இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

வேதனைகள் நீங்கட்டும் (Let the pains you)

 

வேதனை நீங்கட்டும்


"நீ சமாதானத்தோடே போய், உன் வேதனை நீங்கி சுகமாயிரு என்றார்" (மாற்கு 5:34)


உலகத்தாரின் பல வார்த்தைகள் ஈட்டிகளைப்போல நம்முடைய இருதயத்தைக் குத்தி வேதனை உண்டாக்குகிறது. நோய்களும், வியாதிகளும் சரீரத்தில் வே தனை கொண்டு வருகிறது. துரோகங்களும் நயவஞ்சகங்களும் விஷ அம்புகளாய் இருதயத்தை தாக்கி வேதனைப்படுத்துகிறது.


எல்லா இடங்களிலும் வேதனை சூழ்ந்திருக்கும்போது நம் அருமை ஆண்டவர் நம்மைப் பார்த்து, "தேவனுடைய பிள்ளையே, நீ உன் வேதனை நீங்கி சுகமாயிரு" என்று சொல்கிறார்! ஆம், கிறிஸ்துவின் வார்த்தைகள் எவ்வள வாய் நம்மை தேற்றுகிறது!


ஒரு நிமிடம் நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து வேதனை உண்டாக்கும் வழி நம்மிடத்தில் இருக்கிறதா என்று கண்டுபிடிப்போமா? (சங் 139:34).


முதன்முதலாக வேதனை இந்த உலகத்திற்கு எப்படி வந்தது தெரியுமா? அது கீழ்ப்படியாமையினாலேயே வந்தது! கர்த்தர் புசிக்கவேண்டாம் என்று விலக்கின கனியை ஆதி பெற்றோர்கள் புசித்ததினால் வந்தது.


கர்த்தருக்கு செவிகொடுப்பதைப் பார்க்கிலும் சர்ப் பத்திற்கு செவிகொடுக்க அவர்கள் விரும்பினபடியால்

வந்தது. கர்த்தரைவிட்டு தூரமாய் விலகினதால் வந்தது. அந்த வேதனை வியாதியாசு, மரணமாக, சாபமாக,


நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தி பாடுபடும் விதமாக வேதனையோடு பிள்ளைபெறும்படியாக பூமியை ஆட் கொண்டது.


எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்துவிட்டபோதும் இன்றைக்கும் அந்த வேதனையை நாம் அனுபவிக்க வேண் டியவர்களாகவே இருக்கிறோம். ஆம் எல்லா வேதனை களுக்கும் மூல காரணம் கீழ்ப்படியாமையாகிய பாவம் தான்.


பாவத்தினால் வரும் வேதனையை நீக்கத்தான் இயேசு சிலுவையிலே வேதனையை சகித்தார். "நம்முடைய மீறுதல்களி மித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக் கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது" (ஏசாயா 53:5).


தேவபிள்ளையே, உன்னுடைய வேதனை எதுவாக இருந் தாலும் அதை க்கியருள இயேசு சிலுவையிலே பாடு. அநுபவித்திருக்கிறார் என்பதை தியானித்து அந்த கல்வாரி சிலுவையை நோக்கிப்பார்.


அவர் உன் பாவங்களையெல்லாம் நீக்க அதிகாரமுள்ள வராயிருக்கிறார். அவர் ஏற்கெனவே உனக்காக சிலுவை சுமந்து பாடு அநுபவித்தபடியால் நீ இன்றைக்கு வீணாக வேதனையை அநுபவித்துக்கொண்டு இருக்கவேண்டிய அவசியமில்லை.


அவர் இன்று அன்போடுகூட உன்னைப் பார்த்து, "நீ, உன் வேதனை நீங்கி சுகமாயிரு" என்கிறார்.


அன்று ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே வேதனை வந்தது. அதே நேரத்தில் கிறிஸ்துவின் கீழ்ப்படி தலினாலே அந்த வேதனையிலிருந்து நமக்கு விடுதலை வந்திருக்கிறது அல்லேலூயா!


"அவர் மனுஷரூபமாய், காணப்பட்டு, மரணபரி யந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப் படிந்தவராகி,தம்மைத்தாமே தாழ்த்தினார்.


ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும் படிக்கும் பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண் ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்" (பிலி 2:8-11).



வேதனையை அறிந்து இருக்கிறார்



"என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனையையும் அறிந்திருக்கிறேன்'' (யாத் 3:7).


