேயிருப்பது சோம்பேறித்தனம் - அது கடமையை செய்ய மனதில்லாமையைக் காட்டுகிறது. ஆனால் இயேசுக்கிறிஸ்து எங்கே இருக்கிறாரோ அங்கே நானும் இருக்க வேண்டும் என நினைப்பது விசுவாசிக்கு இயல்பானது. அவனுக்கு அது மகிமையானது. பிள்ளைகள் பள்ளி முடிந்ததும் வீடு போகவேண்டுமென வாஞ்சிப்பார்களல்லவா? சிறைபிடிக்கப்பட்டவன் விடுதலையை நாடுவானல்லவா? அந்நிய தேசத்திலே பிரயாணம் பண்ணிக் கொண்டிருக்கிறவனுக்கு தனது சொந்த நாட்டுக்குப் போக விருப்பம் இருக்குமல்லவா? புதிதாக திருமணமான மணப்பெண் தன் கணவனைப் பிரிந்து சிலகாலம் இருக்க நேர்கையில் மீண்டுமாக அவன் முகத்தைக் ஆசைப்படுவாள் அல்லவா? அது காண போன்றதுதான் விசுவாசியின் நிலமையும். பரலோகத்துக்கு செல்வதைக் குறித்து உங்கள் மனம் ஆசைப்படவில்லையென்றால், நீங்கள் அந்த உலகத்திற்கு உரியவர்தானா என்பது சந்தேகத்துகிடமானது. பூலோகத்தில் விசுவாசிகளாக இருந்துகொண்டே. நீங்கள் பரலோகத்துப் பரிசுத்தவான்களின் சந்தோஷத்தை ருசித்துப் பார்த்திருந்தால் உங்கள் முழு உள்ளத்தினாலும் கீழ்கண்டவாறு பாடுவீர்கள்:


நான் பெரிதும் விரும்புகின்ற,


பரிசுத்தவான்களின் இருப்பிடமான மேலான


எருசலேமை அடைய எனது ஆவி வாஞ்சிக்கிறது!"



இப்படியாக நீங்களும் வாஞ்சிக்கலாம்.

அடுத்தபடியாக நாம் கற்றுக் கொள்ள வேண்டியது. நீங்கள் அதை அடையும் வரைக்கும் பொறுமையாக இருப்பதே. நீங்கள் போய் சேருகின்ற இடமானது மிகவும் உன்னதமான இடமாயிருக்கிறபடியால். வழியில் சந்திக்கிற கஷ்டங்களைக் குறித்து சோர்ந்து போகாதிருங்கள். நாம் இங்கு பாடுகிற ஒரு பாடலை நீங்கள் அறிவீர்கள்:


‘பாதை கடினமாக இருக்கலாம். ஆனால் தூரம் அதிகமில்லை.


எனவே,


நம்பிக்கையோடும் உற்சாகமூட்டும்


பாடல்களோடும் அதைக் கடப்போம்.



குதிரையில் சவாரி செய்பவன் அதன் கடிவாளத்தை


வீடு நோக்கித் திருப்பும்போது, அது எவ்வளவு


உற்சாகத்துடன் செல்கிறது! ஒருவேளை நீங்கள் அதை முன்னதாகவே சற்றுப் பழக்கப்படுத்தியிருந்தால், வீட்டுக்குச் செல்கிறோம் என்கிற உணர்வு அதற்கு வந்தவுடனேயே காதுகளை உயர்த்திக் கொண்டு அது தனது பாதையிலே மிகவும் விரைவாக செல்வதைக் காண்பீர்கள். நமக்கும் அந்தக் குதிரையைக் காட்டிலும் அதிகமான உணர்வு இருக்க வேண்டும். நமது எண்ணமானது பரலோகத்தை நோக்கித் திருப்பப்பட்டிருக்கிறது. நாம் சென்று அடையவேண்டிய துறைமுகத்தை நோக்கி நமது சுக்கான் திருப்பப்பட்டுள்ளது. அது வீடு நோக்கிய பயணம்! வழியில் காற்று அகோரமாக வீசலாம். ஆனால் சீக்கிரத்திலே நாம் அந்த மகிமையான இல்லத்திலே இருப்போம். அங்கே நமக்குக் கஷ்டம் ஏற்படுத்துகிற ஒரு சிறு அலையும் இராது. திராட்சைத் தோட்டக்காரர் அங்கே பூலோகத்தின் அருமையான கனிகளுக்காக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். ஆகவே நீயும் பரலோகத்தின் பொக்கிஷங்களைப் பெறுவதற்காக இங்கே காத்துக் கொண்டிருக்கலாம். நீ கண்ணீரோடே விதைப்பாய். சந்தோஷத்தோடே அறுப்பாய். அவர் உனக்கு ஒரு அறுவடையை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். விதைப்பும் அறுப்பும் ஒருபோதும் ஒழிந்து போவதில்லை என்று பொய்யுரையாதவராகிய தேவன் சொல்லியிருக்கிறார். இங்கே அவைகள் ஒழிந்து போகவில்லை. ஆகவே மேலோகத்திலும் அவை ஒழிவதில்லை. இங்கே பூலோகத்திலே விதைக்கிறவர்களாகிய உங்களுக்கு மேலோகத்திலே அறுப்பாகிய நாம் முதலாவதாகக் கற்றுக் கொண்ட பாடம். மேலோகத்தைக் குறித்து அதிக வாஞ்சையோடு இருப்பது. அடுத்தபடியாக, அதற்காகப் பொறுமையோடு காத்திருப்பது, உனக்காக அவர் குறித்திருக்கும் நேரம் வரைக்கும் காத்திருத்தல் வேண்டும் எனப் பார்த்தோம். அடுத்தபடியாக நாம் பார்க்கப் போவது. விசுவாசத்தில் அதிகமதிகமாக வளருதல், பரலோகத்தில் பிரவேசிக்கிறவர்கள் தங்களுடைய வஸ்திரங்களை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்ததினாலேயே அங்கு காணப்படுகிறார்கள். அவருடைய இரத்தத்தினால் மென்மேலும் பரிசுத்தம் அடைந்து, அதிகமான விசுவாசத்தையும் அடைந்து கொள்ளபாடுபடுங்கள். நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் விசுவாசம் இருக்கிறதா? இருக்குமானால் அதுவே பரலோக மேன்மையை அடைவதற்குரிய திறவுகோலாயிருக்கிறது. ஆனால் "எல்லா மனிதரிலும் விசுவாசம் காணப்படவில்லை" என்று அப்போஸ்தலன் சொல்லுகிறார். உங்களுக்கு விசுவாசம் இருக்கிறதா? நீங்கள் இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிக்கிறீர்களா? இன்னொரு வகையில் சொல்வதானால் நீங்கள் அவரில் மாத்திரமே நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? கீழ்கண்டவாறு உங்களால் பாடமுடியுமா?:


"வெறுங்கையாய் உம்மிடம் வருகிறேன் உமது சிலுவையை நம்பிப் பற்றிக் கொள்கிறேன் நிர்வாணியாய், உம்மிடம் ஆடை பெற வருகிறேன் நிர்பந்தன் நான். உமது கிருபையை நாடுகிறேன் அழுக்கான நான், உமது நீரூற்றண்டை வருகிறேன்


கழுவியெடும் மீட்பரே. இல்லையெனில் அழிவேனே"


மோட்சத்தில் உங்களைக் கொண்டு சேர்க்கும்படியாக, அவர் மீதுள்ள


விசுவாசத்தில் பெருகுங்கள்.


நாம் எடுத்துக் கொண்ட வசனம் இன்னுமொரு பாடத்தையும் கற்றுத் தருகிறது - பூலோகத்திலேயே மோட்சத்தைக் காண யாராவது விரும்புகிறீர்களா? எனக் கேட்டால் பல பேர்"ஆம்" என்று சொல்லுவீர்கள். பூலோகத்திலே மோட்சத்தை எவ்விதத்தில் காண்பது என்பதை நமது வசனம் பரலோகத்தில் உள்ளவர்கள் காண்பது போலவே நீங்களும் காண்பீர்கள். முதலாவதாக நீங்கள் இயேசுக்கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பாவமறக் கழுவப்படுங்கள். அது, பூலோகத்திலேயே உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. "எல்லா புத்திக்கும் மேலான தெய்வ சமாதானத்தை" அது உங்களுக்குக் கொடுக்கிறது. சினிமா தியேட்டர்களிலும், நடன அரங்குகளிலும், நவநாகரீக இடங்களிலும்தான் மோட்சானந்தத்தை அனுபவிக்க முடியும் என்று பலர் நினைக்கிறார்கள். ஒருசிலருக்கு அதுவே மகிழ்ச்சி தருகின்ற மோட்சமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் கடவுளால் நேசிக்கப்படுகிறவர்களாக இருந்தால் அது உங்களுக்கு மோட்சமாக இருக்க முடியாது. உங்களுடைய வஸ்திரங்களை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் தோயுங்கள். அப்போது உங்களுக்கு இங்கேயே மோட்சம் ஆரம்பமாகும்.