தேவபிள்ளையே, கர்த்தர் உன்னை அறிந்திருக்கிறார் ! நீ நடந்து போகும் பாதையை அவர் அறிந்திருக்கிறார். மட்டுமல்ல, உன்னுடைய உபத்திரவங்களையும், உன்னு டைய வேதனையையும்கூட அவர் அறிந்திருக்கிறார் !


அன்று கொடிய பார்வோன் ராஜாவின் அடிமைத்தனத்திலே இஸ்ரவேல் ஜனங்கள் சிக்கி மிகுந்த வேதனை யடைந்தார்கள். எகிப்தில் உள்ள கொடுமையான ஆளோட்டிகள் இஸ்ரவேல் ஜனங்களை மிக கொடுமையாக வேலை வாங்கி, ஒடுக்கப்பட்டிருந்தார்கள். செங்கற்களை சுட்டு அவர்கள் சுட்டிடங்களைக் கட்ட வேண்டியதிருந்தது.


நம் தேவன் நமது வேதனைகளை அறிகிறவர்; நமது எல்லா நெருக்கங்களிலும் நம்மோடுகூட நெருக்கப்படு கிறவர். இஸ்ரவேல் ஜனங்களின் கூக்குரலைக் கேட்டு நம் தேவனாகிய கர்த்தர் இறங்கி வந்தார். அவர்கள் படுகிற வேதனைகளை அறிந்திருக்கிறேன் என்று சொல்லி மோசேயை எழுப்பி அவன் மூலமாக விடுதலை தரச் சித்தமானார்.


தேவபிள்ளையே, நீயும் பலவிதமான அடிமைத்தனத் தினால் வேதனையை அனுபவித்துக்கொண்டு வருகிறாயோ? மற்றவர்கள் கடுமையாக பேசி வேதனைப்படுத்துகிறார். களோ? உன் வேலை ஸ்தலத்தில் உன்மேல் அதிகாரிகள் கடுமையாய் வேலை வாங்கி, அவதூறாய் பேசி உன்னை வேதனைப்படுத்துகிறார்களே? அல்லது நீ இருக்கும் உன் சொந்த வீட்டிலேயே புறக்கணிக்கப்பட்டு அந்நியனைப் போல துன்பப்படுகிறாயோ? கவலைப்படாதே! கர்த்தர் இன்று அன்போடு உன்னைப் பார்த்து, "உன் வேதனைகள் நீங்கி சுகமாயிரு' என்று சொல்லுகிறார்.


இஸ்ரவேலரின் வேதனைக்கு முக்கிய காரணம் அடிமைத்தனம்தான். எகிப்தியருக்கு அவர்கள் அடிமைப் பட்டிருந்தார்கள் .


எகிப்து என்று சொல்லப்படுவது புதிய ஏற்பாட்டில் உலகத்திற்கும் பாவத்திற்கும் அடிமையாய் இருப்பதைக் காண்பிக்கிறது.


இச்சையானது கர்ப்பந்தரித்து பாவமாகி, பிறகு அந்த பாவம் பழக்கமாகி, பின்பு அந்த பாவ பழக்க வழக்கங்கள் மனுஷனை விடுகிறது. முழுமையாக அடிமையாக்கி


எகிப்தின் ஆளோட்டிகள் விரட்டினதைப் போலவே மனுஷனுடைய மனச்சாட்சி அவனை விரட்டுகிறது.


இயேசு சொன்னார்: "பாவம் செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (யோ 8:34).


ரோமர் 6:18 சொல்லுகிறது, "மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக் கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமை களாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?''


தேவபிள்ளையே,

உன் அடிமைத்தனத்திலிருந்து

உன்னை மீட்டு எடுக்கவே இயேசு கிறிஸ்து அடிமையின் ரூபமெடுத்தார் (யோவா 2:7).


அடிமைத்தனத்திலிருந்து குமாரன் உங்களை விடுதலை யாக்கும்போது மெய்யாகவே நீங்கள் விடுதலையாவீர்கள் (யோ வா 8:36).


"நீங்கள் கிரயத்துக்கு கொள்ளப்பட்டீர்கள்; மனுஷ ருக்கு அடிமைகளாகாதிருங்கள்” (1கொரி 7:23).


"இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக் கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால் பரிசுத்தமாகு தல் உங்களுக்குக் கிடைக்கும் பலன். முடிவோ நித்திய ஜீவன்" (ரோமர் 6:22).



Post a Comment

0 Comments