அடுத்ததாக நமது வசனத்தோடு சம்பந்தப்பட்டதாக நாம் பார்ப்பது. மோட்சானந்தத்தை அனுபவிக்கிறவர்கள் இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரை சேவிக்கிறார்கள். நீங்கள் பூலோகத்திலேயே மோட்சத்தை அனுபவிக்க வேண்டுமானால் இரவும் பகலும் அவருக்கு சேவை செய்யுங்கள். முதலாவது உங்களுடைய வஸ்திரங்களை அவருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்த பின்பு, அதை அணிந்து கொண்டவர்களாக வெளியில் சென்று அவருக்காக இரவும் பகலும் தொடர்ந்து உழையுங்கள். சோம்பேறிக் கிறிஸ்தவர்கள் சந்தோஷமாக இருப்பதில்லை. ஆவிக்குரிய காரியங்களை ஜீரணிக்காத கிறிஸ்தவர்கள் பலர் சந்தேகமுடையவர்களாகவும், பயம் பிடித்தவர்களாகவும் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இளைஞனே, ஒரு சமயத்தில் நீ பெற்றிருந்த ஒளியையும் சந்தோஷத்தையும் இழந்தவனாக பயத்தோடும் சந்தேகத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா? சகோதரனே அவைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி உழைப்பாயாக. பனிப்பிரதேசங்களில், உடல் உஷ்ணம் அடைய வேண்டுமானால் நெருப்புக்கு முன்னால் அமர்ந்தால் மாத்திரம் போதாது. உடலை வருத்தி உழைக்க வேண்டும். உடற்பயிற்சி ஆரோக்கியமான உஷ்ணத்தை சரீரத்திற்கு அளிக்கிறது. பனிப்பொழிவின் மத்தியிலும் "நான் ஏதாவது செய்து கொண்டிருப்பேன்" என்று ஒருவர் கூறுகிறார். ஒரு கை சோர்ந்துவிட்டாலும் மறுகையினால் உழைக்கலாம். நான் அதிகமாக உழைத்ததினால் சோர்ந்துவிட்டேன் என்று கூறாதே. கிறிஸ்துவுக்காக அதிகமாக உழைத்ததின் காரணமாக தங்களை மரணத்திற்கும்கூட ஒப்புக் கொடுத்தவர்களின் எண்ணிக்கை ஒன்றும் அவ்வளவு பெரிதல்ல. கிறிஸ்துவுக்காக கடினமாக உழையுங்கள். இரவும் பகலும் அவருக்கு சேவை செய்வது பரலோகத்தில் வாழ்கின்ற பரிசுத்தவான்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கே பூலோகத்திலும் அவருக்கென ஓயாமல் பணி செய்து வாழ்பவர்களுக்கும் அது மகிழ்ச்சியையே அளிக்கும். உங்களால் செய்யக்கூடிய யாவற்றையும் செய்யுங்கள்.


கிறிஸ்துவோடு இங்கேயே ஐக்கியப்படுவது மோட்சத்தை


அனுபவிக்க மற்றொரு வழியாகும். அந்த வசனங்களை மீண்டுமாகப் படித்துப் பாருங்கள் "சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார் இவர்களை மேய்த்து நடத்துவார்". ஓ! நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமானால். கிறிஸ்துவுக்கு அருகாமையில் வாழுங்கள். ஏழையின் வீட்டில் கிறிஸ்து வசித்தாரானால் அவன் ஏழையேயில்லை. கிறிஸ்து அருகாமையில் இருந்தாரானால் வியாதிப்படுக்கையும் கஷ்டமானதாக இராது. அவன் படுக்கையை நான் மாற்றிப் போடுவேன்" என்று அவர் சொல்லியிருக்கிறாரல்லவா? இயேசுக்கிறிஸ்துவோடு ஐக்கியம் கொள்ளுங்கள். அப்போது எந்த சூழ்நிலையாலும் பாதிப்படையாமல் இருப்பீர்கள். மழை பெய்து கொண்டிருக்கும்போதுகூட, "இதுவும் நல்ல சீதோஷணந்தான்" என்று கூறின ஒரு மேய்ப்பனைப் போல நீங்களும் இருப்பீர்கள். "இதுவும் எனக்குப் பிடித்திருக்கிறது" என்று கூறின அந்த மேய்ப்பனிடம், "அது எப்படி?" என்ற கேள்வி கேட்கப்பட்டபொழுது, இது என் தேவனுக்குப் பிடித்திருக்கிறது. அவருக்கு எதெல்லாம் பிடிக்குமோ அது எனக்கும் பிடிக்கும்" என பதில் கூறினான். ஒரு கிறிஸ்தவர், "நான் தேவனிடமாக மனந்திரும்பிய நாளிலிருந்து எந்த நாளும் எனக்குக் கெட்ட நாளாக இருந்ததில்லை" என்று கூறினார். "கிறிஸ்து என்னுடைய மீட்பராக இருக்கிறபடியால் எல்லா நாட்களுமே எனக்கு நல்ல நாட்கள்தான்" என்றார். உன்னுடைய ஆசைகள் யாவும் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருக்கையில், உனக்கு எதன் மீதும் பசிதாகம் இல்லாத நிலையில், கிறிஸ்து உனக்கு அருகாமையிலே இருப்பதை உணருகையில் பரலோகத்தை நீ பூமியிலேயே அனுபவித்துக் கொண்டிருக்கிறாய் என்பது உனக்குத் தெரிகிறதா? அப்படியானால் பரலோக வாழ்க்கையை இங்கேயே வாழத் தொடங்கிவிடு. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்" என்று வசனம் கூறுகிறது. உலகத்தில் நாம் எவ்வாறு வாழவேண்டுமென்றால். இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும்போதே பரலோகத்தை நோக்கிப் பார்த்தவர்களாக வாழ வேண்டும் என்பது அநேகருடைய கருத்து. அது நல்ல வழிதான். அதைக் காட்டிலும் சிறந்த வேறொரு வழியை நான் உங்களுக்குக் கூறுகிறேன். நீங்கள் பரலோகத்தில் வாழ்ந்து கொண்டு, பூலோகத்தை எட்டிப் பார்க்கிறவர்கள் போல வாழுங்கள். "எங்கள் குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது" என்று கூறிய அப்போஸ்தலன் அதை


உணர்ந்தவராகத்தான் கூறுகிறார். பூலோகத்தில் இருந்து பரலோகத்தை நோக்கிப் பார்த்தவர்களாக வாழ்வதும் நல்லதுதான். நமது மனதை பரலோகத்திற்கு ஒப்புவித்தவர்களாக. பூலோகத்தை நோக்கிப் பார்த்து வாழ்வது அதைவிட சிறந்தது. இந்த இரகசியத்தை நாம் கற்றுக் கொள்வோம். கர்த்தர் நம்மை அதில் வழிந விசுவாசம் பலமடையும்போது, அன்பு அதிகரிக்கும். நம்பிக்கை பிரகாசமடையும்போது. நாமும் வாட்ஸ் என்கிற கவிஞரோடு சேர்ந்து இப்படியாகப் பாடலாம்:


"கிருபையைப் பெற்ற மனிதர்கள்


பூலோகத்திலேயே மகிமை ஆரம்பமாவதை உணர்ந்தார்கள்!


வானுலகத்துக் கனிகள், விசுவாசத்தினாலும் நம்பிக்கையினாலும்


பூவுலகிலேயே தோன்றுவதை கண்டுகொண்டார்கள்


இந்த மகிமையில் பங்குபெறும் சிலாக்கியத்தை கர்த்தர் உங்களுக்கு அருளியிருக்கிறார். இயேசுக்கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும்படியாக அந்தப் பேரானந்தத்தின் வாசல் எப்போதும் உங்களுக்குத் திறந்திருப்பதாக -ஆமேன்.


Post a Comment

0 Comments